+65 97805920 ed@infitt.org

அமரர். மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களது 1ம் ஆண்டு நினைவு தினம்

உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் ( INFITT/ உத்தமம் )அமைப்பின் ஆரம்ப கர்த்தாவும் முன்னாள் தலைவரும் நீண்டகால ஆலோசகருமாக திகழ்ந்து கடந்த 2021 மே மாதம் 29ம் திகதி இவ்வுலகில் இருந்து மறைந்த அமரர் முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் (Dr.Munirathnam Anandakrishnan) அவர்களது 1வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
12 சூலை 1928 இல் பிறந்த அவர் இந்தியக் குடிசார் பொறியியலாளரும், கல்வியாளரும், தமிழ் இணைய வளர்ச்சியில் முன்னோடியும் ஆவார்.
கான்பூர் இந்தியத் தொழிநுட்பக் கழகத்தில் இயக்குநனராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.இவர் தமிழ்நாடு அரசின் தகவல் தொழிநுட்ப ஆலோசகராகவும் இருந்துள்ளார்.பிரேசில் நாட்டின் தேசிய அறிவியல் விருதைப் பெற்ற இவருக்கு, இந்திய அரசு, 2002 ஆம் ஆண்டில், பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்திருந்தது.
தனது 92 வயதில் காலமான ஆனந்தகிருஷ்ணன் தமிழ் மொழி கணினித் துறை இன்று இத்தகைய விரிவான வளர்ச்சி அடைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் அயராது பாடுபட்டவராவார்.
கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புக்களை உருவாக்கி தமிழர்கள் பரவியிருக்கும் நாடுகளில் எல்லாம் இணையம், கணினி மூலம் தமிழ் மொழி வளர்ச்சியடைவதற்கும் பரவுவதற்கும் அரும்பாடு பட்டிருக்கிறார்.
மேலும் பல தமிழ் மொழி, கணினித்துறை ஆர்வலர்களை உலகம் எங்கிலும் அடையாளங் கண்டு, அவர்கள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு உழைக்கவும் கவனம் செலுத்தவும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
உத்தமத்தின் வளர்ச்சிக்கும் தமிழ்க்கணிமையின் வளர்ச்சிக்கும் முக்கிய துாணாக விளங்கிய அமரர் முனைவர் மு.ஆனந்த கிருஸ்ணன் அவர்களுக்கு அவர் எம்மை விட்டுப்பிரிந்த இந்த 1வருட நிறைவில் அவரது நினைவுகளை மீண்டும் மீட்டி அவரது ஆத்மாசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அவரது கனவுகளை நிறைவேற்ற உத்தமம் வழி செயற்பாடுகளை முன்னெடுக்க உறுதி பூணுகின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்..
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் 29.05.2022

Comments are closed.