Conference Registration

Registration for TI2014 (INFITT Members)- 25$

Registration for TI2014 (Non INFITT Members)- 50$

Note: Once you complete the registration ,please check you email for receipt email.

From July 1st, 2014, registration fees as below:

  • INFITT Members  US$ 25 / INR 1500

  • Non-members  US$ 50  / INR 3000

00

உத்தமம் உறுப்பினர்களுக்கான பதிவுக்கட்டணம் – US$ 25 / INR 1500
ஏனையவர்களுக்கான பதிவுக்கட்டணம் – US$ 50  / INR 3000
 

பதிவுக்கட்டணத்தில் தங்குமிடவசதிக்குரிய கட்டணம் உள்ளடக்கப்படவில்லை. வழமை போலவே நுழைவு அனுமதி மற்றும் வழங்கப்படுகின்ற மாநாட்டு மலர் மற்றும் கைப்பை  மாநாடு நடைபெறும் சமயத்திலான உணவு ஆகியனவற்றுக்குரிய கட்டணமாகவே அது அமைந்துள்ளது . பதிவு செய்த உறுப்பினர்களோடு வரும் குடும்பத்தினருக்கு நபர் ஒருவருக்கு ரூ. 500 சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படும்.  இக்கட்டணம் மாநாட்டு நாட்களில் இவர்களுக்கான உணவுக்குப் பயன்படுத்தப்படும்.  வெள்ளி இரவு அல்லது சனி இரவு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்ய முயற்சிசெய்து வருகிறோம்.  இவ்விருந்து பதிவு செய்த உறுப்பினர்களுக்கு இலவசம்.  ஆனால் இவ்விருந்தில் கலந்துகொள்ள விரும்பும் குடும்ப நபர்களுக்கு ரூ. 500 தனியாகக் கட்டவேண்டியிருக்கும். இக்கட்டணங்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறவிடப்படும். எது எவ்வாறாயினும் பிரதான உறுப்பினரும் கட்டுரையாளர்களும் முன்னரே மாநாட்டு பதிவை மேற்கொண்டிருப்பது அவசியம்

மாநாட்டு இணையத்தளத்தின் ஊடாகவே பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.கட்டணங்கள் Paypal ஊடாக அல்லது வங்கிவைப்பின் ஊடாக செலுத்தப்படலாம்.Paypal ஊடாக பணம்செலுத்தமுடியாதவர்கள் பதிவுசெய்யும்போது வங்கியினை தெரிவுசெய்யவும் அதன்பின் புதுச்சேரி வங்கிக்கணக்கில்  வைப்பிலிட்டபின் அதன்விபரங்களை தெளிவாக எழுதி உங்கள் விண்ணப்ப இலக்கத்துடன் எமக்கு தெரியப்படுத்தவும்.கட்டுரைகள் தொடர்பிலான தொடர்பாடல்கள்  cpc2014@infitt.org உடனும் பதிவுகள் தொடர்பிலான தொடர்பாடல்கள்ed@infitt.org உடனும் , மேலதிக மாநாட்டு தொடர்புகளுக்கு loc2014@infitt.org என்ற மின்னஞ்சலுடனும் மேற்கொள்ளவும்.

 பணம் செலுத்துபவர்கள் கட்டாயம் இணையத்தளத்தின் ஊடாக பதிவுசெய்திருக்கவேண்டியது அவசியம். கட்டுரையாளருடன் வருகை தரும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்டணங்கள் மாநாட்டு மண்டபத்தில் பெறப்படும். இலவசமாக எந்த நபர்களும் மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாது. முழுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்படுவதற்கு கட்டுரையாளர் பதிவுசெய்திருப்பது கட்டாயம். எனவே கட்டுரை படிப்பவர்கள் முன்பே பதிவுசெய்யவேண்டும். அவர்களுக்கு ஆகஸ்ட் 15ம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு: பதிவுக்கட்டணத்தில் தங்குமிடவசதிக்குரிய கட்டணம் உள்ளடக்கப்படவில்லை. 

பதிவுசெய்யும் போது தங்குமிடவசதிக்குரிய உதவி தேவையா என்ற வினா கேட்கப்படுகினற்து.அதற்கு ஆம் என பதிலளித்தவர்கள் விரைவில் தனியாக தொடர்பு கொள்ளப்பட்டு  மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினால் ஒதுக்கப்படும் விடுதிகளில் சலுகைவிலையில் இட ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும்.முன்னரே பதிவுசெய்தவர்களும் இது தொடர்பில் எம்மை தமது பதிவு இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்குமிடவசதிக்குரிய உதவியினை பெறமுடியும். 

கண்காட்சி பொது நிகழ்வு தவிர்ந்த பேராளர் மாநாட்டில் பங்கேற்கும்  அனைவரும் (ஏற்பாட்டாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் உட்பட ) மாநாட்டுக்கான பதிவினை மேற்கொண்டிருப்பது அவசியமாகும். 

மாநாட்டில் அன்றைய தினம் நேரடியாக பதிவுசெய்வர்களுக்கு மாநாட்டுப்பொதிகள் வசதிகள் முழுமையாக கிடைப்பதனை மாநாட்டு செயலகத்தால் உறுதிசெய்ய முடியாதிருக்கும் என்பதனால் முன்கூட்டியே பதிவுசெய்வது வரவேற்கப்படுகிறது. 

மேலும் தகவல்களுக்கு அழையுங்கள்  +91.9442029053 (மு.இளங்கோவன்) 

Showing all 2 results