Holy Bible - Old Testament
Book 39 (Malachi), Book 40 (Tobit), Book 41 (Judith),
Book 42 (Esther) & Book 43 (Wisdom of Solomon)
(in Tamil, Unicode format)

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து)
புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்)


Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the"bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This Etext file has the verses in tamil script in Unicode format
So you need to have a Unicode Tamil font and the web browser set to "utf-8" to view the Tamil part properly.
© Project Madurai 2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 39 - மலாக்கி


அதிகாரம் 1.

1.       மலாக்கி வாயிலாக இஸ்ரயேலுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:
2.       "உங்களுக்கு நான் அன்புகாட்டினேன் " என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, "எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர்? " என்று கேட்கிறீர்கள். "யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான்! ஆயினும் யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.
3.       ஆனால் ஏசாவை வெறுத்தேன், அவனது மலைநாட்டைப் பாழாக்கினேன். அவனது உரிமைச்சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளிடம் கையளித்து விட்டேன் " என்கிறார் ஆண்டவர். "நாங்கள் அழிக்கப்பட்டோ ம்: ஆனாலும் பாழடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
4.       எங்கள் நகர்கள் அழிக்கப்பட்டன: ஆனால் அவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம் " என்று ஏதோமியர் கூறுவரேயானால், படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் கட்டியெழுப்பட்டும்: நான் அவற்றைத் தகர்த்துவிடுவேன். தீய நாட்டினர் என்றும், ஆண்டவரின் கடும்சினத்திற்கு என்றென்றும் இலக்கான இனம் என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
5.       உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்: கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள். "
6.       "மகன் தன் தந்தைக்கு மதிப்புத் தருவான்: பணியாளன் தன் தலைவனுக்கு மரியாதை செலுத்துவான். நான் தந்தையானால் எனக்குரிய மதிப்பு எங்கே? நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன்? " என்று தமது பெயரை அவமதிக்கும் குருக்களாகிய உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். நீங்களோ உமது பெயரை எவ்வாறு அவமதித்தோம் என்கிறீர்கள்.
7.       என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம் என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்஥஥"றல்லவோ நினைக்கிறீர்கள்!
8.       குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலி குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ? " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
9.       "இப்பொழுது இறைவன் நம்மீது இரக்கம் காட்டுமாறு அவர் திருமுன் இறைஞ்சி நில்"லுஙகள். நீங்கள் இத்தகைய காணிக்கையைக் கொடுத்திருக்க உங்களுக்குள் யாருக்கேனும் அவர் ஆதரவு அளிப்பாரோ? " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
10.       "என் பலிபீடத்தின்மேல் நீங்கள் வீணாகத் தீ மூட்டாதவாறு எவனாகிலும் கோவில் கதவை மூடினால் எத்துணை நன்று: உங்களை எனக்குப் பிடிக்கவில்லை " என்கிறார் படைகளின் ஆண்டவர். "உங்கள் கையிலிருந்து காணிக்கை எதுவும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
11.       கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் பபமும் பய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே " என்கிறார். படைகளின் ஆண்டவர்.
12.       நீங்களோ "நம் தலைவரது பலிபீடம் தீட்டுப்பட்டது. அதன்மேல் வைத்துள்ள பலியுணவு அருவருப்புக்குரியது " என்று நினைக்கும்பொழுது என் பெயரைக் களங்கப்படுத்துகிறீர்கள்.
13.       "ஓஎவ்வளவு தொல்லை!ஓ என்று அதைப்பற்றி இழிவாய்ப் பேசுகிறீர்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர். கொள்ளையடித்ததையும், நொண்டியானதையும், நோயுற்றதையும் கொண்டு வருகிறீர்கள். இவற்றைக் காணிக்கை எனக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் கையிலிருந்து அதை நான் ஏற்றுக் கொள்வேனோ? " என்று கேட்கிறார் ஆண்டவர்.
14.       தன் மந்தையில் ஊனமற்ற கிடாய் இருக்கையில் ஊனமுற்ற ஒன்றைப் பொருத்தனையாகத்" தலைவராகிய ஆண்டவருக்குப் பலியிடும் எத்தன் சபிக்கப்படுவானாக. "நானே மாவேந்தர், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

அதிகாரம் 2.

1.       "இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்கவேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.
2.       எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன் " என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.
3.       "இதோ உங்களை முன்னிட்டு நான் உங்கள் வழிமரபைக் கண்டிப்பேன். திருநாள் பலிவிலங்குகளின் சாணத்தை உங்கள்" முகத்திலேயே வீசியடிப்பேன். அதோடு உங்களையும் பக்கியெறிவேன்.
4.       அப்பொழுது லேவியோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே அக்கட்டளையை உங்களுக்குத் தந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் " என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.
5.       "நான் அவனோடு செய்துகொண்ட உடன்படிக்கை, வாழ்வும் அமைதியும் தரும் உடன்படிக்கை. எனக்கு அவன் அஞ்சி நடக்கவே அவற்றை அவனுக்கு அளித்தேன். அவனும் எனக்கு அஞ்சி நடந்தான். என் பெயருக்கு நடுங்கினான்.
6.       மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.
7.       நெறிகேட்டிலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான். ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவனது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் அவனை நாடவேண்டும். ஏனெனில் படைகளின் ஆண்டவருடைய பதன் அவன்.
8.       நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள். " என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.
9.       "ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்: ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை: உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள். "
10.       நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?
11.       யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்: இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய பயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.
12.       இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும் அவனுக்காகச் சான்று பகர்பவனோ, மறுமொழி கூறுபவனோ, படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வருபவனோ இல்லாதபடி, யாக்கோபின் கூடாரத்திலிருந்தும் ஆண்டவர் அழித்து விடுவாராக.
13.       நீங்கள் செய்யும் இன்னொன்றும் உண்டு. ஆண்டவரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள். உங்கள் காணிக்கையை ஆண்டவர் கண்ணோக்காததாலும் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்ளாததாலும் நீங்கள் ஆண்டவரது பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.
14.       "இதற்குக் காரணம் யாது? " என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே: உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.
15.       உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால் எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.
16.       ஏனெனில், "மணமுறிவை நான் வெறுக்கிறேன் " என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். "மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான் " என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்: நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
17.       உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள். "எவ்வகையில் அவரை நாங்கள் சோர்வடையச் செய்தோம்? " என்று வினவுகிறீர்கள். "தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே: அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார் " என்று சொல்கின்றீர்கள் அல்லது "நீதியின் கடவுள் எங்கே? " என்று கேட்கிறீர்கள்.

அதிகாரம் 3.

1.       "இதோ! நான் என் பதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்: அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் பதர் இதோ வருகிறார் " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
2.       ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.
3.       அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் பய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் பய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார்.
4.       அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையம் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
5.       அப்போது, "சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப்படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்று பகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
6.       "யாக்கோபின் பிள்ளைகளே, ஆண்டவராகிய நான் மாறாதவர். அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கிறீர்கள்.
7.       உங்கள் மூதாதையரின் நாளிலிருந்து என் கட்டளைகளைவிட்டு அகன்றபோனீர்கள். அவற்றைக் கைக்கொள்ளவில்லை. என்னிடம் திரும்பி வாருங்கள்: நானும் உங்களிடம் திரும்பி வருவேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர். நீங்களோ, "நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்? " என்கிறீர்கள்.
8.       மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்! "எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்? " என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான்.
9.       நீங்களும் உங்கள் இனத்தார் அனைவரும் என்னைக் கொள்ளையடித்ததால் சாபத்துக்கு உள்ளானீர்கள்.
10.       என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப் பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள். அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்கிறேனா இல்லையா எனப் பாருங்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
11.       "பயிரைத் தின்று அழிப்பனவற்றை உங்களை முன்னிட்டுக் கண்டிப்பேன். அவை உங்கள் நிலத்தின் விளைச்சலைப் பாழாக்கமாட்டா: உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனி கொடுக்கத் தவறமாட்டா, " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
12.       " "அப்போது வேற்றினத்தார் அனைவரும் உங்களைப் ஓபேறு பெற்றோர்ஓ என்பார்கள். ஏனெனில் நீங்கள் இனிய நாட்டின் மக்களாய்த் திகழ்வீர்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
13.       "எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள், " என்கிறார் ஆண்டவர். ஆயினும், "உமக்கு எதிராக என்ன பேசினோம்? என்று கேட்கிறீர்கள்.
14.       கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்: அவரது திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்?
15.       இனிமேல் நாங்கள் ஓஆணவக்காரரே பேறுபெற்றோர்ஓ என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா? "
16.       அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு மல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது.
17.       "நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள் " என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன்.
18.       அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள்.

அதிகாரம் 4.

1.       "இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
2.       "ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீர்கள். நான் செயலாற்றும் அந்நாளில் கொடியோரை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்.
3.       அவர்கள் உங்கள் உள்ளங்காலுக்கு அடியில் சாம்பலைப்போல் ஆவார்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4.       "ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.
5.       இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
6.       நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்"களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். "


விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 40 - தோபித்து


அதிகாரம் 1.

1.       இது தோபித்தின் கதை: தோபித்து தொபியேலின் மகன்: தொபியேல் அனனியேலின் மகன்: அனனியேல் அதுவேலின் மகன்: அதுவேல் கபேலின் மகன்: கபேல் இரபேலின் மகன்: இரபேல் இரகுவேலின் மகன்: இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர்.
2.       தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே, பெயேருக்கு வடக்கே உள்ளது.
3.       தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்: அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும் தருமங்கள் பல செய்துவந்தேன்.
4.       இளமைப் பருவத்தில் என் நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்தபோது என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் என் மூதாதையான தாவீதின் வீட்டிலிருந்து பரிந்து சென்றது: இஸ்ரயேலின் கலங்களெல்லாம் பலியிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராகிய எருசலேமிலிருந்தும் பிரிந்துசென்றது: எருசலேமில்தான் கடவுளின் இல்லமாகிய கோவில் எல்லாத் தலைமுறைகளுக்கும் எக்காலத்துக்கும் உரியதாகக் கட்டப்பட்டுத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தது.
5.       இஸ்ரயேலின் மன்னர் எரொபவாம் தாண் நகரில் அமைத்திருந்த கன்றுக்குட்டியின் சிலைக்குக் கலிலேயாவின் மலைகளெங்கும் என் உறவின் முறையார் அனைவரும். என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் பலி செலுத்தி வந்தார்கள்.
6.       நான் மட்டும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டியிருந்தபடி திருவிழாக்களின்போது பலமுறை எருசலேமுக்குச் சென்றுவந்தேன். அறுவடையின் முதற்கனியையும் விலங்குகளின் தலையீற்றுகளையும் கால்நடையில் பத்திலொரு பங்கையும் முதன்முறை நறுக்கப்பட்ட ஆட்டு முடியையும் எடுத்துக்கொண்டு நான் எருசலேமுக்கு விரைவது வழக்கம்.
7.       அவற்றைக் காணிக்கையாக்குமாறு ஆரோனின் மைந்தர்களாகிய குருக்களிடம் கொடுத்துவந்தேன்: அதுபோன்று தானியம், திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மாதுளம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றோடு மற்றப் பழங்களிலும் பத்திலொரு பங்கை எருசலேமில் திருப்பணிபுரிந்துவந்த லேவியரிடம் கொடுத்து வந்தேன்: மேலும் பத்தில் மற்றொரு பங்கை விற்று ஆறு ஆண்டுக்குச் சேர்த்துவைத்த பணத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று பகிர்ந்து கொடுத்து வந்தேன்.
8.       பத்தில் மூன்றாவது பங்கைக் கைவிடப்பட்டோர்க்கும் கைம்பெண்களுக்கும் இஸ்ரயேல் மக்கள் நடுவில் யூத மதத்தைத் தழுவி வாழ்ந்தோர்க்கும் கொடுத்துவந்தேன்: ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் அதை அவர்களிடம் கொடுக்கச் சென்றபோது, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடியும், என் பாட்டனார் அனனியேலின் அன்னை தெபோரா விதித்திருந்தபடியும் நாங்கள் விருந்துண்டுவந்தோம். என் தந்தை இறக்கவே, நான் அனாதையானேன்.
9.       நான் பெரியவனானபோது, என் தந்தையின் வழிமரபைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தேன்: அவள் வழியாக ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்: அவனுக்குத் தோபியா என்று பெயரிட்டேன்.
10.       அசீரியாவுக்கு நான் நாடுகடத்தப்பட்டுக் கைதியாக நினிவேக்குச் சென்றபின் என் உறவின் முறையார் அனைவரும் என் இனத்தாரும் வேற்றினத்தாரின் உணவை உண்டுவந்தனர்.
11.       ஆனால் நான் வேற்றினத்தாரின் உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தேன்.
12.       நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்.
13.       எனவே உன்னத இறைவன் எனக்கு அருள்கூர்ந்து, எனமேசரின் முன்னிலையில் என்னைப் பெருமைப்படுத்தினார். எனமேசர் தமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கித்தருபவனாக என்னை அமர்த்தினார்.
14.       அவர் இறக்கும் வரை நான் மேதியாவுக்குச் சென்று அவருக்குத் தேவையானவற்றை அங்கிருந்து வாங்கிவந்தேன். அக்காலத்தில் மேதியா நாட்டில் வாழ்ந்துவந்த கபிரியின் உடன்பிறப்பான கபேலிடம் நாமறு கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்தேன்.
15.       எனமேசர் இறந்தபின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அப்போது மேதியாவுக்குச் செல்ல வழி இல்லாமற்போயிற்று: எனவே அங்கு என்னால் செல்ல முடியவில்லை.
16.       எனமேசரின் காலத்தில் என் இனத்தைச் சேர்ந்த உறவின் முறையாருக்கு தருமங்கள் பல செய்துவந்தேன்.
17.       பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன்.
18.       சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்: கடவுளைப் பழித்துரைத்ததற்காக விண்ணக வேந்தர் அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியபொழுது அவர் யூதேயாவிலிருந்து தப்பியோடி விட்டார்: அப்பொழுது அவர் தம் சீற்றத்தில் இஸ்ரயேல் மக்களுள் பலரைக் கொன்றார். நான் அவர்களின் சடலங்களைக் கவர்ந்து சென்று அடக்கம் செய்தேன். சனகெரிபு அவற்றைத் தேடியபொழுது காணவில்லை.
19.       ஆனால் நினிவேயைச் சேர்ந்த ஒருவன் சென்று நான் அவற்றைப் புதைத்துவிட்டதாக மன்னரிடம் தெரிவித்தான். எனவே நான் தலைமறைவானேன். பின்னர் மன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைக் கொல்லத் தேடினார் என்று அறிந்து அஞ்சி ஓடிவிட்டேன்.
20.       என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன: என் மனைவி அன்னாவையும் என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
21.       நாற்பது நாள்களுக்குள் சனபெரிபின் மைந்தர்கள் இருவர் அவரைக் கொன்றுவிட்டு அரராத்து மலைக்கு ஓடிவிட்டனர். அவருக்குப்பின் அவருடைய மகன் சக்கர்தோன் ஆட்சிக்கு வந்தார். என் சகோதரர் அனயேலின் மகன் அகிக்காரை அவர் தம் அரசின் நிதிப் பொறுப்பில் அமர்த்தினார். இதனால் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடம் இருந்தது.
22.       பின்பு அகிக்கார் எனக்காகப் பரிந்து பேசினதால் நான் நினிவேக்குத் திரும்பி வந்தேன். அசீரிய மன்னர் சனகெரிபுக்கு மது பரிமாறுவோரின் தலைவனாகவும் ஓலைநாயகமாகவும் ஆட்சிப் பொறுப்பாளனாகவும் நிதி அமைச்சனாகவும் அகிக்கார் விளங்கினான். சக்கர்தோனும் அவனை அதே பதவியில் அமர்த்தினார். அகிக்கார் என் நெருங்கிய உறவினன்: என் சகோதரனின் மகன்.

அதிகாரம் 2.

1.       சக்கர்தோன் ஆட்சியில் நான் வீடு திரும்பினேன். என் மனைவி அன்னாவும் என் மகன் தோபியாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டனர். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன்.
2.       விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்துவா: அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பிவரும்வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே என்று கூறினேன்.
3.       தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, அப்பா என்று அழைத்தான். நான், என்ன மகனே? என்றேன். அவன் மறுமொழியாக, அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது என்றான்.
4.       உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறித் தெருவிலிருந்து கடலத்தைத் பக்கிவந்தேன்: கதிரவன் மறைந்தபின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன்.
5.       வீடு திரும்பியதும் குளித்து விட்டுத் துயருடன் உணவு அருந்தினேன்.
6.       உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன் என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.
7.       கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன்.
8.       என் அண்டை வீட்டார், இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே என்று இழித்துரைத்தனர்.
9.       அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை.
10.       என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்க ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.
11.       அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
12.       தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள்.
13.       அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது? என்று கேட்டேன். ஒருவேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு: ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை என்றேன்.
14.       அதற்கு அவள் என்னிடம், கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங் கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது! என்றாள்.

அதிகாரம் 3.

1.       நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்: தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்:
2.       ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை: உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர்.
3.       இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்: என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.
4.       உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம், நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்: அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.
5.       என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை: உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை.
6.       இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்: என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்: ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்: முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்: உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்: ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும், இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்.
7.       அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்துவந்த இரகுவேலின் மகள் சாரா, தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித் துரைத்ததைக் கேட்க நேரிட்டது.
8.       ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்றுவிட்டது. இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை.
9.       உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்? நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம் என்று பழித்துரைத்தாள்.
10.       அன்று அவள் மனத் நொந்து அழுதாள்: தன்னைத் பக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள். ஆனால் மீண்டும் சிந்தித்து, என் தந்தையை மக்கள் பழிக்கலாம்: “உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்: அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்“ என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இனிமேல் கேட்க வாய்ப்பு இராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
11.       அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக!
12.       இப்பொழுது எனது முகத்தை உம்மிடம் திருப்புகிறேன்: என் கண்களை உம்மை நோக்கி எழுப்புகிறேன்.
13.       இவ்வுலகிலிருந்து நான் மறைந்துவிடக் கட்டளையிடும்: இதனால் இத்தகைய பழிச் சொற்களை நான் இனியும் கேளாதிருக்கச் செய்யும்.
14.       ஆண்டவரே, நான் மாசற்றவள் என்பதும் எந்த ஆணுடனும் உறவு கொண்டதில்லை என்பதும் உமக்குத் தெரியும்.
15.       நான் நாடு கடத்தப்பட்டு வாழும் இவ்விடத்தில் என் பெயரையோ என் தந்தையின் பெயரையோ இழிபுபடுத்தவில்லை. நான் என் தந்தைக்கு ஒரே பிள்ளை: அவருக்கு வாரிசாக வேறு குழந்தைகள் இல்லை: அவருக்குச் சகோதரர் இல்லை: நான் மணந்துகொள்ளத்தக்க நெருங்கிய உறவினர் யாரும் இல்லை: என் கணவர்கள் எழுவரையும் ஏற்கெனவே இழந்துவிட்டேன். இனியும் நான் ஏன் வாழவேண்டும்? ஆண்டவரே, நான் சாவது உமக்கு விருப்பமில்லையெனில், எனக்கு எதிராகச் சொல்லப்படும் பழிச்சொல்லையாவது இப்போது அகற்றிவிடும்.
16.       அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது.
17.       தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும், இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையம்விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

அதிகாரம் 4.

1.       மேதியா நாட்டின் இராகியில் வாழ்ந்த கபேலிடம் தாம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தோபித்து அன்று நினைவுகூர்ந்தார்.
2.       சாகவேண்டும் என்று நான் வேண்டியுள்ளேன். அதற்கமுன் என் மகன் தோபியாவை அழைத்து இப்பணத்தைப் பற்றி விளக்கவேண்டும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
3.       எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க, அவரும் தந்தையிடம் வந்தார். மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்: என்னை நல்லடக்கம் செய்: உன் தாயை மதித்துநட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்: எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.
4.       மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்: அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.
5.       மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை: பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருகாலும் விரும்பாதே. உன் வாழ்நாள் முழுவதும் நீதயைக் கடைப்பிடி: அநீதியின் வழிகளில் செல்லாதே.
6.       ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.
7.       நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே: ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்.
8.       உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு: சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு: ஆனால் தருமம் செய்யத் தயங்காதே.
9.       இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.
10.       நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்: இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும்.
11.       தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.
12.       மகனே, எல்லாவகைக் தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்: எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின் வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்: நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால் உன் தந்தையின் குலத்தைச் சேராத வேற்றினப் பெண்ணை மணம் செய்யாதே. மகனே, தொன்றுதொட்டே நம் மூதாதையராய் விளங்கும் நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவில் கொள். அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே பெண்கொண்டார்கள்: கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள்: அவர்களுடைய வழிமரபினர் இஸ்ரயேல் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
13.       அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு: உன் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம் உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே: இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்: சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்: சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.
14.       வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு: இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.
15.       உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவு மீறி மது அருந்தாதே: குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.
16.       உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு: உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.
17.       உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு: பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.
18.       ஞானிகளிடம் அறிவுரை கேள்: பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.
19.       எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று: உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு: ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது. ஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார். ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார். மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்: அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.
20.       இப்பொழுது, மகனே, உன்னிடம் ஒன்று சொல்வேன்: மேதியா நாட்டு இராகியில் உள்ள கபிரியின் மகன் கபேலிடம் நானு¡று கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்துள்ளேன்.
21.       மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.

அதிகாரம் 5.

1.       அப்பொழுது தம் தந்தை தோபித்துக்கு மறுமொழியாகத் தோபித்துக்கு மறுமொழியாகத் தோபியா, அப்பா, நீங்கள் எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வேன்.
2.       ஆனால் எப்படிக் கபேலிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவேன்? அவருக்கு என்னைத் தெரியாது: எனக்கும் அவரைத் தெரியாது. அவர் என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை நம்பி என்னிடம் பணத்தைக் கொடுக்கவும் நான் எத்தகைய அடையாளம் காட்டுவேன்? மேதியாவுக்கு எவ்வழியாகச் செல்வது, எவ்வாறு செல்வது என்று எனக்குத் தெரியாது என்றார்.
3.       அப்பொழுது தோபித்து தம் மகன் தோபியிடம், ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார்: நானும் கையொப்பமிட்டேன். அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம். அதைப் பணத்துடன் வைத்துள்ளேன். இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பணத்தைக் கொடுத்து வைத்தேன். இப்பொழுது உன்னோடு செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்த ஒருவரை நீயே தேடிப்பார். நீ திரும்பும் வரைக்குமுள்ள கூலியை அவருக்குக் கொடுப்போம். கபேலிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்று வா மகனே என்றார்.
4.       தம்முடன் மேதியாவுக்குச் செல்ல வழி தெரிந்த ஒருவரைத் தேடித் தோபியா வெளியே சென்றார். சென்று, தம்முன் நின்ற வானபதர் இரபேலைக் கண்டார். ஆனால் அவர் கடவுளின் பதர் என்பது அவருக்குத் தெரியாது.
5.       அவரிடம், இளைஞரே, எங்கிருந்து வருகிறீர்? என்று வினவினார். அதற்கு அவர், உன் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் நானும் ஒருவன். வேலை தேடி இங்கு வந்துள்ளேன் என்றார். மேதியாவுக்குச் செல்ல உமக்கு வழி தெரியுமா? என்று தோபியா கேட்டார்.
6.       அதற்கு அவர், ஆம், பன்முறை அங்குச் சென்றுள்ளேன். அது எனக்கு அறிமுகமான இடம். எல்லா வழிகளையம் நான் அறிவேன். அடிக்கடி மேதியாவுக்குச் சென்று, இராகியில் வாழும் நம் உறவினர் கபேலுடன் தங்கியிருக்கிறேன். எக்பத்தானாவிலிருந்து இராகிக்குச் செல்ல இரண்டு நாள் ஆகும்: ஏனெனில் எக்பத்தானா மலைப் பகுதியில் உள்ளது என்றார்.
7.       தோபியா, இளைஞரே, நான் சென்று என் தந்தையிடம் சொல்லி விட்டுத் திரும்பும் வரை எனக்காகக் காத்திரும். நீர் என்னுடம் வர வேண்டும். உமக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன் என்றார்.
8.       அதற்கு அவர், சரி, நான் காத்திருக்கிறேன்: ஆனால் மிகவும் தாமதியாதீர் என்றார்.
9.       தோபியா உள்ளே சென்று தம் தந்தை தோபித்தை நோக்கி, நம் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் ஒருவரைக் கண்டுகொண்டேன் என்றார். அவரிடம் தோபித்து, மகனே, அவருடைய இனம் எது, குலம் எது, உன்னுடன் செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்தவரா என அறியும் பொருட்டு அவரை என்னிடம் அழைத்து வா என்றார்.
10.       தோபியா வெளியே சென்று அந்த இளைஞரை அழைத்து, என் தந்தை உம்மைக் கூப்பிடுகிறார் என்றார். அவர் உள்ளே சென்றதும் தோபித்து முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அதற்கு இரபேல், வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக என்று வாழ்த்தினார். எனக்கு இனி என்ன மங்கலம் உண்டு? நான் பார்வையற்ற மனிதன். விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது. ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று இருளில் கிடக்கின்¥றேன்: நான் உயிர்வாழும்போதே இறந்தவர்களுடன் இருக்கிறேன். மனிதரின் குரலைக் கேட்கிறேன்: ஆனால் அவர்களைக் காணமுடிவதில்லை என்று கூறினார். அதற்கு அவர், அஞ்ச வேண்டாம். விரைவ
11.       அதற்குத் தோபித்து இளைஞரிடம், தம்பி, உன் குடும்பம் எது? குலம் எது? சொல் என்றார்.
12.       அவர், குலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன? என்றார். அதற்கு அவர், தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன? என்று வினவினார்.
13.       இரபேல் அவரிடம், நான் உம் உறவினர்களுள் ஒருவரான பெரிய அனனியாவின் மகன் அசரியா என்றார்.
14.       தோபித்து இளைஞரிடம், தம்பி, நீ உடல்நலமும் பிறநலன்களும் பெற்று வாழ்க! உண்மையைத் தெரிந்து கொள்ளவே உன் குடும்பத்தைப்பற்றி அறிய விரும்பினேன். எனவே என்மீது சினங்கொள்ளாதே. நீ என் உறவினர்களுள் ஒருவனே: நல்ல, சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய செமெல்லியின் புதல்வர்களான அனனியா, நாத்தான் ஆகிய இருவரையும் நான் அறிவேன். அவர்கள் என்னுடன் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதுண்டு. அவர்கள் நெறி பிறழாதவர்கள். உன் உறவினர்கள் நல்லவர்கள். நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வரவு நல்வரவாகுக! என்று கூறினார்.
15.       அவர் தொடர்ந்து, உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு திராக்மா சம்பளமாகக் கொடுப்பேன். மேலும் என் மகனுக்கு ஆகும் செலவுகளைப் போன் றே உன் செலவுகளையும் ஏற்றுக் கொள்வேன்.
16.       என் மகனுடன் செல்: உனக்குரிய சம்பளத்தை விட மிகுதியாகவே கொடுப்பேன் என்றார்.
17.       இரபேல் அவரிடம், அஞ்ச வேண்டாம், நான் அவருடன் போவேன். நாங்கள் நலமே சென்று திரும்புவோம்: ஏனெனில் பாதை பாதுகாப்பானது என்றார். பிறகு தோபித்து அவருக்கு வாழ்த்துக் கூறி, எல்லாம் நலமாக அமையட்டும், தம்பி என்றார். பிறகு தம் மகனை அழைத்து அவரிடம், மகனே, பயணத்திற்கு ஏற்பாடு செய்: உன் சகோதரனுடன் புறப்படு. விண்ணகக் கடவுள் உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தி நலமே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பாராக. அவருடைய பதர் உங்களை நலமே வழி நடத்துவாராக என்றார். தோபியா புறப்படுமுன் தம் தந்தையையுயம் தாயையுயம் முத்தமிட்டார். அப்போது தோபித்து அவரிடம், நலமே சென்று
18.       ஆனால், அவருடைய தாய் அழுதுகொண்டே தோபித்திடம், ஏன் என் குழந்தையை அனுப்பினீர்? அவன் நமக்கு ஊன்றுகோலும் உறுதுணையும் அல்லவா?
19.       பணமா பெரிது? நம் குழந்தை அதைவிட மதிப்பு வாய்ந்தவன் அல்லவா?
20.       ஆண்டவர் நமக்கு அருளிய வாழ்வே நமக்குப் போதுமே! என்றார்.
21.       தோபித்து அவரிடம், கவலை வேண்டாம். நம் மகன் நலமே சென்று திரும்புவான். அவன் நலமுடன் உன்னிடம் திரும்பும் நாளை நீ காண்பாய்.
22.       எனவே கவலை வேண்டாம், அன்பே: அவர்களைப்பற்றி அச்சம்கொள்ள வேண்டாம். நல்ல பதர் ஒருவர் அவனுடன் சென்று, பயணத்தை வெற்றியாய் முடித்து, நலமே திரும்ப அழைத்து வருவார் என்றார்.
23 அதைக்கேட்ட தோபியாவின் தாய் அழுகையை நிறுத்தினார்.

அதிகாரம் 6.

1.       இளைஞர் புறப்பட்டுச் சென்றார். வானபதர் உடன் சென்றார். அவர்களது நாயும் வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றது. பொழுது சாயும்வரை அவர்கள் இருவரும் பயணம் செய்து, திக்¡£சு ஆற்றோரமாய்த் தங்கினார்கள்.
2.       தோபியா தம் பாதங்களைக் கழுவத் திக்¡£சு ஆற்றில் இறங்கினார். பெரும் மீன் ஒன்று திடீரென்று நீரிலிருந்து துள்ளிக் குதித்து அவரது காலைக் கவ்வ முயன்றது. எனவே அவர் கதறினார்.
3.       வானபதர் அவரிடம், பிடியும், மீனை உறுதியாகப் பிடியும் என்றார். இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார்.
4.       வானபதர் அவரிடம், மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளும்: ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும். ஆனால், குடலை எறிந்துவிடும் என்றார்.
5.       அவ்வாறே இளைஞர் மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டார். மீனின் ஒரு பகுதியைச் சுட்டுக் சாப்பிட்டார்: மீதியை உப்பிட்டு வைத்துக் கொண்டார். மீனின் ஒரு பகுதியைச் சுட்டுச் சாப்பிட்டார்: மீதியை உப்பிட்டு வைத்துக் கொண்டார்.
6.       மேதியாவை நெருங்கும்வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
7.       பின் இளைஞர் வானபதரிடம், சகோதரர் அசரியா, மீனின் இதயம், ஈரல், பித்தப்பை ஆகியவை எதற்கு மருந்தாகப் பயன்படும்? என்று வினவினார்.
8.       அதற்குத் பதர் அவரிடம், பேயாவது தீய ஆவியாவது பிடித்திருக்கும் ஒருவர்முன் மீனின் இதயத்தையும் ஈரலையும் புகையச் செய்தால், அவர்கள் முற்றிலும் நலம் பெறுவார்கள். இனி ஒருபோதும் அது அவர்களை அண்டாது.
9.       வெண்புள்ளிகள் உள்ள மனிதரின் கண்களில் பித்தப்பையைத் தடவி ஊதினால் அவர்கள் பார்வை பெறுவார்கள் என்றார்.
10.       அவர்கள் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
11.       இரபேல் இளைஞரை நோக்கி, சகோதரர் தோபியா என்று அழைத்தார். அதற்கு அவர், என்ன? என்றார். அவரிடம் அவர், இன்று இரவு நாம் இரகுவேலின் வீட்டில் தங்கவேண்டும். அவர் உமக்கு உறவினர் அவருக்குச் சாரா என்னும் ஒரு மகள் இருக்கிறாள்.
12.       அவளைத் தவிர அவருக்கு வேறு குழந்தைகள் இல்லை. வேறு எவரையும்விட நீரே அவளுக்கு நெருங்கிய உறவினரானதால், அவளை மணந்துகொள்ளும் உரிமை உமக்கே உண்டு: அவளுடைய தந்தையின் உடைமைகளை அடையவும் உமக்கு உரிமை உண்டு. அவள் அறிவுள்ளவள், துணிவு மிக்கவள், மிக அழகானவள். அவளுடைய தந்தையும் நல்லவர் என்றார்.
13.       இரபேல் தொடர்ந்து, சகோதரரே, அவளை மணந்து கொள்ளும் உரிமை உமக்கு உள்ளதால் நான் சொல்வதைக் கேளும். இன்று இரவே அவளைப்பற்றி இரகுவேலிடம் பேசி, அவளை உமக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்போம். இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். நீர் அவளை மணப்பதற்கு இரகுவேல் தடை எதுவும் சொல்ல முடியாது: மற்றொருவருக்கு அவளை நிச்சயம் செய்யவும் முடியாது என்பது எனக்குத் தெரியும். அவ்வாறு செய்தால் மோசேயின் மலில் விதித்துள்ளபடி அவர் சாவுக்கு உள்ளாவார்: ஏனெனில் தம் மகளை மணப்பதற்கு மற்ற எல்லா ஆண்களையும்விட உமக்கே அதிக உரிமை உண்டு என அவருக்கும் தொ
14.       அப்பொழுது தோபியா மறுமொழியாக இரபேலிடம், சகோதரர் அசரியா, அவள் ஆண்கள் எழுவருக்கு மண முடித்துக் கொடுக்கப்பட்டவள் என்றும், மணவறையில் அவளை அணுகிய அன்றிரவே அவர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பேய் அவர்களைக் கொன்றது என்றும் கேள்வியுற்றியிருக்கிறேன்.
15 இப்போது எனக்கு அச்சமாக உள்ளது: ஏனெனில் அவளுக்குப் பேய் ஒரு தீங்கும் இழைப்பதில்லை: ஆனால் அவளை நெருங்குகின்றவரையே கொன்றுவிடுகிறது. என் தந்தைக்கு நான் ஒரே மகன். நான் இறக்க நேர்ந்தால், என்னைப்பற்றிய வருத்தம் என்தாய் தந்தையின் வாழ்வை முடித்து, அவர்களைக் கல்லறைக்குக் கொண்டு போய்விடும் என அஞ்சுகிறேன். அவர்களை அடக்கம் செய்ய வேறு மகன் இல்லை என்றார்.
16.       அதற்கு வானபதர் அவரிடம், தம் தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை மணந்துகொள்ள உம் தந்தை உமக்குக் கட்டளையிட்டதை மறந்துதவிட்டீரா? ஆதலால் நான் சொல்வதைக் கேளும். சகோதரரே, அந்தப் பேயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சாராவை மணந்து கொள்ளும். இன்று இரவே அவள் உம்முடைய மனைவி ஆவாள் என்பது உறுதி.
17.       நீர் மணவறையில் நுழைந்ததும் மீனின் ஈரலிலிருந்தும் இதயத்திலிருந்தும் ஒரு சிறு பகுதியை எடுத்துத் பபத்திற்கான நெருப்பிலிடும். அதிலிருந்து கிளம்பும் புகையைப் பேய் மோந்தவுடன் அது ஓடிவிடும்: இனி ஒருபோதும் அவளை அண்டாது.
18.       அவளுடன் நீர் கூடுமுன் முதலில் நீங்கள் இருவரும் எழுந்து நின்று மன்றாடுங்கள்: விண்ணக ஆண்டவர் உங்கள்மீது இரங்கிக் காத்தருள வேண்டுங்கள். அஞ்சாதீர்! உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப் பெற்றவள். நீர் அவளைப் பேயினின்று விடுவிக்க, அவள் உம்மோடு வருவாள். அவள் வழியாக உமக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் உமக்குச் சகோதரர்கள்போல் இருப்பார்கள் என நம்புகிறேன். எனவே கவலை வேண்டாம் என்றார்.
19.       சாரா தம் தந்தை வழி உறவினர் என்று சொன்ன இரபேல் கூறியதைக் கேட்ட தோபியா அவளை மிகவும் விரும்பித் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.

அதிகாரம் 7.

1.       அவர்கள் எக்பத்தானாவை அடைந்தபொழுது தோபியா அசரியாவிடம், சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும் என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,
2.       இவ்விளைஞர் என் உறவினர் தோபித்தைப்போல் இல்லையா? என்று தம் மனைவி எதினாவிடம் வியந்து கூறினார்.
3.       எதினா அவர்களை, இளைஞர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அவரிடம், நாங்கள் நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள் என்றார்கள்.
4.       அதற்கு எதினா அவர்களிடம், எங்கள் உறவினர் தோபித்தைத் தெரியுமா? என்று கேட்டார். அவர்கள், அவரை எங்களுக்குத் தெரியும் என்றார்கள். பின்பு, அவர் நலமா? என்று கேட்டார்.
5.       அவர்கள், அவர் உயிரோடு, நலமாக இருக்கிறார் என்றார்கள். என் தந்தைதான் அவர் என்றார் தோபியா.
6.       உடனே இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
7.       தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக! நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன்! தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி! என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார்.
8.       அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார். அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள்.
9.       பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார். அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும் என்றார்.
10.       இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞர்¢டம், நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத்தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை: ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன்.
11.       அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார் என்றார். அதற்குத் தோபியா, நீங்கள் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன். பருக மாட்டேன் என்றார். இரகுவேல், சரி, செய்கிறேன்: மோசேயின் மலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்: அவள் உனக்குரியவள்: இன
12.       இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். மோசேயின் மலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக் கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக என்றார்.
13.       பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார்.
14.       அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.
15.       இரகுவேல் தம் மனைவி எதினாவை அழைத்து அவரிடம், அன்பே, மற்றோர் அறையை ஏற்பாடு வெய்து அவளை அங்கு அழைத்துச் செல் என்றார்.
16.       இரகுவேல் தமக்குக் கூறியபடி அவர் சென்று அறையில் படுக்கையை ஏற்பாடு செய்தார்: தம் மகளை அங்கு அழைத்துச் சென்று, அவளுக்காக அழுதார். பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம், அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர் உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். துணிவுகொள், மகளே! என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

அதிகாரம் 8.

1.       அவர்கள் உண்டு பருகி முடித்தபிப் சாராவின் பெற்றோர் உறங்க விரும்பினர்: எனவே மணமகனைப் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
2.       அப்பொழுது தோபியா இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து, தம் பையிலிருந்து மீனின் ஈரலையும் இதயத்தையும் எடுத்துக்கொண்டார். அவற்றைத் பபத்திற்கான நெருப்பிலிட்டார்.
3.       மீனிலிருந்து கிளம்பிய தீய நாற்றம் பேயைத் தாக்கவே அது பறந்து எகிப்துக்கு ஓடிப்போயிற்று. இரபேல் விரட்டிச் சென்று அதைக் கட்டி விலங்கிட்டார்.
4.       சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், அன்பே, எழுந்திரு. நம் ஆணடவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம் என்றார்.
5.       சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார்: எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக!
6.       நீர் ஆதாமைப் படைத்தீர்: அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்“ என்று உரைத்தீர்.
7.       இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்: நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.
8.       இருவரும் ஆமென், ஆமென் என்று கூறினர்.
9.       அன்று இரவு உறங்கினர்.
10.       இரகுவேல் எழுந்து தம் பணியாளர்களைத் தம்மிடம் அழைக்க, அவர்கள் சென்று ஒரு குழி வெட்டினார்கள். தோபியா அனேகமாக இறந்திருப்பான். அவ்வாறாயின் நாம் இகழ்ச்சிக்கும் நகைப்புக்கும் ஆளாவோம் என்றார்.
11.       அவர்கள் குழிவெட்டி முடித்தபொழுது, இரகுவேல் வீட்டுக்குள் சென்று தம் மனைவியை அழைத்து,
12.       பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பு. அவள் உள்ளே சென்று, தோபியா உயிரோடு இருக்கிறானா என்று பார்த்து வரட்டும். அவன் இறந்திருந்தால் எவரும் அறியா வண்ணம் அவனைப் புதைத்துவிடலாம் என்று கூறினார்.
13.       எனவே அவர்கள் ஒரு பணிப்பெண்ணை அனுப்பினார்கள்: விளக்கேற்றிக் கதவைத் திறந்தார்கள். பணிப்பெண் உள்ளே சென்று அவர்கள் ஒன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கக் கண்டாள்.
14.       அவள் வெளியே வந்து, தோபியா உயிருடன் இருக்கின்றார் என்றும் அவருக்குத் தீங்கு எதுவும் நேரவில்லை என்றும் தெரிவித்தாள்.
15.       அவர்கள் விண்ணகக் கடவுளைப் புகழ்ந்தார்கள். இரகுவேல் பின்வருமாறு மன்றாடினார்: கடவுளே, போற்றி! எவ்வகை மெய்ப் புகழ்ச்சியும் உமக்கு உரித்தாகுக. எக்காலமும் நீர் புகழப்பெறுவீராக.
16.       என்னை மகிழ்வித்த நீர் போற்றி! நான் அஞ்சியதுபோல் எதுவும் நடக்கவில்லை. உம் இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தியுள்ளீர்.
17.       தம் பெற்றோருக்கு ஒரே மகனும் ஒரே மகளுமான இவர்கள் இருவருக்கும் இரக்கம் காட்டிய நீர் போற்றி. ஆண்டவரே, இவ்விருவர்மீதும் இரங்கிக் காத்தருளும். இவர்கள் மகிழ்ச்சியும் இரக்கமும் பெற்று நிறை வாழ்வு காணச் செய்தருளும்.
18.       பின்னர் இரகுவேல் தம் பணியாளர்களிடம், பொழுது விடியுமுன் குழியை மூடிவிடுமாறு கூறினார்.
19.       இரகுவேல் தம் மனைவியிடம் நிறைய அப்பம் சுடச் சொன்னார். அவரே மந்தைக்குச் சென்று இரண்டு காளைகளையும் நான்கு ஆடுகளையும் ஓட்டி வந்து சமைக்கச் சொன்றார். அவர்கள் விருந்து ஏற்பாடு செய்தார்கள்.
20.       இரகுவேல் தோபியாவை அழைத்து அவரிடம், பதினான்கு நாள்கள் நீ இங்கிருந்து நகரக் கூடாது. என்னுடன் உண்டு பருகி இங்கேயே தங்கியிரு: சோர்வுற்றிரக்கும் என் மகளின் மனத்துக்கு மகிழ்வூட்டு.
21.       என் உடைமையிலெலாம் பாதியை இப்பொழுதே எடுத்துக்கொள். உன் தந்தையின் வீட்டிற்கு நலமாகத் திரும்பு. நானும் என் மனைவியும் இறந்ததும் மற்றொரு பாதியும் உன்னைச் சேரும். அஞ்சாதே, தம்பி! நான் உனக்குத் தந்தை: எதினா உனக்குத் தாய். இனிமேல் என்றும் நாங்கள் உன்னுடன் உன் மனைவியுடனும் இருப்போம். துணிவுகொள் மகனே! என்று கூறினார்.

அதிகாரம் 9.

1.       பின்னர் தோபியா இரபேலை அழைத்து அவரிடம்,
2.       சகோதரர் அசரியா, நீர் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு இரண்டு ஒட்டகங்களோடு இராகிக்குப் புறப்பட்டுக் கபேலிடம் செல்லும். அவரிடம் ஆவணத்தைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும். அவரையும் உம்முடன் திருமணத்திற்கு அழைத்து வாரும்.
3.       என் தந்தை நாள்களை எண்ணிக்கொண்டிருப்பார் என்பது உமக்குத் தெரியுமே. நான் ஒரு நாள் தாமதித்தாலும் அவர் மிகவும் துயருக்குள்ளாவார்.
4.       இரகுவேல் என்ன ஆணையிட்டுள்ளார் எனப் பாரும். நான் அவருடைய ஆணையை மீற முடியுமா? என்றார்.
5.       எனவே இரபேல் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஒட்டகங்களோடு மேதியாவில் இருந்த இராகிக்குச் சென்று கபேலுடன் தங்கினார்: அவரிடம் ஆவணத்தைக் கொடுத்தார். தோபித்துடைய மகன் தோபியாவின் திருமணத்தைப்பற்றிக் கூறி, திருமணத்திற்கு அவரைத் தோபியா அழைத்துவரச் சொன்னதாக உரைத்தார். கபேல் எழுந்து முத்திரையிட்ட பணப்பைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தார்.
6.       எல்லாரும் வைகறையில் எழுந்து திருமணத்திற்குச் சென்றனர். அவர்கள் இரகுவேலின் வீட்டை வந்தடைந்தபொழுது உணவருந்திக்கொண்டிருந்த தோபியா எழுந்து கபேலுக்கு வணக்கம் தெரிவித்தார். கபேல் மகிழ்ச்சிக் கண்ணீர் மல்க, ¥நல்லவனே, சிறந்தவனே, நன்மையும் சிறப்பும் நேர்மையும் வள்ளன்மையும் நிறைந்தவரின் மகனே, ஆண்டவர் உனக்கும் உன் மனைவிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் வானகப் பேறுகளை வழங்குவாராக. என் உறவினர் தோபித்தைப்போலத் தோற்றமுள்ள ஒருவரைக் காணச் செய்த கடவுள் போற்றி என்று கூறித் தோபித்தை வாழ்த்தினார்.

அதிகாரம் 10.

1.       இதற்கிடையில், மேதியாவுக்குச் சென்று திரும்ப எத்தனை நாள்களாகும் என்று ஒவ்வொரு நாளும் தோபித்து எண்ணிக் கொண்டிருந்தார். நாள்கள் நகர்ந்தனவேதவிர மகன் திரும்பிவரவில்லை.
2.       ஒருவேளை அங்குத் தாமதம் ஆகிவிட்டதோ? கபேல் இறந்திருப்பாரோ? தோபியாவுக்குப் பணம் கொடுக்க யாரும் இல்லையோ? என்றெல்லாம் எண்ணி,
3.       கவலைகொள்ளத் தொடங்கினார்.
4.       அவருடைய மனைவி அன்னா, என் மகன் மறைந்துவிட்டான். அவனை இனி உயிரோடு காண முடியாதே! என்று மகனை நினைத்து அழுது புலம்பத் தொடங்கினார்.
5.       ஜயோ! என் மகனே, என் கண்களின் ஒளியான உன்னைப் போகவிட்டேனே! என்று கலங்கினார்.
6.       தோபித்து, அன்பே, பேசாமல் இரு: கவலைப்படாதே. நம் மகன் நன்றாய்த்தான் இருக்கிறான். அங்கு அவர்களுக்கு எதிர்பாராமல் ஏதாவது நடந்திருக்கலாம். அவனுடன் சென்ற மனிதர் நம்பத்தக்கவர்: நம் உறவினர்களுள் ஒருவர். அன்பே, மகனுக்காக வருந்தாதே. விரைவில் அவன் திரும்பி விடுவான் என்று தம் மனைவியைத் தேற்றினார்.
7.       அதற்கு அன்னா, என்னிடம் பேசாதீர்கள். என்னை ஏமாற்ற வேண்டாம். என் மகன் இறந்துவிட்டான் என்ற புலம்பினார். நாள்தோறும் அன்னா ஓடிச் சென்று தம் மகன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருப்பார்: யாரையும் நம்பமாட்டார்: கதிரவன் மறைந்ததும் வீடு திரும்புவார்: இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டேயிருப்பார்.
8.       இரகுவேல் தாம் உறுதியிட்டுக் கூறியிருந்தவாறு தம் மகளுக்காக வழங்கிய பதினான்கு நாள் விருந்து நிறைவு பெற்றது. பின தோபியா அவரிடம் சென்று, என்னைப் போகவிடுங்கள். என் தந்தையும் தாயும் என்னை மீண்டும் காணலாம் என்னும் நம்பிக்கையை இதற்குள் இழந்திருப்பார்கள் என அறிவேன். இப்பொழுது என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். மாமா, எந்நிலையில் நான் அவரை விட்டுவந்தேன் என்று உங்களுக்கு நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார்.
9.       ஆனால் இரகுவேல் தோபியாவிடம், தங்கு, மருமகனே: என்னுடன் தங்கியிரு. உன்னைப்பற்றி உன் தந்தை தோபித்திடம் தெரிவிக்க நான் பதர்களை அனுப்புகிறேன் என்றார். அதற்கு அவர், வேண்டவே வேண்டாம். என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன் என்று வலியுறுத்தினார்.
10.       இரகுவேல் எழுந்து தோபியாவின் மனைவி சாராவையும் தம் உடைமையிலெல்லாம் பாதியையும் ஆண் பெண் பணியாளர்களையும் காளைகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், துணி, பணம் , வீட்டுக்குரிய பொருள்கள் ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து,
11.       பிரியா விடை கூறினார். தோபியாவைக் கட்டித் தழுவியபடி, மருமகனே, நலமுடன் போய்வா: உன் பயணம் இனிதே அமையட்டும். விண்ணக ஆண்டவர் உனக்கும் உன் மனைவி சாராவுக்கும் வளம் அருள்வாராக. நான் இறக்குமுன் உங்கள் குழந்தைகளைக் காண்பேனாக என்றார்.
12.       பின் தம் மகன் சாராவிடம், மகளே, உன் மாமனாரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல். இன்றுமுதல் அவர்கள் உன் பெற்றோருக்கு ஒப்பானவர்கள். மனநிறைவோடு போய்வா. என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார்.
13.       எதினா தோபியாவிடம், என் அன்புக்குரிய மருமகனே, ஆண்டவர் உம்மை நலமுற அழைத்துச்செல்வாராக. நீரும் என் மகள் சாராவும் பெற்றெடுக்கும் குழந்தைகளை நான் இறக்குமுன் காண்பேனாக. ஆண்டவர் திருமுன் என் மகளை உம்மிடம் ஒப்படைக்கின்றேன். உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும். மருமகனே, மனநிறைவோடு போய்வாரும். இன்றுமுதல் நான் உம் அன்னை: சாரா உம் மனைவி. நம் வாழ்வில் எந்நாளும் வளமாக வாழ்வோமாக என்று கூறி, அவர்கள் இருவரையும் முத்தமிட்டு இனிதே வழியனுப்பிவைத்தார்.
14.       தோபியா, என் வாழ்நாளெல்லாம் உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி என்று கூறி, இரகுவேலிடமிருந்தும் அவருடைய மனைவி எதினாவிடமிருந்தும் நலமோடும் மகிழ்ச்சியோடும் விடைபெற்றார். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரும், அனைத்துக்கும் மன்னருமானவரே தம் பயணத்தை வெற்றியாக நடத்திக் கொடுத்தமைக்காக அவரைப் போற்றினார்.

அதிகாரம் 11.

1.       அவர்கள் நினிவேக்கு எதிரே இருந்த காசெரின் நகரை நெருங்கியபொழுது இரபேல்,
2.       உம் தந்தையை எந்நிலைக்கு விட்டுவந்தோம் என்பது உமக்குத் தெரியும்.
3.       எனவே உம் மனைவிக்கு முன்னரே நாம் விரைந்து சென்று, மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்துவோம் என்றார்.
4.       இரபேல் தோபியாவிடம், மீனின் பித்தப்பையைக் கையில் எடுத்துக்கொள்ளும் என்றார். இருவரும் ஒன்றாகச் சென்றனர். நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது.
5.       இதற்கிடையில் அன்னா தம் மகன் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.
6.       மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், உம் மகன் வருகிறான்: அவனுடன் சென்றவரும் வருகிறார் என்றார்.
7.       தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், உன் தந்தை பார்வை பெறுவது உறுதி.
8.       அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார் என்றார்.
9.       அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம் என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
10.       தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார்.
11.       தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, கலங்காதீர்கள், அப்பா என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு,
12.       தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார்.
13.       தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, என் மகனே, என் கண்ணின் ஒளியை, உன்னைப் பார்த்துவிட்டேன் என்றார்.
14.       கடவுள் போற்றி. அவரது மாபெரும் பெயர் போற்றி! அவருடைய பய வானபதர் அனைவரும் போற்றி! அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக! எல்லா வானபதரும் என்றென்றும் போற்றி! கடவுள் என்னைத் தண்டித்தார். இப்போதா என் மகன் தோபியாவை நான் காண்கிறேன் என்று கடவுளைப் போற்றினார்.
15.       தோபியா அக்களிப்புடன் கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்: தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும், அவள் நினிவேயின் வாயில் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.
16.       தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டே தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார். நினிவே மக்கள் அவர் செல்வதையும், யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள். தம் கண்களைத் திறந்ததன் வழியாகக் கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார்.
17.       தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார். மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உன் கடவுள் போற்றி! மருமகளே, உன் தந்தை வாழ்க! என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழத்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக! என்று வரவேற்றார்.
18.       நினிவேயில் இருந்த யூதர்கள் அனைவருக்கும் அது ஓர் இனிய நாள்.
19.       தோபித்தின் நெருங்கிய உறவினர் அகிக்காரும் நாதாபும் அவரது மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அதிகாரம் 12.

1.       திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு: உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு என்றார்.
2.       அதற்கு அவர், அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும்? நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்:
3.       ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்: என் மனைவியை நலம் பெறச் செய்தார்: பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்: உங்களுக்கு நலம் அளித்தார். இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்? என்று கேட்டார்.
4.       தோபித்து அவரிடம், மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி உள்ளது என்றார்.
5.       பின்னர் இரபேலை அழைத்து, நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக என்று கூறினார்.
6.       அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: கடவுளைப் புகழுங்கள்: அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.
7.       மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்: தீமை உங்களை அணுகாது.
8.       அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.
9.       தருமம் சாவினின்ற காப்பாற்றும்: எல்லாப் பருவத்தினின்றும் பய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.
10.       பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.
11.       முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்: எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
12.       நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்: இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.
13.       நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.
14.       அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.
15.       நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானபதர்களுள் ஒருவர் என்றார்.
16.       அதிர்ச்சி மேலிட இருவரும் அச்சத்துடன் குப்புற விழுந்தனர்.
17.       இரபேல், அவர்களிடம், அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதி பெருகட்டும். கடவுளை என்றென்றும் புகழுங்கள்.
18.       என் விருப்பப்படியன்று, கடவுளின் திருவுளப்படியே நான் உங்களோடு இருந்தேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
19.       நான் ஒன்றும் உண்ணவில்லை: நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்துகொள்ளுங்கள்.
20.       இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்: கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள் என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றா+.
21.       அவர்கள் தரையிலிருந்து எழுந்தபோது இரபேலைக் காணமுடியவில்லை.
22.       அவர்கள் கடவுளைப் பாடிப் புகழ்ந்தார்கள்: கடவுளின் பதர் அவர்களுக்குத் தோன்றி ஆற்றிய மாபெரும் செயல்களுக்காகக் கடவுளின் புகழை அறிக்கையிட்டார்கள்.

அதிகாரம் 13.

1.       தோபித்தின் புகழ்ப்பா வருமாறு:
2.       என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்: பேரழிவிலிருந்து மேலே பக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.
3.       இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார்.
4.       அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார். எல்லா உயிர்கள்முன்னும் அவரை ஏத்துங்கள். ஏனெனில் அவர் நம் ஆண்டவர்: நம் கடவுள்: நம் தந்தை: எக்காலத்துக்கும் அவர் கடவுள்.
5.       உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக அவர் உங்களைத் தண்டிப்பார்: நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உங்களை ஒன்றுகூட்டி உங்கள் அனைவர்மீதும் இரக்கத்தைப் பொழிவார்.
6.       நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்: தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்வார்.
7.       உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப்பாருங்கள்: நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்: வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள்.
8.       நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்: அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்: அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்: உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.
9.       நான் என் கடவுளைப் புகழ்ந்தேத்துவேன்: என் உள்ளம் விண்ணக வேந்தரைப் போற்றுகின்றது: அவரது மேன்மையை நினைத்து பேருவகை கொள்கிறது.
10.       அனைவரும் புகழ் பாடுங்கள்: எருசலேமில் அவரைப் போற்றுங்கள். திரு நகரான எருசலேமே, உன் மக்களுடைய செயல்களின் பொருட்டே அவர் உன்னைத் தண்டிப்பார்: நீதிமான்களின் பிள்ளைகள்மீது மீண்டும் இரக்கங்காட்டுவார்.
11.       உமது கூடாரம் உமக்காக மீண்டும் மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.
12.       நாடுகடத்தப்பட்ட உங்கள் அனைவரையும் இன்புறுத்தி, நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும் தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.
13.       உலகின் எல்லைகள்வரை பேரொளி சுடர்க. தொலையிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும் மக்கள் உமது திருப் பெயர் விளங்கும் இடத்திற்கு வருவார்கள்: விண்ணக வேந்தருக்குத் தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லாத் தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும்: தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.
14.       உனக்கு எதிராக வன்சொல் கூறுவோரும் உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்: உன் மதில்களைத் தகர்ப்போரும் உன் காவல்மாடங்களைத் தரைமட்டமாக்குவோரும் உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும் சபிக்கப்படுவர். ஆனால் உனக்கு என்றென்றும் அஞ்சுவோர் அனைவரும் ஆசி பெறுவர்.
15.       வா¡£ர், நீதிமான்களின் மக்களைக்குறித்து மகிழ்வீர். ஏனெனில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவர்: என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர். உன்னிடம் அன்புகொண்டோர் பேறுபெற்றோர்: உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர் பேறுபெற்றோர்.
16.       உன் தண்டனைகள் எல்லாவற்றையும் குறித்து வருந்துவோர் பேறுபெற்றோர்: அவர்கள் அனைவரும் உன்பொருட்டு அகமகிழ்வார்கள்: உனது முழு மகிழ்ச்சியையும் என்றென்றும் காண்பார்கள். என் உயிரே, மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.
17.       எருசலேம் நகர் எக்காலத்துக்கும் அவரது இல்லமாக எழுப்பப்படும். என் வழிமரபினருள் எஞ்சியோர் உனது மாட்சியைக் கண்டு விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின், நான் எத்துணைப் பேறு பெற்றவன்! எருசலேமின் வாயில்கள் நீலமணியாலும் மரகதத்தாலும் உருவாகும்: உன் மதில்கள் விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும். எருசலேமின் காவல்மாடங்கள் பொன்னாலும் கொத்தளங்கள் பசும் பொன்னாலும் அமைக்கப்படும்: எருசலேமின் வீதிகளில் மாணிக்கமும் ஓபீர் நாட்டுக் கற்களும் பதிக்கப்படும்:
18.       எருசலேமின் வாயில்கள் மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்: அதன் இல்லங்கள்தோறும் அல்லேழயா, இஸ்ரயேலின் கடவுள் போற்றி என முழங்கும். கடவுளின் ஆசிபெற்றோர் அவரது திருப்பெயரை என்றென்றும் வாழ்த்துவர்.

அதிகாரம் 14.

1.       தோபித்தின் புகழ்ப்பா நிறைவு பெற்றது.
2.       தோபித்து தம் மற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்: நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பார்வை இழந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டு. அவருக்குப் பார்வை திரும்பியபின் வளமாக வாழ்ந்து, தருமங்கள் புரிந்து வந்தார்: கடவுளைப் போற்றுவதிலும் அவரது பெருமையை அறிக்கையிடுவதிலும் ஓயாது ஈடுபட்டிருந்தார்.
3.       அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபொழுது தம் மகன் தோபியாவை அழைத்துப் பின்வருவாறு அறிவுறுத்தினார்: மகனே, உன் மக்களை அழைத்துக்கொண்டு,
4.       மேதியாவுக்குத் தப்பிச் செல்: ஏனெனில் நினிவேக்கு எதிராக இறைவாக்கினர் நாகூம் வழியாகக் கடவுள் கூறிய வாக்கு நிறைவேறும் என நம்புகிறேன். கடவுள் அனுப்பிய இஸ்ரயேலின் இறைவாக்கும் அசீரியாவுக்கும் நினிவேக்கும் எதிராகக் கூறிய அனைத்தும் தவறாது நிகழும். உரிய வேளையில் அவை அனைத்தும் நடந்தே தீரும். பாபிலோன், அசீரியா ஆகியவற்றைவிட மேதியா நாடு பாதுகாப்பாக இருக்கும்: ஏனெனில் கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறும் என நான் நம்புகிறேன். அவையெல்லாம் தவறாது நடந்தே தீரும். இஸ்ரயேல் நாட்டில் வாழும் நம் உறவினர் அனைவரும் சிதறடிக்கப்பட்டு, அந்த நல்ல நாட்டிலிருந்து கடத்தப்படுவர். சமா¡
5.       கடவுள் மீண்டும் அவர்கள்மீது இரக்கங்காட்டுவார். மீண்டும் அவர்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். மீண்டும் அவர்கள் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்புவார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் நிறைவேறும்வரை அது முதலில் கட்டப்பட்ட இல்லம்போன்று இராது. அதன்பின் இஸ்ரயேலர் அனைவரும் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருவர்: எருசலேமைச் சிறப்புடன் கட்டி எழுப்புவர். இஸ்ரயேலரின் இறைவாக்கினர்கள் கூறியபடி அந்நகரில் கடவுளின் இல்லம் கட்டப்படும்.
6.       உலகம் முழுவதிலும் உள்ள மக்களினத்தார் அனைவரும் மனம் மாறுவர். உண்மையாகவே கடவுளுக்கு அஞ்சுவர்: தங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடக்கத் பண்டிய சிலைகளையெல்லாம் விட்டொழிப்பர்: என்றுமுள கடவுளை நேர்மையுடன் போற்றுவர்.
7.       அக்காலத்தில் எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உண்மையில் கடவுளை நினைப்பர்: ஒன்றுகூடி எருசலேமுக்குத் திரும்பி வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆபிரகாமின் நாட்டில் எக்காலத்துக்கும் பாதுகாப்பாகக் குடியிருப்பர். உண்மையில் கடவுள்மீது அன்புகூர்வோர் மகிழ்வர்: பாவமும் அநீதியும் புரிவோர் உலகம் எங்கிலுமிருந்தும் மறைவர்.
8.       இப்பொழுது, என் மக்களே, உங்களுக்கு நான் இடும் கட்டளை: கடவுளுக்கு உண்மையாகப் பணிபுரிங்கள்: அவர் திருமுன் அவருக்கு உகந்ததைச் செய்யுங்கள்: நேர்மையாய் ஒழுகவும் தருமங்கள் செய்யவும் உங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள். அதனால் அவர்கள் கடவுளை நினைத்து, எக்காலத்திலும் முழு ஆற்றலுடன் உண்மையோடு அவரது பெயரைப் போற்றுவார்கள்.
9.       இப்பொழுது, மகனே, நினிவேயிலிருந்து புறப்படு: இங்குத் தங்காதே. என் அருகில் உன் தாயை அடக்கம்செய்தபின் இந்நாட்டின் எல்லைக்குள் தங்காதே: ஏனெனில் இங்கு அநீதி மலிந்துள்ளது: வஞ்சகம் நிரம்பியுள்ளது. மக்களோ அதைப்பற்றி வெட்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
10.       மகனே, தன்னை வளர்த்து ஆளாக்கிய அகிக்காருக்கு நாதாபு செய்ததை எண்ணிப்பார். நாதாபு அகிக்காரை உயிரோடு மண்ணில் புதைக்கவில்லையா? அதனால் கடவுள் நேரடியாக அவனைத் தண்டித்தார். அகிக்கார் ஒளியைக் கண்டான்: நாதாபோ முடிவில்லா இருளில் மறைந்தான்: ஏனெனில் அவன் அகிக்காரைக் கொல்ல முயன்றான். அகிக்கார் தருமம் செய்ததனால், நாதாபின் சூழ்ச்சியிலிருந்து தப்பினான்: ஆனால் நாதாபு தன் சூழ்ச்சியிலேயே சிக்கி மடிந்தான்.
11.       இப்பொழுது, என் மக்களே, தருமத்தினால் வரும் நன்மையையும், அநீதியினால் வரும் தீமையையும், அதாவது சாவையும் எண்ணிப் பாருங்கள். என் உயிர் பிரியப்போகின்றது. பின் தோபித்தைப் படுக்கையில் கிடத்தினர். அவர் இறந்தபின் சிறப்புடன் அடக்கம் செய்தனர்.
12.       தம் தாய் இறந்ததும், தோபியா அவரைத் தம் தந்தையின் அருகில் அடக்கம்செய்தார். பின் அவரும் அவருடைய மனைவியும் மேதியாவுக்குச் சென்றனர். அவர் தம் மாமனார் இரகுவேலுடன் எக்பத்தானாவில் வாழ்ந்தார்.
13.       தம் மனைவியின் வயது முதிர்ந்த பெற்றோரை மரியாதையுடன் பேணி வந்தார்: அவர்களை மேதியா நாட்டு எக்பத்தானாவில் அடக்கம் செய்தார்: இரகுவேலின் சொத்துக்கும் தம் தந்தை தோபித்தின் சொத்துக்கும் உரிமையாளரானார்.
14.       மக்களின் மதிப்புக்குரியவராய்த் தம் மற்றுப்பதினேழாம் வயதில் இறந்தார்.
15.       இறக்குமுன் நினிவேயின் அழிவைப்பற்றிக் கேள்விப்பட்டு, அதைக் கண்ணாலும் கண்டார்: நினிவே கைப்பற்றப்பட்டதையும், மேதியாவின் மன்னர் அகிக்கார் நினிவே மக்களை மேதியாவுக்கு நாடுகடத்தியதையும் கண்டார்: நினிவே மக்களுக்கும் அசீரியாவின் மக்களுக்கும் கடவுள் செய்த அனைத்தையும் குறித்து அவரைப் புகழ்ந்தார். நினிவேக்கு நிகழ்ந்ததை முன்னிட்டுத் தாம் இறக்குமுன் மகிழ்ந்தார்: கடவுளாகிய ஆண்டவரை என்றென்றும் புகழ்ந்தார்.


விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 41 - யூதித்து


அதிகாரம் 1.

1.       ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான். அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன் மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான்.
2.       அர்ப்பகசாது எக்பத்தானாவைச் சுற்றிலும் மூன்று முழப் பருமனும் ஆறு முழ நீளமுமான செதுக்கிய கற்களைக் கொண்டு, எழுபது முழ உயரமும் ஜம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான்.
3.       அதன் வாயில்கள்மேல் மறு முழ உயரம் கொண்ட காவல் மாடங்களைக் கட்டினான்: அவற்றின் அடித்தளங்களை அறுபது முழ அகலத்தில் அமைத்தான்.
4.       தன்னுடைய வலிமைமிகு படைகள் புறப்பட்டுச் செல்வதற்கும், காலாட்படை அணிவகுத்துச் செல்வதற்கும் வசதியாக, எழுபது முழ உயரமும் நாற்பது முழ அகலமும் கொண்ட வாயில்களைக் கட்டினான்.
5.       நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான்.
6.       மலைவாழ் மக்கள், யூப்பிரத்தீசு, திக்¡£சு, உதஸ்பு ஆகிய ஆறுகள் அருகே வாழ்ந்தோர், சமவெளியில் வாழ்ந்த ஏலாமியரின் அரசன் அரியோக்கு ஆகிய அனைவரும் நெபுகத்னேசருடன் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறு, பல மக்களினங்கள் கெலயூது மக்களின் படைகளோடு சேர்ந்து கொண்டன.
7.       பின்னர் அசீரிய மன்னன் நெபுகத்னேசர் பாரசீகத்தில் வாழ்ந்தோர் அனைவருக்கும், சிலிசியா, தமஸ்கு, லெபனோன், எதிர் லெபனோன் ஆகிய மேற்கு நாடுகளில் வாழ்ந்தோர் யாவருக்கும், கடற்கரைவாழ் மக்கள் எல்லாருக்கும்,
8.       கர்மேல், கிலயாது, வட கலிலேயா, எஸ்திரலோன் பெரும் சமவெளியெங்கும் வாழ்ந்த மக்களினத்தார் எல்லாருக்கும்,
9.       சமாரியாவிலும் அதன் நகர்களிலும் வாழ்ந்தோர் அனைவருக்கும், யோர்தானுக்கு மேற்கே எருசலேம், பாத்தேன், கெழசு, காதேசு, எகிப்தின் எல்லையில் இருந்த ஓடைவரை வாழ்ந்தோருக்கும், தபினா, இராம்சேசு, கோசேன் பகுதிகளின் மக்கள் எல்லாருக்கும்,
10.       தானி, மெம்பிசுக்கு அப்பால் எத்தியோப்பியாவின் எல்லைவரை எகிப்தில் வாழ்ந்த எல்லாருக்கும் பது அனுப்பினான்.
11.       ஆனால், இந்த நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே அசீரிய மன்னன் நெபுகத்னேசரின் சொல்லைப் பொருட்படுத்தவில்லை: அவனோடு சேர்ந்து போரிட முன்வரவில்லை: அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை. ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்: அவனுடைய பதர்களையும் இழிவுபடுத்தி வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள்.
12.       ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும் நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான். சிலிசியா, தமஸ்கு, சிரியா ஆகிய நாடுகள் அனைத்தையும் பழிவாங்கி, மோவாபியர், அம்மோனியர், யூதேயர், எகிப்தியர் ஆகிய அனைவரையும் வாளுக்கு இரையாக்கப்போவதாகத் தன் அரியணைமீதும் அரசுமீதும் ஆணையிட்டான்: இவ்வாறு, மத்திய தரைக்கடல்முதல் பாரசீக வளைகுடா வரையிலும் வாழ்ந்த எல்லாரையும் அழிக்கக் கட்டளையிட்டான்.
13.       நேபுகத்னேசர் ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்: அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்:
14.       அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்கத்தானாவை வந்தடைந்தான்: அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி, கடை வீதிகளில் புகந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான்.
15.       மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில் அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று அவனை முற்றிலும் அழித்தொழித்தான்.
16.       பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவேக்குத் திரும்பி வந்தான். அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும் மற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அதிகாரம் 2.

1.       அசீரிய மன்னன் நெபுகத்னேசர் சூளுரைத்திருந்தவாறு எல்லா நாடுகளையும் பழிவாங்குவான் என்று அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டு, முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று அரண்மனையில் பேசப்பட்டது.
2.       அவனும் தன் பணியாளர்கள், உயர்குடி மக்கள் யாவரையும் அழைத்துத் தனது இரகசியத் திட்டம் பற்றி அவர்களோடு கலந்தாலோசித்தான்: அந்த நாடுகளின் சூழ்ச்சிபற்றித் தன் வாய்ப்பட முழமையாக எடுத்துரைத்தான்.
3.       மன்னன் இட்ட கட்டளையை ஏற்காத அனைவரும் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
4.       ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அசீரிய மன்னன் நெபுகத்னேசர் தன் படைத் தலைவனும் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான ஒலோபெரினை அழைத்து அவனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்:
5.       அனைத்துலகின் தலைவராகிய மாமன்னர் இவ்வாறு கூறுகிறார்: இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்லும்: போரிடத் தயங்காத ஓர் இலட்சத்து இருபதாயிரம் காலாட் படையினரையும் பன்னிரண்டாயிரம் குதிரைப் படையினரையும் உம்மோடு கூட்டிக்கொள்ளும்.
6.       நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் எவருமே பணியாததால், அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லும்.
7.       அவர்கள் நிலத்தின் விளைச்சலையும் தண்ணீர் வசதியையும் எனக்கு அளிப்பதற்கு அவர்களை ஆயத்தமாய் இருக்கச் சொல்லும். ஏனெனில், நான் சினமுற்று அவர்களை எதிர்த்துச் செல்லவிருக்கிறேன். அவர்களது நாடு முழுவதையும் என்படைவீரர்களின் காலடிகள் மூடும். அதனை அவர்கள் சூறையாடும்படி கையளிப்பேன்.
8.       அவர்களுள் காயமடைந்தோர் பள்ளத்தாக்குகளை நிரப்புவர்: ஓடைகளும் ஆறுகளும் அவர்களின் பிணங்களால் நிரம்பி வழியும்.
9.       நிலத்தின் கடை எல்லைக்கே அவர்களை நாடுகடத்துவேன்.
10.       நீர் எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று, அவர்களின் நாடுகளையெல்லாம் என் பெயரால் கைப்பற்றும். அவர்கள் உம்மிடம் சரணடைந்தால், அவர்களை நான் தண்டிக்கும் நாள்வரை காவலில் வைத்திரும்.
11.       பணிய மறுப்பவர்களுக்கோ இரக்கம் காட்டாதீர். நீர் கைப்பற்றும் நாடெங்கும் அவர்களைக் கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்துவிடும்.
12.       என் உயிர்மேல் ஆணை! என் அரசின் ஆற்றல்மேல் ஆணை! நான் சொன்னதையெல்லாம் என் கையாலேயே செய்து முடிப்பேன்.
13.       உம் தலைவரின் ஆணைகளில் எதனையும் மீறாதீர். நான் உமக்குக் கட்டளையிட்டவாறே அவற்றைத் திண்ணமாய்ச் செய்து முடியும்: காலம் தாழ்த்தாமல் செயல்புரியும்.
14.       ஒலோபெரின் தன் தலைவனிடமிருந்து சென்று அசீரியப் படையின் தலைவர்கள், தளபதிகள், அலுவலர்கள் ஆகிய அனைவரையும் தன்னிடம் அழைத்தான்.
15.       தலைவன் தனக்கு ஆணையிட்டபடி ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப்படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்.
16.       பெரும் படை ஒன்று போர் தொடுக்கச் செல்லும் முறைப்படி, அவர்களை அணிவகுக்கச் செய்தான்:
17.       மேலும் தங்கள் பொருள்களைச் சுமந்து செல்லப் பெருந்திரளான ஒட்டகங்களையும் கழுதைகளையும் கோவேறுகழுதைகளையும், உணவுக்குத் தேவைப்பட்ட எண்ணற்ற செம்மறியாடுகளையும் மாடுகளையும் வெள்ளாடுகளையும்,
18.       அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களையும், அரண்மனையிலிருந்து மிகுதியான பொன்னையும் வெள்ளியையும் திரட்டிக்கொண்டான்.
19.       இவ்வாறு தேர்ப்படையினர், குதிரைப் படையினர், தேர்ந்தெடுத்த காலாட் படையினர் ஆகியோர் அடங்கிய தன் முழுப் படையுடன், நெபுகத்னேசர் மன்னனுக்கு முன்னதாகச் சென்று, மேற்குப் பகுதி முழுவதையும் நிரப்புமாறு ஒலோபெரின் புறப்பட்டான்.
20.       அப்பொழுது பல இனங்களைச் சேர்ந்த, எண்ணிலடங்காத பெருங் கூட்டம் ஒன்று வெட்டுக்கிளிகளின் திரள்போலும் நிலத்தின் புழுதிபோலும் அவர்களோடு புறப்பட்டுச் சென்றது.
21.       அவர்கள் நினிவேயிலிருந்து புறப்பட்டுப் பெக்திலேது சமவெளியை நோக்கி மூன்று நாள் பயணம் சென்றார்கள்: அதைத் தாண்டி மேல் சிலிசியாவுக்கு வடக்கே மலை அருகில் பாசறை அமைத்தார்கள்.
22.       ஒலோபெரின் தன் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அடங்கிய முழுப்படையையும் அங்கிருந்து நடத்திக்கொண்டு, மலைநாட்டிற்குள் முன்னேறிச் சென்றான்:
23.       வழியில் பூது, ழது என்னும் நகர்களைப் பாழ்படுத்தியபின், கெலயோன் நாட்டிற்குத் தெற்கே பாலை நிலத்தின் ஓரத்தில் வாழ்ந்துவந்த இராசியர், இஸ்மவேலர் ஆகிய அனைவரையும் கொள்ளையடித்தான்:
24.       யூப்பிரத்தீசு கரை வழியாகச் சென்று, மெசப்பொத்தாமியாவைக் கடந்து அப்ரோன் ஓடைமுதல் கடல்வரை இருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கினான்.
25.       மேலும் சிலிசியா நாட்டை அவன் கைப்பற்றித் தன்னை எதிர்த்த யாவரையும் கொன்றான்: பிறகு அரேபியாவிற்கு எதிரே இருந்த எப்பெத்தின் தென் எல்லையை அடைந்தான்:
26.       மிதியானியர் யாவரையும் சுற்றி வளைத்து, அவர்களின் கூடாரங்களைத் தீக்கிரையாக்கி, ஆட்டுக் கொட்டில்களைக் கொள்ளையடித்தான்.
27.       கோதுமை அறுவடைக் காலத்தில் அவன் தமஸ்குச் சமவெளிக்கு இறங்கிச் சென்றான்: அவர்களுடைய வயல்களுக்குத் தீவைத்தான்: ஆடு மாடுகளை அழித்தான்: நகர்களைச் சூறையாடினான்: வயல்வெளிகளைப் பாழாக்கினான்: இளைஞர்கள் அனைவரையும் வாளுக்கிரையாக்கினான்.
28.       சீதோன், தீர், சூர், ஒக்கினா, யாம்னியா ஆகிய கடலோர நகர்களில் வாழ்ந்தோர் யாவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினர்: அசோத்து, அஸ்கலோனில் வாழ்ந்தோரும் அவனுக்குப் பெரிதும் அஞ்சினர்.

அதிகாரம் 3.

1.       ஆகையால் அந்த நாடுகளின் மக்கள் அமைதி வேண்டி ஒலோபெரினிடம் பதர்களை அனுப்பிப் பின்வருமாறு கூறினார்கள்.
2.       இதோ, நெபுகத்னேசர் மாமன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் உமக்கு அடிபணிகிறோம். எங்களை உமது விருப்பப்படியே நடத்தும்.
3.       மேலும் எங்களுடைய வீடுகள், நாடுகள், கோதுமை வயல்கள், ஆடுமாடுகள், எங்களுடைய குடியிருப்புகளிலுள்ள ஆட்டுக்கொட்டில்கள் அனைத்தும் உமக்கே சொந்தம். ஊமது விருப்பப்படியே அவற்றைப் பயன்படுத்தும்.
4.       எங்கள் நகர்களும் உம்முடையவை: அவற்றின் குடிகள் உமக்கே அடிமைகள். எனவே நீர் வந்து, உம் விருப்பப்படியே நடத்தும்.
5.       ஆத்பதர்கள் ஒலோபெரினிடம் வந்து, மேற்கண்ட செய்தியை அறிவித்தார்கள்.
6.       இதை அறிந்ததும் அவன் தன் படையுடன் கடற்கரைப் பகுதிக்கு இறங்கிச் சென்று, அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் காவற்படைகளை அமர்த்தினான்: அவற்றினின்று தேர்ந்தெடுத்த வீரர்களைத் தன் துணைப்படையாக வைத்துக்கொண்டான்.
7.       அந்நகர்களின் மக்களும் அவற்றின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்தோர் அனைவரும் அவனுக்கு மாலை அணிவித்து, முரசறைந்து, நடனமாடி வரவேற்பு அளித்தனர்.
8.       ஆயினும், அவர்களுடைய திருவிடங்களையெல்லாம் அவன் தகர்த்தெறிந்தான்: பய தோப்புகளை வெட்டி அழித்தான்: ஏனெனில், எல்லா இனத்தாரும் நெபுகத்னேசரை மட்டுமே வழிபடவேண்டும்: எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே வழிபடவேண்டும்: எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே தெய்வமாகப் போற்றவேண்டும் என்னும் நோக்கத்தோடு அந்நாடுகளின் தெய்வங்கள் அனைத்தையும் அழித்தொழிக்குமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.
9.       பின்பு ஒலோபெரின் யூதேயாவின் மலைத்தொடருக்கு எதிரிலும் தோத்தானுக்கு அருகிலும் அமைந்திருந்த எஸ்திரலோனை நோக்கிச் சென்றான்.
10.       கேபாய், சித்தோப்பொலி நகர்களுக்கு இடையே பாசறை அமைத்து, தன் படைக்குத் தேவையானவற்றையெல்லாம் திரட்ட ஒரு மாதம் முழுவதும் அங்குத் தங்கியிருந்தான்.

அதிகாரம் 4.

1.       அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின் வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும், அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.
2.       எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்: எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள்.
3.       ஏனெனில், சற்று முன்னரே அவர்கள் தங்கள் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள்: யூதேயா நாட்டு மக்கள் யாவரும் அரண்மையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள்: தீட்டுப்பட்டிருந்த பய கலன்களும் பலிபீடமும் கோவிலும் மீண்டும் பய்மைப்படுத்தப்பட்டிருந்தன.
4.       அவர்கள் சமாரியா நாடு முழுவதற்கும், கோனா, பெத்கோரோன், பெல் மாயிம், எரிகோ, கோபா, ஜசொரா, சாலேம் பள்ளத்தாக்கு ஆகிய நகர்களுக்கும் செய்தி அனுப்பினார்கள்.
5.       உடனே அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி, அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்: அவர் அறுவடையாகியிருந்ததால் போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.
6.       அக்காலத்தில் எருசலேமில் இருந்த தலைமைக்குரு யோவாக்கிம் என்பவர் எஸ்திரலோனுக்கு எதிரிலும் தோத்தான் சமவெளிக்கு அருகிலும் அமைந்திருந்த பெத்பலியா, பெத்தமஸ்தாயிம் ஆகிய நகரங்களின் மக்களுக்கு மடல் எழுதி அனுப்பினார்:
7.       யூதேயாவுக்குள் நுழைவதற்குரிய மலைப்பாதைகளைக் கைப்பற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஓரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு அவை குறுகியனவாய் இருந்ததால், தாக்குவதற்காக மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு எளிதாய் இருந்தது.
8.       தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆணையிட்டபடி இஸ்ரயேலர் செய்து முடித்தனர்.
9.       இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்: நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.
10.       அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள், கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள், கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர்.
11.       எருசலேமில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தலையில் சாம்பலைத் பவிக் கொண்டனர்: சாக்கை விரித்துக் கோவிலின் முகப்பில் ஆண்டவர் திருமுன் குப்புற விழுந்தனர்.
12.       பிறகு அவர்கள் பலிபீடத்தையும் சாக்கினால் மூடினார்கள்: இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, தங்கள் குழந்தைகள் அடிமைவாழ்வுக்குக் கையளிக்கப்படாதவாறும், மனைவியர் கவர்ந்து செல்லப்படாதவாறும், உரிமைச் சொத்தாகிய நகர்கள் அழிவுறாதவாறும், வேற்றினத்தார் ஏளனம் செய்யும் அளவுக்குத் திருவிடம் தீட்டுப்பட்டு இழிவுறாதவாறும் காத்திடும்படி ஒரே குரலில் மனமுருகி மன்றாடினார்கள்.
13.       ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்: அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்: ஏனெனில், யூதேயா முழுவதிலும் எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.
14.       தலைமைக்குரு யோவாக்கிமும் ஆண்டவர் திருமுன் பணிபுரிந்த குருக்கள் அனைவரும் திருவழிபாட்டுப் பணியாளர்களும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டு அன்றாட எரிபலிகளையும் மக்களின் நேர்ச்சைகளையும் தன்னார்வக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்:
15.       தங்கள் தலைப்பாகைமேல் சாம்பலைத் பவிக் கொண்டு, இஸ்ரயேல் இனம் அனைத்தின்மீதும் ஆண்டவர் இன்முகம் காட்டுமாறு, முழுவலிமையோடும் அவரை நோக்கிக் கூக்குரலிட் டார்கள்.

அதிகாரம் 5.

1.       இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்: மலைப்பாதைகளை மூடிவிட்டார்கள்: உயர்ந்த மலையுச்சிகளைக் காவலரண் செய்து வலிமைப்படுத்தியுள்ளார்கள்: சமவெளிகளில் வழித்தடைகளை அமைத்துள்ளார்கள் என்று அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது.
2.       அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான்: மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தலைவர்கள், கடலோராப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான்.
3.       கானான் நாட்டு மக்களே, எனக்கு மறுமொழி கூறுங்கள்: மலைநாட்டில் வாழும் இந்த மக்கள் யார்? இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை? இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன? இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும்? இவர்களின் மன்னர் யார்? இவர்களுடைய படைத் தலைவன் யார்?
4.       மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும் இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்? என்று அவர்களை வினவினான்.
5.       அம்மோனியா யாவருக்கும் தலைவரான அக்கியோர் ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்: என் தலைவரே, உம் பணியாளனின் வாயினின்று வரும் சொல்லைக் கேளும். மலைநாட்டில் உமக்கு அருகே வாழ்பவர்களான இந்த மக்களைப்பற்றிய உண்மையை உமக்கு எடுத்துரைப்பேன். உம் பணியாளனின் வாயினின்று பொய் எதுவும் வராது.
6.       இந்த மக்கள் கல்தேயரின் வழிமரபினர்.
7.       கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதையரின் தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால், ஒரு காலத்தில் மெசப்பொத்தாமியாவில் குடியேறினார்கள்.
8.       அதாவது, தங்கள் மூதாதையரின் வழியை விட்டு விட்டு, தாங்கள் அறியவந்த கடவுளான விண்ணக இறைவனைத் தொழுதார்கள். இதனால், கல்தேயர் தங்கள் தெய்வங்களின் முன்னிலையினின்று இவர்களை விரட்டியடித்தபொழுது இவர்கள் மெசப் பொத்தாமியாவுக்குத் தப்பியோடி அங்கு நீண்டநாள் தங்கியிருந்தார்கள்.
9.       பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டுக் கானான் நாட்டுக்குச் செல்லுமாறு, அவர்களுடைய கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே அவர்கள் அங்குக் குடியேறி, பொன், வெள்ளி, பெருந்திரளான கால்நடைகள் ஆகியவற்றால் வளமையுற்றார்கள்.
10.       கானான் நாடெங்கும் பஞ்சம் நிலவியபொழுது அவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்: அங்கு உணவு வளம் நீடித்தவரை தங்கியிருந்தார்கள். அப்பொழுது அவர்களது இனம் எண்ண முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகியது.
11.       ஆகையால், எகிப்து மன்னன் அவர்கள்மீது பகைமை கொண்டு, செங்கல் செய்யும் கடின வேலையை அவர்கள் மீது வஞ்சகமாய்ச் சுமத்தினான்: அவர்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக்கினான்.
12.       எனவே, அவர்கள் தங்கள் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். அவரும் எகிப்து நாடு முழுவதையும் தீராக் கொள்ளைநோய்களால் தாக்கினார். ஆகையால், எகிப்தியர் அவர்களைத் தங்களிடமிருந்து விரட்டியடித்தனர்.
13.       அப்பொழுது கடவுள் அவர்கள் கண்முன் செங்கடலை வறண்டுபோகச் செய்தார்.
14.       அவர் சீனாய், காதேசு-பர்னேயா வழியாக அவர்களை நடத்திச் செல்ல, அவர்கள் பாலைநிலத்தில் வாழ்ந்த யாவரையும் விரட்டியடித்தார்கள்:
15.       பின்னர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்: தங்களின் வலிமையால் கெஸ்போனியர் யாவரையும் அழித்தொழித்தார்கள்: யோர்தான் ஆற்றைக் கடந்து, மலைநாடு முழுவதையும் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்.
16.       கானானியர், பெரிசியர், எபூசியர், செக்கேமியர் ஆகியோரையும் அங்கிருந்து துரத்திவிட்டு, அங்கே நீண்டநாள் வாழ்ந்து வந்தார்கள்.
17.       அவர்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில் வளமுடன் வாழ்ந்தார்கள்: ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார்.
18.       ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த வழியைவிட்டு விலகிச் சென்றபோது அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்: அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களுடைய கடவுளின் கோவில் தரைமட்டமானது. அவர்களின் நகர்களைப் பகைவர்கள் கைப்பற்றினார்கள்.
19.       ஆனால், இப்பொழுது அவர்கள் தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்: தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்: தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்: பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள்.
20 .       எனவே, தலைவர் பெருமானே, இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால், இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால், நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம்.
21.       ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்: இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்.
22.       அக்கியோர் பேசி முடித்தவுடன் கூடாரத்தைச் சூழ்ந்து நின்று மக்கள் எல்லாரும் முறுமுறுத்தார்கள். ஒலோபெரினின் அலுவலர்களும் கடலோரத்திலும் மோவாபிலும் வாழ்ந்தோர் யாவரும், அக்கியோரைக் கொன்று போடுங்கள்.
23.       இஸ்ரயேலருக்கு நாம் அஞ்சத் தேவையில்லை: ஏனெனில், அம்மக்கள் கடுமையாய்ப் போரிடும் வலிமையோ ஆற்றலோ அற்றவர்கள்.
24.       ஆகவே, ஒலோபெரின், எம் தலைவரே, நாம் மேலே முன்னேறிச் செல்வோம். உமது பெரும் படைக்கு அவர்கள் இரையாவார்கள் என்று கூறினர்.

அதிகாரம் 6.

1.       ஆட்சிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டம் எழுப்பிய கூச்சல் ஓய்ந்தபின் அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின் அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும் அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்:
2.       இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்: ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார்? எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார்? நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ? அவர் தம் படையை அனுப்பி இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்.
3.       ஆனால், மன்னரின் பணியாளர்களாகிய அவர்களைக் நாங்கள் அவர்கள் எல்லாரையும் ஓர் ஆளை வீழ்த்துவதைப்போல் எளிதாகக் கொன்றழிப்போம். எங்கள் குதிரைப்படையை அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது.
4.       இப்படைகளைக் கொண்டு அவர்களைத் தீக்கிரையாக்குவோம். அவர்களின் மலைகளெங்கும் அவர்களது குருதி வழிந்தோடும்: அவர்களின் சமவெளிகள் அவர்களுடைய சடலங்களால் நிரம்பும். அவர்களால் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள், என்கிறார் உலகிற்கெல்லாம் தலைவரான நெபுகத்னேசர் மன்னர். அவர் உரைத்துவிட்டார். அவர் உரைத்த சொல் எதுவும் பொய்க்காது.
5.       இன்று இச்சொற்களைப் பதற்றிய அக்கியோரே, நீ அம்னோனியரின் கைக்கூலி, நயவஞ்சகன்! இன்றுமுதல், எகிப்தினின்று வெளிவந்த இந்த இனத்தை நான் பழிவாங்கும்வரை நீ என் முகத்தில் விழிக்காதே.
6.       நான் திரும்பிவரும்பொழுது, என் படையின் வாளும் என் பணியாளர்களின் வேலும் உன் விலாவைக் குத்தி ஊடுருவும். இஸ்ரயேலரோடு நீயும் வெட்டி வீழ்த்தப்படுவாய்.
7.       இப்போது என் பணியாளர்கள் உன்னை மலைநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்: மலைப்பாதை அருகே உள்ள நகர் ஒன்றில் உன்னை விட்டுவிடுவார்கள்.
8.       இஸ்ரயேலரோடு அழிக்கப்படும்வரை நீ சாகமாட்டாய்.
9.       அவர்கள் பிடிபடமாட்டார்கள் என நீ மனமார நம்பினால், பிறகு ஏன் உன் முகம் வாட்டமுறவேண்டும்? நான் கூறிவிட்டேன். என் சொற்களில் எதுவும் பொய்க்காது.
10.       அக்கியோரைப் பிடித்துப் பெத்பலியாவுக்குக் கொண்டு போய், இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி ஒலோபெரின் தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.
11.       எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப் பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்: அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய், பெத்பலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.
12.       அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்: கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள்.
13.       எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு, அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.
14.       அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து, அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்பலியாவுக்கு அழைத்துச் சென்று தங்கள் நகரப் பெரியோர்முன்அவரை நிறுத்தினர்.
15.       அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா, கொதொகியேலின் மகன் காபிரி, மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர்.
16.       அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள். உடனே இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரும் கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார்.
17.       அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது, அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது, இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
18.       இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள்.
19.       விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் பகைவர்களின் இறுமாப்பைப் பாரும்: எங்களுடைய இனத்தாரின் தாழ்நிலையைக் கண்டு மனமிரங்கும். இன்று தங்களையே உமக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட மக்களைக் கண்ணோக்கும் என்று மன்றாடினார்கள்.
20.       பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி, அவரைப் பெரிதும் பாராட்டினார்கள்.
21.       ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று மூப்பர்களோடு விருந்தளித்தார். அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.

அதிகாரம் 7.

1.       மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும், தன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த எல்லா வீரர்களுக்கும் கட்டளையிட்டு, பெத்பலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று, இஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான்.
2.       அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்: அவர்களின் எண்ணிக்கை வருமாறு: காலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்: குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம்: மற்றும் தேவையான பொருள்களைக் கால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர்.
3.       அவர்கள் பெத்பலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில் நீருற்றையொட்டிப் பாசறை அமைத்தார்கள்: அகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும், நீள அளவில் பெத்பலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த கியமோன்வரையும் பரவியிருந்தார்கள்.
4.       இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு மிகவும் நடுங்கினர். இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள். உயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ அவர்களின் பளுவைத் தாங்கா என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
5.       எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய், தங்கள் காவல்மாடங்களில் தீமூட்டி அன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.
6.       இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும் பெத்பலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி அணிவகுத்துச் செல்லுமாறு செய்தான்:
7.       இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்: நீரூற்றுகளைத் தேடிப்பார்த்துக் கைப்பற்றி, படைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்: பிறகு தன் படையிடம் திரும்பினான்.
8.       ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும், மோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும், கடலோரப் பகுதிகளின் படைத்தலைவர்களும் அவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:
9.       எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க நாங்கள் சொல்வதைக் கேளும்.
10.       இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல, தாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்: ஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று.
11.       ஆகவே, தலைவரே, வழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால், உம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார்.
12.       உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்: உம்முடைய படைவீரர்கள் எல்லாரும் தங்களது இடத்திலேயே இருக்கட்டும். ஆனால், உம் பணியாளர்கள் மலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும்.
13.       ஏனெனில், பெத்பலியாவில் வாழ்பவர்கள் யாவரும் இதிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும். அவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள். இதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும் அருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று, அங்குப் பாசறை அமைத்து, ஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம்.
14.       அவர்களும் அவர்களின் மனைவியரும் மக்களும் பசியால் நலிவுறுவார்கள்: வாளுக்கு இரையாகுமுன்பே தாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள்.
15.       அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல் கிளர்ச்சி செய்ததற்குத் தண்டனையாக அவர்களுக்கு இவ்வாறு தீங்கிழைப்பீர்.
16.       ஆவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும் அவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது. ஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான்.
17.       எனவே, அம்மோனியப் படைவீரர்கள் அசீரியப் படைவீரர்கள் ஜயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று, பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, இஸ்ரயேலருக்குத் தண்ணீர் கிடைக்காதவாறு அவர்களின் நீரூற்றுகளைக் கைப்பற்றினார்கள்.
18.       ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று மலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்: தங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார்கள். இது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த கூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது. அசீரியரின் எஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து நாடு முழுவதையும் நிரப்பினார்கள். அவர்களுடைய கூடாரங்களும் பொருள்களும் பெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.
19.       உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்: ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை.
20.       காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழவரும் முப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள, பெத்பலியாவில் வாழ்ந்தவர்கள் அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின.
21.       நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன. ஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை: அவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது.
22.       அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்: பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்: ஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.
23.       இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும் ஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று உரத்த குரல் எழுப்பினார்கள்: மூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:
24.       நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும். அசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால், நமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள்.
25.       இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. நாம் தாகத்தாலும் பேரழிவாலும் அவர்கள்முன் தலைகுனியும்படி கடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
26.       உடனே அவர்களை அழையுங்கள்: நகர் முழுவதையும் சூறையாடும்படி ஒலோபெரினின் வீரர்களிடமும் அவனுடைய படைகளிடமும் கையளியுங்கள்.
27.       ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது. அதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்: ஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும். மேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும், நம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம்.
28.       விண்ணையும் மண்ணையும், நம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும் உங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்: அவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும், நம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர். நாங்கள் சொன்னவாறு கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக.
29.       அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து ஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது. அவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் மன்றாடினார்கள்.
30.       ஊசியா அவர்களை நோக்கி, சகோதரர்களே, துணிவு கொள்ளுங்கள்: மேலும் ஜந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்: அவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார்.
31.       ஜந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சொன்னவாறே செய்கிறேன் என்று கூறினார்.
32.       பிறகு மக்கள் கலைந்து தாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார். அவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்: பெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்: நகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.

அதிகாரம் 8.

1.       அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார். யூதித்து மெராரியின் மகள்: மெராரி ஓசின் மகன்: ஓசு யோசேப்பின் மகன்: யோசேப்பு ஓசியேலின் மகன்: ஓசியேல் எல்க்கியாவின மகன்: எல்க்கியா அனனியாவின் மகன்: அனனியா கிதியோனின் மகன்: கிதியோன் ரெபாயிம் மகன்: ரெபாயிம் அகித்பபின் மகன்: அகித்பபு எலியாவின் மகன்: எலியா இல்க்கியாவின் மகன்: இல்க்கியா எலியாபின் மகன்: எலியாபு நத்தனியேலின் மகன்: நத்தனியேல் சலாமியேலின் மகன்: சலாமியேல் சரசதாயின் மகன்: சரசதாய் இஸ்ரயேலின் மகன்.
2.       யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார்.
3.       அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்: பின் தம் நகரான பெத்பலியாவில் உயிர் துறந்தார்: தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
4.       யூதித்து கைம்பெண் ஆனார்: மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார்.
5.       தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்: இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்: கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்:
6 .       தம் கைம்மைக் காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார்.
7.       அவர் பார்வைக்கு அழகானவர்: தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச்சென்றிருந்தார். இவையெல்லாம் யூதித்தின் உடைமையாயின.
8.       யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.
9.       தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று, ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும், ஜந்து நாள்களுக்குப்பின் நகரை அசீரியரிடம் கையளிக்கப் போவதாக ஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும் யூதித்து கேள்வியுற்றார்.
10.       உடனே தம் நகரின் மூப்பர்களை ஊசியா, காபிரி, கார்மி ஆகியோரை அழைத்து வருமாறு, தன் உடைமைகளையெல்லாம் கண்காணித்துவந்த தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தார்.
11.       மூப்பர்கள் வந்தபோது யூதித்து பெத்பலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை. ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள்.
12.       இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்?
13.       இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்: ஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை.
14.       மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது: மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரி¡ன் சினத்தைத் பண்டி விடாதீர்கள்.
15.       இந்த ஜந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய அவருக்கு விருப்ப மில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ அவருக்கு ஆற்றல் உண்டு.
16.       நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்: ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோலக் கடவுளை அச்சுறுத்த முடியாது: மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல் ஆண்டவரையும் மாற்ற முடியாது.
17.       எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய், நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம். ஆவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.
18.       முற்காலத்தில் நடந்ததுபோல, நம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில், நம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ கையால் உருவாக்கப்பட்ட சிலைகளைத் தெய்வங்களாக வணங்கியதில்லை.
19.       அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி, சூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள்.
20.       நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை. அதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ வெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம்.
21.       நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்: நம் திருவிடம் கொள்ளையடிக்கப்படும். அதன் பய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும்.
22.       நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை, நமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம், நாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும் வேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார். நம்மை அடிமைப்படுத்தியோர் முன்னிலையில் ஏளனப் பேச்சுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாவோம்.
23.       நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது: நம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.
24.       உடன்பிறப்புகளே, இவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம். ஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது. அவ்வாறே திருவிடமும் கோவிலும் பலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன.
25.       எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார்.
26.       அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில் மேய்ந்துகொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.
27.       ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல நம்மைப் புடமிடவில்லை: நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.
28.       பின் ஊசியா யூதித்திட்டம் மறுமொழியாக, நீ சொன்னதெல்லாம் உண்மையே. உன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை.
29.       உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை: உன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர். நீ நல்ல உள்ளம் கொண்டவள்.
30.       ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே, நாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும் அதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.
31.       நீ இறைப்பற்றுள்ள பெண். ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால் ஆண்டவர் மழை பொழியச் செய்து, நம் நீர்த்தொட்டிகளை நிரப்புவார். நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம் என்றார்.
32.       அதற்கு யூதித்து அவர்களிடம், நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும்.
33.       நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளிவே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்.
34.       நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள். நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன் என்றார்.
35.       அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம், நலமே சென்றுவா: கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க உன்னை வழி நடத்தட்டும் என்றார்கள்.
36.       பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத் தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.

அதிகாரம் 9.

1.       யூதித்து குப்புற விழுந்தார்: தலையில் சாம்பலைத் பவிக்கொண்டார்: தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தார். எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய மாலைத் பப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்:
2.       என் மூதாதையான சிமியோனின் கடவுளாகிய ஆண்டவரே, அயல்நாட்டாரைப் பழிவாங்குமாறு அவரது கையில் ஒரு வாளைக் கொடுத்தீர். அவர்கள் ஒரு கன்னிப் பெண்ணைக் கறைப்படுத்துவதற்காக அவளது இடைக் கச்சையைத் தளர்த்தினார்கள்: அவளை இழிவுபடுத்துவதற்காக அவளது ஆடையைக் கிழித்தார்கள்: அவளைப் பழிக்குள்ளாக்குவதற்காக அவளது கருப்பையைத் தீட்டுப்படுத்தினார்கள். “இவ்வாறு செய்யலாகாது“ என்று நீர் உரைத்திருந்தும் அதற்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள்.
3.       எனவே, அவர்களின் ஆளுநர்கள் வஞ்சனையால் கறைபட்ட அவர்களது படுக்கை, குருதி தோய்ந்திருக்கச் செய்தீர்: அடிமைகளை அவர்களுடைய தலைவர்களோடும், தலைவர்களை அவர்களுடைய அரியணைகளோடும் அடித்து நொறுக்கினீர்.
4.       மேலும், அவர்களுடைய மனைவியர் கவர்ந்து செல்லப்படவும், புதல்வியர் சிறைப்படுத்தப்படவும், கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் உம் அன்பான மக்களால் பகிர்ந்துகொள்ளப்படவும் நீர் ஒப்புவித்தீர். உம் மக்கள் உம்மீது பற்றார்வம் கொண்டு, தங்கள் குருதியால் ஏற்பட்ட தீட்டை அருவருத்து, நீர் உதவி அளிக்கும்படி உம்மை மன்றாடினார்கள். கடவுளே, என் கடவுளே, கைம்பெண்ணாகிய எனக்கும் செவிசாய்த்தருளும்.
5.       அப்போது நடந்தவை, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவை ஆகிய அனைத்தையும் செய்தவர் நீரே: இப்போது நிகழ்வனவற்றையும் இனி நிகழ விருப்பனவற்றையும் நீரே திட்டமிட்டுள்ளீர். நீர் திட்டமிட்டவையெல்லாம் நிறைவேறின.
6.       நீர் திட்டமிட்டவை அனைத்தும் உம்முன் நின்று, “இதோ உள்ளோம்“ என்றன: உம் வழிகளெல்லாம் ஆயத்தமாய் உள்ளன: உம் தீர்ப்பு முன்னறிவு மிக்கது.
7.       இப்போது அசீரியர்கள் பெருந்திரளான படையோடு வந்திருக்கிறார்கள்: தங்கள் குதிரைகளின் பொருட்டும் குதிரை வீரர்களின் பொருட்டும் இறுதிமாப்புக் கொண்டுள்ளார்கள்: தங்கள் காலாட்களின் வலிமையால் செருக்குக் கொண்டுள்ளார்கள்: கேடயம், ஈட்டி, வில், கவண் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர் என்பதை அவர்கள் அறியார்கள்.
8.       ஆண்டவர் என்பது உமது பெயர். உமது ஆற்றலால் அவர்களது வலிமையை அடக்கிவிடும்: உமது சினத்தால் அவர்களின் திறத்தை அழித்துவிடும்: ஏனெனில, உமது பலிபீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
9.       அவர்களுடைய இறுமாப்பை உற்றுநோக்கும்: அவர்கள் தலைமேல் உமது சினத்தைக் கொட்டும்: எனது திட்டத்தைச் செயல்படுத்தக் கைம்பெண்ணாகிய எனக்கு வலிமை தாரும்.
10.       என் உதடுகளின் வஞ்சனையால் அடிமையை அவனுடைய ஆளுநனோடும், ஆளுநனை அவனுடைய பணியாளனோடும் தாக்கி வீழ்த்தும்: அவர்களது செருக்கை ஒரு பெண்ணின் கைவன்மையால் நொறுக்கிவிடும்.
11.       உமது வரிமை ஆள் எண்ணக்கையைப் பொறுத்ததன்று: உமது ஆற்றல் வலிமைவாய்ந்தோரைப் பொருத்ததன்று. நீர் தாழ்ந்தேரின் கடவுள்: ஒடுக்கப்பட்டோரின் துணைவர்: நலிவுற்றோரின் ஆதரவாளர்: கைவிடப்பட்டோரின் காவலர்: நம்பிக்கையற்றோரின் மீட்பர்.
12.       என் மூதாதையின் கடவுளே, என் வேண்டுதலைக் கனிவோடு கேளும்: இஸ்ரயேலின் உரிமைச்சொத்தாகிய இறைவா, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, நீரூற்றுகளைப் படைத்தவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்.
13.       ஊமது உடன்படிக்கைக்கும் உமது பய இல்லத்துக்கும் சீயோன் மலைக்கும் உம் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட இல்லங்களுக்கும் எதிராகக் கொடியவற்றைத் திட்டமிட்டுள்ளோரை என் வஞ்சகச் சொற்கள் காயப்படுத்திக் கொல்லச் செய்யும்.
14.       நீரே கடவுள் என்றும், எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும், இஸ்ரயேல் இனத்தைப் பாதுகாப்பவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் உம் மக்களினம் முழுவதும், அதன் எல்லாக் குலங்களும் அறியச் செய்யும்.

அதிகாரம் 10.

1.       இஸ்ரயேலின் கடவுளை நோக்கி யூதித்து கூக்குரலிடுவதை நிறுத்தி, தம் மன்றாட்டை முடித்துக்கொண்டார்.
2.       தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார்: தம் பணிப்பெண்ணை அழைத்தார்: தாம் ஓய்வுநாள்களிலும் திருநாள்களிலும் தங்கிவந்த வீட்டுக்கு இறங்கிச் சென்றார்.
3.       தாம் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றினார்: கைம் பெண்ணுக்குரிய ஆடைகளை களைந்தார்: நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்: தம் கனவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்.
4.       தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் காலில் மிதியடி அணிந்தார்: சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து தம்மைப் பெரிதும் அழகுபடுத்திக் கொண்டார்.
5.       தும் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோல்பையையும் எண்ணெய் அடங்கிய குப்பியையும் கொடுத்தார்: வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள் ஆகியவற்றை ஒரு பையிலிட்டு நிறைந்தார். அவை அனைத்தையும் சேர்த்துக் கட்டி, பக்கிக் கொண்டு வருமாறு அவளிடம் கொடுத்தார்.
6.       அவர்கள் இருவரும் பெத்பலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்: அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள்.
7.       இவர்கள் யூதித்தின் முகத் தோற்றம் வேறுபட்டியிருப்பதையும், வழக்கத்திற்கு மாறாக ஆடை அணிந்திருப்பதையும் கண்டார்கள். அவரது அழகைக் கண்டு மிகவும் வியந்து,
8.       எங்கள் மூதாதையரின் கடவுள் உன்மீது அருள் பொழிவாராக: இஸ்ரயேல் மக்களின் மாட்சியும் எருசலேமின் மேன்மையும் விளங்க, உன் திட்டங்களை நிறைவேற்றுவாராக என்று வாழ்த்தினார்கள்.
9.       யூதித்து கடவுளைத் தொழுதபின் அவர்களிடம், நகர வாயிலை எனக்குத் திறந்துவிடுமாறு கட்டளையிடுங்கள். நு£ங்கள் என்னிடம் கூறியவற்றை நிறைவேற்ற நான் வெளியே செல்வேன் என்று வேண்டினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
10.       இளைஞர்களும் அவ்வாறே செய்தார்கள். யூதித்து வெளியே செல்ல, அவருடைய பணிப்பெண்ணும் அவரோடு சென்றாள். மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை நகர மாந்தர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவரை அவர்களால் காண முடியவில்லை,
11.       பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர் கொண்டது.
12.       அவர்கள் யூதித்தைப் பிடித்து, நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வருகிறாய்? எங்குச் செல்கிறாய்? என வினவினார்கள். அதற்கு அவர், நான் ஓர் எபிரேயப் பெண், ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்: எனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள்.
13.       மனோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை உடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழவதையும் கைப்பற்றக்கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன். அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள். அவர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது என்றார்.
14.       வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க, அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொழுது அவர்கள்,
15.       எங்கள் தலைவரைக் காண விரைவாகக் கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய். நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல். எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர்.
16.       நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே. நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி. அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார் என்றார்கள்.
17.       யூதித்தையும் அவருடைய பணிப்பெண்ணையும் ஒலோபெரினிடம் அழைத்துச்செல்லத் தங்களுள் மறு வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். இவர்கள் பெண்கள் இருவரையும் ஒலோபெரினுடைய கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
18.       யூதித்தின் வருகைப்பற்றிய செய்தி பாளையம் முழவதும் பரவியதால், எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது. வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார். அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள்.
19.       அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள். அவரை முன்னிட்டு இஸ்ரயேல் மக்களைப்பற்றியும் வியந்தார்கள். இத்தகைய பெண்களைத் தங்களிடையே கொண்டிருக்கும் இந்த மக்களை யாரே இழிவாகக் கருதுவர்! இவர்களுள் ஓர் ஆணைக்கூட உயிரோடு விட்டுவைப்பது நல்லதன்று. அவர்களை விட்டுவைத்தால், உலகம் முழுவதையும் வஞ்சித்துவிட இவர்களால் முடியும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
20.       பிறகு ஒலோபெரினின் காவலர்களும் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.
21.       அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த் தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான்.
22.       அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான்.
23.       அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் பக்கிவிட்டார்கள்.

அதிகாரம் 11.

1.       ஒலோபெரின் யூதித்தை நோக்கி, பெண்ணே, துணிவுகொள்: அஞ்சாதே, அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப் பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.
2.       இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன். ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.
3.       இப்பொழுது சொல்: நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய்? பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய்? துணிவு கொள். இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.
4.       எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள். மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல, யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள் என்றான்.
5.       இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்: உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும். ஊம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும். இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.
6.       உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால், கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்: என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.
7.       அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை! எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை! மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை: காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும் அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும் பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.
8.       உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் என்றும், அறிவாற்றலில் வல்லவர் என்றும், போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழவதும் அறியும்.
9.       அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்: ஏனெனில், பெத்பலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால், அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.
10.       ஆதலால், தலைவர் பெருமானே, அவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும். எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய அவர்களை யாரும் தண்டிக்க முடியாது: வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை.
11.       இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும். ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால் அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.
12.       தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும் அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்: மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால் விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள்.
13.       எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன் பணியாற்றும் குருக்களுக்கென்று பய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில் பத்திலொரு பங்கு ஆகியவற்றைப் பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று திருச்சட்டம் விலக்கியிருந்தும், அவர்கள் அவற்றைத் தங்களுக்கே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.
14.       எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால், ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்று வர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.
15.       இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது, அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.
16.       ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து, அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன். உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும், ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்!
17.       உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள். இரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன். ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன். இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.
18.       நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன். பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம். உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது.
19.       நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை உம்மை வழி நடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது. முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.
20.       யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும் அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றா¡கள். அவரது ஞானத்தைக் கண்டு வியந்து,
21.       உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட ஒரு பெண் இல்லவே இல்லை என்றார்கள்.
22.       பின் ஒலோபெரின் அவரிடம், எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும், என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும் கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே!
23.       நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய். நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார். நேபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய். உலகமெங்கும் உனது புகழ் விளங்கும் என்றான்.

அதிகாரம் 12.

1.       ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு யூதித்தை அழைத்துவரக் கட்டளையிட்டான். தான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும், தன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான்.
2.       அதற்கு யூதித்து, இவற்றை நான் உண்ணமாட்டேன். அது குற்றமாகும். நான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும் என்றார்.
3.       ஒலோபெரின் அவரிடம், நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால் அவை போன்ற உணவை உனக்குக் கொடுக்க எவ்வாறு எங்களால் முடியும்? உன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே! என்றான்.
4.       என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை! உம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள் தீர்ந்து போவதற்கு முன்னரே ஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார் என்றார் யூதித்து.
5.       பிறகு ஒலோபெரினின் பணியாளாகள் யூதித்தைக் கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவர் நள்ளிரவுவரை உறங்கினார்: வைகறை வேளையில் துயிலெழந்தார்.
6.       உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி என் தலைவர் கட்டளையிடட்டும் என்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார்.
7.       அவரைத் தடைசெய்யாமிலிருக்க ஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். யூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்: இரவுதோறும் பெத்பலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று, பாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார்.
8.       குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத் தமக்குக் காட்டுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார்.
9.       அவர் பய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து, மாலையில் உணவு அருந்தும்வரை கூடாரத்துக்குள்ளேயே தங்கியிருப்பார்.
10.       நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்: படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை.
11.       தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த பகோவா என்ற உயிர் அலுவலரிடம், நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும்.
12.       இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல் விட்டுவிடுவது நமக்கு இழிவாகும். அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால் அவள் நம்மை எள்ளி நகையாடுவாள் என்றான்.
13.       ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று, என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும், எங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும், நெபுகத்னேசரின் அரண்மனையில் பணியாற்றும் அசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும் இத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள் தயங்காமல் வரவேண்டும் என்றான்.
14.       யூதித்து அவனிடம், என் தலைவர் சொன்னதைச் செய்ய மறுக்க நான் யார்? அவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன். நான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும் என்றார்.
15.       ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து, பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார். அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்: யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில் விரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை ஒலேபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள்.
16.       பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார். ஒலேபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது: அவனது மனம் கிளர்ந்தெழுந்தது: அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்புத் தேடியிருந்ததால் இப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான்.
17.       எனவே ஒலோபெரின் அவரிடம், மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு என்றான்.
18.       அதற்கு யூதித்து, என் தலைவரே! நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்: ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும் என்றார்.
19.       தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார்.
20.       ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.

அதிகாரம் 13.

1.       பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள் விரைவாக வெளியேறினார்கள். பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து விருந்தினால் களைப்புற்றிருந்ததால் அவர்களும் படுக்கச் சென்றார்கள்.
2.       யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார். மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.
3.       யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும், நாள்தோறும் செய்துவந்தது போலத் தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்: வேண்டுதல் செய்யத் தாம் புறப்பட விருப்பதாக அவளிடம் சொன்னார்: இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார்.
4.       அனைவரும் அங்கிருந்து அகன்றார்: சிறியோர்முதல் பெரியோர்வரை யாருமே படுக்கையறையில் விடப்படவில்லை. ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு, ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே, எருசலேமின் மேன்மைக்காக இவ்வேளையில் நான் செய்யவிருப்பதைக் கண்ணோக்கும்.
5.       உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும், எங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி நான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
6.       பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த பணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்:
7.       அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும் என்று வேண்டினார்:
8.       பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்:
9.       அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்: மேற்கவிகையைத் பண்களிலிருந்து இறக்கினார்: சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று, ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.
10.       பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத் தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள். பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்: பாளையத்தின் வழியாய்ச் சென்று, பள்ளத்தாக்கைச் சுற்றி, மலைமீது ஏறிப் பெத்பலியாவுக்குப் போய், அதன் வாயிலை அடைந்தார்கள்.
11.       வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி யூதித்து தொலையிலிருந்தே, திறங்கள், வாயிலைத் திறங்கள். கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்: அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும் நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார் என்று கத்தினார்.
12.       நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது, வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள்.
13.       சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள். யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பொண்களை வரவேற்றார்கள்: தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள்.
14.       யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில், கடவுளை வாழ்த்துங்கள்: போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள். இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார். நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார் என்று அறிவித்தார்.
15.       பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து அவர்களிடம் காட்டி, இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை! இதோ, மேற்கவிகை! இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான். ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார்.
16.       ஆண்டவர்மேல் ஆணை! நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே. ஏன் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை என்றார்.
17.       மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்: தலை குனிந்து கடவுளைத் தொழுது, எங்கள் கடவுளே, நீர் போற்றி! நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர் என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.
18.       பின்னர் ஊசியா யூதித்திடம் மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார்.
19.       கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.
20.       இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக: நலன்களால் உன்னை நிரப்புவாராக: ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்: நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து, நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய் என்றார். அதற்கு மக்கள் அனைவரும், அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும் என்று உரைத்தனர்.

அதிகாரம் 14.

1.       பிறகு யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். இத்தலையை எடுத்துக்கொண்டு போய் உங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள்.
2.       பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன், நீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்: உங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு, தங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு, சமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத் தாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்: ஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம்.
3.       உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு தங்கள் பாளையத்துக்குள் நுழைவார்கள்: தங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள். இவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்: ஆனால், அவனைக் காணமாட்டார்கள். ஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு உங்களிடமிருந்து தப்பியோடுவார்கள்.
4.       அப்பொழுது நீங்களும் இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும் அவர்களைத் துரத்திச் சென்று வழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.
5.       இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை என்னிடம் அழைத்து வாருங்கள். இஸ்ரயேல் இனத்தாரைப் புறக்கணித்து, அக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை அவர் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.
6.       ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து அக்கியோரை அழைத்து வந்தார்கள். அவரும் வந்து மக்கள் கூட்டதிலிருந்த ஓர் ஆள் கையில் ஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார்.
7.       மக்கள் அவரைத் பக்கிவிட, அவர் யூதித்தின் காலடியில் விழுந்து வணங்கி அவரிடம், யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக! எல்லா நாடுகளிலும் உமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர்.
8.       இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும் இப்போது எனக்கு எடுத்துச்சொல்லும் என்று வேண்டினார். எனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை ஆற்றியிருந்த செயல்கள் அனைத்தையும் மக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.
9.       யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள். அவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது.
10.       இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும் அக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்: விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.
11.       பொழுது புலர்ந்தவுடன் இஸ்ரயேலர் ஒலோபெரினின் தலையை மதில்மேல் தொங்கவிட்டார்கள்: பிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு, அணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள்.
12.       அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது தங்கள் தலைவர்களுக்கு ஆளனுப்பினார்கள்: இவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும் தங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்:
13.       ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று அவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம், நம் தலைவரை எழுப்பி விடும். அந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி நம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வருகிறா¡கள் என்று கூறினார்கள்.
14.       ஆகவே பகோவா உள்ளே சென்று, கூடாரத்தின் கதவைத் தட்டினான்: ஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தான்.
15.       ஒரு மறுமொழியும் வராததால், அவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான். கட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும் அவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்:
16.       உடனே பெருங் கூச்சலிட்டான்: அழுது, புலம்பி, உரக்க அலறித் தன் ஆடையைக் கிழித்துக் கொண்டான்.
17.       பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்: அங்கு அவரைக் காணாததால் வெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில்,
18.       அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குடும்பத்துக்கே இழிவு இழைத்துவிட்டாள். இதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார். அவரது தலையைக் காணோம்! என்று கத்தினான்.
19.       அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்: பெரிதும் கலக்கமுற்றார்கள். அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும் பாசறையெங்கும் ஒலித்தன.

அதிகாரம் 15.

1.       கூடாரங்களில் இருந்தவர்கள் நிகழ்ந்தது பற்றிக் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள்.
2.       அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள, அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்: சமவெளியிலும் மலையிலும் இருந்த பாதைகளிலெல்லாம் தப்பியோடினார்கள்.
3.       பெத்பலியாவைச் சுற்றி இருந்த மலைப்பகுதியில் பாசறை அமைத்திருந்தவர்களும் வெருண்டோடினார்கள். இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர்.
4.       பெத்துமஸ்தாயிம், பேபாய், கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும், இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி, நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்: மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் பண்டினார்.
5.       இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து, கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள். அவ்வாறே எருசலேம் மக்களும் மலைநாட்டு மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்: ஏனெனில், பகைவர்களது பாசறையில் நிகழ்ந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள். கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப் பக்கவாட்டில் தாக்கித் தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி அவர்களைப் படுகொலை செய்தார்கள்.
6.       பெத்பலியாவில் எஞ்சியிருந்தோர் அசீரியரின் பாளையத்தைத் தாக்கினர்: அதைச் சூறையாடிப் பெருஞ்செல்வங்களைச் சேர்த்துக் கொண்டனர்.
7.       படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது எங்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர். மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்த மக்கள் அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.
8.       இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும், யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும், தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் வந்தார்கள்.
9.       அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள். நீரே எருசலேமின் மேன்மை: நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!
10.       இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்: இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவைகுறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக என்று வாழ்த்தினார்கள். மக்கள் அனைவரும், அவ்வாறு ஆகட்டும் என்றார்கள்.
11.       மக்கள் அனைவரும் முப்பது நாளாக எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள். ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள், படுக்கைகள், கிண்ணங்கள், மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள். அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்: தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார்.
12.       யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினார்: அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர். யூதித்து பூச்செண்டுகளை எடுத்துத் தம்முடன் இருந்த பெண்களுக்கு வழங்கினார்.
13.       அவரும் அவருடன் இருந்தவர்களும் ஒலிவக் கிளைகளால் முடி செய்து அணிந்து கொண்டார்கள். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார். இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும் படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு, புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.
14.       இஸ்ரயேலர் அனைவர் முன்னும் யூதித்து பின்வரும் நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார். மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.

அதிகாரம் 16.

1.       யூதித்து பாடிய பாடல்: என் கடவுளுக்க முரசு கொட்டுங்கள்: ஆண்டவருக்கு மேள தாளங்களோடு பண் இசையுங்கள். அவருக்குத் திருப்பாடலும் புகழ்ப் பாவும் இசையுங்கள்: அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.
2.       ஆண்டவர் போர்களை முறியடிக்கும் கடவுள்: மக்கள் நடுவே தம் கூடாரத்தை அமைத்துள்ளார்: துரத்துவோரிடமிருந்து என்னை அவர் விடுவித்தார்.
3.       அசீரியன் வடக்கு மலைகளிலிருந்து வந்தான்: எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான். அவர்களது பெருந்திரள் ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது. அவர்களுடைய குதிரைப்படை மலைகளெங்கும் பரவியிருந்தது.
4.       உன் எல்லைகளைத் தீக்கிரையாக்குவேன்: உன் இளைஞர்களை வாளுக்கிரையாக்குவேன்: உன் குழந்தைகளைத் தரையில் அடித்துக் கொல் வேன்: உன் சிறுவர்களைக் கவர்ந்து செல்வேன்: உன் கன்னிப் பெண்களைக் கொள்ளைப் பொருளாகக் கொண்டுபோவேன் என்று அசீரியன் அச்சுறுத்தினான்.
5.       எல்லாம் வல்ல ஆண்டவரோ ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.
6.       வலிமைவாய்ந்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை: அரக்கர்கள் அடித்து நொறுக்கவில்லை: உயரமான இராட்சதர்கள் தாக்கவில்லை: ஆனால் மெராரியின் மகள் யூதித்து தம் முக அழகால் அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்.
7.       இஸ்ரயேலில் துயருற்றோரைத் பக்கிவிட அவர் கைம்பெண்ணுக்குரிய தம் ஆடையைக் களைந்தார்:
8.       தம் முகத்தில் நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்: தலையை வாரி முடித்து மணி முடியைச் சூடிக்கொண்டார். அவனை மயக்க மெல்லிய உடையை அணிந்து கொண்டார்.
9.       அவரது காலணி அவனது கண்ணைக் கவர்ந்தது: அவரது அழகு அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது வாள் அவனது கழுத்தைத் துண்டித்தது.
10.       பாரசீகர் அவரது துணிவைக் கண்டு நடுங்கினர்: மேதியர் அவரது மனவுறுதியைப் பார்த்துக் கலங்கினர்.
11.       தாழ்வுற்ற என் மக்கள் முழக்கமிட்டபோது பகைவர்கள் அஞ்சினார்கள்: வலிமை இழந்த என் மக்கள் கதறியபோது அவர்கள் நடுங்கினார்கள்: என் மக்கள் கூச்சலிட்டபோது அவர்கள் புறங்கர்டடி ஓடினார்கள்.
12.       பணிப்பெண்களின் மைந்தர்கள் அவர்களை ஊடுருவக் குத்தினார்கள்: தப்பியோடுவோரின் பிள்ளைகளுக்கு இழைப்பதுபோல் அவர்களைக் காயப்படுத்தினார்கள்: என் ஆண்டவரின் படையால் அவர்கள் அழிந்தார்கள்.
13.       கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்: ஆண்டவரே, நீர் பெரியவர், மாட்சிமிக்கவர்: வியத்தகு வலிமை கொண்டவர்: எவராலும் வெல்ல முடியாதவர்.
14.       உம் படைப்புகள் அனைத்தும் உமக்கே பணிபுரியட்டும்: நீர் ஆணையிட்டீர்: அவை உண்டாயின. உம் ஆவியை அனுப்பினீர்: அவை உருவாயின. உமது குரலை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை.
15.       மலைகளின் அடித்தளங்களும் நீர்த்திரளும் நடுங்குகின்றன: பாறைகள் உம் திருமுன் மெழுகுபோல் உருகுகின்றன. உமக்கு அஞ்சுவோருக்கோ நீர் இரக்கம் காட்டுகின்றீர்.
16.       நறுமணம் வீசும் பலியெல்லாம் உமக்குப் பெரிதல்ல: எரிபலியின் கொழுப்பெல்லாம் உமக்குச் சிறிதே. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே எக்காலமும் பெரியோர்.
17.       என் இனத்தாரை எதிர்த்தெழுகின்ற நாட்டினருக்கு ஜயோ கேடுவரும். எல்லாம் வல்ல ஆணடவர் தீர்ப்பு நாளில் அவர்களைப் பழிவாங்குவார்: அவர்களது சதைக்குள் நெருப்பையும் புழுக்களையும் அனுப்புவார்: அவர்கள் துயருற்று என்றும் அழுவார்கள்.
18.       மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன் கடவுளை வழிபட்டார்கள். தங்களைத் பய்மைப்படுத்தியபின் எரிபலிகளையும் தன்னார்வப் படையல்களையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
19.       மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒரோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்: அவனுடைய படுக்கை அறையிலிருந்து தமக்கென்று எடுத்து வைத்திருந்த மேற்கவிகையையும் கடவுளுக்கு நேர்ச்சையாக்கினார்.
20.       மக்கள் எருசலேமில் திருவிடத்துக்கு முன் மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.
21.       பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர். யூதித்து பெத்பலியாவுக்குச் சென்று தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்: தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார்.
22.       பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்: ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து தம் மூதாதையரோடு துயில் கொண்டபின் தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை.
23.       அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில் மற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்: தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார். பெத்பலியாவில் உயிர் துறந்தார். அவர் கணவர் மனாசேயின் குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
24.       இஸ்ரயேல் இனத்தார் அவருக்காக ஏழுநாள் துயரம் கொண்டாடினர். அவர் தாம் இறப்பதற்கு முன்பே தம் கணவர் மனாசேயின் நெருங்கிய உறவினர், தம் நெருங்கிய உறவினர் ஆகிய அனைவருக்கும் தம் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார்.
25.       யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும் அவர் இறந்து நெடுங்காலத்திற்குப்பின்னரும் எவரும் இஸ்ரயேல் மக்களை மீண்டும் அச்சுறத்தவில்லை.


விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 42 - எஸ்தா(கி)


அதிகாரம் 1.

1.       அர்த்தக்சஸ்தா மாமன்னருடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், நீசான் மாதம் முதல் நாள் மொர்தெக்காய் ஒரு கனவு கண்டார். அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசு என்பவரின் கொள்ளுப் பேரனும் சிமேயின் என்பவரின் பேரனும் யாயீரின் மகனும் ஆவார்: சூசா நகரில் வாழ்ந்து வந்த அவர் ஒரு யூதர், அரசவையில் பணிபுரிந்தவர்களுள் தலைசிறந்தவர். பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் யூதேயா நாட்டு அரசராகிய எக்கோனியாவுடன் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் அவரும் ஒருவர். அவர் கண்ட கனவு இதுதான்: பேரொலியும் இரைச்சலும் இடி முழக்கமும் நிலநடுக்கமும் குழப்பமும் மண்ணுலகின்மீது உண்டாயின. இரண்
2.       அக்காலத்தில் அவர் சூசா நகரில் அரியணையில் வீற்றிருந்தார்.
3.       தம் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் மன்னர் தம் நண்பர்களுக்கும் பிற நாட்டினருக்கும் பாரசீக, மேதிய நாட்டு உயர்குடி மக்களுக்கும் மாநில ஆளுநர்களுக்கும் விருந்து அளித்தார்:
4.       மற்று எண்பது நாள்களாகத் தம் பேரரசின் செல்வங்களையும் தம் விருந்தின் மேன்மையையும் அவர்கள் அறியச் செய்தார்.
5.       விருந்து நாள்கள் முடிவுற்றபோது, சூசா நகரில் வாழ்ந்துவந்த பிற நாட்டினருக்குத் தம் அரண்மனை முற்றத்தில் ஆறு நாள் விருந்து அளித்தார்.
6.       அரண்மனை முற்றத்தை விலையுயர்ந்த மென்துகிலாலும் பருத்தித் துணியாலுமான திரைகள் அணி செய்தன: அத்திரைகள் பளிங்குக் கற்களாலும் பிறகற்களாலும் எழுப்பப்பட்ட பண்கள் மீது பொன், வெள்ளிக்கட்டிகளோடு பிணைக்கப்பட்ட கருஞ்சிவப்புக் கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன: மரகதம், பளிங்கு, முத்துச்சிப்பி ஆகியவை பதிக்கப்பட்ட தளத்தின்மீது பொன், வெள்ளியால் இழைக்கப்பட்ட மஞ்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன: வலைப் பின்னலாலான பல வண்ணப் பூத்தையல் வேலைப்பாடுகளும் அவற்றைச் சுற்றிலும் ரோசாப் பூக்களும் பின்னப்பட்ட விரிப்புகள் அங்கே இருந்தன.
7.       பொன், வெள்ளிக்கிண்ணங்களின் நடுவே ஏறத்தாழ ஆயிரத்து இருமறு டன் வெள்ளி மதிப்புள்ள மாணிக்கக் கல்லாலான ஒரு சிறு கிண்ணமும் வைக்கப்பட்டிருந்தது. மன்னருக்குரிய இனிய திராட்சை மது தாராளமாகப் பரிமாறப்பட்டது.
8.       குடி அளவு மீறிப்போயிற்று: ஏனெனில் தம் விருப்பப்படியும் விருந்தினரின் விருப்பப்படியும் திராட்சை மதுவைப் பரிமாறும்படி பணியாளர்களுக்கு மன்னர் ஆணையிட்டிருந்தார்.
9.       அதே நேரத்தில் அர்த்தக்சஸ்தா மன்னரின் அரண்மனையில் ஆஸ்தின் அரசி பெண்களுக்கு விருந்து அளித்தாள்.
10.       ஏழாம் நாளன்று அர்த்தக்சஸ்தா மன்னர் களிப்புற்றிருந்த பொழுது தம் அலுவலர்களாகிய ஆமான், பாசான், தாரா, போராசா, சதோல்தா, அபத்தாசா, தராபா என்னும் ஏழு அண்ணகர்களிடமும்,
11.       அரசியைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார்: அவளை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டி, அவளது எழிலை மாநில ஆளுநர்களும் பிற நாட்டினரும் காணவேண்டும் என்று விரும்பினார்: ஏனெனில் அவள் மிகுந்த அழகுள்ளவள்.
12.       ஆனால் ஆஸ்தின் அரசி மன்னருக்குக் கீழ்ப்படியவும் அண்ணகர்களுடன் வரவும் மறுத்துவிட்டாள். இதனால் மன்னர் வருத்தமுற்றுச் சினங்கொண்டார்.
13.       மன்னர் தம் நண்பர்களிடம், ஆஸ்தின் இவ்வாறு சொல்லிவிட்டாள். எனவே இதற்குச் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறினார்.
14.       பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களான ஆர்க்கெசாய், சர்தாத்தாய், மலேசயார் ஆகியோர் மன்னருக்கு நெருக்கமாயும் அரசில் முதன்மை நிலையிலும் இருந்தார்கள். அவர்கள் மன்னரை அணுகி,
15.       அண்ணகர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட அரச கட்டளையை நிறைவேற்றத் தவறிய ஆஸ்தின் அரசிக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை அறிவித்தார்கள்.
16.       மன்னரிடமும் ஆளுநர்களிடமும் மூக்காய் என்பவர் பின்வருமாறு கூறினார்: ¥ஆஸ்தின் அரசி மன்னருக்கு எதிராக மட்டுமன்றி, மன்னரின் எல்லா ஆளுநர்களுக்கும் அலுவலர்களுக்கும் எதிராகவும் தவறிழைத்திருக்கிறாள்.
17.       -ஏனெனில் அரசி சொல்லியிருந்ததை அவர் திரும்பச் சொல்லி, அவள் எவ்வாறு மன்னரை அவமதித்தாள் என்பதை அவர்களுக்கு விளக்கினார். -அர்த்தக்சஸ்தா மன்னரை அவள் அவமதித்தது போலவே,
18.       பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களின் மனைவியரான உயர்குடிப் பெண்டிரும், அரசி மன்னருக்குக் கூறியதுபற்றிக் கேள்விப்பட்டு, தங்கள் கணவர்களை அவமதிக்கத் துணிவர்.
19.       எனவே மன்னருக்கு விருப்பமானால், அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும்: அது பாரசீக, மேதிய நாட்டுச் சட்டங்களுள் பொறிக்கப்படட்டும்: ஆஸ்தின் இனி மன்னர்முன் வாராதிருக்கட்டும்: அரசிப் பட்டத்தை அவளிடமிருந்து பறித்து, அவளைவிடச் சிறந்ததொரு பெண்மணிக்கு மன்னர் வழங்கட்டும். இதைத்தவிர வேறு வழியே இல்லை.
20.       மன்னர் இயற்றும் சட்டம் எதுவாயினும், அதைத் தமது பேரரசு முழுவதும் அவர் அறிவிக்கட்டும். இதனால் வறியோர், செல்வர் ஆகிய அனைவருடைய மனைவியரும் தம் தம் கணவரை மதித்து ஒழுகுவார்கள்.
21.       மூக்காயின் கருத்து மன்னருக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்றதாயிருந்தது. அவர் சொன்னவாறே மன்னர் செய்தார்:
22.       கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்படவேண்டும் என்ற ஆணையைத் தம் பேரரசின் எல்லா மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பிவைத்தார்.

அதிகாரம் 2.

1.       அதன்பின் மன்னரின் சீற்றம் தணிந்ததால் அவர் ஆஸ்தினைப் பற்றிக் கவலைப்படவில்லை: அவள் சொன்னதையும் தாம் அவளைத் தண்டித்தையும் நினைத்துப்பார்க்கவில்லை.
2.       ஆகவே மன்னரின் அலுவலர்கள் அவரிடம், கற்பும் அழகும் உள்ள இளம் பெண்களை மன்னர் தமக்காகத் தேடட்டும்:
3.       தம் பேரரசின் எல்லா மாநிலங்களிலும் ஆணையர்களை ஏற்படுத்தட்டும். அவர்கள் இளமையும் அழகும் வாய்ந்த கன்னிப் பெண்களைத் தேர்ந்து, சூசா நகரில் உள்ள அந்தப்புரத்துக்கு அழைத்து வந்து, பெண்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அரச அண்ணகரிடம் அவர்களை ஒப்படைக்கட்டும். அவர் ஒப்பனைப் பொருள்களையும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்கட்டும்.
4.       அவர்களுள் மன்னர் தமக்கு மிகவும் விருப்பமான பெண்ணை ஆஸ்தினுக்குப் பதிலாக அரசி ஆக்கட்டும் என்று கூறினார்கள். இக்கருத்து மன்னருக்கு உகந்ததாயிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார்.
5.       சூசா நகரில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மொர்தெக்காய்: அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசின் கொள்ளுப்பேரனும் சிமேயியின் பேரனும் யாயிரின் மகனும் ஆவார்.
6.       அவர் பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் ஒருவர்.
7.       தம் தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகளை அவர் தம் வளர்ப்பு மகளாகக் கொண்டிருந்தார். எஸ்தர் என்னும் அப்பெண்ணின் பெற்றோர் இறந்தபின் மொர்தெக்காய் அவளைத் தம் மனைவியாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் வளர்த்து வந்தார். அவள் அழகில் சிறந்த பெண்மணி.
8.       அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின் இளம்பெண்கள் பலர் சூசா நகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்: பெண்களுக்குப் பொறுப்பாளராகிய காயுவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களுள் எஸ்தரும் ஒருத்தி.
9.       காயுவுக்கு அவளைப் பிடித்திருந்ததால், அவரது பரிவு அவளுக்குக் கிட்டியது. எனவே அவர் அவளுக்கு வேண்டிய ஒப்பனைப்பொருள்களையும் உணவு வகைகளையும் உடனே கொடுத்தார்: அவளுக்குப் பணிசெய்ய அரண்மனையிலிருந்து ஏழு இளம்பெண்களை ஏற்படுத்தினார்: அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.
10.       எஸ்தர் தம் இனத்தையும் நாட்டையும்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை: ஏனெனில் அவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெக்காய் அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.
11.       எஸ்தருக்கு நிகழ்வதைக் கவனிப்பதற்காக மொர்தெக்காய் அந்தப்புர முற்றத்தின் அருகில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருப்பார்.
12.       பன்னிரண்டு மாத காலத் தயாரிப்புக்குப் பின்னரே இளம்பெண்கள் மன்னரிடம் போகவேண்டியிருந்தது. வெள்ளைப்போளம் பூசிக் கொண்டு ஆறுமாதமும், பெண்டிருக்கான நறுமணப்பொருள்களையும் ஒப்பனைப்பொருள்களையும் பயன்படுத்திக்கொண்டு ஆறு மாதமுமாக இந்தக் காலத்தில் அவர்கள் தங்களுக்கு அழகூட்டிக்கொள்வார்கள்:
13.       அதன்பின் ஒவ்வோர் இளம்பெண்ணும் மன்னரிடம் செல்வாள்: மன்னரால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவாள். அந்த அலுவலர் அவளை அந்தப்புரத்திலிருந்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்.
14.       அப்பெண் மாலையில் அங்குச் சென்று, மறுநாள் காலையில் மற்றோர் அந்தப்புரத்திற்குச் செல்வாள். அங்கு மன்னரின் அண்ணகரான காயு பெண்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார். பெயர் சொல்லி அழைக்கப்பட்டலொழிய மன்னரிடம் அப்பெண் மீண்டும் செல்ல மாட்டாள்.
15.       மொர்தெக்காயுடைய தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகள் எஸ்தர் மன்னரிடம் செல்வதற்குரிய முறை வந்தபோது, பெண்களுக்குப் பொறுப்பாளரான அண்ணகர் கட்டளையிட்டிருந்தவற்றுள் எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. எஸ்தரைப் பார்த்த அனைவரும் அவரது அழகைப் பாராட்டினர்.
16.       அர்த்தக்சஸ்தா மன்னருடைய ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் எஸ்தர் மன்னரிடம் சென்றார்.
17.       மன்னர் அவர்மீது காதல் கொண்டார்: மற்ற இளம்பெண்கள் எல்லாரையும் விட எஸ்தரை மிகவும் விரும்பினார்: ஆகவே அவரையே அரசியாக்கி முடிசூட்டினார்:
18.       தம் நண்பர்கள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும் மன்னர் ஏழு நாள் விருந்து அளித்து எஸ்தரின் திருமணத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார்: தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு வழங்கினார்.
19.       மொர்தெக்காய் அரசவையில் பணிபுரிந்து வந்தார்.
20.       அவர் கட்டளையிட்டபடி எஸ்தர் தமது நாட்டைப்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை: மொர்தெக்காயோடு இருந்தபோது நடந்துகொண்டது போலவே கடவுளுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்தார். தமது வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளவில்லை.
21.       மொர்தெக்காய் அடைந்த முன்னேற்றத்தால் மெய்க்காவலர் தலைவர்களாகிய அரச அலுவலர்கள் இருவர் மனவருத்தம் கொண்டார்கள்: அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தார்கள்.
22.       அதை அறிந்த மொர்தெக்காய் அதைப்பற்றி எஸ்தரிடம் தெரிவிக்கவே, அவர் இந்தச் சூழ்ச்சி பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.
23.       அலுவலர்கள் இருவரையும் மன்னர் விசாரித்து அவர்களைத் பக்கிலிட்டார்: மொர்தெக்காயின் தொண்டு நினைவுகூரப்படும் வகையில் குறிப்பேட்டில் அதை எழுதிவைக்குமாறு ஆணையிட்டார்.

அதிகாரம் 3.

1.       இதன்பின் அர்த்தக்சஸ்தா மன்னர் பூகையனும் அம்மதாத்தாவின் மகனுமான ஆமானைப் பெருமைப்படுத்தி, தம் நண்பர்களிடையே மிகச் சிறந்த இடத்தை அவனுக்கு வழங்கினார்.
2.       மன்னரின் கட்டளைப்படி அரண்மனையில் பணிபுரிந்த அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர்: ஆனால், மொர்தெக்காய் அவனுக்கு வணக்கம் செலுத்தவில்லை.
3.       நீர் ஏன் மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை? என்று அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் மொர்தெக்காயை வினவினார்கள்.
4.       இவ்வாறு அவர்கள் அவரை ஒவ்வொரு நாளும் கேட்டு வந்தார்கள். ஆனால் அவர் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே மன்னரின் கட்டளைக்கு அவர் பணிய மறுப்பதாக ஆமானிடம் அவர்கள் அறிவித்தார்கள். தாம் ஒரு யூதர் என்று அவர் அவர்களுக்குக் தெரிவித்திருந்தார்.
5.       தனக்கு மொர்தெக்காய் வணக்கம் செலுத்தாததை அறிந்த ஆமான் கடுஞ்சீற்றங் கொண்டான்:
6.       அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்கு உட்பட்ட யூதர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிடச் சூழ்ச்சி செய்தான்.
7.       அர்த்தக்சஸ்தாவினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், மொர்தெக்காயின் இனம் முழுவதையும் ஒரே நாளில் அழிப்பதற்கு ஏற்ற நாளையும் மாதத்தையும் அறிந்து கொள்ளச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, ஆமான் ஒரு முடிவுக்கு வந்தான்: இவ்வாறு, சீட்டுக்குலுக்கல் முறையில் அதார் மாதம் பதினான்காம் நாளைத் தெரிவு செய்தான்.
8.       அர்த்தக்சஸ்தா மன்னரிடம் ஆமான், உமது பேரரசெங்கும் உள்ள பல மக்களினத்தாரிடையே ஓரினம் சிதறுண்டு வாழ்கிறது. மற்ற இனங்களின் சட்டங்களினின்று அவர்களின் சட்டங்கள் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை. எனவே மன்னர் அவர்களை இப்படியே விட்டு வைப்பது நல்லதல்ல.
9.       மன்னருக்கு விருப்பமானால் அவர்களை அழிப்பதற்கு அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும். அவ்வாறாயின் நான் அரச கருவூலத்தில் நானு¡று டன் வெள்ளியைச் செலுத்துவேன் என்று கூறினான்.
10.       அப்போது மன்னர் தம் கணையாழியைக் கழற்றி யூதருக்கு எதிரான ஆணையில் முத்திரையிடுவதற்காக அதை ஆமானிடம் கொடுத்தார்.
11.       பணத்தை நீரே வைத்துக் கொள்ளும். அந்த இனத்தாரை உம் விருப்பப்படியே நடத்திக் கொள்ளும் என்று மன்னர் அவனிடம் சொன்னார்.
12.       எனவே முதல் மாதம் பதின் மூன்றாம் நாள் மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள்: இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த மற்று இருபத்தேழு மாநிலங்களின் படைத்தலைவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மன்னரின் பெயரால் ஆமான் விதித்தவாறே அந்தந்த மாநில மொழியில் எழுதினார்கள்.
13.       பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில் ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் பதர் வழியே அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது. பின்வருவது அம்மடலின் நகலாகும்: இந்தியா முதல் இருபத்தேழு மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் எழுதுவது: பல நாடுகளுக்கு மன்னரும் உலகம் முழுமைக்கும் தலைவருமாகிய நான் அதிகாரச் செருக்கின்றி நேர்மையோடும் பரிவோடும் ஆட்சிபுரிந்து, என் குடிமக்களே எப்போதும் குழப்பமின்றி வாழச் செய்யவும், என் பேரரசில் நாகரிகம் நிலவச் செய்ய
14.       இம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியிடப்பட்டது: அந்த நாளுக்கு முன்னேற்பாடாய் இருக்குமாறு பேரரசின் எல்லா இனத்தாருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
15.       இவ்வாணை சூசாவிலும் விரைவில் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்: நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது!

அதிகாரம் 4.

1.       நிகழ்ந்தையெல்லாம் அறிந்த மொர்தெக்காய் தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு, சாக்கு உடை அணிந்து கொண்டு, தம்மேல் சாம்பலைத் பவிக் கொண்டார்: மாசற்ற ஓரினம் அழிக்கப்படுகிறது என்று உரத்த குரலில் கூவிக்கொண்டே நகரின் தெருக்கள் வழியாக ஓடினார்.
2.       அவர் அரண்மனையின் வாயிலுக்கு வந்ததும் அங்கே நின்றுவிட்டார்: ஏனெனில் சாக்கு உடை அணிந்துகொண்டும் சாம்பலைத் பவிக்கொண்டும் அரண்மனைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
3.       அரசாணை வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் யூதர்கள் பெரிதும் துயருற்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்: சாக்கு உடை அணிந்து சாம்பலைத் பவிக் கொண்டார்கள்.
4.       அரசியின் பணிப்பெண்களும் அண்ணகர்களும் உள்ளே சென்று நடந்ததுபற்றி எஸ்தரிடம் கூறினார்கள். அதைக் கேள்வியுற்றதும் அவர் மிகவும் கலக்கமுற்றார்: சாக்கு உடைக்குப் பதிலாக அணிந்து கொள்ள மொர்தெக்காய்க்கு ஆடைகளை அனுப்பிவைத்தார். அவரோ அதற்கு இசையவில்லை.
5.       பின்னர் எஸ்தர் தமக்குப் பணிபுரிந்த அண்ணகரான அக்ரத்தையோனை அழைத்து, மொர்தெக்காயிடமிருந்து உண்மையை அறிந்துவருமாறு அனுப்பினார்.
6.       எனவே அக்ரதையோன் அரண்மனை வாயிலுக்கு எதிரே இருந்த சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த மொர்த்தெக்காயிடம் சென்றார்.
7.       நிகழ்ந்ததை மொர்தெக்காய் அந்த அண்ணகரிடம் தெரிவித்தார்: யூதர்களை அழிக்கும்பொருட்டு அரச கருவூலத்தில் நானு¡று டன் வெள்ளியைச் செலுத்துவதாக ஆமான் மன்னருக்கு அளித்திருந்த வாக்குறுதிபற்றிக் கூறினார்:
8.       யூதர்களை அழித்தொழிப்பது பற்றிச் சூசா நகரில் வெளியிடப்பட்ட ஆணையின் நகல் ஒன்றையும் எஸ்தரிடம் காட்டுமாறு அவரிடம் கொடுத்தார்: மன்னரிடம் எஸ்தர் சென்று அவருடைய ஆதரவை வேண்டி, தம் மக்களுக்காக அவரிடம் மன்றாட வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்குமாறு அந்த அண்ணகரைக் கேட்டுக் கொண்டார். நீ என் ஆதரவில் ஓர் எளிய பெண்ணாக வளர்ந்துவந்த நாள்களை நினைத்துப்பார். மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆமான் நமக்கு எதிராகப் பேசி, நம் இனத்தைக் கொல்லுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டுள்ளான். எனவே ஆண்டவரிடம் மன்றாடு: பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு: நம்மைச் சாவினின்று காப்ப
9.       அக்ரத்தையோன் திரும்பிவந்து எஸ்தரிடம் இவையனைத்தையும் தெரிவித்தார்.
10.       மொர்தெக்காயிடம் போய்க் கூறுமாறு எஸ்தர் அவரிடம்,
11.       ஆண் பெண் யாராயினும், மன்னர் அழைக்காமல் உள்மண்டபத்துக்குள் சென்றால் அவர் உயிர்வாழ முடியாது என்பதைப் பேரரசின் எல்லா நாடுகளும் அறியும். மன்னர் யாரை நோக்கித் தம் பொற் செங்கோலை உயர்த்துகிறாரோ அவர் மட்டுமே உயிர்பிழைப்பார். நானோ மன்னரிடம் வருமாறு அழைக்கப்பட்டு இன்றோடு முப்பது நாள் ஆகிறது என்றார்.
12.       எஸ்தர் சொன்னதை அக்ரத்தையோன் மொர்தெக்காயிடம் எடுத்துரைத்தார்.
13.       எஸ்தரிடம் சென்று தெரிவிக்குமாறு மொர்தெக்காய், எஸ்தர், பேரரசில் உள்ள எல்லா யூதர்களுள்ளும் நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ணவேண்டாம்.
14.       இத்தகைய நேரத்தில் நீ வாளாவிருந்து விட்டாலும், யூதர்களுக்கு வேறு வழியாக உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்: ஆனால் நீயும் உன் தந்தையின் குடும்பத்தாரும் அழிவீர்கள். இத்தகைய ஒரு வாய்ப்புக்காகவே நீ அரசியாக்கப்பட்டாயோ என்னவோ, யார் அறிவார்! என்று அக்ரத்தையோனிடம் கூறினார்.
15.       தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி,
16.       நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும். எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள். இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம். நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம். அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன். இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியே என்றார்.
17.       பின் மொர்தெக்காய் அங்கிருந்து சென்று எஸ்தர் கேட்டுக்கொண்டவாறே செய்தார். மொர்தெக்காய் ஆண்டவரின் செயல்களையெல்லாம் நினைவு கூர்ந்து அவரிடம் பின்வருமாறு மன்றாடினார்: ஆண்டவரே, அனைத்தையம் ஆளும் மன்னராகிய ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன. நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது எவராலும் உம்மை எதிர்த்து நிற்கமுடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின்கீழ் உள்ள ஒவ்வொரு வியத்தகு பொருளையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்திற்கும் ஆண்டவர். ஆண்டவராகிய உம்மை எதிர்ப்பவர் எவரும் இலர். ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம

அதிகாரம் 5.

1.       மூன்றாம் நாள் எஸ்தர் தம் மன்றாட்டை முடித்துக்கொண்டு, வழிபாட்டுக்குரிய உடைகளைக் களைந்துவிட்டு பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்: சிறப்பாக ஒப்பனை செய்து கொண்டபின், அனைத்தையும் காண்பவரும் மீட்பவருமான கடவுளிடம் மன்றாடினார்: பின்பு இரண்டு பணிப்பெண் களை அழைத்து, ஒருத்திமீது மெல்லச் சாய்ந்துகொள்ள, மற்றவள் தம் ஆடையின் பின்பகுதியைத் தாங்கி வரச்செய்தார். அழகின் நிறைவோடு விளங்கிய அவரது முகத்தில் மகிழ்ச்சியும் அன்பும் பொலிந்தன: அவருடைய உள்ளமோ அச்சத்தால் கலங்கியிருந்தது. எல்லா வாயில்களையும் கடந்து எஸ்தர் மன்னர்முன் வந்து நின்றார். பொன்னாலும் விலையுயர்ந்த மணிக
2.       பின்பு அவர் தம் பொற் செங்கோலை உயர்த்தி அதைக் கொண்டு எஸ்தரின் கழுத்தைத் தொட்டபின் அவரைத் தழுவிக்கொண்டு, இப்போது சொல் என்றார். எஸ்தர் மறுமொழியாக, என் தலைவரே, கடவுளின் பதரைப்போலத் தாங்கள் காணப்பட்டீர்கள். தங்களின் மாட்சியைக் கண்டு என் உள்ளம் அஞ்சிக் கலங்கியது. என் தலைவரே, தாங்கள் வியப்புக்குரியவர்! தங்கள் முகம் அருள் நிறைந்து விளங்குகிறது என்றார். எஸ்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் மன்னர் கலக்கமுற்றார். எஸ்தருடைய பணியாளர்கள் அனைவரும் அரசியைத் தேற்றினார்கள்.
3.       அப்பொழுது மன்னர், எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் விருப்பம் யாது? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன் என்றார்.
4.       அதற்கு எஸ்தர், இன்று எனக்கு ஒரு பொன்னாள். மன்னருக்கு விருப்பமானால் இன்று நான் கொடுக்கவிருக்கும் விருந்தில் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என்று கூறினார்.
5.       அப்பொழுது மன்னர், எஸ்தரின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். எனவே ஆமானை உடனே அழைத்து வாருங்கள் என்று சொன்னார். எஸ்தர் அழைத்தவாறே விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர்.
6.       திராட்சை மதுவை அருந்திய வண்ணம் மன்னர் அரசியை நோக்கி, எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்பதெல்லாம் உனக்குக் கொடுப்பேன் என்றார்.
7.       அதற்கு எஸ்தர், என் வேண்டுகோளும் விருப்பமும் இதுதான்:
8.       மன்னரின் பரிவு எனக்குக் கிட்டுமாயின், நான் நாளை கொடுக்கவிருக்கும் விருந்திலும் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இதைப்போன்றே நாளையும் செய்வேன் என்றார்.
9.       ஆமான் மகிழ்ச்சியுடனும் உவகை உள்ளத்¥¥துடனும் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்: ஆனால் அரண்மனையில் யூதராகிய மொர்தெக்காயைக் கண்டபோது அவன் கடுஞ்சீற்றங் கொண்டான்:
10.       தன் வீட்டுக்குச் சென்றதும் அவன் தன் நண்பர்களையும் மனைவி சோசராவையும் அழைத்தேன்:
11.       தன் செல்வத்தை அவர்களுக்குக் காட்டி, மன்னர் தன்னைப் பெருமைப்படுத்தியதையும், மற்றவர்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்திப் பேரரசில் தனக்கு முதலிடம் கொடுத்ததையும் அவர்களிடம் விளக்கினான்.
12.       பின் ஆமான், மன்னரோடு விருந்துக்கு வருமாறு அரசி என்னைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. நாளைய விருந்துக்கும் என்னை அழைத்திருக்கிறார்.
13.       ஆனால் அரண்மனையில் யூதனாகிய மொர்தெக்காயைக் காணும்போது இதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை என்றான்.
14.       ஜம்பது முழம் உயரமுள்ள பக்குமரம் ஒன்றை நாட்டச் செய்யும்: நாளைக் காலையில் மன்னரிடம் சொல்லி அதில் மொர்தெக்காயைத் பக்கிலிடச் செய்யும். பின் மன்னரோடு விருந்துக்குச் சென்று உண்டு மகிழும் என்று அவனுடைய மனைவி சோசராவும் நண்பர்களும் அவனிடம் கூறினார்கள். இது ஆமானுக்கு உகந்ததாய் இருந்தது. உடனே அவன் பக்குமரத்தை ஏற்பாடு செய்தான்.

அதிகாரம் 6.

1.       ஆண்டவர் அன்று இரவு மன்னருக்குத் பக்கம் வராமலிருக்கச் செய்தார். ஆகவே குறிப்பேட்டைக் கொண்டு வந்து தமக்குப் படித்துக் காட்டுமாறு மன்னர் தம் செயலரைப் பணித்தார்.
2.       காவற்பணியில் இருந்த இரண்டு அலுவலர்கள் அர்த்தக் சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தியிருந்தது பற்றி மொர்தெக்காய் மன்னரிடம் தெரிவித்தது தொடர்பான குறிப்புகள் அதில் எழுதியிருக்கக் கண்டார்.
3.       உடனே மன்னர், இதற்காக மொர்தெக்காய்க்கு நாம் என்ன சிறப்பு அல்லது கைம்மாறு செய்தோம்? என்று வினவினார். அவருக்குத் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று மன்னரின் பணியாளர்கள் மறுமொழி கூறினார்கள்.
4.       மொர்தெக்காய் செய்திருந்த நற்பணி பற்றி மன்னர் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஆமான் அரண்மனை முற்றத்திற்குள் வந்தான். முற்றத்தில் இருப்பவர் யார்? என்று மன்னர் வினவினார். தான் ஏற்பாடு செய்திருந்த மரத்தில் மொர்தெக்காயைத் பக்கிலிடுவதுபற்றிப் பேசுவதற்காக ஆமான் அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.
5.       ஆமான்தான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்று பணியாளர்கள் மன்னரிடம் கூறினார்கள். அவரை உள்ளே வரச்சொல் என்று மன்னர் சொன்னார்.
6.       பின் மன்னர், நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்? என்று ஆமானிடம் கேட்டார். “என்னைத் தவிர வேறு யாரை மன்னர் பெருமைப்படுத்தப்போகிறார்“ என்று ஆமான் தனக்குள் நினைத்து நினைத்துக் கொண்டான்.
7.       எனவே அவன் மன்னரிடம், மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கென,
8.       மன்னர் அணியும் விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளையும், பயன்படுத்தும் குதிரையையும் பணியாளர்கள் கொண்டு வரட்டும்.
9.       அந்த ஆடைகளை மன்னரின் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரிடம் கொடுக்கட்டும். அவர் அவற்றை மன்னர் அன்புசெலுத்தும் அம்மனிதருக்கு அணிவிக்கட்டும். குதிரை மீது அவரை அமர்த்தி நகரின் தெருக்களில் வலம் வரச் செய்து, “மன்னர் பெருமைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப் பெறும்“ என அறிவிக்கட்டும் என்றான்.
10.       அதற்கு மன்னர், சரியாகச் சொன்னீர். அரண்மனையில் பணிபுரியும் மொர்தெக்காய்க்கு அவ்வாறே செய்யும். நீர் சொன்னவற்றில் எதையும் விட்டுவிட வேண்டாம் என்று ஆமானிடம் கூறினார்.
11.       எனவே ஆமான் ஆடைகளையும் குதிரையையும் கொண்டுவந்தான்: ஆடைகளை மொர்தெக்காய்க்கு அணிவித்து, குதிரைமீது அவரை அமர்த்தினான். மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும் என்று அறிவித்துக்கொண்டே நகரின் தெருக்களில் அவர் வலம் வரச்செய்தான்.
12.       பின் மொர்தெக்காய் அரண்மனைக்குத் திரும்பினார். ஆமானோ தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு தன் வீட்டுக்கு விரைந்தான்.
13.       தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஆமான் தன் மனைவி சோசராவிடமும் நண்பர்களிடமும் தெரிவித்¥தான். மொர்தெக்காய் யூத இனத்தைச் சார்ந்தவர் என்றால், அவருக்கு முன்பாக நீர் சிறுமைப்படும் நிலை தொடங்கி விட்டது என்றால், நீர் வீழ்ச்சி அடைவது உறுதி. அவரை எதிர்த்து வெல்ல உம்மால் முடியாது: ஏனெனில் என்றுமுள கடவுள் அவரோடு இருக்கிறார் என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள்.
14.       அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அண்ணகர்கள் வந்து எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை விரைவாக அழைத்துச் சென்றார்கள்.

அதிகாரம் 7.

1.       மன்னவரும் ஆமானும் அரசியோடு விருந்துக்குச் சென்றனர்.
2.       இரண்டாம் நாளும் மன்னர் திராட்சை மதுவை அருந்தியவாறே அரசியிடம், எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோளும் விருப்பமும் என்ன? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன் என்றார்.
3.       அதற்கு எஸ்தர் மறுமொழியாக, மன்னரே, உமக்கு விருப்பமானால், என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும். இதுவே என் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.
4.       நானும் என் மக்களும் அழிவுக்கும் சூறையாடடலுக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோம்: நாங்களும் எங்கள் பதல்வர் புதல்வியரும் அடிமைகளாக்கப்பட்டுள்ளோம். இதுவரை நான் பேசாதிருந்தேன். ஆனால் சதிகாரன் மன்னரின் அரண்மனையில் இருக்கத் தகுதியற்றவன் என்று கூறினார்.
5.       இத்தகைய செயலைச் செய்யத் துணிந்தவன் யார்? என்று மன்னர் வினவினார்.
6.       அந்தப் பகைவன் தீயவனாகிய இந்த ஆமான்தான் என்று எஸ்தர் பதிலுரைத்தார். மன்னரின் முன்னிலையிலும் அரசியின் முன்னிலையிலும் ஆமான் திகைத்து நின்றான்.
7.       மன்னர் விருந்திலிருந்து எழுந்து தோட்டத்துக்குச் சென்றார். ஆமானோ தான் மிக இக்கட்டான நிலையில் இருந்ததை உணர்ந்து, அரசியிடம் கெஞ்சி மன்றாடத் தொடங்கினான்.
8.       மன்னர் தோட்டத்திலிருந்து திரும்பியபோது, ஆமான் எஸ்தரின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி அவரிடம் கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்தான். என்ன! எனது வீட்டிலேயே என் மனைவியைக் கெடுக்கத் துணிந்தாயோ? என்றார் மன்னர். இதைக் கேட்டதும் ஆமானின் முகம் வாடியது.
9.       அப்போது அண்ணகர்களுள் ஒருவராகிய புகத்தான். மன்னருக்கு எதிரான சூழ்ச்சியைப் பற்றி எச்சரித்த மொர்தெக்காயைக் கொல்வதற் காக ஆமான் ஒரு பக்குமரத்தையே ஏற்பாடு செய்துள்ளார். ஜம்பது முழம் உயருமுள்ள அந்தத் பக்குமரம் ஆமான் வீட்டில் உள்ளது என்று மன்னரிடம் கூறினார். அவனை அதிலேயே பக்கிலிடுங்கள் என்று மன்னர் கட்டளையிட்டார்.
10.       இவ்வாறு மொர்தெக்காயைக் கொல்ல ஆமான் ஏற்பாடு செய்திருந்த பக்குமரத்தில் அவனே பக்கிலிடப்பட்டான். பின்னர் மன்னரின் சீற்றம் தணிந்தது.

அதிகாரம் 8.

1.       சதிகாரனாகிய ஆமானின் சொத்துகள் அனைத்தையும் அர்த்தக்சஸ்தா மன்னர் அன்றே எஸ்தருக்கு வழங்கினார். மொர்தெக்காய் தமக்கு உறவினர் என்று எஸ்தர் விளக்கியிருந்ததால், மன்னர் அவரைத் தம்மிடம் அழைத்தார்:
2.       ஆமானிடமிருந்து திரும்பப் பெற்றிருந்த கணையாழியை எடுத்து மொர்தெக்காயிடம் வழங்கினார். ஆமானுடைய சொத்துக்களுக்கெல்லாம் எஸ்தர் அவரைப் பொறுப்பாளர் ஆக்கினார்.
3.       மீண்டும் மன்னரிடம் உரையாடிய எஸ்தர் அவரது காலில் விழுந்து, ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்திருந்த சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிக்குமாறு மன்றாடினார்.
4.       மன்னர் தம் பொற் செய்கோலை எஸ்தரிடம் நீட்டவே, எஸ்தர் எழுந்து மன்னருக்கு முன்னால் வந்து நின்றார்.
5.       அப்பொழுது எஸ்தர், நீர் விரும்பி எனக்குப் பரிவு காட்டுவீராயின், உமது பேரரசில் வாழும் யூதர்களை அழிக்குமாறு ஆமான் விடுத்திருக்கும் மடல்களைத் திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பிப்பீராக.
6.       என் மக்கள் படும் துன்பத்தை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என் இனத்தார் அழிந்தபின் நான் எவ்வாறு உயிர்வாழ இயலும்? என்றார்.
7.       அதற்கு மன்னர் எஸ்தர்¢டம், ஆமானுக்கு உரிய சொத்து அனைத்தையும் நான் மனமுவந்து உனக்கு வழங்கியதோடு யூதர்களை அழிக்க முனைந்ததற்காக அவனைத் பக்கிலிட்டுவிட்டேன். இன்னும் உனக்கு என்ன வேண்டும்?
8.       உங்களுக்கு விருப்பமானதை நீங்க்ளே என் பெயரால் எழுதி, எனது கணையாழியால் முத்திரையிட்டுக் கொள்ளுங்கள்: மன்னரின் கட்டளையால் எழுதப்பட்டு அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்ட ஆணையை எவராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.
9.       அதே ஆண்டின் முதல் மாதமாகிய நீசான் மாதம் இருபத்து மூன்றாம் நாள் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த மற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆட்சிப் பொறுப் பாளர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பப்பட்ட அரசாணை யூதர்களுக்கும் வரையப்பட்டது.
10.       மன்னரின் பெயரால் அவ்வாணை எழுதப்பட்டு, அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்டு, பதர் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.
11.       ஒவ்வொரு நகரிலும் இருந்த யூதர்கள் தங்கள் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், தங்களையே தற்காத்துக் கொள்ளவும், எதிரிகள், பகைவர்கள்மீது தங்கள் விருப்பப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த ஆணை அவர்களுக்கு உரிமை வழங்கியது.
12.       அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் ஒரே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் அவ்வாணை நடைமுறைக்கு வரவேண்டும் என்று விதிக்கப்பட்டது. மன்னர் விடுத்த மடலின் நகல் பின்வருமாறு: இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள மற்று இருபத்தேழு மாநில ஆளுநர்களுக்கும் அரசப்பற்றுடைய குடிமக்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது: தங்கள் கொடையாளர்களின் தாராளமான வள்ளன்மையால் பெருமைப்படுத்தப்படும் பலர் செருக்குக் கொள்கிறார்கள்: நம் குடி மக்களுக்குத் தீங்கு விளைவிக்க முனைவது மட்டுமன்று, செல்வத்தால் இறுமாப்புக் கொண்டவர்களாய் அதை வழங்கிய கெ
13.       பேரரசின் எல்லா இடங்களிலும் எல்லாரும் காணும்படி இவ்வாணையின் நகல்கள் வைக்கப்படட்டும். குறிப்பிட்ட நாளில் தங்கள் பகைவருக்கு எதிராகப் போராடுவதற்கு யூதர்கள் அனைவரும் முன்னேற்பாடாய் இருக்கட்டும்.
14.       இதன்படி மன்னரின் ஆணையை நிறைவேற்றக் குதிரை வீரர்கள் விரைந்தார்கள். இவ்வாணை சூசா நகரிலும் வெளியிடப்பட்டது.
15.       அரச ஆடைகளையும் விலையுயர்ந்த மெல்லிய கருஞ்சிவப்புத் துணியாலான தலைப்பாகையையும் பொன்முடியையும் அணிந்தவராய் மொர்தெக்காய் அரண்மனையிலிருந்து வெளியே வந்தார். சூசா நகர மக்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
16.       யூதர்களுக்கு அது ஒளியின் நாள்! மகிழ்வின் நாள்!
17.       ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், எங்கெல்லாம் இது அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் வாழ்ந்த யூதர்கள் மகிழ்ந்து களிகூர்ந்தார்கள்: விருந்து நடத்தி விழாக்கொண்டாடினார்கள். யூதர்களுக்கு அஞ்சிய வேற்றினத்தார் பலர் விருத்தசேதனம் செய்துகொண்டு யூதராயினர்.

அதிகாரம் 9.

1.       பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் மன்னரின் ஆணை செயல்படுத்தப்பட்டது.
2.       அன்று யூதர்களின் பகைவர்கள் அழிந்தார்கள்: யூதர்கள் மீது கொண்ட அச்சத்தால் யாருமே அவர்களை எதிர்த்து நிற்கவில்லை.
3.       மொர்தெக்காய்க்கு அஞ்சியதால் மாநில ஆளுநர்களும் குறுநில மன்னர்களும் அரச எழுத்தர்களும் யூதர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்:
4.       ஏனெனில் பேரரசு முழுவதும் மொர்தெக்காய் மதித்துப் போற்றப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டிருந்தார்.
5.       எனவே யூதர்கள் தங்கள் பகைவர்களை வாளால் கொண்றொழித்தார்கள்: தங்களை வெறுத்தவர்களுக்குத் தாங்கள் விறும்பியபடி செய்தார்கள்
6.       சூசா நகரில் யூதர்கள் ஜந்மறு பேரைக் கொன்றார்கள்.
7.       இவர்களுள் பரிசனஸ்தாயின், தெல்போன், பாஸ்கா,
8.       பரிதாத்தா, பாரயா, சர்பாக்கா,
9.       மார்மசிமா, அருபேயு, அர்சேயு, சபுதேத்தான்
10.       ஆகிய பத்துப் பேரும் அடங்குவர். இவர்கள் எல்லாரும் யூதரின் பகைவனும் பூகையனாகிய அம்மதாத்தாவின் மகனுமாகிய ஆமானின் மைந்தர்கள். மேலும், யூதர்கள் அவர்களின் உடைமைகளைச் சூறையாடினார்கள்.
11.       சூசாவில் கொல்லப்பட்டபவர்களின் எண்ணிக்கை மன்னருக்கு அன்றே அறிவிக்கப்பட்டது.
12.       அப்போது மன்னர் எஸ்தரிடம், சூசா நகரில் மட்டுமே யூதர்கள் ஜந்மறு பேரைக் கொன்றிருக்கிறார்கள். அவ்வாறாயின், நாட்டின் மற்றப் பகுதிகளில் என்ன செய்திருப்பார்கள் என நினைக்கின்றாய்? உனக்காக நான் வேறு என்ன செய்ய வேண்டும்? அதை நான் நிறைவேற்றுவேன் என்று கேட்டார்.
13.       எஸ் தர் மன்னரிடம், இன்று போல நாளையும் செய்ய யூதர்களுக்கு அனுமதி வழங்கும். ஆமானின் மைந்தர்கள் பத்துப் பேருடைய பிணங்களையும் தொங்கவிடச் செய்யும் என்றார்.
14.       மன்னர் அதற்கு இசைந்தார்: ஆமானின் மைந்தர்களுடைய பிணங்களைத் தொங்கவிடுமாறு நகர யூதர்களிடம் கையளித்தார்.
15.       அதார் மாதம் பதினான்காம் நாளன்றும் சூசா நகர யூதர்கள் ஒன்று கூடி முந்மறு பேரைக் கொன்றார்கள்: ஆனால் எதையும் சூறையாடவில்லை.
16.       பேரரசின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஒன்றுதிரண்டு பகைவர்களிடமிருந்து தங்களையே தற்காத்துக் கொண்டு விடுதலை பெற்றார்கள். அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் பதினையாயிரம் பேரைக் கொன்றார்கள்: ஆனால் எதையும் சூறையாடவில்லை.
17.       அதே மாதம் பதினான்காம் நாளை அவர்கள் ஓய்வு நாளாக மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் கொண்டாடினார்கள்.
18.       சூசா நகர யூதர்கள் பதினான்காம் நாளன்றும் ஒன்று கூடினார்கள்: ஆனால் ஓய்வு கொள்ளவில்லை: மாறாக, பதினைந்தாம் நாளை மகிழ்ச்சியுடனும் அக்களிப்புடனும் கொண்டினார்கள்.
19.       இதனால்தான் தொலை நாடுகளில் சிதறி வாழும் யூதர்கள் அதார் மாதம் பதினான்காம் நாளை நன்னாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்: ஒருவருக்கொருவர் உணவுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் மாநகர்களில் வாழ்கிறவர்கள் அதார் மாதம் பதினைந்தாம் நாளை நன்னாளகக் கொண்டாடி, உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
20.       மொர்தெக்காய் இவற்றை ஒரு மலில் எழுதி, அருகிலும் தொலையிலுமாக அர்த்தக்சஸ்தாவின் பேரரசில் வாழ்ந்த யூதர்களுக்கு அனுப்பினார்.
21.       அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும் நன்னாள்களாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்:
22.       ஏனெனில் இந்நாள்களில்தாம் யூதர்கள் தங்கள் பகைவர்களிடமிருந்து விடுதலை பெற்றார்கள். இந்த அதார் மாதத்தில் தான் அவர்களின் துன்பம் இன்பமாக மாறியது: துயர நாள் நன்னாளாக மாறியது. இந்த மாதம் முழுவதும் விருந்தாடி, மகிழ்ச்சியுடன் அந்த நன்னாள்களைக் கொண்டாடுமாறும் உணவுப்பொருள்களை நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் அவர் எழுதினார்.
23.       மொர்தெக்காய் யூதர்களுக்கு எழுதியிருந்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
24.       மாசிடோனியனாகிய அம்மதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை எதிர்த்தெழுந்ததையும், அவர்களை அழிக்கும் நாளைக் குலுக்கல் முறையில் தெரிவு செய்ததையும்,
25.       தம்மைத் பக்கிலிடுமாறு அவன் மன்னரை அணுகி வேண்டிக் கொண்டதையும், யூதர்களுக்கு அவன் இழைக்கத் திட்டமிட்டிருந்த தீமைகள் அனைத்தும் அவனுக்கே நேர்ந்ததையும், அவனும் அவனுடைய மைந்தர்களும் பக்கிலிடப்பட்டதையும் மொர்தெக்காய் அதில் விளக்கியிருந்தார்.
26.       இதன்பொருட்டு இந்நாள்கள் பூரிம் என யூதர்களால் அழைக்கப்படுகின்றன. எபிரேய மொழியில் பூரிம் என்னும் சொல்லுக்குத் “திருவுளச் சீட்டுகள்“ என்பது பொருள். தம் மடலில் எழுதப்பட்டிருந்தவை காரணமாகவும், யூதர்கள் துன்புற்றவை, அவர்களுக்கு நேர்ந்தவை காரணமாகவும் இவ்விழாவைக் கொண்டாடுமாறு மொர்தெக்காய் பணித்தார்.
27.       அவ்வாறே யூதர்களும் இதைத் தவறாமல் கொண்டாடத் தங்கள் சார்பாகவும் தங்கள் வழிமரபினர் சார்பாகவும் யூத மதத்தைத் தழுவியவர்கள் சார்பாகவும் பின்வருமாறு உறுதிபூண்டார்கள்: அந்நாள்கள் எல்லா நகர்களிலும் குடும்பங்களிலும் மாநிலங்களிலும் நினைவுநாள்களாகத் தலைமுறை தலைமுறையாக கொண்டாட வேண்டும்:
28.       பூரிம் எனப்படும் அந்நாள்களை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும்: அந்நாள்களின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையே ஒருபோதும் ஒழிந்து போகத் கூடாது.
29.       அம்மினதாபின் மகளாகிய எஸ்தர் அரசியும் யூதராகிய மொர்தெக்காயும் தாங்கள் செய்தவற்றை எழுத்தில் பொறித்து வைத்தார்கள்: பூரிம் திருவிழா பற்றிய ஒழுங்குகள் கொண்ட மடலை உறுதிப்படுத்தினார்கள்.
30.       கிரேக்கப் பாடத்தில் இவ்வசனம் விடப்பட்டுள்ளது. எபிரேயத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட மற்று இருபத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது என்னும் பாடம் காணப்படுகிறது.
31.       மொர்தெக்காயும் எஸ்தர் அரசியும் இம்முடிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அவ்விழாவைக் கண்டிப்பாகக் கொண்டாட உறுதிபூண்டார்கள்.
32.       அவ்விழா எப்போதும் கொண்டாடப்படவேண்டும் என்று எஸ்தர் ஆணை பிறப்பித்தார். மக்களின் நினைவில் நிற்கும்பொருட்டு அது ஓர் ஆவணத்தில் பொறிக்கப்பட்டது.

அதிகாரம் 10.

1.       நிலத்திலும் நீரிலும் பரவியிருந்த தம் பேரரசில் மன்னர் வரி விதித்தார்.
2.       அவருடைய ஆற்றல், வீரம், செல்வம், ஆட்சியின் மாட்சி ஆகியவற்றை மக்கள் நினைவு கூரும்படி பாரசீகர், மேதியர் ஆகியோரின் குறிப்பேட்டில் அவை பொறிக்கபட்டன.
3.       அர்த்தக்சஸ்தா மன்னரின் ஆணைப்பேராளராக விளங்கிய மொர்தெக்காய் பேரரசில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார்: யூதர்களால் போற்றப் பெற்றார்: அன்புக்குரியவராக வாழ்ந்து தம் இனத்தார் அனைவருக்கும் வாழ்க்கைமுறைபற்றி விளக்கி வந்தார். மொர்தெக்காய் பின்வருமாறு கூறினார்: இவையெல்லாம் கடவுளின் செயல்கள். இவை குறித்து நான் கண்ட கனவை நினைவுகூர்கிறேன். அதில் எதுவுமே நிறைவேறாமற் போகவில்லை. அதில் ஒரு சிறிய ஊற்று ஆறாக மாறியது. ஒளி, கதிரவன், மிகுந்த தண்ணீர் ஆகியவையும் காணப் பெற்றன. அந்த ஆறு எஸ்தரைக் குறிக்கும். மன்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டு அரசியாக்கினார்.


விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 43 - சாலமோனின் ஞானம்


அதிகாரம் 1.

1.       மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்: நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்: நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள்.
2.       அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்: அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.
3.       நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும்.
4.       வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை: பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை.
5.       நற்பயிற்சிபெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்: அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்: அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.
6.       ஞானம் மனிதநேயமுள்ள ஆவி: ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி: உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்: நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.
7.       ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது: அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.
8.       நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது: தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது.
9.       இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள் நுணுகி ஆராயப்படும்: அவர்களுடைய சொற்கள் ஆண்டவரின் காதுக்கு எட்டும்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.
10.       விழிப்புடைய காது அனைத்தையும் கேட்கின்றது. முறையீடுகளின் முணுமுணுப்பு செவிக்கு எட்டாமல் போவதில்லை.
11.       பயனற்ற முணுமுணுப்புப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: பழிச்சொல் கூறாது உங்கள் நாவை அடக்குங்கள். ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும் விளைவின்றிப் போகாது. பொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்.
12.       நெறிதவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்: உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.
13.       சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.
14.       இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.
15.       நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
16.       இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள்: அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்: அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே.

அதிகாரம் 2

1.       இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்: நம் வாழ்வு குறுகியது: துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.
2.       தற்செயலாய் நாம் பிறந்தோம்: இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே: அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே.
3.       அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும்.
4.       காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும். நம் செயல்களை நினைவுகூரமாட்டார்கள். நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்: கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு, அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.
5.       நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை: ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.
6.       எனவே, வாருங்கள்: இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்: இளமை உணர்வோடு படைப்புப்பொருள்களை முழுவதும் பயன்படுத்துவோம்.
7.       விலையுயர்ந்த திராட்சை மதுவிலும் நறுமண வகைகளிலும் திளைத்திருப்போம்: இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம்.
8.       ரோசா மலர்களை அவை வாடுமுன் நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.
9.       நம் களியாட்டங்களில் ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்: இன்பத்தின் சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம். இதுவே நம் பங்கு: இதுவே நம் உடைமை.
10.       நீதிமான்களாகிய ஏழைகளை ஒடுக்குவோம்: கைம்பெண்களையும் ஒடுக்காமல் விடமாட்டோம்: நரைதிரை விழுந்த முதியோரையும் மதிக்கமாட்டோம்.
11.       நமது வலிமையே நமக்கு நீதி - நமக்குச் சட்டம். வலிமையற்றது எதுவும் பயனற்றதே.
12.       “நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்: ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்: நம் செயல்களை எதிர்க்கிறார்கள்: திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்: நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.
13.       கடவுளைப்பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்: ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.
14.       அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது: அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.
15.       அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட் டது: அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை.
16.       இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்: பய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்: நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்: கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.
17.       அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்: முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.
18.       நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்: பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.
19.       அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம்.
20.       இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்: ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.“
21.       இறைப்பற்றில்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச்சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.
22.       அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை: பய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை: மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.
23.       கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார்.
24.       ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

அதிகாரம் 3

1.       நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.
2.       அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.
3.       அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.
4.       மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
5.       சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.
6.       பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
7.       கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்:
8.       நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்.
9.       அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்: அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.
10.       ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்: ஏனெனில் அவர்கள் நீதிமான்களைப் புறக்கணித்து, ஆண்டவரை எதிர்த்தார்கள்.
11.       ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்களது நம்பிக்கை வீணானது: அவர்கள் உழைப்பு வெறுமையானது: அவர்களின் செயல்கள் பயனற்றவை.
12.       அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்: அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்: அவர்களுடைய வழிமரபினர் சபிக்கப்பட்டவர்கள்.
13.       பய்மை இழக்காத, தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்: மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.
14.       நெறிகெட்ட செயல்களைச் செய்யாத, ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத அண்ணகர்களும் பேறுபெற்றோர். அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்: ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.
15.       நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது. அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.
16.       விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்: தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.
17.       அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்: முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.
18.       அவர்கள் இளமையில் இறந்தால் அவர்களுக்கு நம்பிக்கை இராது: தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.
19.       நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.

அதிகாரம் 4

1.       ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும், நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது: நற்பண்பின் நினைவு என்றும் அழியாதது: அது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும்.
2.       அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்: அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர். மாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி, வெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.
3.       இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும் அவர்கள் தளிர்ப்பதில்லை: மணவாழ்க்கைக்குப் புறம்பே பிறந்த வழிமரபு ஆழமாய் வேரூன்றுவதில்லை: உறுதியாய் நிற்பதுமில்லை.
4.       சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும், உறுதியற்றவர்களாய்க் காற்றினால் அலைக்கழிக்கப்படுவார்கள்: காற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.
5.       அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும். அவர்களுடைய கனிகள் பயனற்றவை: உண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால் அவை பாழாய்ப் போகும்.
6.       முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே தீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்.
7.       நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள்.
8.       முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று: ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.
9.       ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை: குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.
10.       நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்: பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
11.       தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும், வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
12.       தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது: அலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது.
13.       அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்: நீண்ட வாழ்வின் பயனை அடைந்தார்.
14.       அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது. தீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக் கொண்டார்.
15.       மக்கள் இதைப் பார்த்தார்கள்: ஆனால் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்டோர்மீது அருளும் இரக்கமும் காட்டுகின்றார்: தம் பயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.
16.       இறந்துபோன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்றில்லாதவர்களைக் கண்டனம் செய்வார்கள்: விரைவில் பக்குவம் அடைந்த இளைஞர்கள் நீண்ட நாள் வாழும் தீய முதியவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
17.       இறைப்பற்றில்லாதவர்கள் ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்: ஆனால் ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும், எந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார்கள் என்றும், அறிந்துகொள்ளமாட்டார்கள்.
18.       அவர்கள் ஞானிகளை கண்டு ஏளனம் செய்வார்கள். ஆண்டவரோ அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவார்.
19.       ஏனெனில் இனி அவர்கள் இழிந்த பிணம் ஆவார்கள்: இறந்தோர் நடுவில் என்றென்றும் அருவருப்புக்குரியோர் ஆவார்கள். ஆண்டவர் அவர்களைப் பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்: அடியோடு கலங்கவைப்பார். அவர்கள் முழுவதும் அழித்தொழிக்கப்படுவார்கள்: ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள். அவர்களின் நினைவுகூட மறைந்துவிடும்.
20.       இறைப்பற்றில்லாதவர்களின் பாவங்களைக் கணக்கிடும்போது, அவர்கள் நடுங்கிக்கொண்டு வருவார்கள்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் அவர்களுக்கு எதிராக நின்று குற்றம்சாட்டும்.

அதிகாரம் 5

1.       அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும் தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும் துணிவோடு நிற்பார்கள்.
2.       இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள்: எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித் திடுக்கிடுவார்கள்.
3.       அவர்கள் உளம் வருந்தி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள்: மிகுந்த மனத்துயருடன் பெருமூச்சு விட்டுப் பின்வருமாறு சொல்வார்கள்:
4.       இவர்களைத்தானே நாம் முன்பு எள்ளி நகையாடினோம்: வசைமொழிக்கு ஆளாக்கினோம். நாம் மூடர்கள், அவர்களது வாழ்க்கை மடமையானது என்று எண்ணினோம்: அவர்களது முடிவு இழிவானது என்று கருதினோம்.
5.       கடவுளின் மக்களாக அவர்கள் எவ்வாறு எண்ணப்பட்டார்கள்? பயவர்கள் நடுவில் அவர்களுக்கு எவ்வாறு பங்கு கிடைத்தது?
6.       எனவே நாமே உண்மையின் வழியிலிருந்து தவறிவிட்டோம். நீதியின் ஒளி நம்மீது படரவில்லை: கதிரவன் நம்மீது எழவில்லை.
7.       நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்: பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்: ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!
8.       இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன?
9.       இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின: புரளி போல விரைந்து சென்றன.
10.       அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது. அது சென்ற தடத்தை யாரும் காண முடியாது: அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை.
11.       பறவை காற்றில் பறந்து செல்கிறது. அது சென்ற வழியின் அடையாளமே தெரிவதில்லை. அது சிறகடித்துச் செல்லும்போது மென்காற்றின்மீது மோதுகிறது: அது பறந்தோடும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கிறது: இறக்கைகளை அசைத்துக் காற்றை ஊடுருவிச் செல்கிறது. பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.
12.       இலக்கை நோக்கி எய்த அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது. ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை.
13.       இவற்றைப் போன்றதே நம் நிலையும்! நாம் பிறந்தோம்: உடனே இறந்துபட்டோம். பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம் நற்பண்பின் அடையாளம் எதுவுமில்லை. நம்முடைய தீமையால் நம்மையே அழித்துக்கொண்டோம்.
14.       இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை காற்றில் அடித்துச் செல்லும் பதர்போன்றது: புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது: காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது: ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல் அது மறக்கப்படும்.
15.       நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.
16.       அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்: ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர் தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார்: தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.
17.       ஆர்வம் என்னும் படைக்கலத்தால் அவர் தம்மை முழுதும் மூடிக்கொள்வார்: தம் எதிரிகளைப் பழிவாங்கப் படைப்பினைப் படைக்கலமாகக் கொள்வார்.
18.       நீதியை அவர் மார்புக்கவசமாக அணிந்து கொள்வார்: நடுநிலை தவறாத தீர்ப்பைத் தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.
19.       வெல்ல முடியாத கேடயமாகத் பய்மையை அவர் கொண்டிருப்பார்.
20.       அவர் கடுஞ்சினத்தைக் கூரிய வாளாகக் கொள்வார். உலகம் அவரோடு சேர்ந்து அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.
21.       மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்: நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல் அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்.
22.       எறியப்படும் கவண்கல்லைப் போலச் சினம் செறிந்த கல்மழை விழும். கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும். ஆறுகள் இரக்கமின்றி அவர்களை மூழ்கடிக்கும்.
23.       புயல் அவர்களை எதிர்த்து வீசும்: அது சூறாவளிபோல் அவர்களைப் புடைத்தெடுக்கும். முறைகேடு மண்ணுலகையே பாழாக்கும். தீவினை வலியோரின் அரியணைகளைக் கவிழ்க்கும்.

அதிகாரம் 6

1.       மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்: உலகின் கடையெல்லைவரை நீதி வழங்குவோரே, கற்றுக்கொள்ளுங்கள்.
2.       திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.
3.       ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது: உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்: உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே.
4.       அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை: திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை: கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.
5.       கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்: உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.
6.       எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்: வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.
7.       அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்: உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்கமாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே: எல்லாரும் ஒன்றென எண்ணிக் காப்பவரும் அவரே.
8.       அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.
9.       எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறிபிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்:
10.       பய்மையானவற்றைத் பய்மையாய்க் கடைப்பிடிப்போர் பயோர் ஆவர்: பய்மையானவற்றைக் கற்றுக்கொண்டார் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.
11.       எனவே என் சொற்கள்மீது நாட்டங் கொள்ளுங்கள்: ஏக்கங் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.
12.       ஞானம் ஒளிமிக்கது: மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்: அதைத் தேடுவோர் கண்டடைவர்.
13.       தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.
14.       வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்: ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்.
15.       அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.
16.       தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது: அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது: அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.
17.       நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும் உண்மையான நாட்டமே ஞானத்தின் தொடக்கம்: நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே ஞானத்தின்பால் கொள்ளும் அன்பு.
18.       ஞானத்தின்மீது அன்பு செலுத்துவது அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பதாகும்: சட்டங்களைக் கடைப்பிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும்.
19.       அழியாமை ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
20.       ஞானத்தின்மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது.
21.       நாடுகளை ஆளும் மன்னர்களே, உங்களுடைய அரியணையிலும் செங்கோலிலும் நீங்கள் மகிழ்ச் சி அடைய விரும்பினால், எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்: அப்பொழுது என்றென்றும் ஆட்சிபுரிவீர்கள்.
22.       ஞானம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டானது என உங்களுக்கு விரித்துரைப்பேன்: மறைபொருள்களை உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன்: அதன் படைப்புக்காலம் தொட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பேன்: அதைப்பற்றிய அறிவை வெளிப்படுத்துவேன்: உண்மையை நழுவவிடமாட்டேன்.
23.       நோயாம் பொறாமையோடு தோழமை கொள்ளமாட்டேன். ஏனெனில் பொறாமை ஞானத்துடன் உறவு கொள்வதில்லை.
24.       ஞானிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே உலகின் மீட்பு அமையும். அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின் நிலைக்களனாய் இருக்கின்றார்.
25.       எனவே என் சொற்களால் நற்பயிற்சி பெறுங்கள். அதனால் உங்களுக்கு நற்பயன் விளையும்.

அதிகாரம் 7

1.       எல்லா மனிதர்களையும்போல நானும் இறப்புக்குரியவன்: நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட முதல் மனிதரின் வழித்தோன்றல். என் தாய் வயிற்றில் என் உடல் உருவாயிற்று.
2.       ஆணின் உயிர்த்துளியினாலும் திருமண இன்பத்தினாலும் பத்து மாத காலமாகக் குருதியோடு உறைந்து என் உடல் உருவெடுத்தது.
3.       நான் பிறந்தபொழுது எல்லாரையும்போல நானும் வெறும் காற்றையே சுவாசித்தேன்: என் உடலியல்புக்கு ஒத்த மண்ணில் கிடத்தப்பட்டேன்: முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.
4.       துணிகளில் பொதியப்பட்டேன்: பேணி வளர்க்கப்பட்டேன்.
5.       எந்த மன்னரும் இதற்கு மாறுபட்ட வகையில் வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.
6.       எல்லோரும் ஒரே வகையில் பிறக்கின்றனர்: ஒரே வகையில் இறக்கின்றனர்.
7.       எனவே நான் மன்றாடினேன்: ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது. நான் இறைவனை வேண்டினேன்: ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது.
8.       செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்: அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.
9.       விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை: அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்: அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.
10.       உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்: ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.
11.       ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.
12.       அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்: ஏனெனில் ஞானமே அவற்றை வழி நடத்துகிறது: அதுவே அவற்றையெல்லாம் ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந்தேன்.
13.       நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன் கற்றதை முறையீடின்றிப் பிறரோடு பகிர்ந்துகொண்டேன். அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.
14.       மனிதர்களுக்கு அது என்றும் குறையாத கருவூலம். அதை அடைவோர் கடவுளோடு நட்புக் கொள்வர்: நற்பயற்சி அளிக்கும் கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.
15.       கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.
16.       நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.
17.       இருப்பவை பற்றிய உண்மையான அறிவை எனக்கு அளித்தவர் அவரே: உலகின் அமைப்பையும் மூலப்பொருள்களின் செயல்பாட்டையும் நான் அறியச் செய்தவரும் அவரே.
18.       காலங்களின் தொடக்கம், முடிவு, மையம், கதிரவனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்கள், பருவ கால மாறுபாடுகள்,
19.       ஆண்டுகளின் சுழற்சிகள், விண்மீன்களின் நிலைக்களங்கள்,
20.       உயிரினங்களின் இயல்பு, காட்டு விலங்குகளின் சீற்றம், காற்று வகைகளின் வலிமை, மனிதர்களின் எண்ணங்கள், பல்வேறு செடிவகைகள், வேர்களின் ஆற்றல்,
21.       இவைபோன்ற மறைவானவைபற்றியும் வெளிப்படையானவைபற்றியும் கற்றறிந்தேன். எல்லாவற்றையும் உருவாக்கிய ஞானமே எனக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தது.
22.       ஞானம் - ஆற்றல் கொண்டது. அவற்றால் அறிவுடையது: பய்மையானது: தனித்தன்மை வாய்ந்தது: பல்வகைப்பட்டது: நுண்மையானது: உயிரோட்டம் உள்ளது: தெளிவுமிக்கது: மாசுபடாதது: வெளிப்படையானது: கேடுறாதது: நன்மையை விரும்புவது: கூர்மையானது.
23.       ஞானம் - எதிர்க்க முடியாதது: நன்மை செய்வது: மனிதநேயம் கொண்டது: நிலைபெயராதது: உறுதியானது: வீண்கவலை கொள்ளாதது: எல்லாம் வல்லது: எல்லாவற்றையும் பார்வையிடுவது: அறிவும் பய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.
24.       ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும்விட மிக விரைவானது: அதன் பய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது: எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.
25.       ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி: எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் பய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.
26.       ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்: கடவுளது செயல்திறனின் கறைபடியாகக் கண்ணாடி: அவருடைய நன்மையின் சாயல்.
27.       ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது: தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது: தலைமுறைதோறும் பய ஆன்மாக்களில் நுழைகிறது: அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது.
28.       ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.
29.       ஞானம் - கதிரவனைவிட அழகானது: விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது: ஒளியைக் காட்டிலும் மேலானது.
30.       இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

அதிகாரம் 8

1.       ஞானம் - ஒருகோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது: எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.
2.       ஞானத்தின்மேல் நான் அன்பு கூர்ந்தேன்: என் இளமைமுதல் அதைத் தேடினேன்: என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன்: அதன் அழகில் மயங்கினேன்.
3.       கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப் பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது. அதனால் அனைத்துலகின் ஆண்டவர் அதன்மேல் அன்புகூர்ந்தார்.
4.       ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப் புகுமுகம் செய்து வைக்கிறது: அவருடைய செயல்களைத் தேர்வுசெய்வதும் அதுவே.
5.       வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாகச் செல்வம் விளக்குமாயின், அனைத்தையும் ஆக்கும் ஞானத்தை விடச் சிறந்த செல்வம் ஏது?
6.       அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது என்றால், ஞானத்தவிட, இருப்பவற்றை உருவாக்கும் கலைஞன் வேறு யார்?
7.       ஒருவர் நீதியின்மேல் அன்புகூர்கின்றாரோ? ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும். ஏனெனில் தன்னடக்கம், விவேகம், நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. இவற்றைத்தவிர வாழ்வில் மனிதருக்குப் பயனுள்ளவை வேறு ஒன்றுமில்லை.
8.       ஒருவர் பரந்த பட்டறிவு பெற ஏங்குகின்றாரோ? ஞானம் இறந்த காலத்தை அறியும்: எதிர்காலத்தை உய்த்துணரும்: உரைகளின் நுட்பங்களையும் புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் பருவங்கள், காலங்களின் பயன்களையும் முன்னறியும்.
9.       ஆகையால் என்னோடு கூடிவாழும் பொருட்டு ஞானத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்: ஏனெனில் நன்மை செய்ய அது என்னை ஆற்றுப்படுத்தும் என்றும், கவலைகளிலும் துயரத்திலும் எனக்கு ஆறுதல் தரும் என்றும் நான் அறிவேன்.
10.       அதை முன்னிட்டு மக்கள் கூட்டத்தில் தான் பெருமை பெறுவேன்: இளைஞனாய் இருந்தாலும் மூப்பர்களிடையே நன்மதிப்பு அடைவேன்.
11.       நீதிவழங்கும்போது அறிவுக்கூர்மையோடு காணப்படுவேன். ஆள்வோர் என்னைக் கண்டு வியப்புறுவர்.
12.       நான் பேசாமல் இருக்கும் பொழுது நான் பேசும்படி அவர்கள் காத்திருக்கிறார்கள்: நான் பேசும்பொழுது எனக்குச் செவிசாய்ப்பார்கள்: நான் நீண்ட உரையாற்றும் பொழுது வாயடைத்து நிற்பார்கள்.
13.       ஞானத்தினால் நான் இறவாமை எய்துவேன்: எனக்குப்பின் வருபவர்களுக்கு என்றும் நீங்கா நினைவை விட்டுச்செல்வேன்.
14.       நான் மக்கள் மீது ஆட்சிசெலுத்துவேன்: நாடுகள் எனக்கு அடிபணியும்.
15.       அச்சுறுத்தும் மன்னர்கள்கூட என்னைப்பற்றிக் கேள்வியுற்று அஞ்சுவார்கள். மக்கள் நடுவில் நல்லவனாகவும் போரில் வல்லவனாகவும் இருப்பேன்.
16.       நான் வீட்டிற்கு வந்தபின் ஞானத்தோடு இளைப்பாறுவேன். ஏனெனில் அதன் தோழமையில் கசப்பே இல்லை: அதனோடு வாழ்வதில் துன்பமே இல்லை. அது தருவதெல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே!
17.       இவற்றைப்பற்றியயெல்லாம் எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது - ஞானத்துடன்கொள்ளும் உறவால் இறவாமை கிட்டும்: அதனுடைய நட்புறவில் பய மகிழ்ச்சி பிறக்கும்:
18.       அதனுடைய உழைப்பால் குறைபடாத செல்வம் கொழிக்கும்: அதன் தோழமையில் பயிற்சி பெறுவதால் அறிவுத்திறன் உண்டாகும்: அதனோடு கலந்துரையாடுவதால் பெரும்புகழ் கிடைக்கம் என்றெல்லாம் என் உள்ளத்தில் எண்ணிப் பார்த்த பொழுது - அதை எனக்கென அடைவது எப்படி என்று தேடி அலைந்தேன்.
19.       நான் குழந்தையாய் இருந்த பொழுது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது.
20.       நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்.
21.       ஆனால், கடவுள் எனக்கு ஞானத்தை ஈந்தாலொழிய, அதை அடைய முடியாது என்று நான் உணர்ந்துகொண்டேன். அது யாருடைய கொடை என அறிவது அறிவுத் திறனின் அடையாளம். எனவே நான் ஆண்டவரை வேண்டினேன்: கெஞ்சி மன்றாடினேன்: என் முழு உள்ளத்தோடு சொன்னேன்:

அதிகாரம் 9

1.       மூதாதையரின் கடவுளே, இரக்கத்தின் ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் உமது சொல்லால் உண்டாக்கினீர்.
2.       நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும், பய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும்,
3.       நேர்மையான உள்ளத்தோடு தீர்ப்பு வழங்கவும், உமது ஞானத்தால் மானிடரை உருவாக்கினீர்.
4.       உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்: உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர்.
5.       நான் உம் அடியான்: உம்முடைய அடியவளின் மகன்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.
6.       மன்பதையில் ஒருவர் எத்துணை நிறைவு உள்ளவராய் இருந்தாலும், உம்மிடமிருந்து வரும் ஞானம் அவருக்கு இல்லையேல், அவர் ஒன்றும் இல்லாதவராய்க் கருதப்படுவார்.
7.       உம் மக்களுக்கு மன்னராகவும், உம் புதல்வர் புதல்வியருக்கு நடுவராகவும் இருக்க நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர்.
8.       தொடக்கத்திலிருந்தே நீர் ஏற்பாடு செய்திருந்த பய கூடாரத்ததை மாதிரியாகக் கொண்டு உம் பய மலைமேல் கோவில் கட்டவும், உமது உறைவிடமான நகரில் பலிபீடம் எழுப்பவும் நீர் எனக்கு ஆணையிட்டீர்.
9.       ஞானம் உம்மோடு இருக்கின்றது: உம் செயல்களை அது அறியும்: நீர் உலகத்தை உண்டாக்கியபோது அது உடனிருந்தது: உம் பார்வைக்கு உகந்ததை அது அறியும்: உம் கட்டளைகளின்படி முறையானது எது எனவும் அதற்குத் தெரியும்.
10.       உமது பய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்: உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து அதை வழங்கியருளும். ஆது என்னோடு இருந்து உழைக்கட்டும். அதனால் உமக்கு உகந்ததை நான் அறிந்துகொள்வேன்.
11.       அது எல்லாவற்றையும் அறிந்து உய்த்துணரும்: என் செயல்களில் விவேகத்துடன் என்னை வழி நடத்தும்: தன் மாட்சியில் அது என்னைப் பாதுகாக்கும்.
12.       அப்பொழுது என் செயல்கள் உமக்கு ஏற்புடையனவாகும். உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன் நீதி வழங்குவேன்: என் தந்தையின் அரியணையில் வீற்றிருக்கத் தகுதி பெறுவேன்.
13.       கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?
14.       நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை: நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை.
15.       அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.
16.       மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்?
17.       நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் பய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்?
18.       இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்: ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.

அதிகாரம் 10

1.       உலகின் முதல் தந்தை தனிமையாகப் படைக்கப்பட்டபொழுது ஞானம் அவரைப் பேணிக் காத்தது: அவருடைய குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது.
2.       அனைத்தையும் ஆளும் ஆற்றலை அவருக்கு அளித்தது.
3.       நீதியற்றவன் ஒருவன் தன் சினத்தினால் ஞானத்தைவிட்டு அகன்றான்: சீற்றத்தினால் தன் உடன்பிறப்பைக் கொன்றதால் அவனும் அழியலானான்.
4.       அவன்பொருட்டு மண்ணுலகைப் பெரும் வெள்ளம் மூழ்கடித்த பொழுது, ஞானம் மீண்டும் அதைக் காப்பாற்றியது: நீதிமானை ஒரு சிறிய மரத்துண்டால் வழி நடத்தியது.
5.       மக்களினங்கள் தீமையுடன் கூட்டுச் சேர்ந்து குழப்பத்திற்கு உள்ளானபோது ஞானம் நீதிமானைக் கண்டு கொண்டது: அவரைக் கடவுள் திருமுன் மாசற்றவராகக் காத்தது: தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள அவருக்குத் துணிவை அளித்தது.
6.       இறைப்பற்றில்லாதவர்கள் அழிந்தபோது ஞானம் நீதிமானைக் காப்பாற்றியது. ஜந்து நகர்கள்மீது இறங்கி வந்த நெருப்பிலிருந்து அவரும் உயிர் தப்பினார்.
7.       அவர்களது தீயொழுக்கத்துக்குச் சான்றாக அந்த நகரங்கள் புகை உமிழும் பாழ்வெளியாக மாற்றப்பட்டன: அங்குச் செடிகள் என்றுமே கனியாத காய்களைக் கொடுக்கின்றன: பற்றுறதியில்லா ஆன்மாவின் நினைவுச்சின்னமான உப்புத்பணும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது.
8.       அவர்கள் ஞானத்தை ஒரு பொருட்டாகக் கருதாததால், நன்மையைக் கண்டுணர இயலாமற்போனார்கள்: மேலும், தங்கள் அறிவின்மையின் அடையாளத்தை மனித இனத்திற்கு விட்டுச் சென்றார்கள். அதனால் அவர்கள் செய்த தவறுகள் புலப்படாமற் போகா.
9.       ஆனால் தனக்குப் பணிபுரிந்தவர்களை ஞானம் துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தது.
10.       தம் சகோதரனின் சினத்துக்குத் தப்பியோடிய நீதிமான் ஒருவரை ஞானம் நேர்மையான வழியில் நடத்திச் சென்றது: இறையரசை அவருக்குக் காட்டியது: வானபதர்பற்றிய அறிவை அவருக்குக் கொடுத்தது: உழைப்பில் அவர் வளமையுறச் செய்தது: அவரது உழைப்பின் பயனைப் பெருக்கியது.
11.       அவரை ஒடுக்கியோர் பேரவாக் கொண்டபோது அது அவருக்குத் துணை நின்று, அவரைச் செல்வராக்கியது.
12.       பகைவரிடமிருந்து அது அவரைப் பாதுகாத்தது: தாக்கப் பதுங்கியிருந்தோரிடமிருந்து அவரைக் காப்பாற்றியது: கடும் போராட்டத்தில் அவருக்கு வெற்றி தந்தது. இவ்வாறு இறைப்பற்று எல்லாவற்றையும்விட வலிமை மிக்கது என்று அவர் உணரச் செய்தது.
13.       நீதிமான் ஒருவர் விலைக்கு விற்கப்பட்டபொழுது ஞானம் அவரைக் கைவிடவில்லை: பாவத்திலிருந்து அவரை விடுவித்தது.
14.       இருட்டறைக்குள் அவரோடு அது இறங்கிச் சென்றது: அரச செங்கோலையும், அவரை ஒடுக்கியோர்மீது அதிகாரத்தையும் அவருக்கு அளிக்கும்வரை விலங்கிடப்பட்டிருந்த அவரை விட்டு அது விலகவில்லை. அவர்மேல் குற்றம் சுமத்தியோர் பொய்யர் என்பதை மெய்ப்பித்தது: அவருக்கோ முடிவில்லா மாட்சியை அளித்தது.
15.       ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து பய மக்களையும் மாசற்ற வழி மரபினரையும் ஞானம் விடுவித்தது.
16.       அது ஆண்டவருடைய ஊழியர் ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது. கொடிய மன்னர்களை வியத்தகு செயல்களாலும் அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.
17.       பயவர்களின் உழைப்புக்கு அது கைம்மாறு கொடுத்தது: வியப்புக்குரிய வழியில் அவர்களை நடத்திச் சென்றது: பகலில் அவர்களுக்கு நிழலாகவும் இரவில் விண்மீன் சுடராகவும் இருந்தது.
18.       செங்கடல்மீது அது அவர்களை அழைத்துச்சென்றது: ஆழ்கடல் வழியாக அவர்களை நடத்திச் சென்றது.
19.       அவர்களின் பகைவர்களை அது நீரினுள் அமிழ்த்தியது: பின், ஆழ்கடலிலிருந்து அவர்களை வெளியே உமிழ்ந்தது.
20.       ஆகையால் நீதிமான்கள் இறைப்பற்றில்லாதவர்களைக் கொள்ளையடித்தார்கள்: ஆண்டவரே, உமது திருப்பெயரைப் பாடிப் புகழ்ந்தார்கள்: வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள்.
21.       ஏனெனில் பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.

அதிகாரம் 11

1.       பய இறைவாக்கினர் ஒருவரின் வாயிலாக இஸ்ரயேலர்களுடைய செயல்களை ஞானம் சிறப்புறச் செய்தது.
2.       குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக அவர்கள் பயணம் செய்தார்கள்: மனித நடமாட்டமற்ற இடங்களில் தங்கள் கூடாரங்களை அமைத்தார்கள்.
3.       தங்கள் பகைவர்களை எதிர்த்து நின்றார்கள்: போரிட்டு எதிரிகளைத் துரத்தினார்கள்.
4.       இஸ்ரயேலர்களுக்குத் தாகம் எடுத்தபோது உம்மை மன்றாடினார்கள். உடனே செங்குத்தாக பாறைகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடியது. கடினமான பாறையிலிருந்து அவர்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள்.
5.       எவற்றால் பகைவர்கள் தண்டிக்கப்பட்டார்களோ அவற்றாலேயே சிக்கலான நேரங்களில் இஸ்ரயேலர் நன்மை அடைந்தார்கள்.
6.       குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்று எதிரிகள் பிறப்பித்திருந்த ஆணையைக் கண்டிக்க, வற்றாத ஊற்றிலிருந்து ஓடும் ஆற்று நீருக்கு மாறாக, குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை அவர்களுக்குக் கொடுத்தீர்:
7.       இஸ்ரயேலருக்கோ எதிர்பாரா வகையில் மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.
8.       அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீர் என்பதை அவ்வேளையில் அவர்களை வாட்டிய தாகத்தால் காட்டினீர்.
9.       இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது இரக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும், கடவுள் சினம்கொண்டு தீர்ப்பளிக்கும்பொழுது இறைப்பற்றில்லாதவர்கள் எவ்வாறு வதைக்கப்படுவார்கள் என்றும் இதன் வாயிலாக அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
10.       ஏனெனில் ஒரு தந்தை எச்சரிப்பதுபோல, நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர். ஆனால் இரக்கமற்ற மன்னர் தீர்ப்பு அளிப்பதுபோல, நீர் எதிரிகளைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தீர்.
11.       இஸ்ரயேலர்களுக்கு அருகில் இருந்தபோதும், தொலைவில் இருந்தபோதும், எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.
12.       இருமடங்கு துயரம் அவர்களை ஆட்கொண்டது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து, ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.
13.       தங்களுக்கு வந்துற்ற தண்டனைகளால் நீதிமான்கள் நன்மை அடைந்தார்கள் என்று எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது, அது ஆண்டவரின் செயல் என்று உணர்ந்து கொண்டார்கள்.
14.       எவரை முன்னொரு காலத்தில் குழந்தையாக இருந்தபோது அவர்கள் வெளியே எறிந்தார்களோ, எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ, அவர்களைக் குறித்தே நிகழிச்சிகளின் முடிவில் வியப்புற்றார்கள். ஏனெனில், நீதிமான்கள் கண்டிராத தாகத்தை எதிரிகள் கொண்டிருந்தார்கள்.
15.       எகிப்தியர்கள் பகுத்தறிவற்ற பாம்புகளையும் பயனற்ற விலங்குகளையும் வணங்கினார்கள். இவ்வாறு நெறி தவறத் பண்டிய அவர்களுடைய அறிவற்ற தீய எண்ணங்களுக்காக அவர்களைப் பழிவாங்கும் பொருட்டு, பகுத்தறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தை அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.
16.       ஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் என்பதை இதனால் அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.
17.       ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த எல்லாம் வல்ல உமது கைவன்மைக்கு கரடிகளின் கூட்டத்தையோ துணிவுள்ள சிங்கங்களையோ அவர்கள்மிது அனுப்பி வைப்பது முடியாததன்று.
18.       புதிதாகப் படைக்கப்பட்ட, முன்பின் பார்த்திராத, சீற்றம் நிறைந்த காட்டு விலங்குகளையோ, வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ, ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை வெளியிடும் விலங்குகளையோ, கண்களில் தீப்பொறி பறக்கும் விலங்குகளையோ, அவர்கள்மீது அனுப்பி வைப்பது உம் கைவன்மைக்கு இயலாததன்று.
19.       அவை மனிதர்களைத் தாக்கி முற்றிலும் அழித்துவிடக் கூடியவை மட்டுமல்ல, தங்கள் தோற்றத்தாலேயே அவர்களை அச்சுறுத்திக் கொன்றுவிடக்கூடியவை.
20.       இவை இன்றியே மனிதர்கள் ஒரே மூச்சினால் வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நீதியால் துரத்தப்பட்டு, உமது ஆற்றலின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும் நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.
21.       உமது மாபெரும் ஆற்றலை எப்போது நீர் காட்ட இயலும். உமது கைவன்மையை எதிர்த்து நிற்க எவரால் இயலும்?
22.       தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் பசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது.
23.       நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.
24.       படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!
25.       உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?
26.       ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.

அதிகாரம் 12

1.       உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது.
2.       ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்: அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்: ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.
3.       உமது திருநாட்டில் பண்டுதொட்டே வாழ்ந்து வந்தோரின்
4.       அருவருப்புக்குரிய நடத்தை, மந்திரவாதச் செயல்கள், நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றுக்காக அவர்களை வெறுத்தீர்.
5.       இரக்கமின்றிக் குழந்தைகளைக் கொலைசெய்தோர், மனித சதையையும் குருதியையும் பலிவிருந்தாக உண்டோர். வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில் புகுமுகம் செய்யப்பட்டோர்,
6.       தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக் கொலைசெய்த பெற்றோர் ஆகியோரை எங்கள் மூதாதையரின் கைகளால் அழிக்கத் திருவுளங்கொண்டீர்.
7.       நாடுகளிலெல்லாம் நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத் தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர்.
8.       இருப்பினும், அவர்களும் மனிதர்களே என்பதால் அவர்களை விட்டு வைத்தீர்: உம் படைகளின் முன்னோடிகளாக மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்: இவ்வாறு அவர்களைச் சிறிது சிறிதாக அழித்தீர்.
9.       ஏனெனில் இறைப்பற்றில்லாதவர்களைப் போர்க்களத்தில் நீதிமான்களின் கையில் ஒப்படைப்பதும், கொடிய காட்டு விலங்குகளாலோ, ஒரு கடுஞ்சொல்லாலோ ஒரே நொடியில் அழிப்பதும் உம்மால் இயலாத செயலன்று.
10.       அவர்கள் தீய தலைமுறையினர் என்பதும், தீமை அவர்களது இயல்போடு இணைந்துவிட்டது என்பதும், அவர்களது சிந்தனை முறை ஒருபோதும் மாறாது என்பதும் உமக்குத் தெரியாதனவல்ல. இருப்பினும் நீர் அவர்களைச் சிறிதுசிறிதாய்த் தண்டித்து, மனந்திரும்ப அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்.
11.       அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு உட்பட்ட வழிமரபினர். அவர்களுடைய பாவங்களை நீர் தண்டியாமல் விட்டீர். எவருக்கும் அஞ்சி நீர் அவ்வாறு செயல்படவில்லை.
12..             நீர் என்ன செய்தீர்? என்று கேட்பவர் யார்? உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார்? நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின் அழிவுபற்றி உம்மீது குற்றம் சுமத்துபவர் யார்? நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது, அவர்கள் சார்பாக உம் திருமுன் பரிந்துரைப்பவர் யார்?
13.       ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்டவேண்டும்?
14.       நீர் தண்டித்தவர்கள் சார்பாக உம்மை எதிர்த்து நிற்க எந்த மன்னராலும் தலைவராலும் முடியாது.
15.       நீர் நேர்மையுள்ளவர்: அனைத்தையும் நீதியோடு ஆண்டுவருகின்றீர். தண்டிக்கத்தகாதவர்களைத் தண்டிப்பது உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என நீர் அறிவீர்.
16.       உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது.
17.       மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஜயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்: அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.
18.       நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்: மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.
19.       நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்: உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்: ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.
20.       உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர்: அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும் பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்.
21.       உம் மக்களுக்கு நீர் எவ்வளவோ கண்டிப்போடு தீர்ப்பு வழங்கினீர்! அவர்களுடைய மூதாதையர்களுக்கு நல்ல வாக்குறுதிகள் நிறைந்த ஆணைகளையும் உடன்படிக்கைகளையும் அளித்தீரன்றோ!
22.       நீர் எங்களை நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்: எங்கள் பகைவர்களையோ பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத் தண்டிக்கிறீர். நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது உமது நன்மையை நினைவுகூரவும், நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது உமது இரக்கத்தை எதிர்பார்க்கவும் இவ்வாறு செய்கிறீர்.
23.       அறிவின்மையிலும் நீதியின்மையிலும் வாழ்க்கை நடத்தியவர்களை அவர்களுடைய அருவருக்கத்தக்க செயல்களாலேயே தண்டீத்தீர்.
24.       அவர்கள் தவறான வழியல் நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்: விலங்குகளுக்குள்ளேயே மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத் தெய்வங்களாகக் கொண்டார்கள்: அறிவில்லாக் குழந்தைகள்போல் ஏமாந்து போனார்கள்.
25.       எனவே அறிவுத்தெளிவு பெறாத குழந்தைகளை ஏளனம் செய்வதுபோல் அவர்களை ஏளனம் செய்ய உமது தீர்ப்பை அனுப்பினீர்.
26.       இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று வரும் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காதவர்கள் கடவுளின் தக்க தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.
27.       அவர்கள் எந்தப் படைப்புகளைத் தெய்வங்களாகக் கருதினார்களோ அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்: ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்: தாங்கள் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே இப்பொழுது உண்மையான கடவுள் என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள். எனவே மிகக் கடுந்தண்டனை அவர்கள்மேல் வந்து விழுந்தது.

அதிகாரம் 13

1.       கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
2.       மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.
3.       அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்: ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார்.
4.       அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றைவிட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.
5.       ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.
6.       இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.
7.       அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்: ஏனெனில் அவை அழகாக உள்ளன.
8.       இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது!
9.       உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்த போதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?
10.       ஆனால் பொன், வெள்ளியால் திறமையாக உருவாக்கப்பட்டவையும், விலங்குகளின் சாயலாய்ச் செய்யப்பட்டவையுமான மனிதக் கைவேலைப்பாடுகளையோ பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய பயனற்றக் கல்லையோ தெய்வங்கள் என்று அழைத்தவர்கள் இரங்கத் தக்கவர்கள்: செத்துப்போனவற்றின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.
11.       திறமையுள்ள தச்சர் ஒருவர் எளிதில் கையாளக்கூடிய மரம் ஒன்றை வெட்டுகிறார்: அதன் மேற்பட்டைகளையெல்லாம் நன்றாக உரிக்கிறார்: பிறகு அதைக்கொண்டு வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு பொருளைச் சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.
12.       வேலைக்குப் பயன்படாத மரக்கழிவுகளை எரித்து, உணவு தயாரித்து, வயிறார உண்கிறார்.
13.       ஆயினும் அவற்றுள் எஞ்சியதும், ஒன்றுக்கும் உதவாததும், கோணலும் மூட்டுமுடிச்சுகளும் நிறைந்ததுமான ஒரு மரத்துண்டை அவர் எடுத்து, ஓய்வு நேரத்தில் அதைக் கருத்தாய்ச் செதுக்கி, கலைத்திறனோடு அதை இழைத்து, மனிதரின் சாயலில் அதை உருவாக்குகிறார்.
14.       அல்லது ஒரு பயனற்ற விலங்கின் உருவத்ததைச் செய்து, செந்நிறக் கலவையால் அதைப் பூசி, அதன் மேற்பரப்பில் உள்ள சிறு பள்ளங்களை அவர் சிவப்பு வண்ணம் பூசி மறைக்கிறார்.
15.       அதற்குத் தகுந்ததொரு மாடம் செய்து, அதைச் சுவரில் ஆணியால் பொருத்தி, அதில் சிலையை வைக்கிறார்:
16.       தனக்குத்தானே உதவி செய்ய முடியாது என்பதை அறிந்து, அது விழாதபடி பார்த்துக் கொள்கிறார்: ஏனெனில் அது வெறும் சிலைதான்: அதற்கு உதவி தேவை.
17.       அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும் திருமணத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேண்டும்போது உயிரற்ற ஒரு சிலையுடன் பேச வெட்கப்படுவதில்லை: வலிமையற்ற ஒன்றிடம் உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.
18.       செத்துப்போன ஒன்றிடம் வாழ்வுக்காக மன்றாடுகிறார்: பட்டறிவு இல்லாத ஒன்றிடம் உதவி கேட்கிறார்: ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத ஒன்றிடம் இறைஞ்சுகிறார்.
19.       பொருள் ஈட்டத்திலும் அலுவலிலும் செயல்பாட்டிலும் வெற்றி தரும்படி வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார்.

அதிகாரம் 14

1.       மேலும், கடற்பயணம் செய்யும் நோக்குடன் கொந்தளிக்கும் அலை கடலைக் கடக்கவிருக்கும் ஒருவர் தம்மைத் தாங்கிச் செல்லும் மரக்கலத்தைவிட எளிதில் உடைபடும் மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.
2.       செல்வம் சேர்க்கும் ஆவல் அந்த மரக்கலத்தைக் கட்டத் திட்டமிட்டது. ஞானம் கைவினைஞராகச் செயல்பட்டு அதைக் கட்டி முடித்தது.
3.       ஆனால், தந்தையே உமது பாதுகாப்பு அதை இயக்கிவருகிறது: ஏனெனில் கடலில் அதற்கு ஒரு வழி அமைத்தீர்: அலைகள் நடுவே பாதுகாப்பான பாதை வகுத்தீர்.
4.       இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும் நீர் காப்பாற்ற முடியும் எனக் காட்டினீர். இதனால், திறமையற்றோர் கூடக் கடலில் பயணம் செய்ய முடியும்.
5.       உமது ஞானத்தின் செயல்கள் பயனற்றவை ஆகக்கூடா என்பது உமது திருவுளம் எனவே மனிதர்கள் மிகச் சிறிய மரக்கட்டையிடம் தங்கள் உயிரையே ஒப்படைத்து, கொந்தளிக்கும் கடலில் அதைத் தெப்பமாகச் செலுத்தி, பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.
6.       ஏனெனில் தொடக்க காலத்தில் கூட, செருக்குற்ற அரக்கர்கள் அழிந்தபோது, உலகின் நம்பிக்கை ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது. உமது கை வழிகாட்ட, அந்நம்பிக்கை புதிய தலைமுறைக்கு வித்திட்டது.
7.       நீதியை உருவாக்கும் மரம் வாழ்த்துக்குரியது.
8.       ஆனால் கைவேலைப்பாடாகிய சிலை சபிக்கப்பட்டது. அதைச் செய்தவரும் அவ்வாறே சபிக்கப்பட்டவர். ஏனெனில் அவரே அதைச் செய்தார். அது அழியக்கூடியதாயிருந்தும், தெய்வம் என்று அழைக்கப்பட்டது.
9.       இறைப்பற்றில்லாதோரையும் அவர்களது இறைப்பற்றின்மையையும் கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.
10.       ஏனெனில் செய்தவரோடு அவர் செய்த வேலையும் ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.
11.       எனவே வேற்றினத்தா¡ன் சிலைகளும் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்: ஏனெனில் கடவுளின் படைப்புகளேயாயினும், அவை மிக அருவருப்பானவையாக மாறிவிட்டன: அவை மனிதரின் ஆன்மாக்களுக்கு இடறல்கள்: அறிவிலிகளின் கால்களுக்குக் கண்ணிகள்.
12.       சிலைகள் செய்யத் திட்டமிட்டதே விபசாரத்தின் தொடக்கம். அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவு.
13.       அவை தொடக்கமுதல் இருந்ததில்லை: என்றென்றும் இருக்கப்போவதுமில்லை.
14.       மனிதரின் வீண்பெருமையினால் அவை உலகில் நுழைந்தன: எனவே அவை விரைவில் முடியும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
15.       இளமையில் தம் மகன் இறந்ததால், ஆறாத்துயரில் மூழ்கியிருந்த தந்தை ஒருவர் விரைவில் தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அவனது சிலையைச் செய்தார். முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப் பின்பு தெய்வப் பிறவியாகக் கொண்டாடினார். மறைவான சமயச் சடங்குகளையும் வழிபாடுகளையும் வழிவழியாகச் செய்யுமாறு தம் பணியாளரைப் பணித்தார்.
16.       இந்தத் தீய பழக்கம் காலப் போக்கில் வேரூன்றி சட்டம் போலப் பின்பற்றப்படலாயிற்று.
17.       மன்னர்களின் ஆணைப்படி மக்கள் சிலைகளை வணங்கலானார்கள். தாங்கள் தொலையில் வாழ்ந்துவந்த காரணத்தால், தங்கள் மன்னரை நேரில் பெருமைப்படுத்த முடியாத மக்கள் தொலையிலிருந்தே அவருடைய உருவத்தைக் கற்பனை செய்தார்கள்: அதைக் காணக்கூடிய சிலையாக வடித்து அதற்கு வணக்கம் செலுத்தினார்கள்: இவ்வாறு, தொலைவில் இருந்தவரை எதிரில் இருந்தவர் போலக் கருதி, தங்கள் ஆர்வத்தில் அவரை மிகைப்படப் புகழ்ந்தார்கள்.
18.       மன்னரை அறியாதவர்கள் நடுவிலும் “மன்னர் வழிபாட்டை“ப் பரப்ப, சிற்பியின் புகழார்வம் அவர்களைத் பண்டிற்று.
19.       ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன் தம் திறமையெல்லாம் கூட்டி, அச்சிலையை மிக அழகாகச் செய்திருக்கலாம்.
20.       அவருடைய வேலைப்பாட்டின் அழகில் மயங்கிய மக்கள்திரள் சற்றுமுன்பு வெறும் மனிதராகப் போற்றிய ஒருவரைப் பின்னர் வழிபாட்டுக்குரியவராகக் கருதியிருக்கலாம்.
21.       இது மன்பதையே வீழ்த்தும் ஒரு சூழ்ச்சி ஆயிற்று. ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ கொடுங்கோன்மைக்கோ ஆளாகி, கடவுளுக்கே உரிய பெயரைக் கற்களுக்கும் மரங்களுக்கும் கொடுத்தனர்.
22.       கடவுளைப்பற்றிய அறிவில் மனிதர்கள் தவறியது மட்டுமன்றி, அறியாமையால் பெரும் போராட்டத்தில் வாழ்கிறார்கள்: இத்தகைய தீமைகளை அமைதி என்று அழைக்கிறார்கள்.
23.       புகுமுகச் சடங்குகளில் அவர்கள் குழந்தைகளைப் பலியிட்டாலும், மறைவான சமயச் சடங்குகளைக் கொண்டாடினாலும், வேற்றினப் பழக்கவழக்கங்கள் கொண்ட வெறியூட்டும் களியாட்டங்களை நடத்தினாலும்,
24.       தங்கள் வாழ்வையும் திருமணத்தையும் மாசுபடாமல் காப்பதில்லை. அவர்கள் நயவஞ்சமாக ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்: அல்லது விபசாரத்தால் ஒருவர் மற்றவருக்குத் துயர் விளைவிக்கிறார்கள்.
25.       இதன் விளைவாக எங்கும் ஒரே குழப்பம், குருதி, கொலை, களவு, வஞ்சகம், ஊழல், பற்றுருதியின்மை, கிளர்ச்சி, பொய்யாணை.
26.       நல்லவைப் பற்றிய குழப்பம், செய்நன்றி மறத்தல், ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல், இயல்புக்கு மாறான காமவேட்கை, மணவாழ்வில் முறைகேடு, விபசாரம், வரம்புமீறிய ஒழுக்கக்கேடு!
27.       பெயரைக்கூடச் சொல்லத் தகாத சிலைகளின் வழிபாடே எல்லாத் தீமைகளுக்கும் முதலும் காரணமும் முடிவும் ஆகும்.
28.       அவற்றை வணங்குவோர் மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர் ஆகின்றனர்: அல்லது பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்: அல்லது நேர்மையாக வாழ்வதில்லை: அல்லது எளிதாகப் பொய்யாணையிடுகின்றனர்.
29.       உயிரற்ற சிலைகள் மீது நம்பிக்கை வைப்பதால், அவர்களை பொய்யாணையிட்டாலும் தங்களுக்குத் தீங்கு நேரிடும் என எதிர்பார்ப்பதில்லை.
30.       இரு காரணங்களுக்காக அவர்கள் நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்: சிலைகளுக்குத் தங்களை அர்ப்பணித்ததன்மூலம் கடவுளைப்பற்றிய தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்: பய்மையை இகழ்ந்து, வஞ்சகத்தோடு நீதிக்கு முரணாக ஆணையிட்டார்கள்.
31.       ஏனெனில் எவற்றைக் கொண்டு மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ அவற்றின் ஆற்றல் அவர்களைத் தண்டிப்பதில்லை. மாறாக, பாவிகளுக்குரிய நீதித் தீர்ப்பே நெறிகெட்டோரின் குற்றங்களை எப்பொழுதும் தண்டிக்கிறது.

அதிகாரம் 15

1.       எங்கள் கடவுளே, நீர் பரிவும் உண்மையும் பொறுமையும் உள்ளவர்: அனைத்தையும் இரக்கத்துடன் ஆண்டுவருகின்றீர்.
2.       நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே: ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்: ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்.
3.       உம்மை அறிதலே நிறைவான நீதி: உமது ஆற்றலை அறிதலே இறவாமைக்கு ஆணிவேர்.
4.       தீய நோக்குடைய மனிதரின் திறமைகள் எங்களைத் திசைதிருப்பிவிடவில்லை: ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய பல வண்ணம் தீட்டிய உருவமும் எங்களை ஏமாற்றிவிடவில்லை.
5.       அறிவிலிகள் அவற்றின்மீது பேராவல் கொள்ளுமாறு அவற்றின் தோற்றமே பண்டி விடுகிறது. அதனால் செத்துப்போன சாயலின் உயிரற்ற உருவத்தை அவர்கள் விரும்புகிறார்கள்.
6.       அவற்றைச் செய்பவர்களும் அவற்றின்மீது ஆவல் கொள்பவர்களும் அவற்றை வணங்குபவர்களும் தீமையை விரும்புகிறார்கள்: இத்தகைய சிலைகளில் அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.
7.       குயவர்கள் வருந்தி உழைத்து, மென்மையான களிமண்ணைப் பிசைந்து, நம்முடைய தேவைக்காக ஒவ்வொரு மண்கலத்தையும் வனைகிறார்கள்: ஒரே மண்ணைக் கொண்டுதான் நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற கலங்களைச் செய்கிறார்கள்: இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன்படவேண்டும் என்பதைக் குயவர்களே முடிவு செய்கிறார்கள்.
8.       வீணில் உழைத்து அதே களிமண்ணால் பயனற்ற தெய்வம் ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களே சிறிது காலத்திற்குமுன் அதே மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்: சிறிது காலத்திற்குப்பின், தங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட ஆன்மாக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டியபொழுது, அவர்கள் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்.
9.       ஆனால் தாம் சாகவேண்டும் என்பதைப் பற்றியோ, தம் வாழ்நாள் குறுகியது என்பதைப்பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. மாறாக, பொன், வெள்ளியில் வேலை செய்பவர்களுடன் போட்டியிடுகிறார்கள். வெண்கலத்தில் வேலை செய்கிறவர்களைப்போலச் செய்ய முயல்கிறார்கள்: போலித் தெய்வங்களின் சிலைகளைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள்.
10.       அவர்களுடைய இதயம் வெறும் சாம்பல். அவர்களது நம்பிக்கை புழுதியிலும் கீழானது. அவர்களது வாழ்க்கை களிமண்ணினும் இழிவானது.
11.       ஏனெனில் தங்களை உருவாக்கியவரும் தங்களுக்குள் ஆற்றல்மிக்க ஆன்மாவைப் புகுத்தியவரும் உயிர்மூச்சை ஊதியவரும் யார் என்று அவர்கள் அறியவில்லை.
12.       அவர்களோ நம் வாழ்க்கையை ஒருவகை விளையாட்டாகவும், நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக் கூடிய ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்: ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட, பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்.
13.       உடையக்கூடிய மண்கலங்களையும் வார்ப்புச் சிலைகளையும் அவர்கள் செய்யும்போது தாங்கள் பாவம் செய்வதை மற்றெல்லாரையும்விட நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
14.       உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும் மற்ற யாவரினும் அறிவிலிகள்: சிறு குழந்தைகளைவிட இரங்குதற்குரியவர்கள்.
15.       ஏனெனில் வேற்றினத்தாரின் சிலைகள் கண்களால் காணவோ, மூக்கினால் மூச்சு விடவோ, காதுகளால் கேட்கவோ, விரல்களால் தொட்டுணரவோ, கால்களால் நடக்கவோ முடியாதபோதிலும் அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று இவர்கள் எண்ணினார்கள்.
16.       அவற்றைச் செய்தவர்கள் வெறும் மனிதர்களே: அவற்றை உருவாக்கியவர்கள் தங்களது உயிரைக் கடனாகப் பெற்றவர்கள். ஆனால் தங்களுக்கு இணையான ஒரு தெய்வத்தை எந்த மனிதரும் உருவாக்க முடியாது.
17.       அவர்களோ சாகக்கூடியவர்கள். நெறிகெட்ட தங்கள் கைகளால் அவர்கள் செய்வது உயிரற்றதே! தாங்கள் வணங்குகிற சிலைகளைவிட அவர்கள் மேலானவர்கள்: ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு: அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.
18.       மேலும், உம் மக்களின் பகைவர்கள் மிகவும் அருவருப்பான விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்: அறிவின்மையை வைத்து ஒப்பிடும் போது, இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.
19.       விலங்குகள் என்னும் அளவில்கூட, மனிதர்கள் விரும்பும் அழகு அவற்றின் தோற்றத்தில் இல்லை. இறைவன் தம் படைப்பைப் பாராட்டி ஆசி வழங்கியபொழுது, அவை ஒதுங்கிப் போய்விட்டன.

அதிகாரம் 16

1.       எனவே அவர்கள் அவற்றைப் போன்ற உயிரினங்களால் தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்: விலங்குக் கூட்டத்தால் வதைக்கப்பட்டார்கள்.
2.       இத்தகைய தண்டனைக்கு மாறாக நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்: சுவை மிகுந்த அரிய உணவாகிய காடைகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தீர்: இவ்வாறு, அவர்களது ஆவலைத் தணித்தீர்.
3.       எகிப்தியர்கள் உணவு அருந்த விரும்பியபோதிலும், அவர்கள்மீது ஏவப்பட்ட அருவருக்கத்தக்க விலங்குகளால் உணவின்மேல் அவர்களுக்கு இருந்த நாட்டமே அற்றுப் போயிற்று. உம் மக்களோ சிறிது காலம் வறுமையில் வாடியபின் அருஞ்சுவை உணவை உண்டார்கள்.
4.       ஏனெனில் கொடுமை செய்தவர்கள் கடுமையான பற்றாக்குறைக்கு ஆளாகவேண்டியிருந்தது. உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள் எவ்வாறு அல்லல் படுகிறார்கள் என்று மட்டும் காட்டவேண்டியிருந்தது.
5.       உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள் கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது, நெளிந்து வந்த நச்சுப் பாம்புகளின் கடியால் அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது, உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.
6.       எச்சரிக்கப்படவேண்டிச் சிறிது காலம் அவர்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள். உமது திருச்சட்டத்தின் கட்டளையை நினைவூட்ட மீட்பின் அடையாளம் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
7.       அப்போது அதை நோக்கித் திரும்பியோர் தாங்கள் பார்த்த பொருளால் அன்று, அனைவருக்கும் மீட்பரான உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.
8.       இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பவர் நீரே என்று எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.
9.       ஏனெனில் அவர்கள் வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும் கடியுண்டு மாண்டார்கள். அவர்கள் உயிரைக் காப்பதற்கு மருந்து எதுவும் காணப்படவில்லை. அவர்கள் இத்தகையவற்றால் தண்டிக்கப்படத் தக்கவர்கள்.
10.       ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால்கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை. உமது இரக்கம் அவர்களுக்குத் துணைநின்று நலம் அளித்தது.
11.       உம் சொற்களை அவர்கள் நினைவுகூரும் பொருட்டு அவர்கள் கடிபட்டார்கள்: ஆனால் உடனே நலம் அடைந்தார்கள். அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு உள்ளாகி, உம் பரிவை உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.
12.       பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை: ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது.
13.       வாழ்வின்மேலும் சாவின்மேலும் உமக்கு அதிகாரம் உண்டு. மனிதர்களைப் பாதாளத்தின் வாயில்வரை கொண்டு செல்கிறீர்: மீண்டும் அங்கிருந்து கொண்டு வருகிறீர்.
14.       மனிதர் தம் தீய பண்பினால் ஒருவரைக் கொன்று விடுகின்றனர். ஆனால் பிரிந்த உயிரை அவர்களால் திருப்பிக் கொணர முடியாது. சிறைப்பட்ட ஆன்மாக்களை அவர்களால் விடுவிக்கவும் முடியாது.
15.       ஒருவரும் உமது கையினின்று தப்ப முடியாது.
16.       உம்மை அறிய மறுத்துவிட்ட இறைப்பற்றில்லாதவர்கள் உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்: பேய்மழையாலும் கல்மழையாலும் கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு, தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.
17.       எல்லாவற்றையும்விட நம்பமுடியாதது எது என்றால், அனைத்தையும் அவிக்கக்கூடிய தண்ணீரில் அந்த நெருப்பு இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு எரிந்ததுதான்! ஏனெனில் அனைத்துலகும் நீதிமான்களுக்காகப் போராடுகிறது.
18.       கடவுளின் தண்டனைத் தீர்ப்பு தங்களைப் பின்தொடர்கிறது என்பதை இறைப்பற்றில்லாதவர்கள் கண்டுணருமாறும், அவர்களுக்கு எதிராய் அனுப்பப்பட்ட உயிரினங்கள் எரிந்து விடாதவாறும், நெருப்பின் அனல் சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்டது.
19.       மற்றும் சில வேலைகளில் நீதியற்ற நாட்டின் விளைச்சலை அழிக்கவே தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு முன்னைவிட மிகக் கடுமையாக எரிந்தது.
20.       இவற்றுக்கு மாறாக உம் மக்களை வானபதரின் உணவால் ஊட்டி வளர்த்தீர்: எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை, அவர்களது உழைப்பு இல்லாமலே படைக்கப்பட்ட உணவை வானத்திலிருந்து அவர்களுக்கு அளித்தீர்.
21.       நீர் அளித்த உணவூட்டம் உம் பிள்ளைகள்பால் நீர் கொண்டிருந்த இனிய உறவைக் காட்டியது: ஏனெனில் அந்த உணவு உண்போரின் சுவையுணர்விற்கு ஏற்றவாறு மாறி, அவரவர் விரும்பிய சுவை தந்தது.
22.       கல்மழையில் கனன்றெரிந்து, கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே பகைவர்களுடைய விளைச்சலை அழித்தது என்று அவர்கள் அறிந்துகொள்ளுமாறு, பனியும் பனிக்கட்டியும் உருகிடாமல் நெருப்பின் அனலைத் தாங்கின.
23.       ஆனால் அதே நெருப்பு, நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி தனது இயல்பான ஆற்றலை மீண்டும் மறந்துவிட்டது.
24.       படைத்தவரான உமக்கு ஊழியம் புரிகின்ற படைப்பு நெறிகெட்டோரைத் தண்டிக்க முனைந்து நிற்கிறது: உம்மை நம்பினோரின் நலனை முன்னிட்டு அது பரிவோடு தணிந்து போகிறது.
25.       எனவே அந்நேரத்திலேயே படைப்பு எல்லா வகையிலும் தன்னை மாற்றியமைத்துக் கொண்டது: தேவைப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எல்லாரையும் பேணிக் காக்கும் உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.
26.       ஆண்டவரே, மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல. மாறாக, உமது சொல்லே உம்மை நம்பினோரைக் காப்பாற்றுகிறது என நீர் அன்புகூரும் உம் மக்கள் இதனால் அறிந்துகொள்வார்கள்.
27.       நெருப்பினால் எரிபடாதது காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றாலேயே வெப்பம் அடைந்து எளிதில் உருகிற்று.
28.       கதிரவன் எழுமுன்பே மக்கள் எழுந்து உமக்கு நன்றி கூறவும் வைகறை வேளையில் உம்மை நோக்கி மன்றாடவும் வேண்டும் என்று இதனால் உணர்த்தப்பட்டது.
29.       ஏனெனில் நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்: பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.

அதிகாரம் 17

1.       உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை. எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்.
2.       நெறிகெட்டவர்கள் உமது பய மக்களினத்தை அடிமைப்படுத்த எண்ணியபோது அவர்களே காரிருளின் அடிமைகளாகவும் நீண்ட இரவின் கைதிகளாகவும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு, உமது முடிவில்லாப் பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.
3.       மேலும் மறதி என்னும் இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால் தங்கள் மறைவான பாவங்களில் மறைந்துகொண்டதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் அச்சத்தால் நடுங்கியவர்களாய் கொடிய காட்சிகளால் அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.
4.       அவர்கள் பதுங்கியிருந்த உள்ளறைகள்கூட அவர்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை. அச்சுறுத்தும் பேரொலிகள் எங்கும் எதிரொலித்தன. வாடிய முகங்கள் கொண்ட துயர ஆவிகள் தோன்றின.
5.       எந்த நெருப்பின் ஆற்றலாலும் ஒளி கொடுக்க இயலவில்லை: விண்மீன்களின் ஒளி மிகுந்த கூடர்களாலும் இருள் சூழந்த அவ்விரவை ஒளிர்விக்க முடியவில்லை.
6.       தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும் தீயைத் தவிர வேறு எதுவும் அவர்கள்முன்னால் தோன்றவில்லை. அவர்களோ நடுக்கமுற்று, தாங்கள் காணாதவற்றைவிடக் கண்டவையே தங்களை அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.
7.       மந்திரவாதக் கலையின் மாயங்கள் தாழ்வுற்றன. அவர்கள் வீண்பெருமை பாராட்டிய ஞானம் வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.
8.       நோயுற்ற உள்ளத்திலிருந்து அச்சத்தையும் குழப்பத்தையும் விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே நகைப்புக்கிடமான அச்சத்தினால் நோயுற்றார்கள்.
9.       தொல்லை தரக்கூடிய எதுவும் அவர்களை அச்சுறுத்தவில்லை எனினும், கடந்து செல்லும் விலங்குகளாலும் சீறும் பாம்புகளாலும் அவர்கள் நடுக்கமுற்றார்கள். எவ்வகையிலும் தவிர்க்கமுடியாத காற்றைக்கூட
10.       ஏறிட்டுப் பார்க்க மறுத்து, அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.
11.       கயமை தன்னிலே கோழைத்தனமானது. தானே தனக்கு எதிராகச் சான்று பகர்கிறது: மனச்சான்றின் உறுத்தலுக்கு உள்ளாகி இடர்களை எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.
12.       அச்சம் என்பது பகுத்தறிவின் துணையைக் கைவிடுவதே.
13.       உதவி கிடைக்கம் என்னும் எதிர்பார்ப்புக் குன்றும்போது, துன்பத்தின் காரணம் அறியாத நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.
14.       உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும், ஆற்றலற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும் அவர்கள் யாவரும் அமைதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
15.       சில வேளைகளில் மாபெரும் பேயுருவங்கள் அடிக்கடி தோன்றி அவர்களை அச்சுறுத்தின: மற்றும் சில வேளைகளில் அவர்களது உள்ளம் ஊக்கம் குன்றிச் செயலற்றுப் போயிற்று. ஏனெனில் எதிர்பாராத திடீர் அச்சம் அவர்களைக் கலங்கடித்தது.
16.       அங்கு இருந்த ஒவ்வொருவரும் கீழே விழுந்தனர்: கம்பிகள் இல்லாச் சிறையில் அடைபட்டனர்.
17.       ஏனெனில் உழவர், இடையர், பாலை நிலத்தில் பாடுபடும் தொழிலாளர் ஆகிய அனைவரும் அதில் அகப்பட்டுத் தவிர்க்க முடியாத முடிவை எதிர்கொண்டனர்: ஏனெனில் அவர்கள் அனைவரும் இருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர்.
18.       காற்றின் ஒலி, படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரல், பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும் வெள்ளத்தின் சீரான ஓசை, பெயர்த்துக் கீழே தள்ளப்படும் பாறைகளின் பேரொலி,
19.       கண்ணுக்குப் பலப்படாதவாறு தாவி ஓடும் விலங்குகளின் பாய்ச்சல், கொடிய காட்டு விலங்குகளின் முழக்கம், மலைக் குடைவுகளிலிருந்து கேட்கும் எதிரொலி ஆகிய அனைத்தும் அவர்களை அச்சத்தால் முடக்கிவிட்டன.
20.       உலகெல்லாம் ஒளி வெள்ளத்தில் திளைத்து, தன் வேலையில் தடையின்றி ஈடுபட்டிருந்தது.
21.       இவ்வாறிருக்க, எகிப்தியர்கள்மேல் மட்டும் அடர்ந்த காரிருள் கவிந்து படர்ந்தது. அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது. எனினும் அவர்களே இருளைவிடத் தங்களுக்குத் தாங்க முடியாத சுமையாய் இருந்தார்கள்.

அதிகாரம் 18

1.       உம் பயவர்களுக்கோ பேரொளி இருந்தது. அவர்களுடைய குரலை எதிரிகள் கேட்டார்கள். ஆனால் அவர்களின் உருவங்களைக் காணவில்லை. தங்களைப்போலத் துன்புறாததால் பயவர்களைப் பேறுபெற்றோர் என்று கருதினார்கள்.
2.       அப்பொழுது உம் பயவர்கள் அவர்களுக்குத் தீமை எதுவும் செய்யாததால், எகிப்தியர்கள் நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்: தங்களது பழைய பகைமைக்கு மன்னிப்புக் கேட்டார்கள்.
3.       இருளுக்கு மாறான ஒளிப்பிழம்பாம் நெருப்புத் பணை உம் மக்களுக்குக் கொடுத்தீர். முன்பின் அறியாத பாதையில் அது அவர்களுக்கு வழி காட்டியாய் விளங்கியது: மாட்சி பொருந்திய அப்பயணத்தில் அது வெம்மை தணிந்த கதிரவனாய் இருந்தது.
4.       திருச்சட்டத்தின் அழியாத ஒளியை உலகிற்கு வழங்க வேண்டிய உம் மக்களை எகிப்தியர்கள் சிறைப்பிடித்தார்கள். இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே இருளில் அடைக்கப்படவேண்டியது பொருத்தமே.
5.       எகிப்தியர்கள் உம் பயவர்களின் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது. எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்: அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர்.
6.       தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது.
7.       நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
8.       எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.
9.       நல்லவர்களின் பய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்: நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப் பகிர்ந்து கொள்வார்கள் எனினும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்: மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக்கொண்டிருந்தார்கள்.
10.       ஆனால் பகைவர்கள் கதறியழுத குரல்கள் எதிரொலித்தன: தங்கள் குழந்தைகளுக்காக எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.
11.       அடிமையும் தலைவரும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டார்கள்: குடிமகனும் மன்னரும் ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்:
12.       எண்ணிலடங்காதோர் ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி, எல்லாரும் ஒருமிக்க மடிந்து கிடந்தனர். உயிரோடிருந்தவர்களால் அவர்களைப் புதைக்கவும் இயலவில்லை. அவர்களின் பெருமதிப்பிற்குரிய வழித் தோன்றல்கள் ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.
13.       மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும், தங்கள் தலைப்பேறுகள் கொல்லப்பட்ட போது, இம்மக்கள் இறைமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.
14.       எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில்,
15.       எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப்போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.
16.       உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது: மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்தபோதிலும், விண்ணகத்தை தொட்டுக் கொண்டிருந்தது.
17.       உடனே அச்சுறுத்தும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்கடித்தன: எதிர்பாராத பேரச்சம் அவர்களைத் தாக்கியது.
18.       அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக அவர்கள் குற்றுயிராய் விழுந்தபோது, தாங்கள் மடிவதன் காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.
19.       ஏனெனில் தாங்கள் பட்ட துன்பத்தின் காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி அவர்களைத் தொல்லைப்படுத்திய கனவுகள் அதை முன்னறிவித்திருந்தன.
20.       நீதிமான்களும் இறப்பை நுகர நேர்ந்தது. பாலைநிலத்தில் இருந்த மக்கள் கூட்டம் கொள்ளைநோயால் தாக்குண்டது. ஆயினும் உமது சினம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
21.       குற்றமற்றவர் ஒருவர் அவர்களுக்காகப் பரிந்துபேச விரைந்தார்: திருப்பணி என்னும் தம் படைக்கலம் தாங்கியவராய், மன்றாட்டையும் பரிகாரத்திற்கான நறுமணப் புகையையும் ஏந்தியவராய், உமது சினத்தை எதிர்த்து நின்று அழிவை முடிவுறச் செய்தார்: இவ்வாறு, தாம் உம் அடியார் என்று காட்டினார்.
22.       உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ அவர் உமது சினத்தை மேற்கொள்ளவில்லை: ஆனால் எங்கள் மூதாதையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் உடன்படிக்கையையும் நினைவூட்டி வதைப்போனை த் தம் சொல்லால் தோல்வியுறச் செய்தார்.
23.       செத்தவர்களின் பிணங்கள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து பெரும் குவியலாய்க் கிடந்தன. அப்போது அவர் குறுக்கிட்டு உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி, எஞ்சியிருந்தோரை அது தாக்காமல் செய்துவிட்டார்.
24.       அவர் அணிந்திருந்த நீண்ட ஆடையில் உலகு அனைத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த நான்கு கல் வரிசையிலும் மூதாதையரின் மாட்சிமிகு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் தலையில் இருந்த மணிமுடியில் உமது மாட்சி வரையப்பட்டிருந்தது.
25..             அழிப்போன் இவற்றைக் கண்டு பின்வாங்கினான். அச்சம் அவனை ஆட்கொண்டது. உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே அவனுக்குப் போதுமானது.

அதிகாரம் 19

1.       இறைப்பற்றில்லாதவர்களைக் கடவுளின் சீற்றம் இரக்கமின்றி இறுதிவரை தாக்கியது. ஏனெனில் அவர்கள் செய்யவிருந்ததைக் கடவுள் முன்னரே அறிந்திருந்தார்.
2.       இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல விடைகொடுத்து, விரைவில் அவர்களை வெளியே அனுப்பி வைத்த அதே எகிப்தியர்கள் பிறகு தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
3.       எகிப்தியர்கள் தங்களுள் இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி, அவர்களுக்காக இன்னும் துயரம் கொண்டாடுகையில், இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில் இறங்கினார்கள்: முன்பு யாரை வெளியேறும்படி வேண்டிக் கொண்டார்களோ, அவர்களையே தப்பியோடு வோரைப்போலத் துரத்திச் சென்றார்கள்.
4.       தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே அவர்கள் தள்ளப்பட்டார்கள்: அதனால் இதற்குமுன் நடந்தவற்றையெல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள்: இவ்வாறு தங்கள் துன்பத்தில் குறையாயிருந்த தண்டனையே நிறைவு செய்தார்கள்.
5.       இவ்வாறு உம் மக்கள் வியத்தகு பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடைய பகைவர்களோ விந்தையான சாவை எதிர் கொண்டார்கள்.
6.       உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர்ப் பெற்றது.
7.       அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செய்கடலினு¡டே தங்கு தடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினு¡டே புல்திடலும் உண்டாயின.
8.       உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.
9.       குதிரைகளைப் போலக் குதித்துக்கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக் கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்து கொண்டே சென்றனர்.
10.       அவர்கள் வேற்று நாட்டில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவு கூர்ந்தார்கள்: விலங்குகளுக்கு மாறாக நிலம் கொசுக்களைத் தோற்றுவித்ததையும், மீன்களுக்கு மாறாகத் தவளைக் கூட்டங்களை ஆறு உமிழ்ந்ததையும் அவர்கள் இன்னும் நினைவில் வைத்திருந்தார்கள்.
11.       பின்பு சுவையான இறைச்சியை அவர்கள் விரும்பி வேண்டியபோது, புது வகைப் பறவைகளைக் கண்டார்கள்.
12.       ஏனெனில் அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்யக் கடலிலிருந்து காடைகள் புறப்பட்டுவந்தன.
13.       பேரிடியால் எச்சரிக்கப்பட்ட பின்னரே பாவிகள் தண்டிக்கப்பட்டார்கள்: தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக நீதியின்படி துன்புற்றா¡கள்: ஏனெனில், அன்னியர்மட்டில் பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.
14.       சோதோம் நகரைச் சேர்ந்தோர் தங்களை நாடிவந்த வேற்றினத்தார்க்கு இடம் கொடுக்க மறுத்தார்கள். எகிப்தியர்களோ தங்களுக்கு நன்மை செய்தவர்களையே அடிமைப்படுத்தினார்கள்.
15.       இது மட்டுமன்று: சோதோம் நகரைச் சேர்ந்தோர் உறுதியாகத் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்: ஏனெனில் அவர்கள் அயல் நாட்டினரைப் பகைவர்களென நடத்தினார்கள்.
16.       எகிப்தியர்களோ அயல்நாட்டினரை விழாக்கோலத்துடன் வரவேற்று, அவர்களுக்கு எல்லா உரிமையும் அளித்தபின்னரும், கொடுந்தொல்லைகள் தந்து அவர்களைத் துன்புறுத்தினார்கள்.
17.       நீதிமானின் கதவு அருகில் சோதோம் நகரைச் சேர்ந்தோர் கவ்விய காரிருளால் சூழப்பட்டு, தம்தம் கதவைத் தடவிப்பார்த்து வழி தேடியதுபோல், எகிப்தியர்களும் பார்வையற்றுப் போயினர்.
18.       யாழின் சுருதிகள் மாறாமலே இருந்துகொண்டு, பண்ணின் இயல்லை மாற்றி அமைப்பதுபோல் இயற்கையின் ஆற்றல்களும் செயல்படுகின்றன. நிகழ்ந்தவற்றைக் கண்டு இந்த உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
19.       நிலத்தில் வாழும் விலங்குகள் நீரில் வாழும் விலங்குகளாக மாறின: நீந்தித் திரியும் உயிரினங்கள் நிலத்திற்கு ஏறிவந்தன.
20.       நீரின் நடுவிலும் நெருப்பு தன் இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தது: நீரும் தன் அவிக்கும் இயல்வை மறந்து விட்டது.
21.       மாறாக, அழியக்கூடிய உயிரினங்கள் நெருப்புக்குள் நடந்த போதும், அவற்றின் சதையை அது சுட்டெரிக்கவில்லை: பனிக்கட்டி போல் எளிதில் உருகும் தன்மை கொண்ட அந்த விண்ணக உணவையும் உருக்கவில்லை.
22.       ஆண்டவரே, நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்: எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நீர் அவர்களுக்குத் துணைபுரியத் தவறவில்லை.


This page was last updated on 7 June 2007.
Feel free to send corrections to the webmaster.