கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மற்றும் நுண்கலை மன்றம் மற்றும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) இணைந்து மார்ச் 5,6 & 7 ஆகிய தேதிகளில் தமிழுக்கான பன்னாட்டு அளவிலான தொழில்நுட்ப Hackathon போட்டியை நடத்துகிறது.
இதற்கான முன்பதிவானது கடந்த பிப்ரவரி 10 ல் தொடங்கி பிப்ரவரி 25 வரை www.tmfa-gct.com என்ற இணையதளத்தில் நடைபெற்றது.தமிழகம் முழுவதிலிருந்து கிட்டத்தட்ட 300 நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அணிகளாக 68 கல்வி நிறுவனங்களிலிருந்து இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
வருகிற மார்ச் 5,6 & 7 ஆகிய தேதிகளில் இந்த தமிழுக்கான Hackathon போட்டி இணையவழியில் நடைபெறும். முதல் நாளான மார்ச் 5ல் நடைபெற்ற முதல் சுற்றின் முடிவில் பங்கேற்ற 100 அணிகளிலிருந்து 28 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றன.
மார்ச் 6 ல் நடைபெற்ற இரண்டாம் சுற்றின் முடிவில் இறுதி சுற்றுக்கு 15 அணிகள் தகுதிபெற்றன.மார்ச் 7 ம் நாள் இந்திய நேரப்படி மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை இறுதி சுற்று நடைபெறும்.
கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – நிகழ்ச்சி நிரல்
கணியம் பொறுப்பாசிரியர் July 3, 2020 0
கணியம்
மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். மாநாட்டு பேராளர் கட்டணம் இலவசம். மின் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இம்மாநாடு எதிர்வரும் ஜூலை 4 தொடங்கி ஜூலை 5, 2020 வரை இயங்கலையில் நடைபெறும். இம்மாநாட்டில் பல்கலைக்கழக, ஆசிரியர் பயிற்சி கழக விரிவுரையாளர்கள், முனைவர், முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், தமிழ் கணிம ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து பயன்பெறுவர்.
இம்மாநாட்டினை உலகளாவிய நிலையில் இருக்கும் கணிஞர்கள் நடத்தவிருக்கின்றனர். இதன் வழி இங்கிருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த பயனைடைவர் என்பது திண்ணம் என மாநாட்டின் தலைவர் சி.ம.இளந்தமிழ் அவர்கள் தெரிவித்தார்.
Recent Comments