pm logo

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
தெய்வலோக ஒப்பாரி


teivalOka oppAri
of tangkamuttutAs
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
தெய்வலோக ஒப்பாரி

Source:
தெய்வீகப் பெண்கள் புலம்பும்
தெய்வலோக ஒப்பாரி.
ஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை
1939, இதன் விலை அணா 1.
V. Press, Madras.
---------------

கடவுள் துணை.
தெய்வலோக ஒப்பாரி.

கடலே கடலாக்கி என்னைபெத்தாளே அம்மாடி
நான் கருங்கடலைமத்தாக்கி இன்றைக்கு
தயிர்கடையும் வேளையிலே தந்திவந்து சேர்ந்துதம்மா

ஆருடைய தந்தியென்று என்னைபெத்தாளே அம்மாடி
அவித்துபிரிச்சி ஆராய்ந்து பார்க்கையிலே
மாதாவுட தந்தியென்று என்னை பெத்தாளே அம்மாடி

இதுதாயாருடைய தந்தியென்று என்னை பெத்தாளே அம்மா
தரை மேல்புரண்டழுதேன் யெனக்கு
ஒருவரல்லயிருவரல்ல ஒன் றுரெண்டு பேருமல்ல

சந்தனசோலையிலே யென்னபெத்தாளே அம்மாடி
சாஞ்சதெல்லாம்யென்சேனை இன்றைக்கு
குங்குமச்சோலையிலே குமிழ்ந்ததெல்லாம் யென்சேனை

மானமிருண்டு மழைரெண்டு வருகையிலே யென் அம்மாடி
மாமரத்துசோலையிலே மனகொரை சொன்னாலும்
மாங்காகரித்துடும்மா மாமரம் பட்டுவிடும்

பூமியிருண்டு பொழுதுரெண்டு போகையிலே யென் அம்மாடி
பூமரத்து சாலையிலே யென்பெண் குறை சொன்னேனால்
பூவும்கரிகிவிழும் இந்தபூமரமும் பட்டுவிடும்

மேற்கேவெகுதூரம் என்னைபெத்தாளே அம்மாடி
மிளகுபபிருமிட்டேன் இந்த
மிளகுபொரிக்கியெடுக்க இங்கேமுதலாளி இங்கேயில்லை

தெற்கேவெகுதூரம் என்னை பெத்தாளே அம்மாடி
சீரகம்பயருமிட்டேன் இன்றைக்கு
சீரகம் பொரிக்கியெடுக்க சோலையுள்ளேயாருமில்லை

வடக்கேவெகுதூரம் என்னை பெத்தாளே அம்மாடி
வாழ்மதுரைமுக்காதம் துலக்கருடைய
சீமையிலேதான் துவரைபயருமிட்டேன்

நான் தூரிவருகுமுன்னே என்னை பெத்தாளே அம்மாடி
துலுக்கர் பயம் மெத்தவைத்தாய் நான்
கண்டுவரும்பின்னே கள்ளர்பயம் மெத்தவைத்தாய்

என் அம்மாடி. என்னை பெத்தாளே அம்மாடி
வெள்னியாலேபாடை கட்டலாம்மென்சலும்
வெய்யலேரி போகுதென்பார் பொன்னாலே
பாடைகட்டலாமென் ஈலும் பொழுதேரி போகுதென்பார்

தங்கத்தாலேபாடைக் கட்டலாமென்றாலும்
என்னபெத்தாளே அம்மாடி தாமசங்கள் ஆகுதென்பார்
பணத்தாலேதேர்பண்ணால் பாசைபிடிக்குமென்பார்

மரத்தாலே தேர்பண்ணால் என்னை பெத்தாளே அம்மாடி
செல்லுப்பிடிக்குமென்பார் நான்
மண்ணாலேதேருபண்ணால் மக்கிகறையுமென்பார்

பூவாலேபாடைகட்டி என்னை பெத்தாளே அம்மாடி
பிறந்தவிடம் அனுப்பிட்டு
பெத்தபெண்னு புரண்டு அழுவகாளாச்சே

பார்க்கவருவோமென்றால் என்னைபெத்தாளே அம்மாடி
பங்கும்பங்காளி பாதினாள் தாயாதி
பாம்பேயெதிரவைத்து பாலாத்தை முன்னேவைத்து
பாம்பேதான் தாண்டி வேனாவத்தை நீஞ்சுவேனா.

தேடிவருவோமென்றால் என்னை பெத்தாளே அம்மாடி
பங்கும்பங்காளி பாதினாள் தாயாதி
தேனேயெதிரேவைத்து செய்யாத்தை முன்னேவைத்து
தேளேயே தாண்டுவேனா செய்யாத்தை சீஞ்சுவேனா

சீதையம்மாள் பெத்தபெண்ணு என்னை பெத்தாளே அம்மாடி
ஸ்ரீராமர்பெத்தகண்ணு யெனக்கு
ஜீவனிருக்கையிலே என்னை பெத்தாளே அம்மாடி
சேதிசொன்னாலாகாதா

அல்லி அம்மாபெத்தபெண்ணு என்னை பெத்தாளே அம்மாடி
அர்ச்சுனரைபெத்தகண்ணு யெனக்கு
ஆவிகிடைக்கையிலே என்னைபெத்தானே அம்மாடி
ஆளுவிட்டாலாகாதா

மதுரைநல்லகூடாரம் யென்புரவிகண்ணாளா
அவருக்கு மல்லியப்பூ வியாபாரம் நான்
மன்கைவருவேனென்று யெனக்குமாத்துக்கொரு காவலானார்

செஞ்சிகல்லகூடாரம் பென்பிறவி கண்ணாளா
அவருக்குசெண்பகப்பூ வியாபாரம் தான்
சீதைவருவேனென்று யெனக்குசெடிக்கொரு காவலானார்

அல்லிக்கிதாமரைக்கு என்னை பெத்தாளே அம்மாடி
ஐந்துலக்ஷம் சேனையுண்டு
ஆகாசதாமரைக்கி என்னை பெத்தாளே அம்மாடி
எனக்கு அண்ணனில்லை தம்பியில்லை

கொடிக்கும் தாமரைக்கும் என்னை பெத்தாளே அம்மாடி
கோடிலக்ஷம் சேனையுண்டு
இந்த அரும்பாவிசண்டாளிக்கி என்னைபெத்தானே அம்மாடி
எனக்கு அக்காயில்ல தங்கையில்லை

அண்டம்மதில்யெழுப்பி என்னைபெத்தாரே அப்பாவே
அகடமரம் தோப்பாக்கி இன்றைக்கி
அண்டம்மதில் இடிஞ்சா யெனக்கு
அண்ணன் தம்பி தாங்குவானா

பக்கம்மதில்யெழுப்பி என்னைபெத்தாரே அப்பாவே
பகடமரம் தோப்பாக்கி இன்றைக்கி
பக்கமதிலிடிஞ்சால் உனக்கு
பங்காளி தாங்குவானா

சுத்திமதில்யெழுப்பி என்னை பெத்தாரே அப்பாவே
சுருளூமரம் தோப்பாக்கி இன்றைக்கி
சுத்திமதிலிடிஞ்சா யெனக்கு
சித்தப்பன் தாங்குவானா

கருங்காக்கை செங்காக்க என்னைபெத்தாளே அம்மாடி
கலந்துபழம்யுண்ணயிலே நான்
கதுவை பிடிக்கச்சொல்லி
காத்தாளமாய்கின்று அழுதேன்

செங்காக்கை கருங்காக்கை என்னைபெத்தாளே அம்மாடி
செவுந்தபழம் வுண்ணயிலே நான்
செவுத்தை பிடிக்க சொல்லி
துவண்டாபோல் நின்றழுதேன்

ஒத்தகல்லு மோடியம்மா என்னை பெத்தாளே அம்மாடி
ஒத்திமரம் சாலையம்மா தான்
ஒருபெண்ணுகின்ற அழுதால்
உலகமெல்லால் தான் அழுகும்

பாம்புக்குரெண்டு கண்ணு என்ன பெத்தாளே அம்மாடி
பார்வதியாள் பெத்தபெண்ணு உன்னை
பாடையிலேவைக்கும்போது பாம்பாபுரஞரனே

தேளுக்குரெண்டு கண்னு என்னபெத்தாளே அம்மாடி
தேவேந்திரன் பெத்தபெண்ணு உன்னை
தேர்மேலேவைக்கையிலே தேளாய் துடிக்கிறேனே

மதுரைக்கிளிப்பிள்ளை என்னை பெத்தாளே அம்மாடி
மண்டபத்துகண்ணாடி இன்றைக்கு மங்கையம்மா பெத்தபெண்ணு
என்னைபெத்தாளே அம்மாடி வனமழிஞ்சிகிற்குறேனே

சீமைகிளிப்பிள்ளை என்னை பெத்தாளே அம்மாடி
சிம்மாதானம் கண்ணாடி சீதையம்மா பெத்தபெண்ணு
என்னை பெத்தாளே அம்மாடி இன்றைக்குகான் சீர்குலைத்து நிற்குறேனே

மேட்டுதெருவிலே மூதேவி அத்தையம்மா
முத்துரதம் போகுதென்று
ஓட்டமாய்வந்து உன் தந்தான் போகுதம்மா

பள்ளத்தெருவிலே அத்தையம்மா கல்பவழத்
தேர்போகுதென்றிருந்தேன் என்
ஆளனப் பெற்றெடுக்க அத்கைரதம்போகுதம்மா

அஞ்சிபிராயத்திலே என்னை பெத்தாளே அம்மாடி
அறியாதகாளையி லே நான்
பத்துபிராயத்திலே நான் பால்குடிக்குசாலையிலே

பாவாடைகட்டியம்மா என்னை பெத்தாளே அம்மாடி
பகுத்தறியாகாளையிலே நான்
சித்தாடைகட்டியம்மாகான் சுத்திவரும் காளையிலே

பந்தாடுகூட்டத்திலே என்னை பெத்தாளே அம்மாடி
செண்டாடபெண்பிறந்தேன் நான்
செண்டாடும்கூடத்திலேகான் செவுண்டாடபெண்பிறந்தேன்

அந்தரமாய்கால் கிறுத்தி என்னை பெத்தாளே அம்மாடி
ஆகாஷமாய்பந்தலிட்டு இன்றைக்கு
சந்திரரும்சூரியரும் சாகூரத்கல்வாரும்

இத்திரரும் வானவரும் என்னை பெத்தாளே அம்மாடி
யெழுதுகல்லபிர்மாவும் இன்றைக்கு
முப்பத்துமுக்கோடி தேவர்களும் முனிவரும்

நாற்பத்தியெண்ணாயிரம்ரிஷி என்னைபெத்தாளே அம்மாடி
நவகோடிரிஷிகளும் இவரை
யெல்லோரும் சாக்ஷிவைத்து

நான் அம்மிவலமாக அரசாணிகால் முன்பாக
என்னைபெத்தாளே அம்மாடி இன்றைக்கு
யேத்திவிட்ட திருவிளக்கு

இன்றைக்கு அவியரதா நான் கல கப்பட்டு நிற்கிறதா
தாலி அரும்பெடுத்த என்னை பெத்தரளே அம்மாடி
தட்டானால் குற்றமில்லை

சேலை அரும்பெடுத்த சேணியனால் குற்றமில்லை
மேளம்வாசிக்கவந்த என் போபெத்தாளே அம்மாடி
நாவிதனால் குற்றமில்லை இன்றைக்கு

பஞ்சாங்கம் பார்க்கவந்த பார்ப்பானால் குற்றமில்லை
எல்லோருந்தலையிலே என்னை பெத்தாளே அம்மாடி
அஞ்செழுத்து ஆறெழுத்து இன்றைக்கு

யென்பாவிதலையிலே பத்தெழுத்துபாவனையா
யெழுதின வன்கண்குருடா என்னை பெத்தாளே அம்மாடி
யெழுத்தாணிகூ. ரொடிய இன்றைக்கு

எழுதினவன் பெண்ஜாதி என்னை போல்நின்றழுங்காளாச்சே
என்ஜோடு பெண்டுகளா யென் இனைவாழைத்தண்டுகளா
சீனிசர்க்கரைகளா சீமையுள்ள பெண்டுகளா

இன்றைக்குவோரிமனஞ்சலித்தால் என்னைபெத்தானே அம்மாடி
உபரேபருத்துவிடும் இன்றைக்கு
நானே மனஞ்சலித்ததிப்படுகரில் நின்றுவிடும்

இன்றைக்குகுயில் மனஞ்சலித்தால் என்னைபெத்தாளே அம்மாடி
அதிக விகுரல் அசையும் இன்றைக்கு
மயில் மனஞ்சலித்தால் வெய்யிலிலேவாடிவிடும்

இன்றைக்கு கோழிமனஞ்சலித்தால் என்னை பெத்தாளே அம்மாடி
குப்பையைசீச்சிவிடும் இன்றைக்கு
செம்பரித்திமனஞ்சலித்தால் செடியில் மறைந்துவிடும்

இன்றைக்குபருந்துமனஞ்சலித்தால் என்னைபெத்தாளே அம்மாடி
பட்டணத்தேவட்டமிடும் இன்றைக்கு
காக்கைமனஞ்சலித்தால் காதம்போய்காதம்வரும்

இன்றைக்கு குருகிமனஞ்சலித்தால் என்ளை பெத்தாளே அம்மாடி
கூண்டுவிட்டுகூண்டுபாயும் இறைக்கு
கொக்குமனஞ்சலித்தால் குளத்தைசுத்திசுத்திவரும்

இன்றைக்கிமாடுமனஞ்சலித்தால் என்ன பெத்தாளே அம்மாடி
மந்தையிலேபோய்நிற்கும் இன்றைக்கு
ஆடுமனஞ்சலித்தால் சந்தையிலேபோய்கிற்கும்

இன்றைக்குபாம்புமனஞ்சலித்தால் என்ன பெத்தாளே அம்மாடி
பச்சையிலைமேல்பள்ளிகொள்ளும் இன்றைக்கு
பாவிமனஞ்சலித்தால்யென்னை ஆதரிப்பார்யாருமில்லை

என்னீடுபெண்டுகளா இனவாழைத்தண்டுகளா
எனக்குயேத்தகண்ணிகளா பென்குறையை கேளுங்கடி

நான்தானாபெண்பிறந்தேன் நாட்டில் பிறக்கலையா
நாடெங்கும் வாழலியா இந்திரனார்பட்டணத்தில்
இந்திராணிவாழலியா தேவேந்திரன் பட்டணத்தில்
தெய்வரம்பைவாழமிய சான்பெண்ணப்பிறந்த கொள்ளை

கல்லிழைத்தஊஞ்சவிலே என்னை பெத்தாளே அம்மாடி
பொன்னிழைத்தபாய்போட்டு இன்றைக்கு
அக்காளுத்தக்கையரும் உட்கார்ந்து ஆடையிலே

வந்தாண்டிதாபல்காரன் என்னை பெத்தாளே அம்மாடி
வஞ்சியரைதான் அழைத்து நான் வாசித்துப்பார்த்து அல்லோ
நான் அழுதகண்ணீரு குட்டைகுளம் நிரம்பி
குதிரை குளிப்பாட்டி

முன்னூறுபார்ப்பாரும் என்னை பெத்தாளே அம்மாடி
முழுகிதலையாத்தி நானூறு பார்ப்பாரும்
நாமங்குழைத்துவிட்டு ஐனூறுபார்ப்பாரும் அர்ச்சனைகள் செய்துவைத்தார்

பூமி இரண்டு பொழுது ரெண்டுபோகையிலே
என்னை பெத்தானே அம்மாடிகான்
பூமரத்து சோலையிலே பெண்குறைசொன்னாலும்
பொழுதுவிடியாது பொற்கோழி துங்காது

இந்திரனும் நீர் தெளிக்க என்னை பெத்தாளே அம்மாடி
சந்திரனும் பூவெடுக்க இன்றைக்கு வாணியன் செக்கோட்ட
வண்ணான் அழுக்கெடுக்க சேணியன் நூல்போட
செம்படவன் வலைபோட

மங்கையொருத்தியம்மா என்னை பெத்தாளே அம்மாடி
மான்மனம்கலங்கி நிற்கிறது
வந்தவருக்கு சம்மதமா.

தெய்வலோக ஒப்பாரி முற்றிற்று
--------------------


This file was last updated on 19 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)