
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
மத்தேயு நற்செய்திகள்
1 அதிகாரம்
1.1 ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் முதாதையர் பட்டியல்.
1.2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோப்பு. யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும்
அவர் சகோதரர்களும்.
1.3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும். பெரேட்சின் மகன் எட்சரோன். எட்சரோனின் மகன் இராம்.
1.4 இராமின் மகன் அம்மினதாபு. அம்மினதாபின் மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன்.
1.5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு. போவாசுக்கும் ருத்துக்கும் பிறந்த மகன்
ஓபேது. ஓபெதின் மகன் ஈசாய்.
1.6 ஈசாயின் மகன் தாவீது. அரசர் தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.
1.7 சாலமோனின் மகன் ரெகபயாம். ரெகபயாமின் மகன் அபியாம். அபியாமின் மகன் ஆசா.
1.8 ஆசாவின் மகன் யோசபாத்து. யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் உசியா.
1.9 உசியாவின் மகன் யோத்தாம். யோத்தாமின் மகன் ஆகாசு. ஆகாசின் மகன் எசேக்கியா.
1.10 எசேக்கியாவின் மகன் மனாசே மனாசேயின் மகன் ஆமொன் ஆமொனின் மகன் யோசியா.
1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள்
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன்
செயல்தியேல். செயல்தியேலின் மகன் செருபாபேல்.
1.13 செருபாபேலின் மகன் அபியூது அபியூதின் மகன் எலியாக்கிம் எலியாக்கிமின் மகன் அசோர்.
1.14 அசோரின் மகன் சாதோக்கு. சாதோக்கின் மகன் ஆக்கிம். ஆக்கிமின் மகன் எலியூது.
1.15 எலியூதின் மகன் எலயாசர். எலயாசின் மகன் மாத்தான். மாத்தானின் மகன் யாக்கோபு.
1.16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச்
சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச்
செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
1.18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள் அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும்
திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.
அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
1.19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
1.20 அவ் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி,
"யோசேப்பே, தாவீதின் மகனே, மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர்
கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
1.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை
அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
1.22 இதோ. கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.
1.23 இம்மானுவேல் என்றால்"கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள்.
1.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை
ஏற்றுக்கொண்டார்.
1.25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு
அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
2அதிகாரம்
2.1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து
ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
2.2 "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோ ம். அவரை வணங்க
வந்திருக்கிறோம்" என்றார்கள்.
2.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
2.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று
கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.
2.5 அவர்கள் அவனிடம்,"யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்".
2.6 ஏனெனில், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை ஏனெனில்,
என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" என்று இறைவாக்கினர்
எழுதியுள்ளார்" என்றார்கள்.
2.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப்
பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.
2.8 மேலும் அவர்களிடம்." நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள்.
அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
2.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ. முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக்
குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
2.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
2.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்.
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும்
சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
2.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சிக்கப்பட்டதால் வேறு வழியாகத்
தங்கள் நாடு திரும்பினார்கள்.
2.13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,"நீர் எழுந்து
குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை
அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்.
2.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப்
புறப்பட்டுச் சென்றார்.
2.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்"
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க்
கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி
இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
2.17 அப்பொழுது "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல்
தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.
2.18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள். ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை" என்று இறைவாக்கினர்
எரேமியா உரைத்தது நிறைவேறியது.
2.19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,
2.20 "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில்
குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார்.
2.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து
சேர்ந்தார்.
2.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர்
அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
2.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு "நசரேயன் என
அழைக்கப்படுவார்" என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
3 அதிகாரம்
3.1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,
3.2 "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்று பறைசாற்றி வந்தார்.
3.3 இவரைக் குறித்தே, "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்
அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.
3.4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டி
இருந்தார். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
3.5 எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள்
அவரிடம் சென்றார்கள்.
3.6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
3.7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி,
"வரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?
3.8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.
3.9 "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை" என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம்.
இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச்
சொல்கிறேன்.
3.10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத்
தீயில் போடப்படும்.
3.11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர்
வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத்
தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
3.12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார் தம் கோதுமையைக்
களஞ்சியத்தில் சேர்ப்பார் ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.
3.13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
3.14 யோவான், "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன் நீரா என்னிடம் வருகிறீர்?" என்று
கூறித் தடுத்தார்.
3.15 இயேசு, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான்
முறை" எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.
3.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும்
கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.
3.17 அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று
வானத்திலிருந்து ஒரு குருல் கேட்டது.
4 அதிகாரம்
4.1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால்
அழைத்துச் செல்லப்பட்டார்.
4.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
4.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, "நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக்
கட்டளையிடும் என்றான்.
4.4 அவர் மறுமொழியாக, "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்
வாழ்வர்" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.
4.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில்
அவரை நிறுத்தி,
4.6 "நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்" கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று மறைநூலில்
எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது.
4.7 இயேசு அதனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்" எனவும் எழுதியுள்ளதே" என்று
சொன்னார்.
4.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும்,
அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
4.9 அவரிடம், "நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத்
தருவேன்" என்றது.
4.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ. சாத்தானே, "உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி,
அவர் ஒருவருக்கே பணி செய்" என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.
4.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
4.12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
4.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய்
அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.
4.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
4.15 "செபுலோன் நாடே. நப்தலி நாடே. டிபருங்கடல் வழிப் பகுதியே. யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே.
பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே.
4.16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்
மேல் சுடரொளி உதித்துள்ளது."
4.17 அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத்
தொடங்கினார்.
4.18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும்
சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.
4.19 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்"
என்றார்.
4.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
4.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன்
யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது
பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
4.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
4.23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார் விண்ணரசு
பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார் மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
4.24 அவரைப் பற்றிய பேச்சு சியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய
நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர்.
அவர் அவர்களைக் குணமாக்கினார்.
4.25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா. யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து
வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
5 அதிகாரம்
5.1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி, அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
5.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை
5.3 "ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
5.4 துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5.5 கனிவுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
5.6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோ ர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
5.7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
5.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
5.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
5.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
5.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம்
சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே.
5.12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
5.13 "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை
உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் வேறு ஒன்றுக்கும் உதவாது.
5.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது..
5.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர்.
அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
5.16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
5.17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்
அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
5.18 "விண்ணும் மண்ணும் ஒழியாதவரை, திருச் சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை, அச்சட்டத்தின்
மிகச்சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
5.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர்
விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவயைனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில்
பெரியவர் எனக் கருதப்படுவார்.
5.20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில்.
நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
5.21 "கொலை செய்யாதே கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக்
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.
5.22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்"தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார் தம் சகோதரரையோ சகோதரியையோ"முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு
ஆளாவார்"அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
5.23 ஆகையார் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர்
சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதொ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
5.24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு
ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
5.25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக
உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலிடம்
ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
5.26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக
உங்களுக்கு சொல்கிறேன்.
5.27 "விபசாரம் செய்யாதே" எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
5.28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம்
உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
5.29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல்
முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
5.30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து
விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
5.31 "தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்" எனக்
கூறப்பட்டிருக்கிறது.
5.32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு
எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச்
செய்கின்றனர். விலக்கப்பட்டோ ரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.
5.33 "மேலும்," பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்"
என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
5.34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட
வேண்டாம் ஏனென்றால் அது கடவுளின் அரியணை.
5.35 மண்ணுலகின் மேலும் வேண்டாம் ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்
ஏனெனில் அது பேரரசின் நகரம்.
5.36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம் ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும்
வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது"
5.37 ஆகவே நீங்கள் பேசும்போது"ஆம்" என்றால்"ஆம்" எனவும்"இல்லை" என்றால்"இல்லை" எனவும் சொல்லுங்கள்.
இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
5.38 "கண்ணுக்குக் கண்","பல்லுக்குப் பல்" என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
5.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை
வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
5.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால்
உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.
5.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
5.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
5.43 "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக","பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக்
கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
5.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள் உங்களைத்
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
5.45 "இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர்
நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும்
நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
5.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன
கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?
5.47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும்
மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
5.48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய்
இருங்கள்.
6 அதிகாரம்
6.1 "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் "உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக்
குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து
உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
6.2 "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர்
மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள்
தங்களுக்குருய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
6.3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
6.4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும் மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள்
தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
6.5 "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள்
தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல்
செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குருய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்.
6.6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்
கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள்
தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
6.7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம் மிகுதியான
சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
6.8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை
உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
6.9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்" விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது
பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
6.10 உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக.
6.11 இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
6.12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.
6.13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். (" ஆட்சியும் வல்லமையும்
மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.")
6.14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை
மன்னிப்பார்.
6.15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
6.16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.
தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக்
கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குருய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச்
6.17 நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
6.18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள்
தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
6.19 "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும்
அழித்துவிடும் திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
6.20 ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் அங்கே பூச்சியோ துருவோ
அழிப்பதில்லை திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
6.21 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
6.22 "கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
6.23 அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக. உங்களுக்கு ஒளி தரவேண்டியது
இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்.
6.24 "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம்
அவர் அன்பு கொள்வார் அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும்
செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
6.25 "ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ
நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
6.26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை களஞ்சியத்தில்
சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள்
மேலானவர்கள் அல்லவா.
6.27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
6.28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக்
கவனியுங்கள் அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
6.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்னையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை
என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
6.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக்
கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?
6.31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.
6.32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர் உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள்
விண்ணகத் தந்தைக்குத் தியும்.
6.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது
இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
6.34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி
பிறக்கும் அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
7 அதிகாரம்
7.1 பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள் அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
7.2 நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே
அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
7.3 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின்
கண்ணில் இருக்கும் துரம்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?
7.4 அல்லது அவரிடம்," உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்கலாம்? இதோ.
உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே.
7.5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள்
சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரம்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
7.6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.
மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம் எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
7.7 "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள், உங்களுக்குத்
திறக்கப்படும்.
7.8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர் தேடுவோர் கண்டடைகின்றனர் தட்டுவோருக்குத்
திறக்கப்படும்.
7.9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?
7.10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?
7.11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால்
விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா.
7.12 "ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச்
செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவெ.
7.13 "இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும்
விரிவானது அதன் வழியே செல்வோர் பலர்.
7.14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது வழியும் மிகக் குறுகலானது இதைக் கண்டுபிடிப்போர்
சிலரே.
7.15 "போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு
உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
7.16 அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில்
திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?
7.17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.
7.18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.
7.19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.
7.20 இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.
7.21 "என்னை நோக்கி," ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.
மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
7.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு
உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?"
என்பர்.
7.23 அதற்கு நான் அவர்களிடம்," உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே,
என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
7.24 "ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது
தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
7.25 மழை பெய்தது ஆறு பெருக்கெடுத்து ஓடியது பெருங்காற்று வீசியது அவை அவ்வீட்டின் மேல் மோதியும்
அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
7.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம்
வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.
7.27 மழை பெய்தது ஆறு பெருக்கெடுத்து ஓடியத பெருங் காற்று வீசியது அவை அவ்வீட்டைத் தாக்க,
அது விழுந்தது இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."
7.28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர்
வியப்பில் ஆழ்ந்தனர்.
7.29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர்
கற்பித்தார்.
8 அதிகாரம்
8.1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
8.2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து," ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை
நீக்க உம்மால் முடியும்" என்றார்.
8.3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு,"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக. என்று
சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.
8.4 இயேசு அவரிடம்,"இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய்
உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கைய்ச செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு
அது சான்றாகும்" என்றார்.
8.5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.
8.6 "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார்.
8.7 இயேசு அவரிடம்," நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
8.8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக," ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் பையன் நலமடைவான்.
8.9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர்.
நான் அவர்களுள் ஒருவரிடம்" செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார்.
என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.
8.10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி," உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன் இஸரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
8.11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின்
பந்தியில் அமர்வர்.
8.12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும்
இருக்கும்" என்றார்.
8.13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி," நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார்.
அந்நேரமே பையன் குணமடைந்தான்.
8.14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.
8.15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப்
பணிவிடை செய்தார்.
8.16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த
ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.
8.17 இவ்வாறு," அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார் நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்" என்று
இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
8.18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக்
கட்டளையிட்டார்.
8.19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து," போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப்
பின்பற்றுவேன்" என்றார்.
8.20 இயேசு அவரிடம்," நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு.
மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.
8.21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி," ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம்
செய்து விட்டு வர அனுமதியும்" என்றார்.
8.22 இயேசு அவரைப் பார்த்து,"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம்.
அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.
8.23 பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.
8.24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால்
இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.
8.25 சீடர்கள் அவரிடம் வந்து," ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை
எழுப்பினார்கள்.
8.26 இயேசு அவர்களை நோக்கி," நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு,
எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.
8.27 மக்களெல்லாரும்," காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே. இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர்.
8.28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து
வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும்
கொடியவர்களாய் இருந்தார்கள்.
8.29 அவர்கள்," இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா
இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்.
8.30 அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
8.31 பேய்கள் அவரிடம் ,"நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்"
என்று வேண்டின.
8.32 அவர் அவற்றிடம்," போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம்
முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
8.33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய்
பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.
8.34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு
9 அதிகாரம்
9.1 இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.
9.2 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு
அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம்," மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன" என்றார்.
9.3 அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர்," இவன் கடவுளைப் பழிக்கிறான்" என்று தமக்குள் சொல்லிக்
கொண்டனர்.
9.4 அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி," உங்கள் உள்ளங்களில் நீங்கள்
தீயன சிந்திப்பதேன்?
9.5 "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா," எழுந்து நட" என்பதா, எது எளிது?
9.6 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள
வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,"நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு
வீட்டுக்குப் போ" என்றார்.
9.7 அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
9.8 இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தனர்.
9.9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார் அவரிடம்,"
என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
9.10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து
இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
9.11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம்," உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும்
சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர்.
9.12 இயேசு இதைக் கேட்டவுடன்," நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
9.13 "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்
ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
9.14 பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து," நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க,
உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்றனர்.
9.15 அதற்கு இயேசு அவர்களை நோக்கி,"மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம்
கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு
இருப்பார்கள்.
9.16 மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு
ஆடையைக் கிழித்துவிடும் கிழிசலும் பெரிதாகும்.
9.17 அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால்
தோற்பைகள் வெடிக்கும் மதுவும் சிந்திப்போகும் தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான்
ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா" என்றார்.
9.18 அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம்
வந்து பணிந்து," என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள்
உடனே உயிர் பெறுவாள்" என்றார்.
9.19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
9.20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால்
வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
9.21 ஏனெனில் அப்பெண்," நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்" எனத்
தமக்குள் சொல்லிக்கொண்டார்.
9.22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து," மகளே, துணிவோடிரு உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று"
என்றார். ந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
9.23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினின்
அமளியையும் கண்டார்.
9.24 அவர்," விலகிப் போங்கள் சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்களோ அவரைப்
பார்த்து நகைத்தார்கள்.
9.25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும்
உயிர்பெற்று எழுந்தாள்.
9.26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
9.27 இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர்," தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்"
என்று கத்திக்கொண்டே வரைப் பின்தொடர்ந்தனர்.
9.28 அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து,
" நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள்," ஆம், ஐயா" என்றார்கள்.
9.29 பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு,"நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார்.
9.30 உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி." யாரும் இதை அறியாதபடி
பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.
9.31 ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
9.32 அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
9.33 பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று,"இஸரயேலில்
இப்படி ஒருபோதும் ண்டதில்லை" என்றனர்.
9.34 ஆனால் பரிசேயர்," இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
9.35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில்
கற்பித்தார் விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார் நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
9.36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார் அவர்கள் ஆயர் இல்லா
ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.
9.37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி,"அறுவடை மிகுதி வேலையாள்களோ குறைவு.
9.38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின்
இமையாளிடம் மன்றாடுங்கள்" என்றார். ஈ.-- எயச ரசடழுகநேறீழிஸ்ரீ
10 அதிகாரம்
10.1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்
நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
10.2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து
அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான்,
10.3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு,
10.4 தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸகாரியோத்து.
10.5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது" பிற
இனத்தின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.
10.6 மாறாக, வழி தவறினப்போன ஆடுகளான இஸரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
10.7 அப்படிச் செல்லும்போது" விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்.
10.8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள் தொழுநோயாளரை
நலமாக்குங்கள் பேய்களை ஓட்டுங்கள் கொடையாகப் பெற்றீர்கள் கொடையாகவே வழங்குங்கள்.
10.9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
10.10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு
போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.
10.11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக்
கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.
10.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
10.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்
அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
10.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால்
அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
10.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக்
கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
10.16 "இதோ. ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே
பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களையும் இருங்கள்.
10.17 எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்.
தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
10.18 என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு
யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
10.19 இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது," என்ன பேசுவது, எப்படிப் பேசுவது" என நீங்கள்
கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
10.20 ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
10.21 சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும்
கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகளை பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.
10.22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே
மீட்கப்படுவர்.
10.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட
மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என
உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
10.24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.
10.25 சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும்.
வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?
10.26 "எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு முடப்பட்டிருப்பது ஒன்றும்
இல்லை அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
10.27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை
வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.
10.28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும்
உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
10.29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின்
விருப்பமின்றித் தரையில் விழாது.
10.30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.
10.31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
10.32 "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின்
முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.
10.33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின்
முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.
10.34 "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே
கொணர வந்தேன்.
10.35 தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான்
பிரிக்க வந்தேன்.
10.36 ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
10.37 என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என
கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும்
என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
10.38 தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
10.39 தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ
அதைக் காத்துக் கொள்வர்.
10.40 "உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை
அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.
10.41 இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குருய
கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய
கைம்மாறு பெறுவார்.
10.42 இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும்
தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
11 அதிகாரம்
11.1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை
அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.
11.2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம்
அனுப்பினார்.
11.3 அவர்கள் முலமாக,"வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார்.
11.4 அதற்கு இயேசு மறுமொழியாக," நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
11.5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர் கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர் தொழுநோயாளர் நலமடைகின்றனர்
காது கேளாதோர் கேட்கின்றனர் இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
11.6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.
11.7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்
" நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
11.8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய
ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.
11.9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே
என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
11.10 "இதோ. நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்"
என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.
11.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும்
விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
11.12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது.
தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.
1113 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.
11.14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.
11.15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
11.16 " இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு
அணியினரைக் கூப்பிட்டு," நாங்கள் குழல் ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை.
11.17 நாங்கள் ஒப்பி வைத்தோம் நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு
ஒப்பானவர்கள்.
11.18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. இவர்களோ" அவன்
பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.
11.19 மானிட மகன் வந்துள்ளார் அவர் உண்கிறார் குடிக்கிறார். இவர்களோ,"இம் மனிதன் பெருந்தீனிக்காரன்,
குடிகாரன், வரி தண்டுவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு
அதை ஏற்றுக் கொண்டோ ரின் செயல்களே சான்று."
11.20 இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத்
தொடங்கினார்.
11.21 "கொராசின் நகரே, ஐயோ. உனக்குக் கேடு. பெத்சாய்தா நகரே, ஐயோ. உனக்குக் கேடு. ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.
11.22 தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
11.23 கப்பர் நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே.
11.24 தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
11.25 அவ்வேளையில் இயேசு," தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களையும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
11.26 ஆம் தந்தையே, இதுவெ உமது திருவுளம்.
11.27 என் தந