Cheap Web HostingFree Website TemplatesFree Joomla TemplatesFree MoneyPoze DesktopImagini DesktopDeposit PokerFree Poker Money No Deposit BonusFree Joomla 1.6 Templates
முகப்பு மாநாட்டுக் கட்டுரைகள்

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழிக் கருத்தரங்கு கோவையில் வரும் சூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கவிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்! இக்கருத்தரங்கோடு இணைந்து உத்தமம் நிறுவனம் தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது. இத்தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 


உங்களின் கட்டுரைச் சுருக்கம் ஒரு பக்கத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். தமிழில் இருந்தால் அது ஒருங்குறியில்தான் இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் வேறு எழுத்துருவில் தட்டச்சுச் செய்ய நேரிட்டால் அதை நீங்களே ஏதாவது ஒரு உருமாற்றுக் கனிமத்தைப் பயன்படுத்தி ஒருங்குறியின் எழுத்துருவுக்கு மாற்றி எங்களுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


தங்களின் கட்டுரைச் சுருக்கம் கருத்தரங்கில் படிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டதெனில் தங்களின் ஆய்வுக்கட்டுரையை ஆறு பக்கத்திற்கு மிகாமல் கீழ்க்குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பவேண்டும். ஆய்வுக்கட்டுரையில் தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள் கட்டுரைச்சுருக்கத்தில் தாங்கள் குறிப்பிட்டபடியே இருக்கவேண்டும்.


இவ்வகையில் தங்களின் கட்டுரைச் சுருக்கத்தையும் அதன் பின் தாங்கள் அனுப்பும் ஆய்வுக் கட்டுரையையும் பரிந்துரைக் குழுவினர் தர நிர்ணயம் செய்வர் என்பதைத்


கணினி வழி தமிழ் செய்வோம்! தமிழ் இணையம் வழி இணைவோம் இப்புவிதனிலே!


இவண்
வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
தலைவர், கருத்தரங்க நிகழ்ச்சிக் குழு - உத்தமம்

Current Deadlineகட்டுரைச் சுருக்கத்தினை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள்: மார்ச்சு மாதம் பதினைந்தாம் நாள்.
எங்களுடைய முடிவு உங்களுக்கு வரும் நாள்: மார்ச்சு மாதம் முப்பதாம் நாள்.
உங்களுடைய முழுக்கட்டுரை எங்களுக்கு வர வேண்டிய கடைசி நாள்: ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாள்.
தாங்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள எங்களின் கடைசி இயைவு உங்களுக்குக் கிடைக்கும் நாள்: ஏப்பிரல் மாதம் முப்பதாம் நாள்.

கருத்தரங்குக்கு ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுரைகளும் மாநாட்டின் கருத்தரங்கு மலரில் வெளியிடப்படும்.

 தெரிவித்துக்கொள்கிறோம். இரண்டுமே ஏற்புடையதாக இருக்கும் தருணத்தில்தான் தங்களின் கட்டுரையைக் கருத்தரங்கில் படிக்க அனுமதி அளிக்கப்படும். மேலும் தங்களின் கட்டுரையைக் கருத்தரங்கில் முப்பது நிமிடங்களுக்குள் படிக்கவேண்டும். இதற்குத்தக தங்களின் படைப்பு விவரங்களைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்வது அவசியம். கட்டுரைச் சுருக்கமும் கட்டுரையும் மின்வடிவில்தான் தாங்கள் எங்களுக்கு அனுப்பேவண்டும், இவற்றை அச்சுப்பிரதியாகப் பெற்றுக்கொள்ள இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரை படைப்பாளர்கள்தான் தங்களுடைய கட்டுரையைக் கருத்தரங்கில் படிக்க இயலும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கட்டுரைச் சுருக்கத்தின் அமைப்பு
உங்கள் கட்டுரைச் சுருக்கம் உங்களுடைய அல்லது உங்களுடைய கூட்டு ஆய்வாளர்களின் சுய ஆய்வு குறித்தானதாக இருக்கவேண்டும். இவ்வாய்வு கணினியில் தமிழ் பயன்பாடு பற்றிய எந்த ஒரு தலைப்பிலாவது இருக்கலாம். இது தமிழ் மொழியைப் பற்றி மட்டுமோ அல்லது கணினியைப் பற்றி மட்டுமோ இல்லாமல் தமிழ் மொழி , தமிழ் இலக்கியம், தமிழ்ப் பல்லூடகம் போன்ற துறைகள் எப்படியெல்லாம் கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பன பற்றி ஏதாவது ஒரு தலைப்பில் இருக்கலாம்.


முக்கிய நாட்கள் தங்களின் கவனத்திற்கு