pm logo

யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் உள்ள
வேலணையூர் முத்துமாரியம்மை பதிகங்கள்
பொ. செகந்நாதன் தொகுப்பு


vElaNaiyUr mAriyamman patikangkaL
po. cekannAtan editor
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Noolaham.org for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் உள்ள
“லைடன்" தீவைச் சேர்ந்த வேலணையூர்
முத்துமாரியம்மை பதிகங்கள்
பொ. செகந்நாதன் தொகுப்பு

Source:
வேலணையூர் முத்துமாரியம்மை பதிகம் முதலிய பாடல்கள்
1. முத்துமாரியம்மன் திருப்பதிகம் - திரு.க.சோமசுந்தரப்புலவர் அவர்கள்
2. பஞ்சவிரத்தின மாலை - பண்டிதமணி, பிரம்மஸ்ரீ சு.நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள்
3. தோத்திரம் -- வித்துவமணி, பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள்
பதிப்பாசிரியர்: பொ. செகந்நாதன்
பதிப்புரிமை பதிப்பாசிரியர்க்கே உரியது.
பெரியநாயகி பிரசுரம் 3.
விலை ரூபா 2-50, 1951
கலைவாணி அச்சகம். யாழ்ப்பாணம்.
---------------

1. வேலணையூர் முத்துமாரியம்மை பதிகம்

ஓம்
பிள்ளையார் வணக்கம்

வெண்பா
சிந்தை களிகூரச் செய்கருமம் கைகூட
முத்துவினை வேரோடு முற்றழிய - தந்தமொன்று
தொந்தி வயிற்றோனை தும்பிக்கைத் தூயோனை
வந்திப்போம் உள்ளம் மலர்ந்து

ஏற்புடைக் கடவுள் வணக்கம்

வேலணையூர் வாழ விளங்குமுத்து மாரியுமை
பாலணையும் பாக்கள் பதிகமுடன் - சாலவே
நின்று பயனார்ந்து நீள் நிலத்தில் ஓங்கவருள்
நன்றாகச் செய்வாள் நயந்து
-----------
மதிப்புரை

வெண்பா
மும்மணிகள் சேர்த்துமுத்து மாரிக்குத் தோத்திரங்கள்
செய்மை புறச் செய்தார் செகநாதன் - இம்மை யினும்
அம்மையினும் நன்மைபெற அச்சியற்றித் தந்த இது
வெம்மைப் பிறவியறும் வித்து

சைவாசிரியர் கலாசாலை சி. கணபதிப்பிள்ளை
திருநெவேலி யாழ்ப்பாணம். 6-8-51
-------------

முகவுரை
(I-ம் பதிப்பு )

வேலணையூர், யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விளங்கும் ஏழுதீவு நாடுகளுள் “லைடன்" தீவைச் சேர்ந்ததாகும். இது யாழ்ப்பாணப் பட்டினத்தில் இருந்து ஏறக்குறைய ஏழு மைல்வரை தென்திசைத் தொலைவில் உள்ளது. இவ்வூரின் கீழைப்பாலேயுள்ள பெருங்குளத்தின் கரையிலேதான் ஈவேல ணைப் பெருங்குளம் முத்துமாரியம்மன்" வீற்றிருக்கின்றாள்* இவ்வம்மன் மேலேதான் இப்பதிகம் முதலிய பாடல்கள் பாடப்பெற்றவை.

தெய்வத்தை மக்கள் வழிபடுகின்றனர். ஆனால் அவ்வத் தெய்வத்துக் கேற்ற நன்பாடல்களைச் சொல்லி, நற் கருத் துக்களைச் சொல்லி வணங்குவோர் – வழிபடுவோர் எல்லாரு மல்லர். அம்முறை தெரிந்து வழிபாடு செய்வார் சிலரினும் சிலரே. இந்நூல் இந்தவகையில் யாதும், சொற்பமேனும் உபகாரமாயிருத்தல் கூடும் என்பது எமது எண்ணம்,

இவ்வம்மையின் மேற்பாடப்பட்ட இப்பதிகப் பாடல்களில் வைத்து இப்பாடல் ஆசிரியன்மார் தமது யாப்பு - சொல்- பொருள் என்பவைகளின் திறப்பாட்டால் இலக்கிய நயங்களைக் கிண்டி விட்டிருக்கின்றார்கள்! அதனால் அவை அம்மன் பக்தி பாவத்தோடு இலக்கிய இரசிகத்தையும் கொடுக்கவல்லனவாகின்றன. இவர்கள் ஒவ்வொருவர் கண்ட கருந்துக்களும் பாடலின் போக்குகளும் ஒவ்வொரு வகை யாக அமைந்துள்ளன, அவற்றை அவ்வவ்விடங்களிலே கண்டுகொள்க. இந்நூல் இவ்வம்மன் பக்திப்பாடல்களைக் கொண்ட ஒரு நூலாவதோடு "தெய்வம் பரவுதல்" என்னும் தமிழ்த்துறையில் ஒரு சிறு இலக்கிய நூலாகவும் அமைவது ஒன்றாகும்,

துப்பாடல்களோடு இவற்றின்பின் வந்துசேர்ந்தள்ள பாடல்களையும் இவை அனைத்துக்கும் அரும்பதவுரையையும் சேர்த்து மறு திப்பில் வெளியிட எண்ணியுள்ளோம். எல்லா வற்றுக்கும் நமது ஜெனனவூரிற் ளேயில் கொண்டு, நமதும், நம்முன்னோர், பின்னோரதும் வழிபாட்டுக்கிரங்கி அருள்புரி வேலணையூர்ப் பெருங்குளத்துப் பெரியநாயகி தனை செய் வானாக. ஐப்பாடல்கள் கிடைத்துள்ள ஒழுங்கின்படியே சேர்க்கப்பட்டுள்ளன. இப்பாடல்களையும் இவற்றின் தொடர்பாயுள்ள பிறபாடல்களையும் பாடித்தந்த பெரியார் பால் யாம் என்றும் நன்றியுடையோம்.

கொக்குவில் வாழ்நரும் சிவநேயச் செல்வருமான திரு. குமாரசுவாமிப்பிள்ளையவர்கள் எமது பாடல்களைப் பார்வையிட்டு இசையிலும் பொருவிலும் திருத்தங்கள் செய்து தந்துள்ளனர். அவர்கள் நன்றியை யாம் நன்று போற்றுதும். இப்புத்தகத்தை இவ்வளவு உயர்ந்தமுறையில் அழகுற அச்சிட்டுத்தந்த விவேகானந்த அச்சுக்கூடத்தார்க் கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்கின்றே

இந்து ஆங்லே வித்தியாசாலை பொ. செகந்நாதன்
திருநெல்வேலி கிழக்கு கர ௵ ஆடி ௴ 16-ம் திகதி
யாழ்ப்பாணம் (CEYLON)
2-8-51
-----------

ஓம்

பிள்ளையார் வணக்கம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தினிளம் பிறை போலு மெயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
-- திருமூலர் திருமந்திரம் திருமுறை 10

சிவபெருமான் வணக்கம்

கரவாடும் வன்நெஞ்சர்க் (கு) அரியானைக் கரவார்பால்
விரலாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அன ஏந்தி
இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே.
--திருநாவுக்கரசுநாயனார் தேவாரம் திரு மறை 4
திருக்கச்சியேகம்பம்

திருமுருகன் வணக்கம்

உன்னை யொழிய ஒருவரை யும் நம் புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செம்கேன்-பன்னிருகைக்
கோலப்பாவு னோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செ தி வாழ்வே.
-- நக்கீரர் திரு முருகாற்றுப்படை திருமுறை 11

சரசுவதி வணக்கம்

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கலியும்
பாடும் பணியி ற் பணித்தருள்வாய் பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகலக லாவல்லியே.
-- குமரகுருபரர் சகல கலாவல்லி மாலை

மீனாட்சியம்மை வணக்கம்

பன்னிருசீர்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

"தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
        ருெடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ்
        சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந்
தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற்
        கேற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடு
        மினமென் பிடியே யெறிதரங்கம்
முடுக்கும் புவனங் கடந்துநின்ற
        வொருவன் திருவுள் ளத்திலழ
கொழுக வெழுதிப் பார்த்திருக்கு
        முயிரோ வியமே மதுகரம்வாய்
மடுக்குங் குழற்கா டேந்துமிள
        வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
        வாழ்வே வருக வருகவே.

இப்பாடல் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் வருகைப் பருவத்து செய்யுளாக உள்ளது. இதனைப் பாடிய வர் குமரகுருபரசுவாமிகள். இவர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்" பாடியிட்டதை அவ்வம்மையின் அருளால் அறிந்த இவர் காலத்து அரசராகிய திருமலைநாயக்கர் அப் பிள்ளைத்தமிழை அவ்வம்மையார் சன்னிதியில் அரங்கேற்று வித்சனர் என்றும், அப்பொழுது இப்பாடலுக்குக் குமரகுரு பரர் பொருளுரைக்கும்-பொழுது மீனாட்சியம்மையார் அக் கோயில் அர்ச்சகரது பெண்போன்று திருக்கோலங் கொண்டு அரசர் கழுத்திலிருந்த பணிவடத்தைக் கழற்றிக் குமர்குருபரர் கழுத்திலிட்டு மறைந்தருளினர் என்றும் இதன் வரலாறு கூறும்,
---------------

2. வேலணையூர் பெருங்குளத்து
முத்துமாரியம்மன் திருப்பதிகம்
நவாலியூர், திரு. க. சோமசுந்தரப்புலவர் பாடியது


காப்பு

தேவாரும் வேலணையூர் சேரும் பெருங்குளத்து
மாமாரி யம்மைபா மாலை சொலத் தூவாரும்
ஐந்துகரத் தொந்திவயிற் றந்திநிறத் திந்துமுடித்
தந்திமுகன் பாதஞ் சரண்.

மேதகுசீர் வேலணையூர் மேவும் பெருங்குளத்து
மாதரசி முத்தம்மைமாலைதரும் - ஆதரவாய்
ஊனா ருயிருக் குரையாகி நாவிலுறை
மானார் கமலவிழி மான்,

சீர்மேவு வேலணையூர்த் தெய்வப் பெருங்குளத்து
மாமாரி யம்மைதமிழ் வந்திடவே- பூமீதில் வெய்ய
வினையகல மெய்ம்மொழியை முன்னருளும்
ஐயன் பதம்பணிகு வாம்.

நூல்

பொன்னார் நவமணி மகுட மிலங்கும்
        பூரண மதிமுகமும்
பொல்லா மும்மல வேரற வருண்மழை
        பொழியுந் திருவிழியும்
மின்னார் பொன்னரி மாலை சரப்பளி
        மேவும் மணிமார்பும்
வேண்டிய வீயும் வரதமு மஞ்சலை
        விடுவிக் குங்கரமும்
பின்னுஞ் சடையும் பொன்னங் குழையும்
        பீதாம் பரவுடையும்
பிரசத் தாமரை யடியுங் கண்டருள்
        பெறுமா ளெந்நாளோ
மன்னார் மங்கல வடிவங் கொண்டுயர்
        பெரிய குளம்மருவும்
வன்னத் துடியிடை கன்னிப் பிடிநடை
        மரமா ரித்தாயே, 1

அஞ்சும் பலபல பிறவி யெடுத்தே
        அம்மா அலமந்தேன்
ஆருத் துயரம் நீர்ந்திட வேறார்
        அவனி தலத்துள்ளார்.
பஞ்சு படாப் பெரும்பாடுகள் பட்டேன்
        படமுடி யாதினிநான்
பாவக் கொடுவினை ஓவக் கருணைசெய்
        பரம தயாநிதியே
விஞ்சும் மிடியாற் பிணியா லடியேன்
        மெலிவது மினிமுறையோ
வேதப் பொருளே நாதப் பரிபுர
        மென்மல ரடிதருவாய்
வஞ்சிக் கொடியே கொஞ்சுங் கிளியே
        பெரிய குளம்மருவும்
வன்னத் துடியிடை கன்னிப் பிடி நடை
        மாமா ரித்தாயே. 2

கருணைக் கடலே கடல்வரு மமுதே
        யமுதிற் கனிசுவையே
கங்கைச் சடையவர் பங்கிற் குலவிடு
        கற்பக நற்கனியே
இருமைக் கும்மருள் தருமெய்ப் பொருளே
        யெங்களை யீன்றவளே
ஏழைக் குற்றிடு மின்னல் தவிர்த்தே
        இன்ப நலங்காட்டிக்
கருமைக் குந்தன சாமள மேனிக்
        கன்னிக் கோமளமே
கல்லா நாயேன் பிழைகள் பொறுத்துன்
        காட்சி யளித்தருள்வாய்
வருமைக் குயிலே மரகத மயிலே
        பெரிய குளம்மருவும்
வன்னத் துடியிடை கன்னிப் பிடி நடை
        மாமா ரித்தாயே 3

உற்றாள் நீயே உறவினர் நீயே
        உடையா ளும்நீயே
உலகத் தொகுதியு முயிரின் தொகுதியு
        மொவ்வோர் காலத்துப்
பெற்று ளும் நீ பெறுவா ளும்நீ
        பேணி வளர்ப்பவள் நீ
பிறையணி சடிலக் கடவு ளிடத்துப்
        பெரிய பிராட்டி நீ
சற்றே னும்மெய்ப் பத்தி யிலாதேன்
        தவறு பொறுத்தருள் வாய்
தண்டமிழ் நாவலர் பாவுக் கின்னருள்
        தந்தருள் சுந்தரியே
மற்றே சறியா மரகத மலையே
        வளமார் பெரியகுளம்
மருவுந் துடியிடை பொருவும் பிடி நடை
        மாமா ரித்தாயே, 4

சென்னி னாற்சே வடிகள் வணங்கச்
        செவியுன் புகழ்கேட்கத்
திருவிழி யுன்ற னருளுரு வென்றும்
        தெரிசித் திடநாளும்
பன்னிய செந்நா வுன்றிரு நாமம்
        பயிலச் செய்யகரம்
பாமல ரோடு பூமலர் சூடப்
        பாதம் வலம்வரவே
தன்னிகர் நீறு வடிவி லணிந்துன்
        தலமதி லேயுருளச்
சங்கரி சோதரி மாதவி
        சாம்பவி காம்பனதோள்
மன்னிய சிந்தா மணியே பிறவி
        மருந்தே பெரியகுளம்
மருவுந் துடியிடை பொருவும் பிடிநடை
        மாமா ரித்தாயே. 5

வந்திடு வல்வினை போகும் வருவினை
        மருவா தேயேகும்
வஞ்சனை பில்லிகள் சூனிய மாதிய
        வாரா பிணிசேரா
முந்திய மும்மல வேதனை யொழியும்
        மொழியும் மெஞ்ஞான
மூதறி வோங்கு முன்னை நினைத்தவர்
        முந்தியு மெய்துவரால்
இந்தணி யுஞ்சடை நந்தரி சோதரி
        யின்பருள் சுகவாரி
ஏகி பினாகி வராகி சுபோகியீ சானி
        மனோன்மணியே
மந்திர ரூபிணி காரணி யாரணி
        மருவும் பெரியகுளம்
வன்னத் துடியிடை கன்னிப் பிடிநடை
        மாமா ரித்தாயே: 6

கொன்றைச் சடைமுடி யாடக் குளிர்மதி
        யாடக் குழையாடக்
கோலத் திருவிழி யாடக் குறுநகை
        யாடப் புனலாட
வென்றிச் சூடக பாடக மாடிட
        மேகலை வடமாட
மேம்பின் தழைபொதி கரகமு மாடிட
        விரையார் கரமாட
எண்டிக் குங்களி பாடிட வெவ்வினை
        ஏங்கி யிரிந்தோட
இன்புறு தொண்டர்க ளாடிட வந்துயர்
        இன்ப சுகந்தருவாய்
மன்றிற் றிருநட மாடிடு மைங்கர
        மணியே பெரியகுளம்
மருவுந் துடியிடை பொருவும் பிடிநடை
        மாமா ரித்தாயே. 7

வஞ்சனை து பொறாமை முதற்பல
        மாசுடை யோருடனே
மருவா கன்னடி யாரொடு மருவும்
        வாழ்வை யெமக்கருள்வாய்
அஞ்சு மவித்தவர் நெஞ்சினி லூறிடு
        மானந் தத்தேனே
அம்பிகை தும்பிகை யானையை
        யன்றருள் ஆயீ மகமாயி
கஞ்ச மலர்த்திரு செஞ்சொன் மணித்திரு
        கண்ணா கியவுருவே
காஞ்சிகா மாட்சி மதுரைமீ னாட்சி
        காசி விசாலாட்சி
மஞ்சணி குடுமிப் பனிமலை மகளே
        வளரும் பெரியகுளம்
மருவுந் துடியிடை பொருவும் பிடி நடை
        மாமா ரித்தாயே. 8

அன்னாய் வருக அரசி வருக
        அம்மா நீவருக
ஆறார் சடையார் கூறாய் வருக
        ஆறு முகப்பொருளாம்
என்னா யகனைத் தந்தாய் வருக
        இறைவிவருக மறையோதும்
ஈறாய் நடுவாய் முதலா யியைவாய்
        துனியாய் நீவருக
முன்னா முதல்வி பின்னா முடிவி
        மூவா ஆனந்த
முத்தே வருக வித்தே வருக
        முப்புரை யேவருக
மன்னா ருயிருக கின்னா ருயிரே
        வருக பெரியகுளம்
மருவுந் துடியிடை பொருவும் பிடிநடை
        மாமா ரித்தாயே. 9

பொன்னெனு மாமழை மாதமும் மாரி
        பொழிந்து பொலிந்திடவே
பூதல மெங்கும் நோய்மிடி மாறிப்
        புதுவாழ் வெய்திடவே
மன்னிய கண்மணி நீறுபஞ் சாக்கர
        மந்திரம் வாழியவே
மாமறை யாகம நீதி பரம்புக
        மாசனம் வாழியவே
பன்னி தொண்டர்க ளுன்னிய பெற்றே
        பரிவொடும் வாழியவே
பாடிய தமிழும் பாடுவித் தோரும்
        பன்னாள் வாழியவே.
செந்நெற் கழனிகள் புடைசூழ் வேலணை
        சேரும் பெரியகுளத்
தேவிமா மாரியும் வாழிய வாழிய
        திருவருள் வாழியவே, 10


தனியன்கள் (வேறு)

பஞ்சாக் கரியே சரணஞ் சரணம்
        பாவாய் சரணம் பூவாய் சரணம்
பதுமா சனியே சரணஞ் சரணம்
        பலகா ரணியே சரணஞ் சரணம்
எஞ்சா நிதியே சரணஞ் சரணம்
        இறவாக் கதியே சரணஞ் சரணம்
ஏடார் மனமே சரணஞ் சரணம்
        எந்தாய் சரணம் தந்தாய் சாணம்
நஞ்சார் கண்டச் சஞ்சீ வினியே
        நங்காய் சரணம் மங்காய் சரணம்
நத்தா வொளியே சிந்தா மணியே
        நல்லாய் சரணம் பொல்லாய் சரணம்
மஞ்சேர் கொடையாய் எஞ்சா விடையாய்
        மானே தேனே சரணஞ்சரணம்
மருவுந் துடியிடை பொருவும் பிடிநடை
        மாமா ரித்தாய் சாணஞ் சரணம் 11

அருள்சேர் காஞ்சித் திருநகரில்
        அந்நாள் முப்பா னீரறமும்
அம்மா புரிந்காய் ஏழையெனக்
        கருளா திருத்தல் விதிவசமோ
மருள்சேர் மறையோன் பெரியபவம்
        மாய்த்தா யென்பா லருளிலையோ
மடநா ரைக்கன் றருளினையாள்
        மனித னெனக்குன் னருளிலையோ
இருள்சேர் நஞ்சம் அருந்தினையால்
        எனது பாவம் அருந்திலையோ
எறுழ்சேர் பன்றிக் குட்டிகளுக்
        கின்பால் ஈந்தாய் எனக்கிலையோ
மருள்சேர் பிறவி மாய்த் தெனக்கு
        வரமீ மருவும் பெரியகுளம்
வாழி முத்து மாரி யம்மை
        வாழி வாழி வாழியே. 12
----------------

3. பஞ்சவிரத்தின மாலை
பண்டிதமணி க.சு. நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்கள் பாடியது


நித்யகல் யாணியே நிம்பதள பாணியே
        நெஞ்சிரு ளகற்றுவிக்கு
நீதியே நீதிதரு சோதியே ஆதியே!
        நீங்காத வோங்காரியே
சித்தங் குளிர்ந்தடல் ருளிர்ந்தம்மை முதலாய
        தீராத கொடியநோய்கள்
தீரக் களைந்திடர் தீரப் புரிந்தருள்
        தெய்வவைத் தியநாயகி
கத்துகடல் சூழுலகில் கண்கண்ட தெய்வமே
        கைவல்ய சஞ்சீவியே
காருண்ய வெள்ளமே கற்பூர தீபமே
        கலாதீத மானபொருனே
உத்தமீ ரிற்பரா சக்தியே முத்திக்
        கொருமூல மானவித்தே
ஒருங்குள வளங்குலவு பெருங்குள மமர்ந்தருளு
        மொண்முத்து மாரியுமையே. 1

உள்ளத்தி லேகள்ளம் இல் லாத இன்சொலும்
        உயர்வுகுணச் செம்மைவாழ்வும்
உத்தமர் இணக்கமும் கல்வியும் செல்வமும்
        உன் உபய பாதமலரில்
பள்ளத்தி லே பாயும் வெள்ளப் பெருக்கெனப்
        பறந்துவீழ்ந் தன்புசெய்யும்
பாக்கிய மெலாங்கொடுத் தன்பரைக் காத்த வரு
        பச்சைப்பசுங் கொண்டலே
தென்னத் செளித்துவரு தேறலே தேறலில்
        தித்திக்கு மின்பரசமே
செந்தமிழ்க் கிள்ளையே கேரிசைப் பூங்குயில்
        திருநடன மாடுமயிலே
உள்ளிய வுவந்துதவு வள்ளியோர் வாழ்வினுக்
        ருறைபதிய தாகவுன்னி
ஒருங்குன வளங்கலவு பெருங்குள மைர்ந்தருளு
        மொண்முத்து மாரியுமையே. 2

ஈரா றிதழ்நடுவில் இரீங்கார ஓசையாய்
        இணைந்துவரு மந்த்ரரூபி
ஈறகு மூழியில் ஈசநட னங்காண
        இருக்கின்ற சான்றுமாவாய்
நேரா வரக்கர்குலக் கானெலா நீறாக
        நின்றெரிக்குந் நெருப்பே
நிலவுகட லெழுநஞ்ச மமுதமா வுட்கொண்டு
        நீள்விசும் பளித்தவருளே
ஆராத அமுதமே தீராத செல்வமே
        அன்பரிற் பேரன்புசெய்
அம்மையே இம்மையே செம்மையே நன்மைசெய்
        அகரவுரு வானபொருளே
ஓராத மூவர்க்கரு முய்யவே படியளித்
        துலகமா தாவாகினாய்
ஒருங்குள வளங்குலவு பெருங்குன மமர்ந்தருளு
        மொண்முத்து மாரியுமையே. 3

காழிவரு மாமழலை வாய்மலரின் முத்தமிழ்
        கனிந்தஞா னங்குழைத்துக்
கருணையுடன் அமுதூட்டி உலகெலா முய்யவருள்
        கலசக் கடைக்கணாட்டி
ஆழிகைக் கொண்டருளு நாரணி பூரணி
        ஆரணி மாதங்கியே
ஆனந்த வல்வியே மாமேரு வில்லியே
        அற்புசு மாபைரவி
வாழையடி வாழையாய் அன்பர்கள் மரபெலாம்.
        வாழவே வரங்கொடுப்பாய்
மகத்துவத் தத்துவத் துச்சியில் ஒளிவிடும்
        மங்காத சூளாமணி
ஊழையும் உப்பக்கங் காண்கென அன்பருக்
        ரூபாயழுங் காட்டியருள்வோய்
ஒருங்குள வளக்குலவு பெருங்குள மமர்ந்தருளு
        மொண்முத்து மாரியுமையே. 4

எனையெள்ளி நகையாடி இன்னல்செய் வாரன்றி
        இங்கெவர் இரங்கவல்லார்
இத்தனையுங் கண்ணாரக் கண்டுகேட் டிருந்தாலு
        மேழையே னுணர்ச்சிகொள்ளேன்
தினையளவு முனதருளைச் சிந்தியா மூர்கனேன்
        செய்நன்றி கொன்றுவாழ்வேன்
சிறியனேன் என்றாலுஞ் சேயனான் பெற்றதாய்ச்
        செல்விநீ யாதலாலே
நனவிலுங் கனவிலும் வெயிலிலும் நிழலிலும்
        நயப்பிலும் வெறுப்பிலுமுன்
நந்தாத சீர்த்தியை நானில மெலாமுய்ய
        நாயினேன் நாடி நாடி
உனதருளை உன்நினைந் துருகிநான் பாடவே
        ஊத்தையேற் கருள்புரிகுவாய்
ஒருங்குள வளங்குலவு பெருங்குள மமர்ந்தருளு
        மொண்முத்து மாரியுமையே. 5

பொன்னம் பலத்திலைப் பூங்கொடியாள் வேண்டுகைக்காப்
பன்னும் பனுவ லது பகர்ந்தேன் -என்றுஞ்சீர் மன்னுமுத்து மாரியம்மை வாழ்வழிக்கும் பாதமலர்
என்னுளத்தே பூத்திருக்க ஈங்கு.
----------------------


3. தோத்திரம்

வித்துவமணி பிரம்மஸ்ரீ சி. கணேசையர் பாடியவை

வேதமுட னாகமத்தின் மெய்யுணர்வு பெற்றவுயர்
        மேலோர் வாழும்
சீதமிகும் பொழில்சூழும் பெருங்குளத்து
        மேவுமொரு தேவி யான
தீதுதீர்த்து அருண்முத்து மாரியம்மை பாதங்கள்
        தினமும் போற்றும்
ஏதமிலா வடியாரை யிருவினைகள் வந்துக்க
        இடர்செய் யாவே. 1

நாதமுத லாகியுள தத்துவங்க டனைக்கடந்த
        நாத னோடும்
பேதமிலா துறைகின்ற பராபரையின்
        கூறாகும் பெரிய தாயே
ஓதுமுத்து மாரியெனு முத்தமியே
        யுன்பாத முற்றே மமயே
பாதகங்க டீர்த்தெம்மை யாண்டுமிக
        னின்னருளைளைப் பாலிப் பாயே. 2

வேலணையூர் தழைத்தோங்க மேவுமுத்து
        மாரியெனு மெய்மைத் தாயே
ஆலமுறுங் கண்டனார் பாகமுறுந்
        தேவிகன தம்ச மானோய்!
காலனார் செயுமிடரும் தீவினையின்
        பெருந்துயரும் கடிந்தே யெம்மைச்
சீலமுடன் வாழவருள் புரிவாயுள்
        திருவடிகள் போற்றி போற்றி. 3

வேறு

தேவியே போற்றி யெங்கள் செல்வமே போற்றி தீய
பாவியேன் பிணிகள் தீர்க்கும் பராபரைத் தாயே போற்றி
ஆவியா யுடலாய் நிற்கு மம்மையே போற்றி போற்றி
மேவிய பெருங்கு எத்து விமலையே போற்றி போற்றி 4

பதிகம் முதலியவற்றின் வரலாறு
அறுசீர்க் கழி? நடிலடி ஆசிரிய விருத்தம்

உத்தமியை வேலணையே பெருங்குளத்தங்
        கரையிலிருந்து உலகம் ஓம்பும்
முத்துமாரி யெவ்வுலகுந் தொழுதேத்து
        முதல்விதனை முறைமை நடிப்
பத்திமையாற் பாடுகெனத் தமிழ்நாட்டே
        பெரும்புலமைப் பரிசு பெற்ற
வித்தரை முயன்றுகண்டு வேண்டினோம்
        ஆங்கவர்தாம் விழைந்த அன்பால், 5

புத்தமுத மெனக்கவிகள் பொழிந்துவரும்
        நவாலியூர்ப் புலவ னாய
வித்தகன் க. சோமசுந்த ரம்பிள்ளை
        நாமத்தோன் விளங்கும் மேதை
தித்திக்கத் திருப்பதிகம் முதலாகுந்
        தெள்ளமிர்தம் சிறப்பி னோடும்
"முத்துமாரி இதுகேட்டு முடியசைக்க
        வேண்டுமென மொழிந்தே தந்தான். 6

கந்தவேள்கோட் டமேய்ந்தோங்கு மாவிட்ட
        புரத்தில் வாழ் கவுணி யன்னாம்
செந்தமிழில் பலநூல்கள் செய்தவன்பண்
        டிதமணியாய்த் திகழு மாண்பான்
நந்தாத தமிழ்வளமார் நவநீத கிருஷ்ணபா
        ரதியாம் நாமன்
தந்தனனால் மிகவோர்ந்து பஞ்சவி
        ரத்தினமாலை தக்க வாறே, 7

சித்தனென முனிவனெனச் சிவநேயச்
        செல்வனெனத் திகழு மாண்பான்
இத்தமிழ்நா டணைத்துமிக அறிந்தவொரு
        தமிழ்க்கலைஞன் ஏத்து சீரான்
"வித்து வான் சி. கணேசையர்" புன்னாலைக்
        கட்டுவனில் விளக்கி வாழ்வேன்
அத்தகையான் முத்துமாரி அம்மைதோத் திரம்
        மொழிந்து அளித்தான் நன்றே. 8

அண்டமெலாம் படைத்துக்காத் தனித்துவரு
        மனப்பிலாத தேவுக் கன்பால்
கொண்டவொரு பூவைத்தான் தாளிட்டு
        வணங்கிவரு குறிப்பில் மேய
தண்டமிழ்தேர் மீனாட்சி முத்துமாரி உயர்தகைக்குத்
        தமிழ்சேர் என்புள் சல
பண்டமீது கண்பார்த்துப் பிழைபொறுத்துக்
        கருணை மிகப் பாலிப் பாளே. 9

திருச்சிற்றம்பலம்

பதிப்பாசிரியர்: பொ. செகந்நாதன்
--------------


This file was last updated on 19 Dec 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)