All those who contributed to the conference: Thank you for all your excellent work!
It is fair to conclude that the conference was a great success! We’d like to thank everyone who contributed to 12th International Tamil Internet Conference!
Uploading more Photos and Videos
Facebook API returned empty result. Please double check your Facebook album URL. Facebook API returned empty result. Please double check your Facebook album URL. Facebook API returned empty result. Please double check your Facebook album URL. Facebook API returned empty result. Please double check your Facebook album URL.TI2013 Conference Papers
பத்திரிகைச் செய்தி
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் மலாயா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 12வது தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் நடந்துவருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று அங்கங்களை உள்ளடக்கிய மாநாட்டில் கருத்தரங்க நிகழ்வுகள் சனிக்கிழமையன்று முடிவடைந்தன.
கருத்தரங்கில் மொத்தம் 101 ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. அவை கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு, மொழிக் கருவிகள், இணையமும் மென்பொருளும், செல்பேசிகளும் கைக்கருவிகளும், கல்வி ஆகிய துறைகளின்கீழ் படைக்கப்பட்டன. மொத்தம் 18 அமர்வுகளாக இந்தக் கட்டுரைகள் படைக்கப்பட்டு அவைமீதான விவாதங்களும் நிகழ்ந்தன.
சிறந்த நான்கு கட்டுரைகளுக்கு, பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் விருதுகள் தரப்பட்டன. 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதுகள், அவ்வாண்டு இரண்டு சிறந்த கட்டுரைகளுக்கு வழங்கப்பட்டன. இம்முறை முதல் இவ்விருதுகள் நான்கு கட்டுரைகளுக்கு வழங்கப்படும். இவ்வாண்டு விருதுபெற்ற கட்டுரைகள்:
தமிழில் பேசுவதை ஆண்டிராய்டு கைப்பேசிமூலமாக ஆங்கில வாக்கியங்களாக மாற்றி குறுஞ்செய்தியாக அனுப்பி, பெறும் கைப்பேசியில் அதனை மீண்டும் தமிழ்க் குரலாக மாற்றி அளிக்கும் செயலி தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு மிகவும் பலன் தரக்கூடியது. இது பல துறைகளை ஒருங்கிணைத்து (குரல் உணர்தல், இரு மொழிகளுக்கிடையிலும் மொழி மாற்றம்,எழுத்திலிருந்து ஒலியாக்கம்) உருவாக்கப்படும் ஆராய்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஸ்ரீனிவாசனின் ஆராய்ச்சிக் கட்டுரை இதனை முன்னெடுக்கிறது.
பார்கவா ஊராலா, ஏஜி ராமகிருஷ்ணன் கட்டுரை பலகைக் கணினிகளில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளை உணர்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது.
ராஜேஸ்வரி ஸ்ரீதர் மற்றும் பிறரின் கட்டுரை, ஒளிவகை எழுத்துணர்தலில் ஏர்படும் பிழைகளைக் களைவதற்கு தமிழ் இலக்கண விதிகளைப் பயன்படுத்துகிறது.
தமிழ் திரைப்பாடலாசிரியரும் கணினி ஆராய்ச்சியாளருமான மதன் கார்க்கியும் அவரது குழுவினரும் திரைப்பாடல்கள் குறித்துப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். அதில் ஒன்று பாடல்களை அவற்றின் சொற்களை ஆய்வதன்மூலம், சொல்வளம், கருத்து ஆகியவற்றை ஆராய்ந்து வகை பிரித்து காட்சிப்படுத்த முனைகிறது. பாடல்களை அவ்வாறு படங்களாகக் காட்சிப்படுத்துவதன்மூலம் பாடல்களை ரசிகர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
மேற்கண்ட நான்கு கட்டுரைகளுக்கும் தமிழ் இணைய மாநாடு 2013-க்கான பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் சிறந்த கட்டுரை விருதுகளைப் பெறுகின்றன. தேர்ந்தெடுத்த ஒவ்வொரு கட்டுரைக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 5,000-மும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
உத்தமம் அமைப்பு, தமிழ் இணைய மாநாடு 2013-ஐ வெற்றிகரமாக நடத்த நிதியுதவி அளித்து முழுமையான ஆதரவை அளித்த மலேசிய அரசுக்கும் மலேசிய அரசின் பல்லூடக அமைச்சகத்துக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவிய பல்கலைக்கழகத்துக்கு உத்தமம் அமைப்பு நன்றி தெரிவிக்கிறது. இந்நிகழ்ச்சிக்குத் தாராளமாக நிதியுதவி வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் உத்தமம் நன்றி தெரிவிக்கிறது. உத்தமம் மலேசியா கிளை மிகச் சிறப்பாக இந்நிகழ்ச்சியை நடத்திக்காட்டியுள்ளனர். உத்தமம் மலேசியாவின் பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் உத்தமம் அமைப்பு நன்றி தெரிவிக்கிறது.
இம்மாநாட்டின் தீர்மானங்களாகக் கீழ்க்கண்டவை முன்மொழியப்படுகின்றன:
நன்றி.
Where can I find the collection of research papers submitted to the conference? I’m looking forward to reading the papers.
Thanks
Excellent effort-Proud of you all.
i cant able to download the papers submitted in the 12th International tamil internet conference………….
Could we the Malaysians make effort to join these orgnasisations .IT will serve as a platform for the Malaysian Indians to contribute and learn on Tamil computing.
Am sure Tamil Teachers could join and learn more about elearning and tools.Please pass the link thru social media
Good effort. Keep it up!!!