Cheap Web HostingFree Website TemplatesFree Joomla TemplatesFree MoneyPoze DesktopImagini DesktopDeposit PokerFree Poker Money No Deposit BonusFree Joomla 1.6 Templates
முகப்பு

 செய்தித்துளிகள்

1] தமிழ் இணைய மாநாடு 2010 நிகழ்ச்சி நிரல் (25 சூன் 2010)

2] ஊடகங்களுக்கான வெளியீடு (27-06-2010)  இங்கே

3] தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (28 ஏப்ரல் 2010)

4] தமிழ் இணையம் மாநாடு 2010 தொடக்க விழா ஒளிப்படங்கள் இங்கே

5] யாழன் சண்முகலிங்கம் அரங்கு நிகழ்ச்சிகளின் ஒளிப்படங்கள் இங்கேயும் அடுத்த பக்கத்திலும்  

6] சுஜாதா, கோவிந்தசாமி அரங்கு நிகழ்ச்சிகளின் ஒளிப்படங்கள் இங்கேயும் அடுத்த பக்கத்திலும்

7] உமர் தம்பி அரங்கு நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒளிப்படங்கள் இங்கேயும் அடுத்த சில பக்கங்களிலும்

 

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டோடு இணைந்து உத்தமம், தமிழ்நாட்டில் கோவையில் வரும் சூன் 23 முதல் 27 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதை உத்தமம் அறிவிப்பதில் பெருமகிழ்வெய்துகிறது. மாநாட்டை கோவையில் நடத்துவதற்கு அழைப்புவிடுத்துள்ள மேன்மைமிகு முதல்வர். முனைவர். கலைஞர். மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தமிழக அரசிற்கு உத்தமம் நன்றி தெரிவிக்கிறது.

மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக 2010 விளங்கும்.தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும்.

உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்களையும், ஆய்வறிஞர்களையும்,
கைதேர்ந்தவர்களையும் இம் மாநாட்டில் பங்கேற்க அழைக்கிறோம்.

தமிழ் இணைய மாநாடு இந்த வரிசையில் ஒன்பதாவது மாநாடு ஆகும். கடந்த மாநாடுகள் கொலோன்,
செருமனி (2009), சிங்கப்பூர், (1997, 2000, 2004), சென்னை (1999, 2003), கோலாலம்பூர், மலேசியா (2001), சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா (2002) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்:- இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

செயல் இயக்குனர்,
உத்தமம். [06.01.2010]


தொடர்புகளுக்கான மின்னஞ்சல்: (இயக்குனரகம்): இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்   /  (தமிழ் இணையம் 2010) : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
 

INFITT MEMBERSHIP - YEAR 2010

Anyone who subscribes to the aims of INFITT and abides by its rules and regulations can become a member of INFITT. Please visit http://infitt.org/index.php?option=com_content&task=blogcategory&id=21&Itemid=78 to read the constitution.

Due to certain technical reasons we are unable to accept membership applications online now.  However membership applications presented in person during the  9th Tamil Internet Conference at Coimbatore will be accepted. Membership fees can be paid, either as cash or cheque in person at the conference help desk.

We welcome you to INFITT a global organization to promote information technology in Tamil

உத்தமத்தின் நோக்கங்களையும், விதிமுறைகளையும் ஏற்கும் எவரும் உத்தமத்தின் உறுப்பினராகலாம். உத்தமத்தின் நோக்கங்களை அறிய http://infitt.org/index.php?option=com_content&task=blogcategory&id=21&Itemid=78 என்ற இணைப்பில் உள்ள
அதன் யாப்பை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

சில தொழில்நுட்பக் காரணங்களால், தற்சமயம், இணையம் வழி உறுப்பினர் நுழைவுப் படிவங்களை ஏற்க இயலாதிருக்கிறோம்.
எனினும், கோயம்புத்தூரில் நிகழ இருக்கும் 9ம் தமிழ் இணைய மாநாட்டின் போது நேரில் அளிக்கப்படும் உறுப்பினர் நுழைவுப் படிவங்கள் ஏற்கப்படும்.உறுப்பினர் கட்டணத்தை மாநாட்டு அரங்கில் உள்ள சேவைப் பிரிவில் ரொக்கமாகவோ, காசோலையோகவோ செலுத்தலாம்.

தமிழ்க் கணிமை வளர்ச்சிக்குப் பணியாற்றும் அனைத்துலக அமைப்பான உத்தமத்திற்கு உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.