Paper Submission

தமிழ் இணைய மாநாடு 2014

மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

உலகத் தமிழ்தகவல் தொழில்நுட்பமன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணையமாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர்மாதம் 19-21 தேதிகளில் நடக்கஉள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது.

உத்தமம் தமிழ் இணையமாநாட்டைப் புதுச்சேரியில் புதுவைபல்கலைக்கழகம், புதுவை மொழியியல்மற்றும்பண்பாட்டுநிறுவனம், பல்லவன்கல்விநிறுவனங்கள், இந்தியமொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்த உள்ளது.

மாநாடு நடைபெறுவதற்கான செயற்குழுக்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்றான “மாநாட்டு நிகழ்ச்சிக்குழு”விற்கு மாநாட்டின் தொழில்நுட்ப அரங்குகளில் படைக்க உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒன்று சேர்த்து, பரிசீலனை செய்து,  தக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2014 மாநாட்டிற்குத் “தமிழ்மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு” முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

*    இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச் சொல்லாளர் (சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி…) ஒளியெழுத்துணரி,  இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப்  பேச்சுப் பகுப்பாய்வு, தேடு பொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்…

*     கையடக்கக் கணினிகளில் தமிழ்ப்பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)

*   திறவூற்றுத்தமிழ்மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.

*   கணினிமற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்.

*   தமிழ் இணையம், தமிழ்வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூகஇணையதளங்கள்

*    தமிழ்மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ்நூல்கள்….

*    தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப்பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரைபடைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள்அளவில் 1-2 பக்கங்களில் ஜூன்  30ஆம் தேதிக்குள் cpc2014@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும்  கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.  கட்டுரை பரிசீலனைக்கு தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பிக்க கேட்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். இவ்வகையில் கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை பற்றிய நிகழ்ச்சிகள் குழுவின் கருத்தே கடைசி முடிவாக இருக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்கவேண்டும். மாநாட்டில் பங்கு பெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறொம்.

மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவுவெளியிடப்படவுள்ளது. இம்முறை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள் உலகின் முக்கிய/பெரிய நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு ஆய்வுக்கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வுசெய்யப் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2014@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முனைவர்கு. கல்யாணசுந்தரம்

தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு

13 ஆவது உலகத் தமிழிணைய மாநாட்டிற்கான முக்கியமான  இறுதி நாட்கள்:

கட்டுரையின்ஆய்வுச்சுருக்கம்அனுப்ப   : 15 ஜூலை 2014

தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்கள் பற்றிய அறிவிப்பு  : 31 ஜூலை 2014

முழுக்கட்டுரைஅனுப்ப    : 15 ஆகஸ்ட் 2014

மாநாடுநடைபெறும்நாட்கள்  :  19-21 செப்டம்பர் 2014

மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவின் உறுப்பினர்கள்

முனைவர்கு. கல்யாணசுந்தரம் (லுசான்),

பேராசிரியர்ஆ. க. இராமகிருட்டினன் (பெங்களூர் ),

திரு. சிவபிள்ளை (இலண்டன்),

முனைவர் (திருமதி) சீதா லட்சுமி (சிங்கப்பூர்),

முனைவர்அ. சிவகுமாரன் (சிங்கப்பூர்),

முனைவர் (திருமதி) மாலாநேரு (சென்னை),

முனைவர் (திருமதி) வி. தனலட்சுமி (சென்னை),

முனைவர்இல. சுந்தரம் (சென்னை),

திரு. அனுராஜ் (கொழும்பு),

திரு. முகுந்தராஜ்சுப்ரமணியன் (பிரிஸ்பேன்)

Tamil Internet 2014

(13th International Conference)

Puducherry, India

September 19- 21, 2014

Call for Papers

CALL FOR PAPERS

13th International Conference on

Tamil Computing and Tamil Internet

(“Tamil Internet 2014”)

The International Forum for Information Technology in Tamkl (INFITT) is pleased to inform that arrangements are currently underway to hold the next Tamil Internet Conference 2014 at Puducherry (aka Pondicherry), India (Pondicherry University campus) during 19-21 September 2014.

The INFITT annual conference is being co-hosted by the following institutions: Pondicherry University, Puducherry Institute of Linguistics and Cultures (PILC), Puduvai Tamil Sangam, Pallavan Group of Institutions and the Central Institute of Indian Languages (CIIL).

One of the committees formed to organize “Tamil Internet 2014, the “Conference Program Committee” (CPC)* has been given the task to collect, review and select papers for presentation in various technical sessions of the conference. “Natural Language Processing (NLP) as applied to Tamil” has been chosen as the principal theme for the Tamil Internet Conference 2014.

The CPC is pleased to release the following “Call-for-Papers for presentation at the Tamil Internet 2014″. We welcome research papers on the following topics to be addressed at various technical sessions of the Conference.

*  NLP applications in Tamil: Spellchecker, OCR, Voice recognition, speech synthesis, Search engines, Machine Translation, Data-mining, etc.

*  Tamil “enabling” in mobile platforms (smartphones, tablets,..) with particular emphasis for Tamil Apps for use on iOS, Android and Windows 8 platforms

*  Open Source Tamil softwares and Tamil Localization

* Computer- and online-assisted Teaching, Learning of Tamil

*  Tamil content and delivery via Internet: Blogging, microblogging, Wikipedia, Podcasting, social networks,…

*  Tamil Digital Library and e-content delivery across various handheld devices (ebooks, ezines,..)

*  Tamil Databases and e-commerce

*  Any other hardware, software development related to Tamil computing technology

All those interested to make an oral presentation at the conference are requested to submit a 1-2 page (A4) summary/abstract of their planned presentation to the CPC (email ID: cpc2014@infitt.org) on or before 30 June 2014. The conference program committee will send an acknowledgement mail on the receipt of the abstract.

The abstracts can be in Tamil, English or bilingual (Tamil and English) but all abstracts must be based on Unicode encoding. The abstract submission can be in the form of plain text (.txt), Microsoft Word (.doc or .docx), Open office and html formats (formats where the content can be extracted). Please try to be as precise on what you want to present.

Submission of an abstract implies that at least one author of the paper attends the conference to present the work in person. Proxy or remote presentation is not permitted. In cases where the message from the abstract is not clear, CPC may request more details in the form of an expanded abstract (4-6 pages) to judge adequately the submission.

Authors of papers accepted for oral presentation will be informed on or before 31 July 2014. As with the abstracts, the full paper of the presentation (4-6 A4 size pages inclusive of all graphics and tables) is to be submitted in the form of Plain Text, HTML, Microsoft Word or Open Office format file. To ensure proper formatting, full paper may be submitted “additionally” in the form of PDF (with font embedding). Only the quality of the final paper will determine the participation in the conference and the decision of the Conference Program Committee will be final in all respects.

The Conference Proceedings will be published in printed paper format and as an e-book. Arrangements are being made to have the Conference Proceedings of the annual Tamil Internet Conferences published with an ISSN (International Standard Serial Number). ISSN will permit routine indexation of the Conf. Proceedings in bibliographic databases of all leading libraries across the globe and proper referencing of the content of the Proceedings in academic journal publications.

We look forward to your active participation in the Tamil Internet 2014 conference. If you have any questions or need further clarifications, feel free to send us a note to <cpc@infitt.org>.

(sd.). K. Kalyanasundaram

Chair, CPC, Tamil Internet 2014

http://www.infitt.org/ti2014/ (cpc2014@infitt.org)

 

Some Key Deadlines to observe: 

  • Paper abstract: 15th  July 2014
  • Paper acceptance notification  : 31st  July 2014
  • Camera ready copy submission    : 15th August 201 (max. 4 A4 size pages inclusive of all illustrations)
  • Conference Dates   : 19-21 Sept. 2014

*Members of the Conference Program Committee (2014):

Dr. K. Kalyanasundaram (Lausanne, CH, Chair),

Prof. A.G. Ramakrishnan (Bangalore, India),

Mr. Siva Pillai (London, UK),

Dr. S. Seetha Lakshmi (Singapore),

Dr. A. Sivakumaran (Singapore),

Dr. Ila Sundaram (Chennai, India),

Dr. Mala Nehru (Chennai, India),

Dr. V. Dhanalakshmi (Chennai, India),

Mr. Anuraj (Colombo, Sri Lanka)

Mr. S. Muguntharaj (Brisbane, Australia)