 
 
 மரகத வல்லி மாலை மற்றும் 
 வஞ்சுள வல்லியேசல்
(ஆசிரியர் பெயர் தெரியவில்லை) 
marakatavalli mAlai & vanjcuLavalliyEcal   
(author not known for both works) 
in Tamil Script, Unicode/UTF-8 format
 
 Acknowledgements: 
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation. 
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading. 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of 
Tamil literary works and 
to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 மரகத வல்லி மாலை மற்றும் 
 வஞ்சுள வல்லியேசல் 
(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
 
 Source: 
மரகத வல்லி மாலை மற்றும்  வஞ்சுள வல்லியேசல் 
பதிப்பாளர் இரா.சத்யா 
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்லைக்கழகம் 
சென்னை 600 005. 
ஆகஸ்ட் - 2007 
-----------------
"சுவடியலும் பதிப்பியலும் பட்டயப் பேற்றிற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு  அளிக்கப்பெறும் பதிப்பேடு #53010611
------------
 நெறியாளர்  
வீ. அரசு, 
பேராசிரியர் - துறைத்தலைவர், தமிழ் இலக்கியத்துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம்,  சென்னை 600 005.
‘மரகத வல்லி மாலை மற்றும் வஞ்சுள வல்லியேசல்' என்னும் பட்டயம் பெறுவதற்காக என்னும் இவ் பதிப்பேட்டினைச் செல்வி இரா.சத்யா அவர்கள் என் மேற்பார்வையில் ஆய்வு செய்தார் என்றும் இந்த ஆய்வேடு அவரின் சொந்த முயற்சியில் உருவானது என்றும் சான்றளிக்கிறேன். 
நாள்:  -2007                                                           நெறியாளர்,  (வீ. அரசு) 
இடம்: சென்னை-5. 
-----------
 பதிப்பாளர் சான்றிதழ் 
இரா. சத்யா, 
முதுகலை நிறைநிலை, தமிழ் இலக்கியத்துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 600.005. 
சுவயியலும் பதிப்பியலும் என்னும் பட்டயப்பேற்றிகாகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்பெறும் மரகத வல்லி மாலை மற்றும் வஞ்சுள வல்லியேசல்' எனும் தலைப்பிலான இப்பதிப்பேடு என் தனி முயற்சியில் உருவானது என்று உறுதியளிக்கிறேன். 
நாள்: -2007                                                    பதிப்பாளர், (இரா. சத்யா) 
இடம்: சென்னை-5. 
--------------
 உள்ளடக்கம்   
          நன்றியுரை 
          முன்னுரை 
          பதிப்புரை 
          செய்யுள் 
          பின்னிணைப்பு 
          செய்யுள் முதற்குறிப்பகராதி 
-------------- 
 
நன்றியுரை 
சென்னைப் பல்கலைக் கழக தமிழிலக்கியத் துறையில் சுவடியில் பட்டய வகுப்பில் சேர வாய்ப்பளித்து, சுவடியியல் பட்டயப் பயிற்சி வகுப்பில் சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்த தமிழிலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் உயர்திரு வீ. அரசு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
சுவடியை எம்முறையில் படிக்க, பதிப்பிக்க வேண்டுமெனப் பயிற்சியளித்தும், இவ்வகுப்பு தொடர்பாக நூலை பதிப்பிக்க எனக்கு ஊக்கமளித்து வழிகாட்டிய நெறியாளர் முனைவர் ய. மணிகண்டன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்ட ஆய்வேட்டிற்காக சுவடி அளித்து உதவிய சென்னைப் பல்கலைக்கழக அரசு கீழ்த்திசை நூலகக் காப்பாளர் முனைவர். சௌந்திர பாண்டியன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
சுவடியியல் மற்றும் பதிப்பியல் எனும்இந்த பட்டயப் படிப்பில் சேர என்னை ஊக்கப்படுத்திய என் பெற்றோர் திரு. இராஜேந்திரன், திருமதி. ராணி அவர்களுக்கும், என் சகோதரர் திரு. அசோக் அவருக்கும் மற்றும் உள்ள என்னுடன் பயின்ற நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
----------
 முன்னுரை
சிற்றிலக்கியங்களில் இறைவனைப் பாடுவது மட்டுமில்லாமல், அரசர்கள் பற்றியும், புகழ்மிகுந்த ஆண்மக்கள் பற்றியும், பெண் மக்கள் பற்றியும் பாடப்பெறுகின்றன. அந்த வகையில் பெண்ணாக வளரும் மரகதவல்லியை விளித்து பாடப்பெறுவதாக அமைந்துள்ள மரகதவல்லி மாலை என்னும் சிற்றிலக்கிய வகை. இறைவனின் பெருமையை கூறும் செய்திகளைக் கூறி மரகதவல்லி வளரும் காடு, குன்றின் சிறப்பு, காட்டில் வளரும் மலரின் சிறப்புக்கள் பற்றி பாடப்பெற்றுள்ளன. பாடலின் இறுதியில் 
வரும் 'பேரை' எனும் சொல் ஊரைக் குறிக்கும். அவ்வூரில் உள்ள பட்டினாயகனார் பற்றியும், அவ்வூரின் தன்மைகள் பற்றியும் பாடப்பட்டு உள்ளன. 
வஞ்சுளவல்லியேசலில், தாய்க்கும், மகளான வஞ்சுளவல்லிக்கும் இடையே ஏற்படும் ஏசல் பாடப் பெற்றுள்ளன. தாய் வினா எழுப்ப மகள் விடையளிக்கும் தன்மையாக உள்ளது. சான்றாக, தாய் மேகம் போன்ற கருமையான கூந்தல் கலைந்திருப்பதேன் என வினவ, சிறுமையான இடையை உடைய பெண்களுடன் சேர்ந்து மலர்களைப் பறிக்கும் போது, அங்கு உள்ள கிளை மரகத வல்லி மாலை மற்றும் வஞ்சுள வல்லியேசல் மாட்டியதனால் கூந்தல் களைந்ததென கூறுகின்றாள். இவ்விதமாக இரு சுவடிகளும் அமைந்துள்ளன. 
மரகதவல்லி மாலையும், வஞ்சுளவல்லியேசலும் யாப்பமைதி உடையது. 
இரா.சத்யா 
---------------
 பதிப்புரை
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக நவீன அச்சு இயந்திரங்கள் செய்தித் தொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இலக்கியப் பெருக்கத்திற்கும் காரணமாக விளங்குகின்றன. இதன் விளைவாக எல்லா தரப்பு மக்களையும் இலக்கியங்கள் எளிதில் சென்றடைகின்றன. ஆனால் அறிவியல் வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் செய்தித் தொடர்பு அருகியே காணப்பட்டது. செய்தி பரப்பும் ஊடகங்களும் அவ்வளவாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. காகிதங்கள் கண்டு பிடிக்கப்படுவதற்கு முந்தைய கால கட்டத்தில் இலை, விலங்குகளின் தோல், கற்பாறைகள், மரப்பட்டைகள், செப்பேடுகள், பானை ஓடுகள் போன்றவற்றில் செய்திகளைப் பதிவு செய்தனர். காலப்போக்கில் பனையோலைகள் செய்திகளைப் பதிவு செய்வதற்கு கருவியாக அமைந்தது. 
இப்பனையோலைகள் பல்வேறு வகைகளில் மூலிகைச் சாறுகளைக் கொண்டு பதப்படுத்தப்பட்டன. அவற்றில் கூரிய எழுத்தாணிகளைக் கொண்டு கீறி எழுத்துகளை எழுதினர். அவ்வெழுத்துக்கள் தெளிவாக மற்றும் வஞ்சுள வல்லியேசல் வகையில் மஞ்சள், கண்ணுக்குத் தெரியும் ஆகியவற்றை அதன் மீது பூசினர். 
கரி எழுத்தாணியைக் மேலும் ஓலைச்சுவடிகளில் கொண்டு எழுதும் போது அவற்றின் எழுத்துருவில் பல்வேறு மயக்கநிலைகள் காணப்பட்டன. ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, வேறுபாடு, துணைக்கால், ரகர, றகர வேறுபாடு, ஒற்றெழுத்து, இடைவெளி, முற்றுப்புள்ளி போன்றவை காணப்படுவதில்லை. 
மொழிநடை 
மேலும் இக்காலத்தில் உள்ளதைப் போல் இலக்கியங்களோ அல்லது வேறு செய்திகளோ, மருத்துவ நூல்களோ, இலக்கண நூல்களோ எதுவானாலும் இக்கால உரைநடை அமைப்பில் இல்லாமல் செய்யுள் நடையில் காணப்பட்டன. 
காரணம் இக்காலத்தைப் போல அச்சுப்புத்தகங்கள் அக்காலத்தில் இல்லை. ஆசிரியர் பாடம் சொல்லித்தருவதை மாணாக்கன் செவி வழிகேட்டும், ஆசிரியரிடம் உள்ள ஓலைச் 
சுவடிகளைப் பார்த்தும் மாணவன் மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்கு நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது யாப்பு முறை. 
இந்த யாப்பு முறைகளைக் கையாண்டே அக்காலத்தில் இலக்கியங்களையும் யாத்துள்ளனர். இந்த யாப்பு அமைப்பு காலந்தோறும் பல்வேறு விதமாக பல்வேறு வகையாகப் பல்கிப் பெருகியுள்ளன. 
மேலும் ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தைக் . குறிப்பிட்ட செய்யுள் வகையாலேயே பாட வேண்டும் என்ற மரபும் பின்பற்றலாயிற்று. அதோடு மட்டுமல்லாமல் அந்த யாப்பின் பெயராலேயே அவ்விலக்கியங்கள் அழைக்கப்பட்டன. (கலித்தொகை, பரிபாடல், தாண்டகம், விநாயகர் அகவல், திருக்குறள், வெண்பா) 
காலந்தோறும் பலநூறு வகையான இலக்கிய வகைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. குறிப்பாக நாயக்கர் காலத்தில் பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகைகள் தோற்றம் பெற்றன. அவற்றில் எண்ணிக்கை பொதுவாக 96 என்று குறிப்பிடுவர். ஆனால் இச்சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் எண்ணிக்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன. 
'மரகத வல்லி மாலை மற்றும் வஞ்சுள வல்லியேசல் இவ்வகையிலான சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தான் 'மாலை' இலக்கிய வகையாகும். 
இவ்வாறாக இலக்கியங்களும், இலக்கணங்களும் வானியல் மற்றும் சோதிடம், மருத்துவம் போன்றவை பதிவு செய்யப்பட்ட ஓலைச் சுவடிகள் தற்போது பல்வேறு விதமான அமைப்புக்களாலும் அரசாலும் தொகுக்கப்பட்டு அவை ஓலைச்சுவடி நூலகங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான ஓலைச்சுவடிகள் அச்சு வடிவம் பெறாமல் கிடைக்கின்றன. அவற்றை அச்சுக்கு கொண்டு வரும் நோக்கில் பல்வேறு தமிழ் ஆர்வலர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய முயற்சிகளில் ஒன்று தான் இந்த "மரகதவல்லி மாலை” மற்றும் "வஞ்சுளவல்லியேசல்” என்னும் ஓலைச் சுவடிகளைப் பதிப்பிக்கும் செயலாகும். 
இதற்கான ஓலைச் சுவடிகளையும், தாள் சுவடிகளையும் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலிருந்து பெறப்பட்டது. ஓலைச் சுவடிகள் பல்வேறு காரணங்களுக்காக பலரால் 
படியெடுக்கப்படுகின்றது. அவ்வாறு படியெடுக்கும் போது கவனக் குறைவாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ மூல பாடத்திலிருந்து பல்வேறு மாற்றங்கள், தவறுகள், திரிபுகள், ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு கிடைக்கும் பல்வேறு ஒரே தலைப்பில் அமைந்த ஓலைச் சுவடிகளையும் தாள் சுவடிகளையும் ஒப்பிட்டு பாடவேறுபாடுகள் கண்டறியப்பட்டு இப்பதிப்பு முயற்சி மேற்கொள்ளப்-பட்டுள்ளது. 
 சிற்றிலக்கியம்  
சிற்றிலக்கியங்கள் பெரும் வளர்ச்சி பெற்ற காலமாக நாயக்கர் காலத்தைக் குறிப்பிடுகின்றோம். தமிழின் முழுமுதல் நூலாக விளங்கும் தொல்காப்பியத்திலேயே சிற்றிலக்கியம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சான்றாக 
‘குழவி மருங்கினும் கிழவ தாகும்' 
எனும் தொல்காப்பிய நூற்பா, பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகைக்குச் சான்றாய் விளங்குகின்றது. மேலும் 
'ஊரோடுத் தோற்றமும் உரித்தென மொழிப’ 
என்னும் தொல்காப்பிய நூற்பா, தொல்காப்பியர் காலத்திலேயே பிள்ளைத் தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதனை உணர்த்தும். மேலும், தொல்காப்பியர் 
"விருந்தே தானும் புகவது கிளந்த யாப்பின் மேற்றே" 
என்று எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய இலக்கியங்களுக்கும் வரையறை செய்துள்ளார். யாப்பு என்பது சொல் ஆக்கப்படும் இலக்கியத்தைக் குறிக்கும். சொல் ஆக்கப்படும் இலக்கியத்தைக் குறிக்கும். பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியம் தொல்காப்பியம் கூறும் 'விருந்து' என்பதனுள் அடங்கும். 
பெருங்காப்பியத்தில் உலா, தூது, குறம் முதலியன உட்பிரிவுகளாக இடம் பெற்றுள்ளன. இவையே பிற்காலத்தில் தனித் தனி சிற்றிலக்கிய வகையாக வளர்ச்சி பெற்றுள்ளன. நாயக்கர் காலமே, சிற்றிலக்கிய காலமாக கருதப்படுகிறது. 
அச்சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் ஓலைச் சுவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் பல நூலாக வெளி வந்தன. பல வெளி வராமல் கரையான்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து விரைவில் வெளிவர முயற்சிப்பது, நம் தமிழைப் பாதுகாத்து வருகின்ற தலைமுறையினருக்கும் அவற்றின் பெருமையை உணர்த்த ஏற்ற வழியாகும். 
மாலையில் பல வகைகள் உள்ளன. அவற்றின் பாவகையும் மாறுபடுகின்றன. தும்பை மாலை, நொச்சி மாலை, தாண்டக மாலை, தாரகை மாலை, பன்மணி மாலை, பல்சந்த மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, நவமணி மாலை, நாண்மணி மாலை, இரட்டைமணி மாலை, அநூராக மாலை எனப் பல வகைகள் காணப்படுகின்றன. 
பாடற்பொருள், நிலைக்கேற்ப பா வகைகள் மாறுபடுகின்றன. 
 மாலை இலக்கணம்  
சுவாமிநாதம் என்னும் இலக்கண நூலில் மாலையின் இலக்கணம் கூறப்படுகிறது. 
 மரகதவல்லி மாலை - விளக்கம்  
மரகதவல்லி மாலை கடவுள் வாழ்த்து நீங்கலாக ஐம்பது பாடல்களையும், இறுதியில் நூலினை வாழ்த்தும் வாழ்த்து பாடலையும் கொண்டுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. காலம் பற்றி ஏதும் தகவலில்லை. செய்யுளின் இறுதி வரியில் "சாட்டாவிக் குன்றிலே வளரும் பேரை மரகதவல்லியே" என வருவதால், மரகதவல்லி மாலை என பெயர் பெற்றது எனலாம். கடவுள் வாழ்த்துப்பாடல் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளது. நூலைப் பற்றிய பிற குறிப்புகள் ஏதும் இல்லை. 
மரகதவல்லி மாலை - பா வகை 
கட்டளைக் கலிப்பாவினால் பாடப்பெற்றுள்ளது. தேமா, புளிமா என்னும் மாச்சீரை முதலாக உடைய நாற்சீரடி; முதலசை நேரசையாயின் தேமாவாயின் பதினோரெழுத்தும், முதலசை நிரையசையாயின் புளிமாவாயின் பன்னிரெண்டு எழுத்தும் பெற்று, இது ஓர் அரையடியாய் இத்தகைய அரையடி இரண்டு கொண்ட அடி நான்கு வருவன கட்டளைக் கலிப்பாவின் இலக்கணம் ஆகும். எழுத்தெண்ணும் போது ஒற்று நீக்கி எண்ண வேண்டும். இது கட்டளைக் கலித்துறைக்கும் பொருந்தும். எழுத்தெண்ணப்படுவதால் இப்பெயர் (கட்டளை-அளவு) பெற்றது. மரகதவல்லி மாலையில் பெரும்பாலும் நேரசை பதினோரெழுத்தும், நிரையசை பன்னிரண்டு எழுத்தும் உடையதால், இஃது கட்டளைக் கலிப்பாவினால் பாடப்பெற்றுள்ளது எனலாம். 
ஏசல் 
தமிழ் இலக்கியங்களில் ஏசல் பாடல்களும் பாடப்பெற்றுள்ளன. முக்கூடற் பள்ளுவில் மூத்தப் பள்ளி, இளையப் பள்ளி, இவர்களுக்கிடையே ஏசல் உண்டாகிறது என்றாலும் பள்ளு வகையைச் சேர்ந்தது அவ்விலக்கியம் ஒருவரை ஒருவர் வினவுவதாக உள்ளது. 
 வஞ்சுளவல்லியேசல்   
ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பதினோரு பாடல்கள் மட்டுமே உள்ளது. தாய்க்கும் மகளுக்கும் இடையேயான ஏசல். ஏசல் என்பது அவதூறாக பேசுவதனைக் குறிக்கும். தாய் அவதூறாக மகளான வஞ்சுளவல்லியை ஏசும் போது. வஞ்சுளவல்லி அதற்கு விடை கூறும் வண்ணம் அமைந்துள்ளது. மற்ற குறிப்புகள் ஏதும் சுவடியில் குறிப்பிடப்படவில்லை 
சுவடி அமைப்பு 
கடவுள் வாழ்த்துப்பாடல் சுவடி மட்டும் ஒரு பக்கம் எழுதப்பட்டுள்ளது. எஞ்சிய சுவடிகளின் இருபுறமும் தொடர்ச்சியாக பாடலகள் எழுதப்பட்டுள்ளன. அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் மூன்று மரகதவல்லிமாலை எழுதப்பட்டுள்ள சுவடிகள் கிடைக்கின்றன. ஒன்று கரையானுக்கு இரையாகி விட்டது. மற்ற இரண்டும் சிதைவின்றி எழுதப்பட்டுள்ளன. மரகதவல்லிமாலையின் சுவடியின் தொடக்கத்தில் ஹரிஓம், நன்றாக, குருவாழ்க என எழுதப்பட்டுள்ளது. வஞ்சுளவல்லி யேசலில் ஆறு அல்லது ஏழு சுவடிகளே உள்ளன. 
சுவடி விவரம் 
மரகதவல்லி மாலை அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் R. 4278 எண்ணிலும், R. 4277 எண்ணிலும், R. 6773 எண்ணிலும் சுவடிகளாக உள்ளன. அவற்றின் T.R. எண் முறையே T.R. 1888, T.R.1887, T.R.2726 என்னும் எண்களில் மரகதவல்லிமாலை சுவடிகள் காணப்படுகின்றன. வஞ்சுளவல்லியேசல் முறையே T.R.No.1711-ல் உள்ளது. 
-------------- 
மரகதவல்லி மாலை  -  நூலின் தொடக்கம்
 
ஹரிஓம் நன்றாக குருவாழ்க 
கடவுள் வாழ்த்து 
பரகேதி யுதவும் பேரை பட்டி னாயகனார் பாதம் 
மரகத வல்லி பேரில் மரகத மாலை சூட்ட 
கரதலம் குவித்து நாமே கடிமலர் தூவி வாழ்த்தி 
அரகரா வென்று பாடி அன்னை யைவணங்குவோமே 
திருவி ருக்குஞ் செழுங்கொடித் தாமனார் 
               செங்கண் மாலும் பிரமனும் தேடிய 
கருவி ருக்குங் கனைகழல் சேவடி 
               காட்டி யென்னையும் நாக்ககொல் ளவேண்டுமோ 
குருவி ருக்கும் குறியறி வித்திடாய் 
               கொன்றை தாதா சிதும்பைக் குராமலர் 
மருவி ருக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         1
தொண்டு பாடு மடியார்க்கு முன்னொரு 
               தொண்டு பய னெனின் சேவடிக் 
கண்டு பாடும் பெருவாழ்வு தந்தென்னைக் 
               காத்த பேரைக் கடைபோக காற்பையே 
விண்டு லாவு முகார வியாரவி 
               மோகரஞ் சிரு உருஞ்சி குராமலர் 
வண்டு பாடும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகதவல்லயே 	         2
முடிக்கு மிரு வினைமும் மலம்வினை 
               முடி மும்ம றைமுடி யயிர்கதி 
முடிக்கும் காலமேல் காலமும் காலமும் 
               பலக் கல முஞ்செல்லு மோநதி 
முடிக்கு மண்முடிக்கு மணிமுடி யாயிரம் 
               நாகமாயி ரநோகத் துள்ளாயி ரம்மதி 
முடிக் குஞ்சாட் டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         3
வேலை வாய்க்கும் திரைநீங்க முழகுவார் 
         வேலையேற்ற வினையென வினையரும் 
காலை வாய்க்கும் நின்சேவடி தானனெனும் 
         கால்வி ளிறுக்க ளிப்பனுக் கென்செய்வோய் 
பாலை வாய்க்கும் ஆவைபோ லெனக்குள் 
         பட்டி னாயகர் பக்கத்தி லேயொரு 
மாலை வாய்க்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         4
உன்னை வைத்து யிரப்போலு மென்னுள்ளே 
               யொன்றி ரண்டு பறைமார்பா மணந்தனும் 
தன்னை வைத்தனை யுண்டவர்க கன்றியே 
               துதித்து யாதின திருவிளம் தன்னரோ 
மின்னை வைத்தனை விளியென தகேபார் 
               விடுதாக் குதென் னையாள்வாய் பகீரதி 
மானை வைத்து சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே          	5
காரி பெய்யும் களைச்சிலை போலவே 
               நானும் நீயும் பரமனும் பாசமும் 
சோரி பெய்யும் மென்னுக்கையுள் ளேவந்து 
               தோன்ற தோன்ற தோளிலீற வேண்டுமோ 
வேரி பெய்யும் கடுக்கையும் தாளமும் 
               வெள்ளெ ருக்கம் விளையாட நீங்களும்மும் 
மாரி பெய்யும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         6
மூசி நிற்கு மடியார் பெருமொரு 
         மோன மந்தி ரந்தன்னை யுலகிலே 
பேசி நிற்கும் படியல் லவோய்ந்த 
         பெரும் யானும் பெவதெக் காலமோ 
ஊசி நிற்கும் தவத்தோர் தரிசிக்கும் 
                     போமெழும் பொரு ளாமோக ருதிதிரு 
வாசி நிற்கும் சாட்டாவிக் குன்றிலே 
                  வளரும் பேரை மரகத வல்லியே          	7
ஓட்டு லாவும் பரம விருத்தம்பொல் 
               லோச மர்த ரவிளிவே லெரிந்திட 
பட்டு லாவி பதைக்குமென் னாருயிர் 
               பாதத் தாம ரைதாகென் றுபற்றுமே 
வீட்டு லாவும் பரவித்து நாதமும் 
               மேலை வாலுக் கடந்தெ ரியாய்ந்த 
மட்டு லாவுஞ் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே          	8
பஞ்சு தோயும் நின்சீர டிபோதிலென் 
               பற்றும் பற்று ரவேபற்றி நேயென்னை 
நெஞ்சு தோயும் படிபிரி யாதொரு 
               நிட்டை குட்டி நினைப்பதெக் காலமோ 
நஞ்சு தோயுங் கடலமு தேசிலை 
               காரி வெண்ணி லாவந்து தோன்றிடும் 
மஞ்சு தோயும் தடாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         9
கூறு பட்ட புவியாரை நீக்கியே 
         ரெல்லி லாயி ரம்பங்கிட் டதிலொரு 
கூறுபட்ட பொழுதேநின் சேவடி 
         கூடி நீக்கப் பெறுவதெக் காலமோ 
வீறு பட்ட பசுப்பயந் துதைத்திடும் 
         மெய்வ ருத்த மும்போதமில் மீன்வளம் 
மாறு பட்ட சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         10
பந்து தோன்றுங் குதிமட பேதைமார் 
               பற்றி னாவ ளருற்றைப் பிறைபோலே 
நந்து தோன்றுங் காமங்க டக்கரை 
               தன்னை நீங்கப் பெறுவதெக் காலமோ 
இந்து தோன்று மணப்பந்தல் போலவே 
               ஏது மற்ற சிறியனி டத்திலே 
வந்து தோன்றுஞ் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         11
படுவிருக்கு மென்றலும் படைத்துவர் 
               பது கறப்ப வர்போலே பொல்லாதே 
கடு விருக்கும் கருத்துட னென்னையும் 
               வகையக் கொண்ட மளிகைவி டநிதியே 
உடு விருக்கும் கல்லாலே றியவும் 
               மொரு வண்கைச் சிலைகொண்டை யிடிக்கவும் 
வடு விருக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         12
நூலை யிட்ட போலெனக் குநீ 
               நோக்கி நீக்கப் பிறந்த மெப் பதாத்தன் 
வேலை யிட்டனைக் குண்டலித் தானிட்ட 
               மேலை வாசல் திறப்பதெக் காலமோ 
ஓலை யிட்ட குளையுமே யநற் 
               வுண்டு வண்டு குளைந்தடு மெங்குவீழ் 
மலை யிட்ட சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே          	13
இலை பழுத்து விழுந்தால் முரைத்திடா 
               தென்னுமே வாயா கெய்தாக முத்திரை 
நிலை பழுத்த கதிக்குட்ட பாவியேன் 
               நெஞ்சும் பஞ்சும் பழுப்பதைக் காலமோ 
கலை பழுத்த முதலியர் மூவரும் 
               காய்மு திர்ந்து கனிந்தமெய்ப் போதக 
மலை பழுத்த சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே          	14
அன்றி லாடும் படைவே லரும்புடை 
               யாசு குட மணிமடக் குடத்தில் 
முன்றிலாடும் அம் போதுமாதர் மேல்வைத்த 
               மோக தாக மொழிவதெக் காலமோ 
குன்றி லாடும் விளக்கைநண் ணவேபட்டி 
               கோமு னிக்கித் திருப்பதி யம்பலம் 
மன்றி லாடும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         15
நுரை யெடுத்த புண்போல் பாதக 
               நோயெ டுத்த சடம்போலே நீரிடுந் 
கரை யெடுத்த நீதி போல முடிய 
               துய ரொழித்துநின் சேவடி சூட்டுவாய் 
புரை யெடுத்த புரமூன்று நதியெழ 
               போர்மு டிக்கச் சிலையா கவேடனை 
வரை யெடுத்த சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே          	16
முரி யுண்ட சிலைவெனும் தளிரை 
               மோக போக விடமுண்டர் மார்வெழ 
வெரி யுண்ட களிய லேறயாவும் 
               மெலியும் பாவிக் குவீடுகி டைக்குமோ 
சொரி யுண்ட மகுக்கறி யாகவே 
               தொண்டர் வீட்டி லிருந்து விருந்துபோல் 
வரி யூண்ட சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	         17
குடங் கிடக்கு முலைபத ரிச்சேமேல் 
               குடு மந்த நிலையறி யாமலே 
தடங் கிடக்கு புரஞ்சொல்லு மேனைய 
               சாசு தந்த வளவு பெறுவனோ 
படங் கிடக்கு மணிநாகம் தவகிய 
               பலகை யக்கி னிதிரா மலைமுப்பரி 
விடங்கி டக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே                18
நான்கு திக்கு மங்கதிதே டியோடினும் 
               நாத விந்து வுகப்பல் நாட்டனம் 
தேன்கு திக்கும் திருவழுத் தோன்றவே 
               சேரத்தோன் றுமே யக்கினி யென்செய்வப் 
மான்கு திக்கும் விழிமான்னி ருக்கவும் 
               வெடிமல் கண்டு வெகுண் டதை 
மான்கு திக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               19
பருத்திருக்க எழச் சேவடி நீக்கியே 
               பற்றி யாவும் மயக்கமும் போலவே 
யிருந்தி ருக்கு மறியாத வீட்டிலே 
               இருத்தி வைப்ப தினியெந்தக் காலமோ 
பொருந் திருக் கும்வினை நீங்கவே 
               பர பூரணத் தில்விளைந்த மனோதயம் 
மருந்தி ருக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               20
குனை கிளிக்கு மீழைநாழை கன்னினாரை 
               கொங்கை மீதுபுனை யும்பசும் பொன்னிரை 
நினை கிளிக்கும் வசைந்தேடும் பாவியேன் 
               நீறு வினைக் கடல்நீங்கப் பெறுவனோ 
கனை கிளிக்கு மிரும்பசு முத்திணங்கை பொங்கி 
               குதித் தேவொ ளித்திடும் 
மனை கிளிக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே                	21
மடிவு காட்டு மனத்தலு னைப்பெற 
               வந்த பேரி லைாயாரண வப்பேருள் 
விடிவு காட்டும் மறைக்கும் மேட்டபர் 
               வீடு கட்டி விடுவதெக் காலமோ 
முடிவு கட்டும் தமிழ்நாவ லூரதுமனை 
               மோசம் கட்டும் படியுன டைக்கலம் 
வடிவு காட்டும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               22
சல மறுக்கும் முனிவரும் தேவரும் 
               தம்மி லேநம் மைகண்டுவந் தோருக்கு 
பல மறுக்கும் திரைநீங்கப் பெற்றன 
               பாவி யேற்கந்த பாக்கியம் வாய்க்குமோ 
அல மறுக்குமடி யார்தமக்கு மெட்டாத 
               யேற மற வேண்டியே யவர் 
மல மறுக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               பேரை மரகத வல்லியே 	               23
விடங் கொடுக்கும் விழிமனை கட்டவே 
               விலை கொடுத்தவர் கெல்லாந்தான் பாதக 
சடங் கொடுக்கும் மடந்தையர் நால்வரும் 
               சர சலத்தை துடைப்பதெக் காலமோ 
முடி கொடுக்கும் மடியவர் காரணம் 
               முடிவி லேநின் றமோனந்த மாயொரு 
மடங் கொடுக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               24
உனையழித்து எனை யுண்டதாய தரக்குண 
               னுதவி செய்வ துசெய்வனே னுடலுயிர் 
தனை யழித்தண் ணகயமார் நுனக்கிது 
               தயங்கி யயன்னை சரகமுஞ் செய்யுமோ 
வினையழிக்கு மண் மாய்கையு மற்றவர் 
            வீற்றி ருக்க வும்மேலை சிதம்பரம் 
மனை யழிக்கும் சாட்டாவிக் குன்றிலே 
 
              வளரும் பேரை மரகதவல்லியே 	               25
அணத் துணிக்குங் காண்டமுங் கோட்டியம் 
               அம்புயங் களும் போலேமெய் ஞானிகள் 
இணத் துணிக்கும் படியல் லவேயிந்த 
               எளி யேனுக் கிரங்கா ததென்காண் 
   புணத்து நிற்குங் கயுரிபோர தசுபோதங் 
               கெட்டு மேலி போதக விளங்கு 
மணத்து நிக்குஞ் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               26
பீடத் தடும் பொருளென்று நானென்று 
               பெற்ற பேரு ரென்றுமுப்பொ ருளாகவே 
பாடத் தடி திருவே னைருண்டாப் 
               பற்று வதுமி னியெந்தக் காலமோ 
மோனந் தடி யபோதப் பிராமேனும் 
               முத்தி வென்னும் மனோ லையம் 
மாடத் தடும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே                	27
தண்டை தாங்கும் துணையாடி பேதைமார் 
               தந்த மோகத் தினாலே விடமுண்ட 
கெண்டல் தாங்கும் துயர்பேறும் பாவியே 
               கிளப் படல் கிருபைவைத் தாளுவாய் 
பண்டை தாங்கும் துக்கனரை தங்குதாரகு 
               தனித் தங்கு மிருந்தோரி ருந்தனை 
மண்டை தங்குஞ் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே                	28
பரந் தழைக்கும் பத்தரும் வாவென்றும் 
               பாவி யேனுனைப் பாடியும் நாடியும் 
இரந் தழைக கவும்கேளா திருந்ததோ 
               இல்லை தூரம் மெனக்குமு னக்குமோ 
சுரந் தழைக் கவும் அங்கு நின்னாசை 
               சார்ந்த சூதத் தகீதமெடுத்து முளக்குவர் 
மரந் தழைக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               29
நிரை மணக்கும் பரகெதி கட்டிய 
               திட்டை குட்டை நினையாத பாவியேன் 
குரை மணக்கும் குரைதீரா நின்னருள் 
               கோலம் கட்டிக் குரைகளை கட்டுவாய் 
நரை மணக்கும் கரமல் சாணத்துரை 
               நாலு கோடி யார்மார்கள் ஓதிய 
மரை மணக்கும் சாடாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               30
நிரைந்து கட்டும நின்வுடை யேபெரு 
               நேர்மை தன்னை யாதுவென் றுசூட்டியே 
பரைந்து கட்டும் பமயல் லவேய்ந்தப் 
               படியே னக்கிந்தப் பாக்கியம் கிட்டுமோ 
குரைந்து காட்டு மடியாருள் ஏதினங் 
               குரைகள் நீங்கு மடியா ருளேதினும் 
மரைந்து கட்டும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               31
சரம் பாக்கு மடமாத ராகியதங் 
               கால மேல்வைக் குமிச்சைபொல் லாதொரு 
கரம் படிக்கும் தொழிலொன்று நீங்கவும் 
               கால மேயந் தகலிம ருதிலென்பார் 
மரம் படிக்கும் மைஞ்ஞான வாயிலிலே 
               பள்ள னாகி நின்றேயா டியருளவும் 
வரம் படிக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               பேரை மரகத வல்லியே 	               32
பரப் பழிக்கும் படியார றியாமலே 
               பத்த ரமொடு கூடிக்க திபெறு 
துரப் பொழிக்கும் சிறியேன்ற னக்கொரு 
               கரவுக் கட்டித் துணைசெய்ய வேண்டுமோ 
பிறப் பொழிக்கு மெய்யடி யார்தமைப் 
               பேய்பி டித்த வராக நினைப்பொடு 
மறப் பொழிக்கும் சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே                	33
தோகை கொண்ட வனப்புரு சாயலார் 
               துணி விழிக் கொலைவெல் லெறியுண்டு 
மூகை கொண்ட கொடுங்காம பாதகர் 
               முடிய வேயந் தமோனத் திருத்துவாய் 
யோகை கொண்ட சிலை வேடனை 
               யொற்றைக் கண்ணெ ரியாலே யெரித்தொரு 
வாகை கொண்ட சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	               	34
கொலை யிடிக்கும் விழிவேல் விடுக்கவுங் 
         கொடி யிடிக்கவுங் குணங்கெட்ட பாதக 
முலை யிடிக்க வுங்வாரி யிடியுண்டு 
         மோக மங்கை யர்க்கேதெ ழுபார்க்கவே 
அலை யிடிக்கும் பணப்போர்க்க லங்குமென்ன 
         அரி வத்து மைநதிடு மானவும் 
மலை யிடிக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	               35
அறங் கிடக்கு மயம்போலப் பாவியேன் 
         அறி வழிக்குங் கொடுமைபொல் லாதொரு 
அறங் கிடக்கும் விழிமாதர் தாளிலே 
         தவங் கிடக்கும் சிறியனுக் கென்செய்வார் 
உரங் கிடங்குந் தமிழ்நாவ லூராணம் 
         உம்பர் தேவணம் சேரணம் சோழனும் 
வரங் கிடக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே          	36
தணந் தழைக்கும் பொருட்பாலி லேலருகருடை 
         நார தமைக்கையும் ஆவியுங் கொள்ளவே 
சினந் தழைக்குங் கயற்கொடி மங்கைமார் 
         சிங்கி யாலும் திகைப்பெனுக் கேன்செய்வாய் 
அனைந் தழைக்குங் கமலந் தழைக்கும் 
         புன்னியத்த ழைக்க ருந்திருமே வுமப்பூதம் 
வனந் தழைக்குஞ் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         37
அரங் குவிக்குஞ் சுடரிலை வொக்கள்ளா 
         ரசை நீங்கிய யறியதா றியுமோ 
பரங் குவிக்கும் குவிந்துகு விந்துளம் 
         பற்றிப் பற்றி பனையார வேண்டுமோ 
இரங் குவிக்குங் கரங்குவித் தேதொழு 
         மேனை யென்ப றுக்கென்றே மெய்போதக 
வரங் குவிக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         38
நிரை யெடுத்த திரை நீங்கப் பாவியேன் 
         நினவு சென்றுநின் சேவடி போதிலென் 
தலை யெடுத்த வரோவரா வேவந்து 
         தாய்க்கு மாள்வந் தானொ ழியுமோ 
அலை யெடுத்த புவியெழு முண்டுசீர் 
         ஆலி லைக்குள் ளடங்க தடங்குமோ 
மலை யெடுத்த சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே          	39
சோரி யாடுந் தொழுமுனி கோமுனி 
         கோட நக்கீரை ஏயர சம்பலத் 
தேரி யாடி வருந்திச் சிவன்தாள் 
         யிளைத்து தேயென் றுதேவர்கண் டிரங்குவாய் 
சீரி யாடும் பனியாட மீளவும் 
         சேச மானிறம் சேவடி காணவே 
மாரி யாடும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         40
விடி விறந்த கருடல் போலுமென் 
         வினை யிறந்து நினைந்த வராரியர் 
படி கலந்து லகத்தோர்டொ ழுமெனப் 
         பால நாச பழுவதெக் காலமோ 
முடி வியந்த முழுமு தலாய்ந்த 
         மோன மேவ டிவனந்த வாரியில் 
வடி விருந்த சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         41
தர வனைக்கும் நகர்போலுஞ் சந்திரான் 
         தாள மொத்திடுமா தளையுமங் கூடவே 
கர வனைக்கும் புகமாயு முன்னுள 
         கற்ப னைப்ப டியன்றிருந் தேனெட்டு 
குர வனைக்கு மிகுன்நின் சேவடி 
         கூட்டி யேய டியார்தமை தம்மிலே 
வர வனைக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         42
எட்டக் கும்பொ ருளல்ல வேகரை 
         யேறு வற்கெ ழிதாகும றிவென்றுக் 
யுட்டக் கப்ப றிக்கும்யுன் னையன்றிக் 
         கெடுப் பவ ராரம்மே 
ஆட்டக் கிதாலை காலவொ ளித்தாதும் 
         வன்றி யேநார் சிங்கத்தை வெல்லுமோ 
மட்டக் கும்சாட் டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே          	43
பொருமை நீக்கி வெகுளியை கைக்கொண்டு 
         புண்ணும் கூரி திரிவேன்பொல் லாதொரு 
குருமை நீக்கி மறைக்குமெட் டாதநீள் 
         குறைகள் கதி யென்றுகொள் வாயம்மே 
சிறுமை நீக்கி பெருமைக் குமங்கல்வி 
         நல்ல றிவென் னும்சிதைக் குமென் 
வறுமை நீக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         44
குடுமை போக்கும் பரத்தைர தமுண்ண 
         கூடிக் கூடித் தடுமாறி பண்டுளம் 
கடிமை போக்கு வலிகெட்டு பாவியே 
         கதி பெறும்ப டிகண்பார்க்க வேண்டுமே 
அடிமை போக்கும் தவம்போக்கும் வீரியம் 
         மழரும் போக்கு மறிவைவயு போக்குமென் 
அடிமை போக்குஞ் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         45
தயக் கறுக்கு வெகுளி மழித்தெண்ண 
         நற்க விடுத் தெருமத்த நின்புறு 
முயக் கறுத்து டலாசையி னால்வரு 
         முடக் கறுத்து விடுவதெக் காலமோ 
தியக் கறுத்து நாணயவ றுக்தனது 
         சிலை யறுத்துத் சிறியனை மூடிய 
மயக் கறுக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         46
பசப் படுத்து மழலை மொழிச்சிய 
         பன்றி யாக வும் யென்னை நையென 
உசப் படுத்தும் தொழிலென் றொழியுமோ 
         யுள்ள போரொ ருகாலுந்த விருமோ 
கசப் படுத்தும் சிறியனை தன்னெதிர் 
         கொட்டுஞ் ஞானக் கலைக்கலைகட் டுநாளிலே 
வசப் படுத்தும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         47
விளவு தந்த கனிச்சுவை போலவே 
         வீற்றி ருந்தந்த பல்லுயிர் யாவரும் 
அளவு தந்த நரகமுஞ் சொற்கமும் 
         மற்கு வைதன் னையாமையி வையெல்லாம் 
தளவு தந்த பதமுத்தி நீங்கியே 
         தனைக் கடந் தொருசுரயுட் சியமெனும் 
வளவு தந்த சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         48
முளக் கறுக்குந் துபியென மூற்விலார் 
         மோக மங்கை யர்காமக் கடலிலே 
விளக் கறுக்குங் கடுமணத் தலுன்னை 
         வேண்டிக் கொல்லும் வினையெ னுக்கேன் 
களக் கறுக்கு மிரண்டென்று மொன்றென்றுந் 
         தானு நானும் தரவி யாமலே 
விளக் கறுக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         49
இணங் கெடுக்கும் மருவு கெடுக்குமே 
         ரேலிக் கெடுக்கும் மாறிதாகத் தேடியே 
தணங் கெடுக்கும்மோ னங்கெடும் பாவியோ 
         தங்க ளிச்சை பெறுவார் பிழைப்பாரோ 
கனங் கெடுத் ததுபோல் மேலையுன்னை 
         காணுப் பாக்கி யமில்லாத பாதகம் 
மனங் கெடுக்கும் சாட்டாவிக் குன்றிலே 
         வளரும் பேரை மரகத வல்லியே 	         50
மரகத வல்லி மாலையை வாழ்த்திப் பாடும் பாடல் 
வாழி மரகத மாலையைஅன் பத்தொன்றும் 
               படிப் பவர் கெட உன்னி 
யாழி யிரத மோனந்த மொன்றிரண்டு 
               மகப் பெறு வார்களோ காழி 
வாழி பார்வர நேரியுடன் கடவுள் 
               வல்ல லாடித் தமரை 
வாழி வாழி சாட்டாவிக் குன்றிலே 
               வளரும் பேரை மரகத வல்லியே 	
---------------------  
 மரகதவல்லி மாலை முதற்குறிப்பகராதி   
| 1 அணத்துணிக்கும்   26 | 26. தோகை கொண்ட 34 | 
| 2. அரங்குவிக்குஞ் 38 | 27. நான் குதிக்கு 19 | 
| 3.அறங்கிடக்கும் 36 | 28. நிரைந்து கட்டும் 31 | 
| 4. அன்றிலாடும் 15 | 29. நிரை மணக்கும் 30 | 
| 5. இனங்கெடுக்கும் 50 | 30. நிரையெடுத்த 39 | 
| 6.இலை பழுத்து 14 | 31. நுரையெடுத்த 16 | 
| 7. உன்னை வைத்து 5 | 32. நூலையிட்ட 13 | 
| 8. உனை யழித்து 25 | 33. பசப்படுத்து  47 | 
| 9. எட்டக்கும் 43 | 34. பஞ்சு தோயும் 9 | 
| 10. ஓட்டுலாவும்  8 | 35. படுவிருக்கு 12 | 
| 11. காரி பெய்யும்  6 | 36. பந்து தோன்றுங் 11 | 
| 12. குடங்கெடுக்கும் 18 | 37. பரந்தழைக்கும் 29 | 
| 13  குடுமை போக்கும் 45 | 38. பரப்பழிக்கும் 33 | 
| 14. குனைகிளிக்கு 21 | 39. பருத்திருக்க 20 | 
| 15. கூறுபட்ட புவி 10 | 40. பீடத்தடும் 27 | 
| 16. கொலையிடிக்கும் 35 | 41. பொருமை நீக்கி | 
| 17. சரம்பாக்கு 32 | 42 மடிவு காட்டு 22 | 
| 18. சல மறுக்கும் 23 | 43. முடிக்கு மிருவினை 3 | 
| 19. சோரியாடுந் 40 | 44. முரியுண்ட 17 | 
| 20. தண்டைதாங்கும் 28 | 45. முளக்கருக்குந் 49 | 
| 21 தணந் தழைக்கும் 37 | 46. மூசிநிற்கு மடியார் 7 | 
| 22. தயக்கறுக்கு 46 | 47. விடங் கொடுக்கும் 24 | 
| 23. தரவனைக்கு 42 | 48. விடி விறந்த 41 | 
| 24. திருவிருக்குஞ் 1 | 49 விளவு தந்த 48 | 
| 25. தொண்டுபாடும்   2 | 50. வேலை வாய்க்கும் 4 | 
------------------  
  வஞ்சுளவல்லி ஏசல்
கறுத்தமுகில் வண்ண கொண்டை 
               கலைந்திருப்ப தேதுசொல்லாய் மகளே - ஆதி 
சிறுத்த சோலை திருநரையூர் 
               ஸ்ரீனிவாசன் கூடி அணைந்தாரோ 
சிறுத்த இடை மாதருடன் 
               சேர்ந்து மலர் கொய்துபோக -அப்போ 
நெறித்த கிளை மாட்டினதால் 
               நீல கொண்டை கலந்ததடி தாயே 	1
மதிமுகத்தில் திலக மிப்போ 
               மசங்கினதென தெரியசொல்லாய் மகளே - இந்த 
கதிர் மதிக்கண் ஸ்ரீனிவாசங் 
               கலந்துலீலை செய்து அணைந்தாரோ 
துதித்த கொங்கை மாதருடன் 
               கலந்து கும்மிஅடித் திருக்கும் போது - அப்போ 
கதிரோன் தன்னால் வேர்கண்டு 
               கலைந்து நாணதில் தமடி தாயே 	2
காமன் கணை கண்ணிரண்டும் 
               கலங்கிசிவந் திருப்பதென்றன் மகளே -எங்கள் 
சாமா ளாங்க ஸ்ரீனிவாசன் 
               சரசத்து டன்கூடி அணைந்தாரோ 
கோம ளாங்கி பெண்களுடன் 
               கூடிக் கண்ணை கட்டியாடும் போது - யெந்தன் 
காமம் பொங்கும் கண்ணிரண்டும் 
               கலங்கி செவந்ததடி தாயே 	3
மஞ்சக்காந் திநிக்கபோலம் நன்னில் 
               மறைந்து தென்ன தெரியச் சொல்லாய் மகளே - இந்த 
கஞ்ச முக ஸ்ரீனிவாசன் 
               கட்டி யுன்னை முத்தம் கொடுத்தாரோ? 
வஞ்சியர் கள்தங் களுடன் 
               மணிமுத் தாரந்தனிலே குளித்தே - அங்கே 
விஞ்சிவரும் அலைகள் தன்னால் 
               மஞ்சகாந்தி மறைந்ததடி தாயே 	4
கோவைக் கனிஅத றந்தனில் 
               கோதரித்த ரித்தக் குறிகளென்ன மகளே - உன்னை 
ஆவ லுடன் ஸ்ரீனிவாசன் 
               அபர்நம் செய்து கடித்தானோ 
பாவியா னக்கினி தனக்கு மறைத்துக் கோவைக்கனி 
               தானென்று கொடுத்தேன் -அப்போ 
தாவி அதுகனி தானென்று 
               தழும்பு படிந்ததடி தாயே 	5
சங்குகணம் தனில் மாலை 
               சன்ன பின்னலான தென்ன மகளே - யிந்த 
பங்கையக் கண் ஸ்ரீனிவாசன் 
               பரிவுடனே கட்டி அணைந்தாரோ 
திங்கள் முக மாதர்களை 
               தேடி தேடி ஓடி ஓடி திருந்தேன் - எந்தன் 
சங்குகண்டந் தன்னில் மாலை 
               சன்ன பின்னலாச்சுதடி தாயே 	6
செந்தளிர் கைவளை களெல்லாம் 
               சேர்ந்து நெரிக்கிருப்ப தென்ன மகளே - உன்னை 
அன்பு டனே ஸ்ரீனிவாசன் 
               அணைத்து கையை பிடித்துநெறித் தாரோ? 
வினை யாக மாற்றுடன் 
               வேகம தாய் நடிக்கும் போது – அந்த 
பத் விசைப்பாய்ந்து தன்னால் 
               பரிந்து வளை நெறித்ததடி தாயே 	7
கும்பஸ்தனம் தனில் மிக 
               கொதரிந் வக்குறி களென்ன மகளே - இந்த 
அம்பு சக்கண் ஸ்ரீனிவாசன் 
               ஆவலுடன் அமிக்கி பிடித்தாரோ 
வம்புமலர் தாழங் காட்டில் 
               மலர்கள் கொய்ய நுழைந்திருக்கும் போது - எந்தன் 
கும்பஸ்தனம் தன்னில் ஓசல் 
               குத்தி மெத்த கீரதடி தாயே 	8
தங்கனண்ட சோலை இப்போ 
               தலைப்பு மாத்தியு குத்தென்ன மகளே - யிந்த 
பங்கயக் கண் ஸ்ரீனிவாசன் 
               பரிந்து லீலை செய்து அவுழ்தாரோ 
மங்கை யர்தங் களுடன் 
               மணிமுத்தார நதிதனில் குளித்தேன் - அப்போ 
அங்க மறர் கண்டத்தினால் 
               அலங்கோல மாயுடுத்தடி தாயே 	9
மின்னிடையும் அடி வயறும் 
               மீறி மெத்த பெருத்ததென்ன மகளே யிங்கே 
இன்ப முடன் ஸ்ரீனிவாசன் 
               இதமுறவே அணைந்தாரோ சொல்லாய் 
வண்ண முலைப் பொன்னி அம்மன் 
               வகை வகையாய் விருந்து செய்ய புசித்தேன் - எந்தன் 
மின்னிடையும் அடி வயறும் 
               மீறி மெத்த பெருத்ததடி தாயே 	10
கும்பஸ்தனம் நுணி கறுத்து 
               குதிகால் கொஞ்சம் பெருத்ததென்ன மகளே - இங்கு 
அம்பு யக்கண் ஸ்ரீனிவாசன் 
               ஆனந்த லீலை செய்தானோ சொல்லாய் 
அம்மொழிக்கு வஞ்சுளையும் 
               அடிபணிந்து சொல்ல நாணி நிற்க - நீதான் 
பொன்மக்கள் பெத்து நன்றாய் 
               புவியதனில் வாழ்ந்திடு வாயென்னால் 	11
ஓம் சாந்தி 
முற்றும் 
---------------------
வஞ்சுளவல்லியேசல்   முதற் குறிப்பு அகராதி
| 1 கறுத்த முகில் 1 | 7 செந்தளிர் 7 | 
| 2. காமன் கணை 3 | 8. தங்கனண்ட 9 | 
| 3. கும்பஸ்தனம் தனில் 8 | 9. மஞ்சக் காந்தி 4 | 
| 4. கும்பஸ்தனம் நுணி 11 | 10. மதிமுகத்தில் 2 | 
| 5. கோவைக்கனி 5 | 11. மின்னிடையும் 10 | 
| 6. சங்குகணம் 6 |  | 
---------------------
This file was last updated on 30 Nov. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)