Open Source Tamil Computing Conference, INFITT Malaysia July 2020
கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – நிகழ்ச்சி நிரல்
கணியம் பொறுப்பாசிரியர் July 3, 2020 0
கணியம்
மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். மாநாட்டு பேராளர் கட்டணம் இலவசம். மின் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இம்மாநாடு எதிர்வரும் ஜூலை 4 தொடங்கி ஜூலை 5, 2020 வரை இயங்கலையில் நடைபெறும். இம்மாநாட்டில் பல்கலைக்கழக, ஆசிரியர் பயிற்சி கழக விரிவுரையாளர்கள், முனைவர், முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், தமிழ் கணிம ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து பயன்பெறுவர்.
இம்மாநாட்டினை உலகளாவிய நிலையில் இருக்கும் கணிஞர்கள் நடத்தவிருக்கின்றனர். இதன் வழி இங்கிருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த பயனைடைவர் என்பது திண்ணம் என மாநாட்டின் தலைவர் சி.ம.இளந்தமிழ் அவர்கள் தெரிவித்தார்.
இம்மாநாட்டை www.youtube.com/omtamil/live வழி நேரலையில் காணலாம். மாநாடு குறித்து மேலும் விவரங்கள் அறிய 03-7773 0555 எனும் எண்ணை அல்லது infittmalaysia@gmail.com மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளவும்.
இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.!