|
தமிழ் இணைய மாநாடு 2009 எதிர்வரும்
ஒக்டோபர்த் திங்கள் 23-25
தேதிகளில்
ஜெர்மனியில் கோலென் (Koeln) நகரில் நடைபெறும் என்று
அறிவிப்பதில் உத்தமத்தின்
செயற்குழ ு
மகிழ்ச்சியடைகிறது.
த.இ.மா. 2009 சிங்கப்பூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற த.இ.
மாநாட்டின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது தமிழ் கணிமை, தமிழ்
இணையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்களையும்,
எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும் பற்றி உரையாடும்
தொழில்நுட்பவியல்
மாநாடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்குச் செறிவூட்டும்
வகையில் 100 நபர்களை மட்டுமே கலந்து கொள்ள அழைக்கவுள்ளோம்.
தமிழுக்கு மட்டுமான
தொழில்நுட்ப மாநாடான தமிழ் இணைய
மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் கணினி வல்லுநர்களை
வரவேற்கிறோம். இத்தகைய தமிழிணைய மாநாடுகள் இதற்கு முன்னதாக
சென்னை (1999,2003), சிங்கப்பூர் (200,2004), கோலாலம்பூர்
(2001), சான் பிரான்சிஸ்கோ (2002) ஆகிய நகரங்களில்
நடைபெற்றுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
த.இ.மா. 2009, மாநாடு நடக்கவிருக்கும்
கோலென் பல்கலைக்கழகத்தின்
இந்தியவில் மற்றும் தமிழியல் மையத்தின் கூடிய ஒத்துழைப்போடு
நடத்தப்படுகிறது. பேராசிரியர்.உள்ரிகே நிக்கிலசு அவர்களின் தலைமையில்
இயங்கும் இம்மையம் ஐரோப்பாவில்
தமிழ் ஆய்வுக்குமான தலைசிறந்த மையங்களில் ஒன்றாகும். இவ்வாய்வு
நிறுவனத்திலுள்ள தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர்.தாமசு
மால்ட்டன், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியங்களை
மின்வடிவேற்ற பெரும் முயற்சி செய்தவரும் தமிழார்வலர்
குழுக்களில் பெரிதும் அறியப்பட்டவருமாவார். தமிழகத்துக்கு
வெளியே 50,000 தமிழ் நூல்களுக்கு மேல் வைத்திருக்கும் ஒரே கல்வி
நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புடைய
இவ்வைரோப்பிய நிறுவனத்தில் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதில்
பெருமகிழ்ச்சியடைகிறோம்.
முனைவர்
கல்யாணசுந்தரம்
-தலைவர் உத்தமம்-
|