All posts by EDINFITT

19வது தமிழ் இணைய மாநாடு 2020

உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த ஆண்டிற்கான 19வது தமிழ் இணைய மாநாட்டினை மெய்நிகர் மாநாடாக நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த ஆண்டின் பதிப்பினை (19வது தமிழ் இணைய மாநாடு 2020) இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகம், மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு இணையவழி மெய் நிகர் மாநாடாக டிசம்பர் 11-13, 2020 தேதிகளில் நடக்கவுள்ளது. ஆய்வுக்கட்டுரைகள் (10 பக்கங்களுக்கு மேற்படாத) நவம்பர் 15ம் திகதிக்கு முன்பதாக cpc2020@infitt.org  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

 https://www.tamilinternetconference.org/
முன்பதிவு செய்ய  –
  https://tinyurl.com/y4p3jfdp
INFITT is pleased to announce that the Tamil Internet Conference 2020 is going to be held between December 11th and 13th virtually. This year’s TIC will be jointly organized by the NLP Center ,Moratuwa University, Sri Lanka and Periyar University, Salem, Tamil Nadu. Pre Conference Registration (Free) is open Now. Only registered participants can participate and present a paper in this conference. Anyone wishing to present a paper is advised to send their complete paper, for not more than ten pages, to the cpc2020@infitt.org not later than November 15th, 2020 to consider for a possible presentation in one of the sessions and to be included in the conference proceedings . We have planned for a few keynote speeches and workshops to benefit the attendees and researchers of Tamil NLP and Computational Linguistics.
For more info  https://www.tamilinternetconference.org/
 Pre Registration (Free) Open Now!
To register –
https://tinyurl.com/y4p3jfdp

Read More

By EDINFITT
Announcements This Week Ending May 2020

Announcements This Week Ending May  2020

INFITT has submitted U.S Tax returns for Fiscal year Ending 31 Dec 2019 on  1st March 2020

This includes the IRS, CA State and Attorney General filing

 

Read More

By EDINFITT
தமிழ் இணைய மாநாடு 2019 இனிதே நிறைவுற்றது
இந்த ஆண்டு தமிழ் இணைய மாநாடு மிக சிறப்பாக அண்ணா பல்கலைக்கழக அரங்கில் கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது.. மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என பொதுமக்களுக்கான    நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. அமேசான், மைக்ரோசாப்ட் , மொழியியல் படைப்புகள் என பல துறை சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர், இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்புர் .சுவிஸ்லாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகம் / தமிழ் இணையக்கல்விக்கழகம் / (மற்றும் பல அரசு நிறுவனங்களின் உதவியுடன்)

இணைந்து நடத்தப்பட்ட மாநாட்டினை தமிழக அரசு சார்ப்பில் மொழிகள்  பண்பாட்டுத்துறை அமைச்சர்  திரு பாண்டியராஜன் ,உயர்கல்வி அமைச்சர் திரு கேபி அன்பழகன்   ஆகியோர் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அமேசான் /மைக்ரோசாப்ட் / CCIL-மைசூரு / TAU போன்றவர்களின்  சிறப்பு  படைப்புகளுடன் கூட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 21 மாலை அண்ணா பல்கலைக்கழக அடையாறு படகுழாம் வளாகம் ALUMNI CLUB இரவு விருந்தும்  சிறப்பாக நடைபெற்றது
மாநாட்டின் முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த  ஆண்டோபீட்டர், மறைந்த  தகடூர் கோபி ஆகியோருக்கு உத்தமத்தின் சார்பில்  தமிழ் கணிமை முன்னேர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், தம்பதிகளான து. நித்யா & த.சீனிவாசன் ஆகியோருக்கும் உத்தமத்தின் சார்பில் தமிழ் இணைய இணையர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் தமிழ் சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட பல தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் பங்காற்றி வருகின்றனர்.
ஏனைய விபரங்களுக்கு
https://www.facebook.com/infitt/

மாநாட்டு கட்டுரைகளுக்கு

Read More

By EDINFITT
Announcement on Protection “INFITT” (logo) Trademarks

INFITT hereby announce that: The name INFITT is a registered trademark under the US Patents office, with US Serial Number: 87727216. Others are not authorized to make any use of the registered trademark or the name INFITT. If there is anyone doing so unlawfully, we hereby request them to withdraw such use of the name and logo of INFITT. This includes using the acronym in the website domain names.

INFITT was incorporated in the USA, Registration Number 04-3671309 in 2000 and has been operating as a Non-Profit Organization hosting Tamil Internet Conference since then.  We are entitled to take legal actions against any individual(s) found using INFITT name or logo for the infringement of our legal rights and interests. The cost of legal and damages will be incurred by those who infringe the use of the INFITT Trademark

For more information please email to ed@infitt.org please visit the official websites www.infitt.org

Read More

By EDINFITT
18வது தமிழ் இணைய மாநாடு 2019

எதிர்வரும் 2019 செப்டெம்பர் மாதம் 20,21,22 திகதிகளில்18வது தமிழ் இணைய மாநாடு 2019 இனை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு உத்தமம் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

IOC,CPC LOC மற்றும் நிதிக்குழு உள்ளிட்ட 
மாநாட்டுக்குழுக்கள் தொடர்பிலான அறிவிப்புக்களும் கட்டுரை கோரல் அறிவிப்புகளும் விரைவில் அறியத்தரப்படும். 

மாநாட்டு இணையத்தளம்

Read More

By EDINFITT
Workshop on “An Introduction to Tamil Epigraphy and Corpus Analysis” held at KCT

A one-day workshop “An Introduction to Tamil Epigraphy and Corpus Analysis” was held on 29 September 2018 at Kumaraguru College of Technology, Coimbatore. This workshop was jointly organised by KCT and INFITT as part of the MOU signed between INFIIT and KCT. This one-day workshop cum lecture was given by Dr Appasamy Murugaiyan (EPHE-CNRS Mondes indien et indien, Paris) Chairman of INFITT. A total number of 53 participants, professors and researchers, have attended the workshop. INFITT is looking forward to develop cooperation particularly in areas of Information Technology in Tamil and Natural Language Processing and encourage sharing knowledge and expertise.

Read More

By EDINFITT
2018 மாநாட்டு செய்தியறிக்கை

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு
இன்று (ஞாயிறு, 8 சூலை 2018) நிறைவுற்றது

உத்தமம் நிறுவனமும் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்திய பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று ஞாயிறு சூலை 8 2018 மிகச் சிறப்புடன் நிறைவுறுகிறது என்பதை மிக்க மகிழ்வுடனும், மனநிறைவுடனும் உத்தமம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். இம்மாநாடு வெள்ளிக்கிழமை 6, சனிக்கிழமை 7, மற்றும் ஞாயிறு 8 தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறும் பொருட்டு எல்லா உதவிகளையும் நல்கிய கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குமார இராமசாமி அவர்களுக்கும் மற்றும் எல்லா பேராசிரியர்களுக்கும் உத்தமம் சார்பாக மனமுவந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்மாநாடு வழக்கம்போல் ஆராய்ச்சிக்கட்டுரைப் படைப்பு, கணினி பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மக்கள் அரங்கம் என மூன்று பிரிவுகளாக சிறப்பாக அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இம்மூன்று நாட்களில் 62 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவுசார் தேடுபொருள் என்ற பொருண்மையில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. இக்கட்டுரைகள்

● திறமைசார் கையடக்கக் கணினிகளில் (ஸ்மார்ட்போன்கள்) தமிழில் உரையாடல்
● உரை-பேச்சு- உரை (TTS) நிரலிகள்
● திறமைசான்ற தேடு பொறிகள்
● இயந்திர வழி தமிழ் கற்றல்
● இயந்திர உதவியுடன் மொழிபெயர்ப்பு
● உரை பகுப்பாய்வு மற்றும் தரவுச் சுரங்கங்கள்
● ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழ்ப் பயன்பாடுகளுக்கான முக்கியத்துவம்
● திறவுநிலை தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழ்ப்படுத்தல்
● அறிவுநிலை சொல் செயலாக்கம்
● எழுத்துப்பிழை சரிபார்ப்பு
● இலக்கணச் சரிபார்ப்பு
● இயற்கை மொழி பகுப்பாய்வு, (NLP)
● தமிழ்க் கணினிமொழியியல் மற்றும் தரவு மொழியியல்
● கணினி உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற தலைப்புகள்

இக்கட்டுரையாளர்கள் குறிப்பாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சு, கனடா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகை தந்தனர்.  இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக தமிழ் ஆசிரியர்களுக்கென சிறப்புப் பயிலரங்குகள் இரு தினங்களில் நடைபெற்றன குறிப்பாகச் செயலி உருவாக்கம் உட்பட பல தலைப்புகளில் பயிலரங்கங்கள் நடைபெற்றன.

வெவ்வேறு தலைப்புகளில் மூன்று நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். மக்கள் அரங்கத்தில் வெவ்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் நடைபெற்றன. கண்காட்சி அரங்கில் அரசு கல்வி நிறுவனங்கள் ஊடகத்துறையினர் எனப் பதினைந்து கூடங்கள் இடம்பெற்றன. பொது மக்களுக்குப் பயன்படும் மென்பொருள்கள், இணையம், கணினி குறித்த நூல்கள், கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ளும் கண்காட்சி அரங்குகளும் இடம்பெற்றன.

இம்மூன்று நாட்களாக நடைபெற்ற பல கருத்து பரிமாற்றங்களின் பலனாக கீழே கண்டுள்ள சில திட்டங்கள் உத்தமம் நிறுவனத்தின் பெயரால் பரிந்துரைக்கின்றோம்

  1.  தமிழ் விசைப்பலகை “தமிழ்99” –இல், இந்திய ரூபாய் சின்னத்தை இணைத்தல்
  2.  ஓருங்குறி தமிழ் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப் பட்ட போதிலும் அரசு செயலகங்கள் சிலவற்றில் இன்னமும் வேறுஎழுத்துரு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. தரப்படுத்தப்பட்ட உள்ளீடு முறைகள் அவசியமானது.
  3. .தநா, .கல்வி, .வணி போன்ற தமிழ் இணைய முகவரிகள் பெறுவதற்கு ICANN அமைப்பிற்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் விண்ணப்பித்தல் அவசியம்
  4.  ஆசிரியர்களுக்கான தமிழ்க் கணிமை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் நடத்துதல்
  5.  மாற்றுவலு உள்ளோர்க்கான பிரெய்லி குறியீடுகள் தமிழை உள்வாங்குவதற்காக அடுத்த பதிப்பிற்கு மேம்படுத்துதல்
  6.  இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை மேம்மடுத்த உத்தமம் அமைப்பு கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்

அடுத்த உலகத் தமிழ் இணைய மாநாடு, இலங்கையில் நடத்த செயற்குழு தனது ஒப்புதலை அளித்துள்ளது. இது குறித்து எமது இலங்கை உறுப்பினர்களான திரு த. தவரூபன், கெ. சர்வேஸ்வரன் ஆகியோர் இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றுடன் ஒப்புதல் பெற்றவுடன் உறுதி செய்யப்படும்.

சில கூட்டு முயற்சித் திட்டங்கள்

கூகிள் நிறுவனமும் உத்தமும்

  • இணையத்தில் உள்ளடக்கங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளடக்க உருவாக்குனர்கள் மற்றும் பதிப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுதல்
  • கூகிள் அட்சென்ஸ் இல் தமிழ் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் உள்ளடக்கப்படாத கூகிளின் ஏனைய வெளியீடுகளிலுமு் தமிழை உள்ளடக்க கூகுள் நிறுவனத்துடன் செயற்படல்.
  • கூகிளின் தமிழ் மொழிபெயர்ப்பு செயலிகளில் தேவையான மாற்றங்களை உள்வாங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் பின்னுாட்டங்களை அளித்தல்.

இவண்
அப்பாசாமி முருகையன்,
தலைவர்
உத்தமம்

Read More

By EDINFITT
Tamil Internet Conference 2018

“The deadline for paper submission has passed (31 May 2018).

CPC  no longer accepts new submissions. “

 

தமிழ் இணைய மாநாடு 2018 கருத்தரங்க கட்டுரைகள் வரவேற்பு

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த தமிழ் இணைய மாநாடு (2018) வரும் ஜுலை 6-8 திகதிகளில் தமிழ்நாடு கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் மாநாட்டின் தொழில் நுட்ப கருத்தரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கத் தமிழ்க் கணினி ஆய்வாளர்களை அன்புடன் அழைக்கின்றோம். சுவிட்சர்லாந்திலுள்ள லோசானின் தேசிய தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் டாக்டர் கே. கல்யாணசுந்தரம் (உத்தமத்தின் முன்னாள் தலைவர்) மாநாட்டுக் கருத்தரங்கு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முன்பு நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளைப்போல் இம்முறையும்
(அ) தமிழ்மொழியில் கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் / IT,
(ஆ) கணினிஉதவியுடன் தமிழ் மொழி கற்றல் – கற்பித்தல், மற்றும்
(இ) தமிழ் இணையம் உள்ளடக்கம், தேடு பொறிகள், மின்னூலகங்கள், தமிழ் இணைய வளர்ச்சி,
மேலாண்மை போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகளில் படைக்க உள்ள கட்டுரைகள் கீழ்க்கண்டவை
பற்றி இருக்கலாம் (இப்பட்டியலில் உள்ளவை எடுத்துக்காட்டுகளே):
 தமிழில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம்
 திறமைசார் கையடக்கக் கணினிகளில் (ஸ்மார்ட்போன்கள்) தமிழில் உரையாடல் உரை-பேச்சு- உரை (TTS) நிரலிகள்
 திறமைசான்ற தேடு பொறிகள்
 இயந்திர வழி தமிழ் கற்றல்
 இயந்திர உதவியுடன் மொழிபெயர்ப்பு
 உரை பகுப்பாய்வு மற்றும் தரவுச் சுரங்கங்கள்
 அண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழ்ப் பயன்பாடுகளுக்கான முக்கியத்துவம்
 திறவுநிலை தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழ்ப்படுத்தல்
 அறிவுநிலை சொல் செயலாக்கம்
 எழுத்துப்பிழை சரிபார்ப்பு
 இலக்கணச் சரிபார்ப்பு
 இயற்கை மொழி பகுப்பாய்வு, (NLP)
 தமிழ்க் கணினிமொழியியல் மற்றும் தரவு மொழியியல் போன்ற தலைப்புகள்

கணினி உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல்: அறிவாக்கச் சாதனங்கள், தொழில்நுட்பம், கையடக்கக் கருவிவழி கற்றல் போன்ற ஆய்வுகள் அதிகரித்துள்ளது தெரிந்ததே! இணைய மன்றங்கள் மற்றும் தொடர்புடைய தலைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ்க் கற்பித்தல் மற்றும் புதுமையான கற்றல் முறைகள் ஆகியன பற்றியும் கருத்தில் கொள்ளவேண்டும்.

தமிழ் இணையம்: இணையத்தில் தமிழ் மொழியின் உள்ளடக்கம் மற்றும் விநியோகம்; வலைப்பதிவுகள், விக்கிபீடியா, பாட்காஸ்டிங், சமூக வலைத்தளங்கள்; தமிழ் மின்நூலகம், மின்வழி ஆவணக் காப்பகம்; தமிழ் இணைக்கப்பட்ட தரவு, சொற்பொருள் வலை, தமிழ், தமிழியல் சார்ந்தவை தொடர்பான தரவு விஞ்ஞானம்; கற்றல் முகாமைத்துவ அமைப்புகள், மெய்நிகர் கற்றல், மற்றும் தொடர்புடைய தலைப்புகள்.

மேலே கூறப்பட்டதைத் தவிர, தமிழ் மொழி சார்ந்த கணினி ஆராய்ச்சிகள் பலவும் வரவேற்கப்படுகின்றன. முந்தைய மாநாடுகளில் படைக்கப்பட்ட கட்டுரைகள் உத்தமத்தின் வலைத்தளத்தில் infitt.org உள்ளன. அவற்றை முன்பார்த்து மீள்பார்வைகளிட்டு முன்னால் செய்த ஆய்வுகளைத் திரும்பச் செய்யாமல் புதிய கண்ணோட்டத்தில் உங்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாநாட்டில் வழங்குவதற்கான கட்டுரைகளின் சுருக்கங்கள் மாநாட்டுக் கருத்தரங்கக் குழு (CPC) பரிசீலனைக்காக, தமிழ், ஆங்கிலம் அல்லது இருமொழிகளிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அதிகபட்சம் இரண்டு A4 பக்கங்கள் அளவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரைகளின் சுருக்கம் யுனிகோட் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எழுதப்பட வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் cpc2018@infitt.org என்ற முகவரிக்கு 2018 ஏப்ரல் 30 க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும். கட்டுரைகள் படைக்க விரும்புவோர் கட்டுரையின் சுருக்கங்கள் பின்வரும் மூன்று
பிரிவுகளின் கீழ் ஒன்றாக குறிப்பிட்டு கருத்தரங்கக் குழு பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும்:

i) மாநாட்டின் கருத்தரங்க தொழில்நுட்ப அமர்வுகளில் நேரிடையாக (வாய்வழி) வழங்கல்
ii) மாநாடு நடைபெரும் நாட்களில் சுவரொட்டி வழி காட்சிப்படுத்துதல் மற்றும் கலந்துரையாடுதல், மற்றும்
iii) மாநாட்டின் சமூக மைய அமர்வுகளில் சுருக்கமாய் (வாய்மொழி) கட்டுரை வழங்குதல்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையைப் பரிசீலனையில் கொள்ளவேண்டிய பிரிவினையைத் தவறாமல் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்தரங்கக் குழு அத்தகைய விருப்பங்களை மனதில் கொண்டு சரியான தேர்வுமுறையைப் பற்றி முடிவு செய்யும். இம்முறையே கட்டுரைகளைப் பரிசீலனை செய்து தேர்வு செய்தால் தரமான கட்டுரைகள் படைக்க உள்ளோர் அனைவரும் மாநாட்டில் பங்கு கொள்ளமுடியும் என்று கருதுகிறோம்.

ஒரு சுருக்கத்தைச் சமர்ப்பித்தல் என்பது கட்டுரையின் ஒரு ஆசிரியராவது மாநாட்டில் நேரில் கலந்துகொண்டு கட்டுரையைப் படைப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். மற்றொருவர் மூலமோ அல்லது தொலைதூர மின்வழி மூலமாகவோ கட்டுரை வழங்கல் அனுமதிக்கப்படாது.

2018 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை விவரங்கள் அறிவிக்கப்ப்படும். ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டுரைகளின் ஆசிரியர்கள், ஜூன் 1, 2018 ஆம் முன்னர், 4 – 6 பக்க அளவில் கட்டுரையின் முழுமையான படைப்பினை சமர்ப்பிக்க வேண்டும்.

மாநாட்டில் படைக்கப்பட உள்ள கட்டுரைகள் அனைத்தும் அச்சிடப்பட்ட காகித வடிவத்தில் புத்தகமாகவும் மின்வடிவிலும் வெளியிடப்படும். புத்தக வெளியீடு சர்வதேசத்தர வரிசை எண்ணுடன் சென்ற ஆண்டுகளின் கட்டுரைத் தொகுப்புகளைப் போல் வெளியிடப்பட்ட உள்ளது. உலகெங்கிலும் உள்ள எல்லா முக்கிய நூலகங்களும் சர்வதேசத் தரவரிசையுடன் வெளியிடப்படும் தொழில் நுட்ப மாநாட்டு கட்டுரைத் தொகுப்புகளை நூலக அட்டவணைகளில் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டு இணையத்தளம்   ஊடாக மாநாடு பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாநாடு தொடர்பிலான தகவல்களை பெற cpc2018@infitt.org அல்லது ed@infitt.org இற்கோ தொடர்பு கொள்ளவும்.

மாநாட்டு முகப்புத்தக பக்கம்
https://www.facebook.com/events/551185608573566/

தமிழ் இணைய மாநாடு 2018,
மாநாட்டுக் குழு
உத்தமம் நிறுவனம்

Call for Papers for Tamil Internet Conference 2018

INFITT (International Forum for Information Technology in Tamil) is pleased to call for papers from research scholars and students for presentation at the forthcoming Tamil Internet Conference 2018. The conference (17th in the series) will be held at the Tamilnadu Agricultural University Campus, Coimbatore, during 6-8 July 2018. Dr. K. Kalyanasundaram of the Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland has been named as the Chair for the Conference Program Committee (CPC).

As in the past, papers will be accepted for presentation in the following three main areas : (i) Technology development in Tamil Computing/IT, (ii) Computer-aided teaching and learning of Tamil and (iii) Tamil Internet – Content Development and Management. Following is a sample listing of topics to be addressed in the technical sessions of the TIC.
Tamil Computing & IT: Speech/Voice recognition, Text-to-speech (TTS) Systems, Search engines, Machine Learning, Machine Translation, Text analytics and Data mining, Tamil “enabling” in mobile platforms (smartphones, tablets, etc.) with particular emphasis for Tamil Apps for use on iOS, Android and Windows platforms, Open Source Tamil software and Tamil Localization, Smart word-processing that includes spell checker, grammar checker, Natural Language Processing (NLP) applications in Tamil, Corpus linguistics and related topics.

Computer Aided teaching and learning of Tamil: Innovative methods of teaching and learning of Tamil using smart devices, technology, mobile learning, augmented reality, online forums and related topics. The emphasis here is on constructive in-depth qualitative/quantitative studies. Mere teaching Tamil using ICT tools may not be enough.

Tamil Internet: Tamil content and delivery via Internet: Blogging, microblogging, Wikipedia, Podcasting, social networks; Tamil Digital Library, Digital Archiving; Tamil Linked Data, Semantic Web, Data Science pertaining to Tamil, Tamil Ontologies, ; Learning Management Systems, Virtual Learning, and related topics.

Apart from the above, any other topic of relevance to Tamil Computing is welcomed. We request the authors to have a look at the past conference papers hosted in the website infitt.org and also other web resources before submitting a paper so that repetitions of past work can be avoided.

In order that we accommodate diverse form of papers for presentation at the conference, the Conference Program Committee (CPC) will review and select papers submitted under the following three categories: i) Original research leading to identifiable deliverables in all above three areas for oral presentations for presentation in the technical sessions of the conference hub; ii) poster presentations of research work, to be displayed and discussed during the conference days and iii) papers for brief (oral) presentation in the community Hub component of the TIC. Authors are strongly encouraged to indicate the category to which their paper is to be considered. CPC will review the papers accordingly. CPC also reserves the right to assign any submitted abstract for presentation in any of the above categories. Papers that include analysis with some extension of previously published work (software or web content) will be considered under last two categories. We believe that this compromise will encourage a larger community to present their work while keeping the quality of technology-related papers as high as possible.

The abstracts (max two A4 pages) can be in Tamil, English or bilingual (Tamil and English) but all abstracts must be written using Unicode encoding. The abstracts should be sent to cpc2018@infitt.org before 30 April 2018. Submission of an abstract implies that at least one author of the paper will attend the conference to present the work in person. Proxy or remote presentation is not permitted. In case an author submits a paper and does not come in person, the content will not be accepted in the proceedings or online versions of the conference.

Authors of papers accepted for presentation will be informed on or before 15 may 2018. Authors of the accepted Abstracts should submit their full papers, not less than 4 pages long and not exceeding 6 pages long, on or before 1 June 2018.

The Conference Proceedings will be published in printed paper format and as an e-book. Arrangements are being made to have the Conference Proceedings of the annual Tamil Internet Conferences published with an ISSN (International Standard Serial Number). ISSN will permit routine indexation of the Conference Proceedings in bibliographic databases of all leading libraries across the globe and proper referencing of the content of the Proceedings in academic journal publications. The conference proceedings will be made available online in the website of INFITT for indexation and archival records.

We look forward to your active participation in the 17th Tamil Internet conference 2018 If you have any questions or need further clarifications, feel free to send us a note to <cpc2018@infitt.org>.

Connference official Page  will be updated with more information soon.

Conference FB Event Page
https://www.facebook.com/events/551185608573566/

Important Dates:

Paper abstract due: 15 May 2018
Paper acceptance notification: 20 May 2018
Camera-ready full-paper submission: 30 May 2018
Conference Days: 6-8 July 2018

Conference Committee
Tamil Internet Conference 2018
INFITT

17.02.2018

“The deadline for paper submission has passed (31 May 2018).

CPC  no longer accepts new submissions. “

Read More

By EDINFITT
To Whom It May Concern

This organization is formally registered in the State of California, USA under their 501-C regulation (http://www.infitt.org).  We have been in good standing in their records since its inception in 2001 and we contribute to the society constantly as per the law states.  We are primarily a worldwide organiztion thriving to promote Tamil language and information technology by uniting all the like-minded researchers and scholars around the world, including India, Singapore, Srilanka, Malaysia, Europe, USA and Canada.

We have members all around the world constantly contributing to this common cause.  We have so far conducted sixteen conferences around the world, including India, Malaysia, Singapore, United States, Germany and Canada in various Universities.   With this genuine effort, we have formed a strong community of researchers and scholars who thrive to take the language of Tamil to the next generation by helping the common people to use the state of the art technology as and when it occurs.

With the efforts of many hard working researchers and scholars we are proud to inform that the Tamil scholars constantly use Tamil font in computers and handheld devices and they have developed many promising software including many databases of Tamil literature in electronic form.  In this sense, it may not be an overstatement to mention that our efforts for the past twenty years have brought fame and respect to this organization worldwide under the banners of “INFITT” and “Tamil Internet Conference”.

The reason I write this mail is to bring to your kind attention that there have been some mischievous attempts recently to misuse and take advantage our efforts and fame to gain monetary benefits in an unlawful manner.   A group of people around the world attempt to mislead everyone by misusing our acronym INFITT and our conference name  called “Tamil Internet Conference”.  Particularly, they are attempting to conduct a conference under this name in October 27th to 29th, 2017 in Toronto, Canada and trying to bring people from Srilanka and other parts of the countries to Canada by sending invitation letters to attend this conference.

To your kind information, we would like to mention that we successfully conducted our 16th Tamil Internet Conference in Toronto, Canada  between August 25th and 27th, and our next conference will only be held next year in India.  They are also misusing our domain name http://www.infitt.org with a similar sounding name as http://www.infitt.ca, which we don’t authorize in any respect.  As you can see, this is completely an illegal act and this, in no way, can be encouraged.

We would very much like you to kindly be aware of this illegal and unlawful effort and avoid encouraging them in any way.  Thank you for your kind attention and we sincerely hope that you would take necessary action to avoid these miscreants from taking any advantages from your office.   Please feel free to contact us if you have any questions.

-T.Thavaruban –
Executive Director,
INFITT | 4.10.2017

Read More

By EDINFITT
பதினாறாவது தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது

உத்தமம் உலகெங்கிலும் உள்ள தமிழ் தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களும் பயனர்களும் ஒன்றுகூடி கருத்துப்பரிமாற்றம் செய்வதற்க்காக ஆண்டுதோறும் தமிழ் இணைய மா நாடு ஒன்றை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 16ம் தமிழ் இணைய மா நாடு கனடாவில் ரொரண்டோ பல்கலைக் கழகத்தில் ஓகஸ்ட் 25-27 தேதிகளில் சிறப்பாக நடந்தேறியது.

முதல் நாள் (25 ஆகஸ்ட்) பாரம்பரிய முறைப்படி நிகழ்வில் மங்கல விளக்கு ஏற்றல், தமிழ் தாய் வாழ்த்து, கனடாவின் தேசிய பாடல்கள் பாடப்பட்டபின் செம்மொழி மாநாட்டின் மூலம் புகழ்பெற்ற நீராரும் கடலுடுத்த ..  பாடலுக்கேற்ப நடனத்துடன் ஆரம்பமாகியது. உத்தமத்தின் சார்பாக உத்தமம் செயற்குழுவின் மூத்த உறுப்பினர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் மாநாட்டு அமைப்புக்குழு சார்பாக தலைவர் பேரா. செல்வகுமார் அவர்களும் மாநாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பேராளர்களை வரவேற்றுப் பேசினார்கள்.

வட அமெரிக்கப் பகுதியில் தற்பொழுது  நடக்கும் ஒரு முக்கிய முயற்சி புகழ்பெற்ற ஹார்வார்டு  பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியருக்கான ஒரு இருக்கை அமைப்பது.  அதன் முக்கிய முன்னோடிகளில் இருவர். ஒருவர் ரோடு ஐலண்டு வாழ் மருத்துவர் சம்பந்தம், மற்றொருவர் டொரோண்டோ வாழ் தமிழ் எழுத்தாளரும் கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய தலைவருமான  திரு அ. முத்துலிங்கம். தமிழ் இணைய மாநாட்டுக்கு இவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினாராக வந்து சிற்றுரை  வழங்கினார்கள்.  கனடாவில் தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தமிழ்க் கணினித் துறையின் முன்னோடிகளுக்குச் சுந்தர இராமசாமி நினைவுப் பரிசு ஒன்றைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து ஆரம்ப நிகழ்வில் கனடா ரொரண்டோ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பசுபதி அவர்களும் தமிழ்நாடு பாரத் பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் பொன்னவைக்கோ அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள். கணினி மற்றும் இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு பற்றி வெவ்வேறு வளர்ச்சிகளைச் சுட்டிக் காட்டியும் இன்னும் செய்யவேண்டிய முக்கிய தேவைகளையும் விளக்கமாக எடுத்துக் காட்டினார்.

இணையம் தோன்றி 30 ஆண்டுகளே ஆனாலும் இந்தக் குறுகிய காலத்தில் இணையம் வழி சேர்க்கப்பட்டுள்ள தமிழுக்கான பலவகை செய்திகள், பல கோடிக்கணக்கான இணையத்தளங்கள் ஆகியன பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் என்னென்ன செய்திகள் உள்ளன, குறிப்பிட்ட செய்திகளையோ அல்லது விவரங்களையோ எப்படி வேகமாகவும் சுலபமாகவும் தேடிக் கண்டுபிடிப்பது பற்றி பல ஆராய்ச்சிமுறைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பெரிய அளவிலான தரவிலிருந்து தேடும் முயற்சிகளை ஆழக்கற்றல் என்று கூறுகிறார்கள்.  இவ்வாண்டின் தமிழ்  இணைய மாநாட்டின் முக்கியக் கருத்தாக இந்த ஆழக் கற்றல் ஆய்வுதான் தேர்ந்தெடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறையில் உலகலவில் பெரும்பெயர் பெற்றவர் கனடா வாடர்லூ பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆண்ட்ரூ வாங்க் என்பவர்.

முதல் நாள்  நிகழ்வில் இவர் முதல் சிறப்புப் பேச்சாளராக வந்து ஆழக் கற்றல் பற்றிய வெவ்வேறு முக்கிய விவரங்களை நன்றாக எடுத்துக் காட்டினார். இரண்டு பயிற்சிப் பட்டறைகளில் இரு ஆராய்ச்சியாளர்கள்  கூகுள், யாகூ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி இந்த ஆழக் கற்றல் முறைகளைக்  கண்டுபிடிப்பதோடு அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்றும் விளக்கிக் கூறினார்கள்.

இரண்டாம் நாளில் சிறப்புப் பேச்சாளராக தமிழ்க் கணினி வளர்ச்சியில் முன்னோடியாகவும் கணினி தமிழில் அடிப்படை அளவில் செயல்பட எழுத்துருக்கள், செயலிகள் செய்த கணினித்துறை வல்லுனர் திரு முத்து நெடுமாறன் கருவாக்கம், உருவாக்கம் மற்றும்  செயலாக்கம் என்ற தலைப்புடன் சிறப்புரை வழங்கினார்.  வணிக அடிப்படையில் தமிழ்க் கணினி வளரவேண்டிய முக்கியத்தைச் சுட்டிக்காட்டி தமிழ் மென்பொருள் தயாரிப்போர் எப்படி தங்கள் படைப்புக்களை வணிக ரீதியில் தயாரிக்க வேண்டும் என்று விளக்கமாக எடுத்துக்காட்டினார்.

தமிழ் இலக்கியங்களை வரலாற்றுப் பார்வையில் காண வேண்டியதன் அவசியத்தையும் இலக்கியத் தரவுகளைப் பல கோணங்களில் காணும் வகையில் ஒரு முறையான அமைப்பில் தரவுத் தளங்களில் சேகரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்னும் நோக்கில் பல கட்டுரைகள் உத்தமம் 2017 மாநாட்டில் படைக்கப்பட்டன.

மதுரைத் திட்ட முன்னோடி பேராசிரியர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் மதுரைத் திட்ட இலக்கியங்கள் பற்றிய விரிவான விளக்கவுரை நிகழ்த்தினார். மதுரைத் திட்ட இலக்கியங்களைச்  சேகரிப்பதற்காக எடுத்துக்கொண்ட வேவ்வேறு திட்ட முறைகள் பற்றி அவர்கள் விளக்கியது பல காலமாகத் தமிழ்க் கணினி ஆர்வலர்கள் பலர் செய்துவரும் தொண்டைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

லண்டனிலிருந்து வந்த திரு. சிவ சிவசுப்ரமணியம் மற்றும் செந்தில் ஆகியோரின் படைப்பு எப்படியெல்லாம் தமிழ் இலக்கியங்களைப் பல்வேறு கோணங்களில் காணலாம் என வலியுறுத்தியது.  இவர்களின் “தமிழ் APIகள் மூலம் இணைப்பில் இல்லா இணையதளங்களை தமிழில் உருவாக்குதல், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் – ஓர் ஆய்வு” என்னும் கட்டுரை இம்மாநாட்டில் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் விருதைப் பெற்றது.

பேராசிரியர் வாசு அரங்கநாதனின், “தமிழ் இலக்கியங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை” என்னும் படைப்பு மின்வடிவத் தமிழ் இலக்கியத் தரவுகளின் சிறந்த பயனைப் பற்றி விளக்கியது.  இவரது முயற்சியில் உருவாக்கப் பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றுப் பார்வைக்கான பக்கத்தை http://sangam.tamilnlp.com/mp/json என்னும் வலைத்தளத்தில் இம்மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

ரொரண்டோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த திரு. நக்கீரன்  அவர்கள் நூலகத் துறையில் தமிழ் இலக்கியங்களுக்கான நுழைவுச் செய்தி கொண்ட தரவு ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கியது தமிழ் இலக்கியங்களின் மின்வடிவத் தரவுகளின் பயன்பாட்டை மேன்மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமேதும் இல்லை.

திரு. முத்து அண்ணாமலை அவர்களின் தமிழ்த் திறவுநிலை நிரலிகள் பற்றியும் அதற்காகத் தமிழ்க் கணினி வல்லுனர்கள் பலர் எடுத்துவரும் முயற்சி பற்றி விளக்கியதும் மாநாட்டுப் பங்கேற்பாளர்களிடையே பல கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தியதோடு அம்முயற்சி தொடர பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  பெங்களூருவிலிருந்து இந்திய அறிவியல் கழகத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் ஒளிக் காணல் வழித் தங்களின் படைப்புகளைப் படைத்து பேராளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறினர்.

பேராசிரியர் பொன்னவைக்கோ அவர்கள் மாநாட்டுத் துவக்க உரையையும் இறுதி நாளில் மாநாட்டு முடிவு உரையையும் ஆற்றி உத்தமம் வழித் தமிழ்க் கணினி முயற்சிகள் மேன்மேலும் தொடர வாழ்த்தினார்.

அடுத்த தமிழிணைய மாநாடு 2018ம் ஆண்டில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் நடத்தப் படும் என உத்தமம் அமை்பினால் முடிவுசெய்யப்பட்டு  இம்மாநாட்டின் நிறைவு விழாவன்று அறிவிக்கப்பட்டது

இம்மாநாடு சிறப்புற நடக்கப் பலவகையிலும் உதவிய உத்தமம் உறுப்பினர்கள், நிகழ்ச்சிக் குழு, பரிசுகள் குழு, வெளிநாட்டுக் குழு ஆகியோருக்கு மாநாட்டுப் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

காணொளிகள்

கீழ் வரும் இணைப்பில்  இவற்றை பார்வையிட முடியும்
https://www.youtube.com/channel/UCbB4F7D5Kmm1zM-MZoW0_Gw/videos

ஊடகங்களில் எமது மாநாடு பற்றி…

Read More

By EDINFITT